...பல்சுவை பக்கம்!

.

Thursday, January 17, 2013

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!

நக்கீரன்  பதிப்பகத்திலிருந்து "உதயம்" என்கிற மாத நாவல் இதழ் வெளிவருவது தாங்கள் யாவரும் அறிந்ததே!

அந்த 'உதயம்' இதழின் ஆரம்பக் காலங்களில், 'வாசகர் கடிதம்' பகுதியில் ஒரு வாசகர்,  கடிதம் எழுதியிருந்தார்.   அதில், "உதயம் இதழில் சமையல் குறிப்புகள் பகுதி ஆரம்பிக்கலாமே?" என்று கேட்டிருந்தார்.

அந்த கடிதத்தின் கீழேயே, "இந்த கம்ப்யூட்டர் காலத்தில் சமையல் குறிப்பு வேண்டும் என்று கேட்கிறீர்களே? -ஆ-ர்." என்று ஆசிரியரும் பதில் கொடுத்திருந்தார்.

அதைப் பார்த்த நான், "கம்ப்யூட்டர் காலத்தில் சமையல் குறிப்பா என்று கேட்கும் நீங்கள் 'ஜாதகம் சாதகமா?' என்ற பகுதியை வெளியிடலாமா?" என்று பதில் கேள்வி ஒன்று கேட்டு, வாசகர் கடிதம் எழுதி அனுப்பினேன். அந்தக் கடிதம் அடுத்த மாத 'உதயம்' இதழிலேயே பிரசுரமானது. அந்தக் கடிதம் கீழே:

                                                                

ஆனால், எனது அந்தக் கேள்விக் கடிதத்திற்கு ஆசிரியர் பதில் எதுவும் தரவில்லை. ஆனாலும் அடுத்த மாதமே உதயம் இதழில் பதில் இருந்தது.

என்னவென்றால், அந்த 'ஜாதகம் சாதகமா?' பகுதியே நிறுத்தப் பட்டு விட்டது. ஆமாம்... அந்தப் பகுதி அதன்பின் வரவேயில்லை.

அடுத்த ஜிகினாவில்...
தினமணியின் கதைக்கதிர் இதழில் பரிசு பெற்ற எனது விமரிசனக்  கடிதம் பிரசுரமானது. அப்புறம் என்ன ஆனது?

-அ . முஹம்மது நிஜாமுத்தீன். 

இதையும் படிக்கலாம்:
ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

12 comments:

பூந்தளிர் said...

அப்புறம் என்ன ஆனது????????

r.v.saravanan said...

ஒரு வாசகர் கடிதம் மூலமா ஒரு பகுதியையே நிறுத்திட்டீங்களா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பூந்தளிர் said...

அப்புறம் என்ன ஆனது????????//

பத்திரிகை தொடர்கிறது...
'ஜாதகம் சாதகமா?' பகுதி நிறுத்தப்பட்டுவிட்டது.

கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//r.v.saravanan said...

ஒரு வாசகர் கடிதம் மூலமா ஒரு பகுதியையே நிறுத்திட்டீங்களா//

ஆமாம்ங்கோ...!!!

கருத்திற்கு நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எந்தக் கம்ப்யூடர் காலமாக இருந்தாலும் சாப்பிட்டுத் தானே ஆக வேண்டும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//T.N.MURALIDHARAN said...

எந்தக் கம்ப்யூடர் காலமாக இருந்தாலும் சாப்பிட்டுத் தானே ஆக வேண்டும்.//

நல்ல கேள்வி!
சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்!

நல்லாச் சொன்னீங்க உங்க கருத்தை! நன்றி!!

Unknown said...

good quetion!!!!!!! and welcome result 4m magazine

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாங்க ரியாஸ் அஹமது!

உங்களின் கருத்து சரியே!

வருகை + கருத்திற்கு நன்றி!

'பரிவை' சே.குமார் said...

வாசகர் கடிதம் மூலமாக ஒரு கட்டுரையையே நிறுத்த வைத்து வீட்டீர்களா... பரவாயில்லையே...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சே. குமார் said...

வாசகர் கடிதம் மூலமாக ஒரு கட்டுரையையே நிறுத்த வைத்து வீட்டீர்களா... பரவாயில்லையே...//

@ சே.குமார்,

ஆமாம், சமையல் குறிப்பு தேவையில்லையெனும்போது, ஜாதகம் பற்றிய பகுதி
தேவையில்லையே என்று கேட்டேன். அடுத்த மாதமே அப்பகுதியை நிறுத்திவிட்டார்கள்.

வருகைக்கு நன்றி!

”தளிர் சுரேஷ்” said...

அது வாசகர்களுக்கு மதிப்பளித்த பத்திரிக்கைகளின் காலம் போலும்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ s suresh,

ஆமாம். தங்கள் கருத்து உண்மையே!
கருத்துக்கு நன்றி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...