...பல்சுவை பக்கம்!

.

Friday, March 15, 2019

கணேஷுக்கு கால்கட்டு (சிறுகதை) #133


கணேஷுக்கு கால்கட்டு!
சிறுகதை(?) மாதிரி.
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

நண்பர் பாலகணேஷ் ஓர் ஓவியத்தைக் கொடுத்து அதற்கு சிறுகதை கேட்டார். (பாவம் அவர்!)
(நன்றி: ஓவியர் தமிழ்.)

கணேஷ் கத்தினான்: "தப்பு உங்கமேலேதான்!"

பாலா கத்தினாள்: "தப்பு உங்கமேலேதான்!"

"ஏங்க, நான் பாட்டுக்கு நேரா போய்க்கிட்டிருக்கேன்!
நீங்க சாமான்கள எடுத்திட்டு வந்து என்மேல இடிச்சிட்டு இப்படி கத்துறீங்களே?" என்றான் கணேஷ்.

"நான்தான் சாமான்லாம் வச்சிருந்தேன். நீங்க பார்த்து வரமாட்டீங்களா?" திருப்பிக் கேட்டாள் பாலா.

"நான் நேரா வந்தேன். நீங்கதான் குறுக்கே வந்திட்டீங்க! சரி, நகருங்க நான் ஆஃபிஸ் போகணும்" அவசரப்பட்டான் கணேஷ்.

"அதெல்லாம் முடியாது. நீங்க தட்டிவிட்டுட்டீங்க;
நீங்கதான் என் கார்ல எடுத்துவைக்கணும்"
தடுத்தாள் பாலா.

"ஐய்யய்யே! நான் கம்பெனில அசிஸ்டன்ட் மேனேஜர். ரெண்டு தெரு தள்ளி ஒரு கஸ்டமரப் பார்க்க, நடந்துபோய்ட்டு வறேன். எங்க எம்.டி.வேற திடீர்னு ஆஃபிஸ்-க்கு வந்துட்டதா மேனேஜர் ஃபோன் பண்றாரு.
நீ வேற இப்படி படுத்தறியேமா!!!?" கடுப்படித்தான் கணேஷ்.

ஆனால் பாலா விடவில்லை. சாமான்கள் அனைத்தையும் காரில் வைத்தபின்புதான் அவனை விட்டாள்.

கணேஷ் பதட்டப்பட்டான்.
"லேட் ஆயிடுச்சி; நடந்து போனால் இன்னும் லேட் ஆகிடும்.  கார்லயே என்னை ட்ராப் பண்ணிட்டுப் போ!" என்று அவளை மடக்கினான் கணேஷ்.

"சார், கார் உள்ளே இடமில்லை. கேரியர்ல உட்கார்ந்துக்கிறீங்களா?" ஏளனமாகக் கேட்டாள் பாலா.

"ஓகே" என்றான் கணேஷ்.

அவன் கார் மேலே ஏறியதும் விழுந்துவிடாமல் இருப்பதற்காக அவனை கேரியருடன் சேர்த்து கட்டிவிட்டாள் பாலா.

அப்படி இருவரும் ஹாயாக காரில் போகும்போதுதான் பாலாவின் தோழி கலா, அதை தனது ஃபோனில் படம் எடுத்து, பாலாவிடம் கேட்காமலே ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவிட்டாள்.

அதைப்பார்த்த கலாவின் நண்பன் கண்ணன் அதில் தனது நண்பன் கணேஷை டேக் பண்ணிவிட்டான்.

உடனே இந்த செய்தி இணையம் முழுவதும் வைரல் ஆகிவிட்டது.
ட்டீ.வி. மற்ற மீடியாக்களும் கதை, கதையாய் இதை தமிழகம் எங்கும் கொண்டு சேர்த்தன.

பாலாவின் பெற்றோர் அவளிடம், "யாருடி அவன்? அவனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு?" என்று குறுக்கு விசாரணை ஆரம்பித்துவிட்டார்கள்.

கணேஷின் பெற்றோரும் கணேஷிடம் கேள்விமேல் கேள்வி கேட்டு திணறடித்தார்கள்.

