...பல்சுவை பக்கம்!

.

Saturday, July 23, 2016

செட்டி சாலி கடை! #129

செட்டி சாலி கடை!


செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன்.

கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது.
"மைதா பரோட்டா சாப்பிடாதீர்கள்; மாரடைப்பு வரும்!" என்று ஊராட்சி மன்றத் தலைவரின் வேண்டுகோள் காணப்பட்டது அந்த போர்டில்.

கடை முதலாளியின் மகனிடம் நான் கேட்டேன்: "அந்த போர்டினுள்ள அறிவிப்பு காரணமாக உங்கள் வியாபாரத்திற்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?" என்று.

"பாதிப்பு எதுவுமில்லை; அதனால், நல்ல பலன்தான் கிடைக்கிறது" என்று பதில் சொன்னார் அவர்.

"எப்படி?" என்று நான் கேட்டேன்.

"அந்த போர்டை நின்னு படிக்கிறாங்க! அப்படியே உள்ளே வந்து பரோட்டாவை சாப்பிட்டுட்டு போறாங்க! வியாபாரம் அதிகமாகுதே தவிர, குறையலை!" என்றார் அவர்.

"ஓ... கெட்டதிலேயும் ஒரு நல்லது இருக்கும்பாங்களே, இதுதானா அது?!" என்று சொல்லிவிட்டு, சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டேன், நான்!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.
.  படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

5 comments:

Unknown said...

கடைக் காரருக்கு நல்லது ,நம் உடம்புக்கு மித கெடுதல்தானே :)

KILLERGEE Devakottai said...

ஹாஹாஹா இப்படிக்கூட யோசிக்கலாமோ....

Thulasidharan V Thillaiakathu said...

ஹஹஹஹ் ஸோ கடைசில நீங்களும் அப்படியே உள்ளே போயிட்டீங்க போல....இதுவும் சிகரெட் பெட்டிகளில் வரும் சாச்சுட்டரி வார்னிங்க் போலத்தான் இல்லையா...

வெங்கட் நாகராஜ் said...

ஹாஹா..... அதுவும் விளம்பரம்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான விளம்பர உத்தி.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...