...பல்சுவை பக்கம்!

.

Tuesday, October 11, 2011

விகடனும் நானும்!

விகடனும் நானும்!


அன்பின் சக பதிவர்களே!
நலம்தானே?

பரவலாக ஒரு புதிய திரைப்படம் வெளியானதும்
பதிவர்கள் பலரும் திரை விமரிசனம் எழுதுவார்கள்.
வித்தியாசமாக நான் 'இதழ் விமரிசனம்' எழுதி
இருக்கிறேன். இது விகடனுக்கு நான் எழுதும்
கடிதம்:-

இந்தக் கடிதம் பொதுவான இதழ் பற்றியும் இந்த
வார இதழ் (12 .10 . 2011 ) பற்றியும் எனது கருத்துக்கள்.

விகடன் தீபாவளி மலர் அறிவிப்பு ஏன் இத்தனை
தாமதம்? இப்பத்தான் பிளான் பண்ணினீர்களோ ?
(குறிப்பு: 06.10.2011-ல் இந்தக் கடிதம் எழுதினேன்.
08.10.2011-ல் விகடன் தீபாவளி மலர் வெளிவந்து விட்டது.)

144 +8 (அட்டை ) பக்க விகடனில் 'இன்பாக்ஸ்'
பகுதிக்கு இடம் இல்லையா? இன்பாக்ஸ் பகுதியில்
ஃபோட்டோக்கள் சிறியதாய் போட்டு தகவல்கள்
அதிகமாய் கொடுங்கள்.

என் விகடனை 14 பக்கங்களாக குறைத்து விட்டீர்களே?
'ஸ்மைல் ப்ளீஸ்' பகுதியும் இல்லையே? இனிவரும்
வாரங்களில் 'என் விகடன்' தனி இதழ் கிடையாது;
விகடனின் உள்ளேதான் வரும்; சரியா?

கடிதங்கள் பகுதியும் ட்ரிபிள் ஷாட் பகுதியும் நினைத்தால்
வருகிறது; இல்லாவிடில் வருவதில்லை. அவை தொடர்ந்து
வரவேண்டும்.

'ட்ரிபிள் ஷாட்'டுக்கு குறிப்புக்கள் எதுவும் அனுப்பினால்
உங்கள் ரிப்ளை 'invalid keyword' என்று வருகின்றது.
சுமார் 3 அல்லது 4 தடவைகள் வருகின்றது.
எஸ்.எம்.எஸ். அனுபியவகையிலும் உங்களது ரிப்ளை
வருகின்ற வகையிலும் ரூ. 16 - 20 பணம் காலியாகி
விடுகின்றது. பலன் பூச்சியம்.

சென்ற இதழ்வரை விகடன் மற்றும் என் விகடன்
இரண்டின் பக்கங்களையும் தொடர்ச்சியாய் போட்டு
120 பக்கங்கள் என்று போடுவீர்கள். இந்த வாரம்
இரண்டு இதழ்கள் பக்கங்களையும் தொடர்ச்சியாய்
போடாமல் 84 பக்கங்கள் , 68 பக்கங்கள் என்று
போட்டது ஏன்?

இந்த இதழில் 82 -ஆம் பக்கம் அறிவிப்பு "மிக மிக
அதிக பக்கங்கள்" என்கிறது. ஆக அடுத்த வாரம்
'டபுள் டுமீல்' கிடையாதா? சிங்கிள் டுமீல்தானா?

இந்த வாரம் 22 + 15 = 37 பக்கங்கள் விளம்பரங்கள்.
152 - 37 = 115 பக்கங்கள் விஷயங்கள் உண்டு. அடுத்த
வாரம் மிக மிக அதிக பக்கங்கள் என்று வைத்துக்
கொண்டால் 100 + 100 = 200 பக்கங்கள். எப்படியும்
60 பக்கங்கள் விளம்பரங்கள் இருக்க வாய்ப்புண்டு.
மற்ற பத்திரிகைகள் 'அடுத்த இதழ் மட்டும் 25 ரூபாய்'
என்பதுபோல் அறிவிப்பதில்லை. (அதே விலையில்
3 புத்தகங்கள் கூட தருவது உண்டு.) அதிக
விளம்பரங்கள் வெளியிடுவதற்காக அதிக
பக்கங்கள் தருகின்றீர்கள். விளம்பரதாரர்களிட்மிருந்தே
தொகையை வசூலித்துவிடும் நீங்கள் , எங்களிடம்
அதிக விலை கேட்பது ஏன்?

இந்த வாரம் மேலாண்மை பொன்னுசாமி சாரின்
சிறுகதையில் வர்ணனைகள் மிக அதிகம்.
உரையாடல்கள் அதிகம் இல்லை. ஒரு
யோசனை: 4 பக்க அளவில் வாராவாரம்
இரு சிறுகதைகள் வெளியிடலாமே?



பல ஆண்டுகளுக்கு முன் விகடன் தீபாவளி
சிறப்பிதழ் இரு புத்தகங்களை பின் (pin) செய்து
ஒரே புத்தகமாக வரும். நடுப்பக்கத்தில் நான்கு
பின்கள் இருக்கும். இரண்டாவது மற்றும்
மூன்றாவது பின்களை நீக்கினால் இரு
புத்தகங்களாய் பிரியும். மறுபடியும் 2 ஆவது
மற்றும் 3 ஆவது பின்களை மடக்கிவிட்டுக்
கொள்ளவேண்டும். அது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

மற்றும் அக்காலங்களில் ஓர் இதழ் முழுவதும்
முழு நவீனம் (full novel) இடம்பெறும். [உதாரணம்:
ஹேமா ஆனந்ததீர்த்தன் எழுதிய 'புதிருக்கு
பெயர் பூமா' ] இப்போதும் அதுபோல ஒரு
ஒரு நவீனம் முழு வண்ணத்தில் தரலாமே?

அன்பர்களே , எனது பழைய நினைவுகளைப் புரட்டிப்
பார்த்தேன். உங்கள் அனுபவங்களையும் தெரிவிக்க
வேண்டுகிறேன்.

நன்றி!
.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...