இதைத் தொடர்த்து கணேஷின் நண்பர்களும் பாலாவின் தோழிகளும் இரு வீட்டாரிடமும் பேசி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.
திருமணமும் சு(ல)பமாய் முடிந்தது.

கணேஷின் நண்பர்களும் பாலாவின் தோழிகளும் 'இதுபோல நமக்கு ஒரு துணை கிடைக்குமா!?' என்று தேட ஆரம்பித்து விட்டார்கள்.

(முற்றியது.)

.

படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, August 19, 2017

பிக் பாக்கெட் - குமுதம் இதழில்! #132

பிக் பாக்கெட் - குமுதம் இதழில்!

குமுதம் சமீபத்திய 01/02/2017 இதழில் பிரசுரமான எனது படைப்பு:

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Thursday, February 2, 2017

முல்லை தங்கராசன் #131

 முல்லை தங்கராசன்.

 No automatic alt text available.


முல்லை தங்கராசன்.
இந்தப் பெயர் 'முத்து காமிக்ஸ்' மூலமாக அறிமுகம். முத்து காமிக்ஸ் அட்டையிலேயே 'பதிப்பாசிரியர்: முல்லை தங்கராசன்' என்று அச்சிட்டிருக்கும்.

சிறிய கால இடைவெளிக்குப் பின்னால், "ரத்னபாலா" எனும் பாலர் வண்ண மாதமலர் ஆசிரியராகவும், தொடர்ந்து 'மணிப்பாப்பா' ஆசிரியராகவும் தெரியும்.

சுப்ரஜா ஸ்ரீதரன் ஆசிரியராகவும்  கீழை அ. கதிர்வேல் உதவி ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்த 'வாதினி' மாத இதழில் சமீபத்தில் முல்லை தங்கராசன் எழுதிய 'பணம், பெண், பகை' எனும் புதினத்தைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

மேலே குறிப்பிட்டிருந்த இடைவெளி காலத்தில் 'மக்கள் குரல்' நாளிதழின் 'நவரத்தினம்' மாத இதழில் முல்லை தங்கராசன் எழுதிய புதினம் வந்திருந்தது. தலைப்பு: "ஊர் சிரித்த கதை".

கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும், "இப்படியாக அந்த ஊர் சிரித்தது" என்று முடித்திருப்பார்.

இதற்குமுன் இப்படி எந்த எழுத்தாளரும் செய்தார்களா என்பது தெரியாது. ஆனால் சுஜாதா பிறகுதான் "ஆ..." என்ற பாணியில் ஆனந்த விகடனில் தொடர்கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Wednesday, January 4, 2017

அன்பு சோதரா! என் அன்பு சோதரா!! (பாடல்) #130

அன்பு சோதரா! என் அன்பு சோதரா!! (பாடல்) #130

பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட பாடல், இது!
திரை : தேன்  நிலவு.
மெட்டு : பாட்டு பாடவா!
இயற்றியவர்: எஸ். ஏ. மன்சூர் அலி.

அன்பு சோதரா!  என் அன்பு சோதரா!!
விரைந்து ஓடி வா!  விரைந்து ஓடி வா!!
வல்ல நாயன் தந்த மார்க்கம் நிலை நிறுத்த வா! - ஒரு
நல்ல மாற்றம் காண்பதற்கு தோள் கொடுக்க வா!!
                                                             (அன்பு சோதரா...)

கொஞ்சமல்ல நஞ்சமல்ல இந்த நாட்டிலே - தீமை
எங்கு நோக்கினும் தலை விரித்து ஆடுதே.
மாற்றம் காண வேடமிட்டு  வந்த கொள்கைகள் - மேலும்
சிக்கலுக்குள் சிக்கலாகி தோற்று  போனதே
தீர்வு சொல்ல வா!  நல்ல தீர்வு சொல்ல வா - எங்கும்
தீமை நீக்கி நீதி காக்கும் தீனை சொல்ல வா!
                                                             (அன்பு சோதரா...)

