...பல்சுவை பக்கம்!

.

Sunday, March 17, 2013

ரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி! #117

ரஜினி, ஜெயலலிதா, கலைஞரிடம் ஒரு கேள்வி! #117ரஜினியிடம் ஒரு கேள்வி: நதிநீர் இணைப்புக்காக என்று நீங்க கொடுத்த அந்த ஒரு கோடி ரூபாய் இப்ப எங்கே இருக்கிறது?

**********************************************************************

பஸ்ஸில் அருகிலிருந்த பெரியவர் என்னிடம் கேட்டார்: "அங்கே 'கரம், சிரம், புறம் நீட்டாதீர்கள்'னு போட்ருக்காங்களே, அப்டின்னா என்னா தம்பி அர்த்தம்? "

நான், "அதுக்கு 'கை, தலை வெளியே நீட்டாதீங்க'ன்னு அர்த்தம் ஐயா" என்று பதில் சொன்னேன்.

"அடங்கொப்புரானே! நீங்க சொன்னமாதிரி தமிழ்ல்லயே எழுதியிருக்கலாமே" என்றார் அந்தப் பெரியவர்.

அதானே!

*********************************************************************

ஒரே கால கட்டத்தில் 2, 3 பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிய எழுத்தாளர்கள் எல்லாம் இப்போது (10.40PMயிலல்ல; இக்காலத்தில்) என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

********************************************************************

"எங்கும் எதிலும் கலப்படம் - அதை

எடுத்துச் சொன்னால்தான் புலப்படும்"

********************************************************************

" தயிர் எடுங்க மோர, பால உண்ணுங்க...  - மேனி

தங்கமா வளரும் இத செய்து பாருங்க...! "

********************************************************************

நெஸ்கஃபேயின் "சன் ரைஸ்", தி.மு.க.வின் மற்றுமொரு தயாரிப்பா? #நான் ரொம்ப வெகுளி
**********************************************************************
ஆதி இறையின் தூதர் நபி நாயகம் - அருள்

நீதி நிறைந்த மக்கா அவரின் தாயகம்.

-'பொதிகை'யில் இஸ்லாமியப் பாடல்கள் 

********************************************************************

ஊருக்கு ஊர் "ஆரிய"பவன் இருக்கு. ஒரே ஒரு "திராவிட"பவன் கூட இல்லையே? #திராவிட கட்சிகளே, உங்களுக்குத்தான் இந்தக் கேள்வி! #கிளப்பிவுடுடோய்...
*******************************************************************

"ரயில் கட்டண உயர்வு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது" -ஜெயலலிதா. #பால் விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம் எல்லாத்தையும் உயர்த்தி நான்தான் வெந்த புண்ணை ஏற்படுத்திட்டேனே, அதிலே மேலும் வேல் பாய்ச்சலாமா? -ஜெ. மனதில் நினைத்தல்.
*********************************************************************

"இந்(த புத்)தாண்டிலிருந்து சிகரெட் பிடிப்பதையும் பொய் சொல்றதையும் நீ விட்டிறணும்" என்றேன் நண்பனிடம்.

"சிகரெட் பிடிக்கிறதை இந்த ஆண்டே விட்டிர்றேன். பொய் சொல்றதை அடுத்த ஆண்டு விட்டிர்றேன்" என்கிறான் நண்பன்!
#தெளிவாத்தான் இருக்கான்.

**********************************************************************

எங்கள் அக்காளின் 2 வயது பேரன் தனது சின்ன அண்ணனை 'அண்ணன்' என்கிறான். பெரிய அண்ணனை 'அண்ணண்ணன்' (அண்ணனின் அண்ணன்) என்று கூப்பிடுகிறான்.
********************************************************************** 
இன்றைய (அ)லட்சியம் - நாளைய ஏ(மா)ற்றம்
**********************************************************************
இன்றைய (அ)லட்சியம் - நாளைய (ஏ)மாற்றம்

**********************************************************************
வீட்டிலிருந்து வெளியேறும் பெரியவர் முதுகில் 2012. வீட்டில் நுழையும் சிறுவன் முதுகில் 2013. 'இன்று புத்தாண்டு பிறந்தது'. தந்தி கார்ட்டூன்
**********************************************************************
கம்னாட்டி சில்கஸ், நொன்னை சில்க்ஸ் அப்டின்னு பஸ்ஸு சைடு கண்ணாடி முழுசும் விளம்பர போஸ்டர ஒட்டிர்றானுங்க.
பஸ்ல ஸடாண்டிங்ல வரும்போது நாம இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் பார்க்க முடியாம தடுமாற வேண்டியிருக்கு.
எவன் கொ(கெ)டுத்த ஐடியாடா இது?

***********************************************************************

கொஞ்சூண்டு ஜலதோஷம் எனக்கு. #இன்று 'சளி'க்கிழமை!
***********************************************************************

இந்துக்கள் கொண்டாடும் துளசியும் இஸ்லாம் வலியுறுத்தும் கருஞ்சீரகமும் புற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவை -Prof.பரத் அகர்வால்.
***********************************************************************

இந்தியர்கள்மட்டும் மலக்குடல் புற்று நோயால் பாதிக்கப்படாததற்கு உணவில் இந்தியர்கள் சேர்க்கும் மஞ்சளின் மகிமையே காரணம் -Dr. கு.சிவராமன்.

