...பல்சுவை பக்கம்!

.

Thursday, December 31, 2015

வாடிக்கை மறந்ததும் ஏனோ? பதிவு #126

2015 நிறைவுப் பதிவு!

வாடிக்கை மறந்ததும் ஏனோ? பதிவு - 126


எனக்குத் தெரிந்த ஒரு  நபர், தனது வாடிக்கையாளருக்கு பொருள்களை கடனில் விற்பனை செய்திருந்தார். வாடிக்கையாளர் அத்தொகையை ஒரு மாதத்தில் தருவதாகச் சொன்னவர், சொன்னபடி தரவில்லை. 


இந்த நபர், வாடிக்கையாளரிடம் பல முறை கேட்டுவிட்டார். வாடிக்கையாளர் 'அடுத்த மாதம் தருகிறேன், அடுத்த மாதம் தருகிறேன்' என்று கால நீட்டிப்பு செய்துவந்தார். மாதங்கள் 6 கடந்தபின்னும் பணம் வசூலாகவில்லை. 
இந்த நபர், வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று சப்தம் போட்டுக் கேட்டும் வாடிக்கையாளர் அசரவில்லை. அதே "அடுத்த மாதம் தருகிறேன்" பதிலைத்தான் சொன்னார்.


இந்த நபருக்கு கோபம் அதிகமாகிவிடவே, "இந்தப் பாரு, அடுத்த வாரம் வருவேன்... பணம் தரலைன்னு வச்சிக்க; துப்பாக்கி எடுத்து சுட்ருவேன், ஜாக்கிரதை" என்று கத்திவிட்டார். 


வாடிக்கையாளரோ, "அண்ணே, சுடுங்க! நல்லா சுடுங்க!! ஆனால், நெஞ்சில சுடுங்க! அப்பத்தான் பொட்டுனு உயிர் போகும்! ஆனால், உங்களுக்கு சல்லி வரவே வராது! அதனால, நெஞ்சில சுடுங்க!" என்று கூலாக பதில் சொன்னாராம். 
இந்த நபர் மிரண்டு போய் திரும்பி வந்து, எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருக்கிறார். 


மீதியை அடுத்த வாரம் சொல்றேன். (இன்ஷா அல்லாஹ்!)
குறிப்பு: இந்த சம்பவம், நமது தாய் நாட்டில் நடக்கவில்லை!
'சல்லி' என்பது 'காசு' அல்லது 'பணம்' ஆகும்.  

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

மூக்குடைப்பு போட்டி - பதிவு #125

மூக்குடைப்பு போட்டி - பதிவு #125

சூப்பர் நாவல் 1986 இதழ் 'மூக்குடைப்பு போட்டி அல்லது கால் வாரல் போட்டி'யில் பரிசு பெற்று பிரசுரமானது.


Click for Options

நயாஸ். எங்க ஊரு நண்பன். [பெயர் மாற்றப்பட்டுள்ளது.]  எனது க்ளாஸ்மேட்கூட. சில விஷயங்களைக் கூறிவிட்டு 
அறிவுஜீவி மாதிரி 'That is Nayas' என்று தன்னை, 
தன் தலையை தட்டிக் கொள்வான். 


ஒருமுறை அப்ளிகேஷன் ஒன்றை அனுப்புகையில் Post Office-ல் என்னிடம்  'அதை அப்படி எழுது, இதை இப்படி வை, இந்த மாதிரி ஒட்டு' என்று சொல்லிக் கொண்டே அவனது application-ஐயும் ஒட்டி முடித்தான். அவன் application form  தவிர மற்றதெல்லாம் உள்ளே வைத்து கவரை ஒட்டிவிட்டான். Application Form  மட்டும் வெளியில். அவனிடம் அதை எடுத்துக் காட்டினேன். 


"ச்சே, நான் ஒரு மடையன்" என்று தலையில் தட்டிக் கொண்டான். நான் உடனே, "அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஏன்னா, That is Nayas" என்றேன். அவன் முகம் போன போக்கு...

 இதே இதழில் 'சுபா பதில்கள்' பகுதியில் வந்த எனது கேள்வி + சுபா பதில்:

Click for Options

கேள்வி: தமிழ் - மகளா? அன்னையா?

சுபா பதில்: பயிலும்வரை, நிலா சோறூட்டும் அன்னை!
கைவந்த பின், அடங்கி நடக்கும் மகள்!!


இதே இதழில் பிரசுரமான பரிசுபெற்ற எனது கவிதை:

இங்கு சுட்டுங்கள்: "இன்று - நண்பா!"



