...பல்சுவை பக்கம்!

.

Wednesday, January 23, 2013

ஜிகினா 6: சங்கேத பாஷையில் 'குமுதம்' அரசு பதில்கள்!

ஜிகினா 6: சங்கேத பாஷையில் 'குமுதம்' அரசு பதில்கள்!

குமுதம் அரசு பதில்கள் பகுதிக்கு ஒரு கேள்வி எழுதி அனுப்பியிருந்தேன். இரு வாரங்களில் அந்தக் கேள்வி குமுதத்தில் பிரசுரம் ஆனது. இதுதான் அந்தக் கேள்வி:

 தான் சொல்ல வந்த செய்தியை, விஷயத்தை, தகவலை, 
நேரடியாக, சுற்றி வளைக்காமல், தேவையற்ற 
வார்த்தைகளைச் சேர்க்காமல் சொல்வதை, கூறுவதை, 
உரைப்பதை விட்டுவிட்டு, ஒரே பொருளை, ஒரே 
அர்த்தத்தைத் தரும் பல்வேறு சொற்களை, மிகவும் 
கஷ்டத்துடன் சேகரித்து, கடினப்படுத்திக் கோர்த்து 
வார்த்தைப் பின்னல் போடும், வாய்ச் சவடால் இடும் 
ஒரு சிலரைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
என்ன எண்ணுகிறீர்கள்?

இந்தக் கேள்விக்கு என்ன பதில் தந்தார் அரசு தெரியுமா? பதில் இதோ:

தெ. நி. வை. சு. வே.

இந்தப் பதிலைப் படித்து மண்டை காய்ந்து போனேன். நீங்களும் படித்துப் பாருங்கள். 

படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படியுங்கள்.

அடுத்த ஜிகினாவில்...
'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் பெரும் மாற்றமும்!

இதையும் படிக்கலாம்:

ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன  சம்பந்தம்?

ஜிகினா 4: உதயமும் அஸ்தமனமும்!

ஜிகினா 5: கதைக்கதிரின் கதை!
. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

16 comments:

E.K.SANTHANAM said...

குமுதம் அரசு பதில்கள் சுவையாக இருக்கும். இதுவோ... குழப்புதே???

சே. குமார் said...

அது சரி... இதற்கு அவருக்கே அர்த்தம் தெரியுமா தெரியாதா?

NIZAMUDEEN said...

@ E.K.SANTHANAM,

குழம்பிப் போய், கருத்து தந்ததற்கு நன்றி!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
riyaz ahamed said...

அண்ணே .... ஒன்னும் புரியலை ....
தெளிவா நினைக்க வைராக்கியத்துடன் சுவைக்க வேண்டாமே ........ஆளை விடுங்க முடியலை

NIZAMUDEEN said...

//சே. குமார் said...

அது சரி... இதற்கு அவருக்கே அர்த்தம் தெரியுமா தெரியாதா?//

அவருக்குத் தெரியுமா, தெரியாதா என்று எனக்குத் தெரியாது.

வருகைக்கு, கருத்துக்கு நன்றி!

NIZAMUDEEN said...

//riyaz ahamed said...

அண்ணே .... ஒன்னும் புரியலை ....
தெளிவா நினைக்க வைராக்கியத்துடன் சுவைக்க வேண்டாமே ........ஆளை விடுங்க முடியலை//

ஓடாதீங்க riyaz ahamed!

அதன் விரிவு, விரைவில் தருகிறேன்... (இறை நாட்டம்).
அதுவரை சற்றே பொருத்திருங்கள்.
கருத்திற்கு நன்றி!

s suresh said...

சுவையான பகிர்வு! ஆமாம் இந்த பதிலுக்கு விளக்கம் என்ன? அதையும் தந்திருக்கலாமே?! நன்றி!

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

SALAM,

முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.html

r.v.saravanan said...

எனக்கு ஒண்ணும் புரியலை உங்களுக்கு தெரிந்தால் சொல்லி விடுங்கள்

Riyas said...

இன்றை வலைச்சர அறிமுகப்படுத்தலில் உங்கள் பதிவை பற்றியும் சொல்லியிருக்கிறேன்..

முடிந்தால் வருகை தாருங்கள் நன்றி.

http://blogintamil.blogspot.com/2013/01/blog-post_25.html

NIZAMUDEEN said...

s suresh,

சற்றே பொறுத்திருங்கள், விளக்கம் தருகிறேன். இறை நாட்டம்.

NIZAMUDEEN said...

r.v.saravanan,

ம்... சொல்கிறேன்.

கருத்துக்கு நன்றி!

NIZAMUDEEN said...

Riyas,

அறிமுகம் செய்தமைக்கு நன்றி! வந்து படித்து, தந்தேன் கருத்து.

rulo maa said...

Hi is this really real thing which you share

anumharem said...

This is really awesome and i love that.. This is very unique thing you put on that post.. Thanks for sharing... follow

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...