***********************************************************************
திரு.நாராயணசாமி-யாருக்கு ஒரு கேள்வி: 'ஒரு 15 நாள்' என்பது குத்துமதிப்பாக எத்தனை நாட்கள்னு சொல்லமுடியுமா?

***********************************************************************
அம்மாவுக்கு ஒரு கேள்வி: மலிவு விலை உணவகங்களுக்கு என்ன பெயர் வைக்கிறீங்க? 'மிஸ் அம்மா மெஸ்'?

***********************************************************************

கலைஞரய்யாவுக்கு ஒரு கேள்வி: '2ஆம் செம்மொழி மாநாடு' இனி எப்ப(டி) நடத்துவீங்க?
**********************************************************************

மாதம்தோறும் டீசல் விலை 50பை. உயரும் -பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி # இனி வீ.மொய்லியை FB, ட்வீட்டரில் மாதம்தோறும் கலாய்க்கலாம்
**********************************************************************

 கயவன், கொலைஞன் கோட்சேவால், காந்திஜி கொல்லப்பட்ட கரு(ப்பு)நாள் 30.01.1948
**********************************************************************

ஏமாத்துறவன் 10% நல்லவனா நடிச்சா, நீங்க மேலும் 90% நல்லவனா அவனை நம்புறீங்க #ஏமாறாதீங்க #நீயா, நானா.?
**********************************************************************
சரித்திரம் படைக்கும் மனிதனுக்கு அ(ந்த சரித்திரத்)தை எழுத நேரமி(ருப்பதி)ல்லை. #ப(பி)டித்தது

***********************************************************************
சின்ன ஊர்லருந்து பெரிய ஊருக்குப் போற சாலை, பெரிய ஊர்லருந்து சின்ன ஊருக்கும் வரும்ல? -விளம்பரத்தில் பிடித்த வாசகம்
***********************************************************************
1.12.2012 சனி. "ஸ்கூல் போகலயா"ன்னேன் அக்கா பேரனிடம். "செகண்ட் சார்ட்டர்டே, ஸ்கூல் லீவு"ன்றான் கூலாக. 1ந் தேதியே 2ஆவது சனி! புதுசாயிருக்கே!
***********************************************************************
நான்: "என்ன படிச்சே?"
அவன்: "+2 படிச்சேன்."
"முடிச்சியா?"
"முடிச்சேன்."
"மேலே படிக்கலையா?"
"படிக்கலை."
"ஏன்?"
"பிடிக்கலை."

***********************************************************************

'ரோஸ் மில்க்' என்பதற்கு "ரோஜா பால்" என்றுதான் நான் சொல்றது வழக்கம்.
***********************************************************************

எங்கள் தாத்தா, "அன்புக்கு'க்கு'றிய" என்று கடிதத்தை ஆரம்பிப்பார். கேட்டால் சொல்வார்: 'மிகுந்த அன்புக்குரிய' என்று அர்த்தமாம்.

***********************************************************************
சென்ற ஆண்டு ரயில் தண்டவாளத்தை கடந்தபோது 2637 பேர் சாவு -செய்தி # தண்டவாளத்துல க(ந)டக்காதீங்கப்பா

***********************************************************************

பழைய உலகம் அழிந்தது. "புதியதோர் உலகம் செய்வோம்!" இன்று வெற்றிகரமான 2ஆம் நாள். (22/12/2012)

***********************************************************************

ஒருவன்: "என் ஜாதகப்படி எனக்கு அறிவு ஜாஸ்தி."
மற்றவன்: "அதனாலதான் நான் ஜாதகத்தையே நம்பறதில்லை."

***********************************************************************

 காற்று வாங்கப் போனேன்; காற்று வாங்கி வந்தேன் #கவிதைன்னு நினைக்கிறேன்.

***********************************************************************
கையில் டிக்கெட் கட்டுகளோடு "டிக்கெட், டிக்கெட்" என்று கூவிக் கொண்டே வருகிறார் கண்டக்டர்.
ஒரு குட்டிப் பாப்பா அம்மாவிடம் சொல்லுது: "இங்கே பாரும்மா அவர. கையில இவ்வளவு டிக்கெட் வச்சிக்கிட்டு நம்மகிட்ட  டிக்கெட் கேட்குறாரு"

***********************************************************************

"வெஜிடேரியன் சாப்பிடுவேன் நான். நீங்க வெஜிடேரியனா, நான் -வெஜிடேரியனா" கேட்டார் நண்பர். "நான் ரெண்டுமே சாப்பிடுவேன்" என்றேன் #உண்மை
***********************************************************************

எனது முகநூல் சுவரிலிருந்து சிலவற்றை இங்கே தொகுத்துளித்தேன். நன்றி!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன். ***************************************
.படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

25 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.. ஹா.. அனைத்தும் அசத்தல்...