வல்லவன் தன கட்டளைகள் இந்த நாட்டையே
ஆளும் சட்டமாக ஆக்கிக் காட்டும் ஆட்சி காண வா!
குற்றமற்ற சூழல் தந்து தீமை நீக்க வா! - மக்கள்
அச்சமற்று வாழுகின்ற மாட்சி காண வா!
சாட்சி சொல்ல வா!  நீயும் சாட்சி சொல்ல வா!
மறுமை வாழ்வு நம்மைத் தேடி வந்து, அழைக்கும் ஓடி வா!
                                                               (அன்பு சோதரா...)   . படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

Saturday, July 23, 2016

செட்டி சாலி கடை! #129

செட்டி சாலி கடை!


செட்டி சாலி கடைக்கு சாப்பிடப் போயிருந்தேன்.

கடையின் வாசல் அருகே ஒரு பிளக்ஸ் போர்டு இருந்தது.
"மைதா பரோட்டா சாப்பிடாதீர்கள்; மாரடைப்பு வரும்!" என்று ஊராட்சி மன்றத் தலைவரின் வேண்டுகோள் காணப்பட்டது அந்த போர்டில்.

கடை முதலாளியின் மகனிடம் நான் கேட்டேன்: "அந்த போர்டினுள்ள அறிவிப்பு காரணமாக உங்கள் வியாபாரத்திற்கு எதுவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?" என்று.

"பாதிப்பு எதுவுமில்லை; அதனால், நல்ல பலன்தான் கிடைக்கிறது" என்று பதில் சொன்னார் அவர்.

"எப்படி?" என்று நான் கேட்டேன்.

"அந்த போர்டை நின்னு படிக்கிறாங்க! அப்படியே உள்ளே வந்து பரோட்டாவை சாப்பிட்டுட்டு போறாங்க! வியாபாரம் அதிகமாகுதே தவிர, குறையலை!" என்றார் அவர்.

"ஓ... கெட்டதிலேயும் ஒரு நல்லது இருக்கும்பாங்களே, இதுதானா அது?!" என்று சொல்லிவிட்டு, சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டேன், நான்!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.
.  படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

மறக்க முடியுமா? #128

மறக்க முடியுமா?

- அ. முஹம்மது நிஜாமுத்தீன்,
இறைவனுக்கு நன்றி!
நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் 
தப்பித்தோம்!!!நாதுராம் கோட்சே 
கேடுகெட்ட நீ 
மாட்டிக் கொண்டாய்!


கொல்வது எப்படி?
சொல்லித் தந்தாய்!


மார்பில் குத்துவது எப்படி?
அல்ல, அல்ல,
நெஞ்சில் சுடுவது எப்படி?
சொல்லித்  தந்தாய்! 


கும்பிடுவதுபோல் நம்பவைத்து
கொல்வது எப்படி?
நயவஞ்சகம் என்பது என்ன?
சொல்லித் தந்தாய்!


ஒரு தேசத்தின் ஜீவனாய் 
இருந்தவரை எப்படி கொன்றாய்?
சொல்லித் தந்தாய்!


'பாவம் ஓரிடம்;
பழி ஓரிடம்'
என்பார்கள். 
அதை எளிதாய்
புரிய வைத்தாய்!


அதை, ஆர்.எஸ்.எஸ்.காரனாய் 
நீ கொலை செய்து,
இஸ்லாமியர்மேல் 
பழி போடுவது எப்படி? 
சொல்லித் தந்தாய்!


"மாபாதகன்" என்பதன் 
பொருள் என்ன?
சொல்லித் தந்தாய்!


இவற்றிற்கெல்லாம் ஒரு
சரித்திர சான்று
நீ சுட்டுக் கொன்ற
எங்கள் காந்தித் தாத்தா!
தேசத்தின் பிதா!


கேடுகெட்ட நீ 
மாட்டிக் கொண்டாய்!
நல்வாய்ப்பாய் இஸ்லாமியர்கள் 
தப்பித்தோம்!!!
மறக்க முடியுமா?


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
Related Posts Plugin for WordPress, Blogger...