அந்த இதழ் அட்டைப்படம்:

Click for Options
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, February 7, 2015

விமரிசனப் போட்டிப் பரிசு! #124

விமரிசனப் போட்டிப் பரிசு! #124

  பதிவர் திலகம் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் புதுமையான போட்டி ஒன்றினைத் தொடராக நடத்தினார். அவர் எழுதிய கதைகளிலிருந்து 40 கதைகளைத் தேர்ந்தெடுத்து, வாரம் ஒரு சிறுகதைவீதம் 40 வாரங்கள் வெளியிட்டு, விமரிசனப் போட்டியும் வைத்து பல பரிசுகளையும் வழங்கினார். இப்போட்டி, 'பதிவுலகின் புதுமை' என்று பலராலும் போற்றப்பட்டது.


  சுமார் 32 வாரங்கள்வரை அதன் நடுவர் யாரென வெளிப்படுத்தாமலே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பரிசுப் பணம் ஒவ்வொரு 10 கதைகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பொழுதிலேயே அனைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டதை, பலரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

     இந்தப் போட்டிகளில் பல பதிவர்கள் கலந்துகொண்டு தொடர்ந்து பரிசுகளை வென்று சாதனைகள் பல புரிந்தார்கள். எனக்கும் இரு போட்டிகளில் பரிசுகள் கிடைத்தன. அவற்றுள் 'உடம்பெல்லாம் உப்புச்சீடை' என்ற கதைக்கு நான் எழுதி, பரிசு பெற்ற விமரிசனத்தை கீழே படிக்கலாம்.

     அந்தச் சிறுகதைக்கான இணைப்பு:
'உடம்பெல்லாம் உப்புச்சீடை'

     அந்தச் சிறுகதைக்கான பரிசுபெற்ற எனது விமரிசனம் படிக்க  இணைப்பு:
'பரிசுபெற்ற விமரிசனம்'

      கீழே அந்த விமரிசனம்:



    

இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள்


இருவர்  



அதில் ஒருவர்



திரு. அ. முஹம்மது 


நிஜாமுத்தீன்  
அவர்கள்





வலைத்தளம்: 

”நிஜாம் பக்கம்”






இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திரு. அ. முஹம்மது 


நிஜாமுத்தீன்  


 அவர்களின் விமர்சனம் இதோ:





*  'உடம்பெல்லாம் உப்புச்சீடை' என்கிற இக்கதையின் தலைப்பே வித்தியாசமானது. முகத்திலோ, உடலின் மற்ற பாகங்களிலோ, அல்லது அனைத்து இடங்களிலுமோ சிலருக்கு சருமத்தில் முண்டும் முடுச்சுமாக கொப்புளங்கள் இருப்பதுண்டு. அவற்றை பொதுவாக, 'கொப்புளம்' என்றுதான் நாமெல்லாம் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், கதாசிரியரோ அதை 'உப்புச் சீடை' என்று குறிப்பிடுவது, அவரின் 'அதீத கற்பனையின் உச்சம்' எனலாம். 



* 'உடம்பெல்லாம் உப்புச்சீடை' கதை உணர்வுப்பூர்வமாக இருந்தது. 



புகைவண்டி, பேருந்து, விமானம் போன்ற பொதுசுமை கடத்திகளில் (Public Carrier)  நாம் பயணம் செய்யும்போது உடன் வரும் சக பயணிகளை நாம் தேர்வு செய்ய இயலாது. "நாம் ஒரு காரணமாக பயணம் மேற்கொள்ளுதல் போலவே அவரும் ஏதோ ஒரு காரியமாக பயணம் செய்கிறார்" என்பதை நாம் ஏனோ யோசிக்க மறந்துவிடுகிறோம். 




* அவரும்  சக பயணி; அவரும் சக உயிர் என்பதை  நாம் நமது வசதிக்காக மறந்துவிடுகிறோம்.  "இறைவனது  படைப்பில் அனைவரும் சமம், அதோடு எவ்வுயிரும் அவனது படைப்பே" என்பதை வலியுறுத்தும் படைப்பு இக்கதை!



*   பட்டாபி, பங்கஜம் மற்றும் குழந்தைகள் ஐவரும் ரயிலில் ஏறியதும் ஆரம்பமாகும் மிதமான கதையோட்டம், பயங்கரமான உருவம், தன்னை முறைத்துப் பார்த்ததினால் பயந்து ஓடி வந்ததாய் விமலா சொன்னதும் விரைவான கதையோட்டமாக மாறுகின்றது.


 * ஆரம்பம் முதலே அந்த நபரை பயங்கரமான உருவம், கை, கால்கள், உடம்பு எங்கெங்கும் கொப்புளங்கள் என்று வர்ணனை, அந்த உருவம் என்றும் 'அது' என்ற அஃறிணை வர்ணிப்பு என்றெல்லாம் அந்த நபரை கதாசிரியர் குறிப்பிடும்போது அந்த உருவத்தின்பால் அல்லது உருவத்தின்மேல் நமக்கும் அருவெறுப்பை புகுத்தி விட்டு விடுகிறார் கதாசிரியர். இது அவரின் யுக்தி அல்லது அவரின் வெற்றி!