NIZAMUDEEN said...

//திண்டுக்கல் தனபாலன் said...

ஹா.. ஹா.. அனைத்தும் அசத்தல்...//

உடனே வந்து ஆர்வமூட்டும் தங்களுக்கு மிக்க நன்றி சார்!

Erode M.STALIN said...

அனைத்தும் ஹாஸ்யம் மற்றும் சிந்திக்க தூண்டுவதாகவும் உள்ளது. இரண்டு மூன்று வரிகளில் சொல்ல வந்ததை பளிச்சென விளக்கிய தொகுப்பு

NIZAMUDEEN said...

//Erode M.STALIN said...

அனைத்தும் ஹாஸ்யம் மற்றும் சிந்திக்க தூண்டுவதாகவும் உள்ளது. இரண்டு மூன்று வரிகளில் சொல்ல வந்ததை பளிச்சென விளக்கிய தொகுப்பு //

தங்கள் சுவையான பாராட்டிற்கு நன்றி ஸ்டாலின் சார்!

vimal said...

//இன்றைய (அ)லட்சியம் - நாளைய ஏ(மா)ற்றம்//சிந்திக்க தூண்டிய வரிகள் .... பாராட்டுக்கள் நண்பரே

உஷா அன்பரசு said...

நன்றாக சிரிக்க வைத்தது!

enrenrum16 said...

அனைத்தும் ரசிக்கும்விதம் இருக்கின்றன... ஆரிய பவன், சன் ரைஸ் போன்ற கலக்கல் காமெடிகளும் அருமை.

r.v.saravanan said...

படிக்க படிக்க சுவாரசியம் தந்தது அனைத்தும் கலந்த அசத்தல் பதிவு ரசித்தேன்

NIZAMUDEEN said...

// vimal said...

//இன்றைய (அ)லட்சியம் - நாளைய ஏ(மா)ற்றம்//சிந்திக்க தூண்டிய வரிகள் .... பாராட்டுக்கள் நண்பரே //

வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!
தொடர்ந்து வாருங்கள் நண்பரே!

NIZAMUDEEN said...

// உஷா அன்பரசு said...

நன்றாக சிரிக்க வைத்தது! //

நன்றாகச் சிரித்து, கருத்திட்டமைக்கு நன்றி!

NIZAMUDEEN said...

// enrenrum16 said...

அனைத்தும் ரசிக்கும்விதம் இருக்கின்றன... ஆரிய பவன், சன் ரைஸ் போன்ற கலக்கல் காமெடிகளும் அருமை. //

உற்சாகமூட்டும் கருத்து தந்தமைக்கு நன்றி!

NIZAMUDEEN said...

// r.v.saravanan said...

படிக்க படிக்க சுவாரசியம் தந்தது அனைத்தும் கலந்த அசத்தல் பதிவு ரசித்தேன் //

அசத்தலாய் கருத்து!
தந்தமைக்கு நன்றி நண்பரே!

சே. குமார் said...

எல்லாம் அருமை.

Unknown said...

Gandhiji got killed on 31.01.48

NIZAMUDEEN said...

// சே. குமார் said...

எல்லாம் அருமை. //

அருமையான கருத்திற்கு நன்றி சார்!

NIZAMUDEEN said...

//
Unknown said...

Gandhiji got killed on 31.01.48 //

தவறைச் சுட்டியமைக்கு நன்றி சார்!
திருத்தம் செய்துவிட்டேன்.

Partywear saree said...

If you're still on the fence: grab your favorite earphones, head down to a Best Buy and ask to plug them into a Zune then an iPod and see which one sounds better to you, and which interface makes you smile more. Then you'll know which is right for you.

GOWDA PONNUSAMY said...

அடுத்த பதிவுகள் எப்பொழுது.எதிர் பார்க்கிறோம்.

senthur stocks said...

அருமையான வலைத்தளம்!!!!!
சண்முகசுந்தரம்
பங்கு சந்தை, பற்றி தெரிந்துகொள்ள,
மற்றும் பணம் பண்ண Free Mcx Tips , Free Stock Tips

Chellappa Yagyaswamy said...

எக்கச்சக்கமாக ஒரே பதிவில் எழுதிவிட்டீர்களே! சுவையானவை. பாராட்டுக்கள். (அது சரி, ஆறு மாதங்களாக லீவு எடுத்துக்கொண்டுவிட்டீர்களே, ஏன்?)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_8331.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கி. பாரதிதாசன் கவிஞா் said...

இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கரந்தை ஜெயக்குமார் said...

பதிவு நன்று நண்பரே
தொடர்ந்து எழுதுங்கள்...
தொடரக் காத்திருக்கின்றோம்

Mythily kasthuri rengan said...

செம காமெடி
அது சரி இப்படி போறபோக்குல
சன்ரைஸ் கம்பனில கொளுத்திபோடுரின்களே
அவங்க பாவம் இல்ல ?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுவாரசியமாகவும் ரசிக்கும்படியும் இருந்தது .

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...