 

இறைவன் யாரையும் தேவையில்லாமல் படைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியதி இறைவனால் படைக்கப் பட்டிருக்கின்றது. அதனால், யாராலும் அவற்றிலிருந்து தப்பவே முடியாது. இதை உணர்பவர்கள், தப்ப முடியாமல் தவிப்பவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை கண்டெடுப்பதுண்டுதான்.



* ஆனால், அந்த வழிகளும் கூட இறைவனால் வகுக்கப்பட்டதுதான். இன்னும் சில நேரங்களில், இறைவனை யாசிப்பதிலிருந்தும் அவனிடம் பிரார்த்திப்பதிலிருந்தும் இறைவனால் மீட்கப்படலாம். அது அவனின் திருவிளையாடல்களில் ஒன்று.



* இறைவனை நம்புபவர்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது. நம்மாலேயே அனைத்தும் நடக்கும் என்று நினைத்துவிடக் கூடாது. மற்றவர்களால் நாம் எப்போதாவது உதவிபெறப்படலாம்.



* வெளித் தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுதலும் மிகத் தவறு ஆகும். இங்கே பட்டாபி மறந்து வைத்துவிட்டு வந்த அவரது தந்தையின் அஸ்திக் கலயத்தை, அவரால் வெறுக்கப்பட்ட அந்த மனிதர் தனது தொடர் பயணத்தையும் துறந்துவிட்டு பட்டாபியைத் தேடி எடுத்து வந்து தருகின்றார். ஆக, இங்கும் இறைவனின் விளையாட்டைக் காணலாம்.



* புகைவண்டி மற்றும் வாழ்க்கை - இவை இரண்டும் ஏறக்குறைய ஒன்றேதான். புகைவண்டியும் பயணம்; வாழ்க்கையும் பயணம். புகைவண்டி ஓரிடத்திலிருந்து புறப்பட்டு மற்றொரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்கிறது. வாழ்க்கையும் பிறப்பில் ஆரம்பமாகி இறப்பில் சென்று முடிவடைகிறது.


* இந்தக் கதையும் புகைவண்டிப் போலத்தான். வளைந்து, நெளிந்து ஓடுகின்றது, பல திருப்பங்களுடன். அந்தப் பெரியவரை பயங்கரத் தோற்றமுள்ளவரா ஆரம்பத்தில் காட்டி, நம்மையும் அருவெறுப்பு கொள்ள வைக்கிறார், கதை சொல்லி. (Narrator).

* பின்  குழந்தை ரவியிடம் அன்பு பாராட்டி, பேசி மகிழ்ந்து, ஐஸ் கிரீம் வாங்கித் தந்து, சக மனிதரிடத்தில் அன்பு காட்டும் மனித நேயம் மிக்கவராக காட்டி புருவம் உயர்த்த வைக்கிறார் நம்மை.



* அடுத்து, தன் வழியுண்டு தானுண்டு என்று சகிப்புத் தன்மையுள்ளவராய் ஒதுங்கி கொள்கிறார். 



* அடுத்ததாக, அஸ்திக் கலயத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் உதவி செய்யும் பரோபகாரியாய் மிளிர்கிறார். 


* பெரிய வித்வான், பண்டிதர் , சிரியர் என அவரது அறிவு வெளிச்சம் கதை முழுவது பரவி, அவரது மைனஸ் பாயிண்ட்கள் அனைத்தும் அடிபட்டுப் போகின்றன கதைசொல்லும் சாமர்த்தியத்தினால். 



* ஆகக் கூடி, மன்னிப்பு கேட்கும் பட்டாபி குடும்பத்தையும் மன்னித்து, அருளாசியுடன் நல்லுபதேசம் செய்து, அருளுரை அளிக்கிறார்.    



இக்கதை ஒரு மனிதர் என்று காட்டி, அவர் மகா மனிதர் என்று முடிகின்றது. அதோடு, மனதினில் பல இறை சார்ந்த உணர்வுகளை மனிதர்களின்பால் உருவாக்கியிருக்கும் என்றால் மிகையில்லை.


-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.


 


 

மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




    

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, January 1, 2015

சுஜாதாவிடம் சில கேள்விகள் ~ 2 (#123)

சுஜாதாவிடம் சில கேள்விகள் ~2

திரு. சுஜாதா அவர்களிடம் நான் கேட்ட கேள்வியும்
அவரது பதிலும்...



  ♦குத்துமதிப்பாக அதிகபட்சம் எத்தனை 'சுடோகு'
தயார் செய்யலாம்?

சுஜாதா பதில்:
  ஒன்பதுக்கு ஒன்பது சுடோகு. என் கணக்குப்படி
6,670,903,752,021,072,936,960 தயார் செய்யலாம்.

[நன்றி : குங்குமம் 06/09/2007]

"சுஜாதாவிடம் சில கேள்விகள் ~ 1 படிக்க:  கீழே சுட்டுங்கள்:

www.nizampakkam.blogspot.com/2012/05/sujaathaa100-100.html

நன்றி:
குங்குமம் வார இதழ் &
சுஜாதா சார்!


.

படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...