...பல்சுவை பக்கம்!

.

Tuesday, October 11, 2011

விகடனும் நானும்!

விகடனும் நானும்!


அன்பின் சக பதிவர்களே!
நலம்தானே?

பரவலாக ஒரு புதிய திரைப்படம் வெளியானதும்
பதிவர்கள் பலரும் திரை விமரிசனம் எழுதுவார்கள்.
வித்தியாசமாக நான் 'இதழ் விமரிசனம்' எழுதி
இருக்கிறேன். இது விகடனுக்கு நான் எழுதும்
கடிதம்:-

இந்தக் கடிதம் பொதுவான இதழ் பற்றியும் இந்த
வார இதழ் (12 .10 . 2011 ) பற்றியும் எனது கருத்துக்கள்.

விகடன் தீபாவளி மலர் அறிவிப்பு ஏன் இத்தனை
தாமதம்? இப்பத்தான் பிளான் பண்ணினீர்களோ ?
(குறிப்பு: 06.10.2011-ல் இந்தக் கடிதம் எழுதினேன்.
08.10.2011-ல் விகடன் தீபாவளி மலர் வெளிவந்து விட்டது.)

144 +8 (அட்டை ) பக்க விகடனில் 'இன்பாக்ஸ்'
பகுதிக்கு இடம் இல்லையா? இன்பாக்ஸ் பகுதியில்
ஃபோட்டோக்கள் சிறியதாய் போட்டு தகவல்கள்
அதிகமாய் கொடுங்கள்.

என் விகடனை 14 பக்கங்களாக குறைத்து விட்டீர்களே?
'ஸ்மைல் ப்ளீஸ்' பகுதியும் இல்லையே? இனிவரும்
வாரங்களில் 'என் விகடன்' தனி இதழ் கிடையாது;
விகடனின் உள்ளேதான் வரும்; சரியா?

கடிதங்கள் பகுதியும் ட்ரிபிள் ஷாட் பகுதியும் நினைத்தால்
வருகிறது; இல்லாவிடில் வருவதில்லை. அவை தொடர்ந்து
வரவேண்டும்.

'ட்ரிபிள் ஷாட்'டுக்கு குறிப்புக்கள் எதுவும் அனுப்பினால்
உங்கள் ரிப்ளை 'invalid keyword' என்று வருகின்றது.
சுமார் 3 அல்லது 4 தடவைகள் வருகின்றது.
எஸ்.எம்.எஸ். அனுபியவகையிலும் உங்களது ரிப்ளை
வருகின்ற வகையிலும் ரூ. 16 - 20 பணம் காலியாகி
விடுகின்றது. பலன் பூச்சியம்.

சென்ற இதழ்வரை விகடன் மற்றும் என் விகடன்
இரண்டின் பக்கங்களையும் தொடர்ச்சியாய் போட்டு
120 பக்கங்கள் என்று போடுவீர்கள். இந்த வாரம்
இரண்டு இதழ்கள் பக்கங்களையும் தொடர்ச்சியாய்
போடாமல் 84 பக்கங்கள் , 68 பக்கங்கள் என்று
போட்டது ஏன்?

இந்த இதழில் 82 -ஆம் பக்கம் அறிவிப்பு "மிக மிக
அதிக பக்கங்கள்" என்கிறது. ஆக அடுத்த வாரம்
'டபுள் டுமீல்' கிடையாதா? சிங்கிள் டுமீல்தானா?

இந்த வாரம் 22 + 15 = 37 பக்கங்கள் விளம்பரங்கள்.
152 - 37 = 115 பக்கங்கள் விஷயங்கள் உண்டு. அடுத்த
வாரம் மிக மிக அதிக பக்கங்கள் என்று வைத்துக்
கொண்டால் 100 + 100 = 200 பக்கங்கள். எப்படியும்
60 பக்கங்கள் விளம்பரங்கள் இருக்க வாய்ப்புண்டு.
மற்ற பத்திரிகைகள் 'அடுத்த இதழ் மட்டும் 25 ரூபாய்'
என்பதுபோல் அறிவிப்பதில்லை. (அதே விலையில்
3 புத்தகங்கள் கூட தருவது உண்டு.) அதிக
விளம்பரங்கள் வெளியிடுவதற்காக அதிக
பக்கங்கள் தருகின்றீர்கள். விளம்பரதாரர்களிட்மிருந்தே
தொகையை வசூலித்துவிடும் நீங்கள் , எங்களிடம்
அதிக விலை கேட்பது ஏன்?

இந்த வாரம் மேலாண்மை பொன்னுசாமி சாரின்
சிறுகதையில் வர்ணனைகள் மிக அதிகம்.
உரையாடல்கள் அதிகம் இல்லை. ஒரு
யோசனை: 4 பக்க அளவில் வாராவாரம்
இரு சிறுகதைகள் வெளியிடலாமே?



பல ஆண்டுகளுக்கு முன் விகடன் தீபாவளி
சிறப்பிதழ் இரு புத்தகங்களை பின் (pin) செய்து
ஒரே புத்தகமாக வரும். நடுப்பக்கத்தில் நான்கு
பின்கள் இருக்கும். இரண்டாவது மற்றும்
மூன்றாவது பின்களை நீக்கினால் இரு
புத்தகங்களாய் பிரியும். மறுபடியும் 2 ஆவது
மற்றும் 3 ஆவது பின்களை மடக்கிவிட்டுக்
கொள்ளவேண்டும். அது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

மற்றும் அக்காலங்களில் ஓர் இதழ் முழுவதும்
முழு நவீனம் (full novel) இடம்பெறும். [உதாரணம்:
ஹேமா ஆனந்ததீர்த்தன் எழுதிய 'புதிருக்கு
பெயர் பூமா' ] இப்போதும் அதுபோல ஒரு
ஒரு நவீனம் முழு வண்ணத்தில் தரலாமே?

அன்பர்களே , எனது பழைய நினைவுகளைப் புரட்டிப்
பார்த்தேன். உங்கள் அனுபவங்களையும் தெரிவிக்க
வேண்டுகிறேன்.

நன்றி!
.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

34 comments:

E.K.SANTHANAM said...

சபாஷ்...
சரியான கேள்விகள்...
சுவாரஸ்யமான தகவலகள்...

C.P. செந்தில்குமார் said...

விகடனுக்கு வினாக்கள்??

aotspr said...

மிகவும் நல்ல பதிவு.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Shanmugam Rajamanickam said...

நல்ல பதிவு தான்,,,

rajamelaiyur said...

good post

rajamelaiyur said...

இன்று என் வலையில்


கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா

சே.குமார் said...

விகடனுக்கே வினாக்கள்...
நல்ல கேள்விகள்.

சமுத்ரா said...

சபாஷ்...
சரியான கேள்விகள்...

வருண் said...

***இந்த வாரம் மேலாண்மை பொன்னுசாமி சாரின்
சிறுகதையில் வர்ணனைகள் மிக அதிகம். ***

சாண்டில்யன் ஸ்டைல்ல எழுதுவதாக நெனச்சு எழுதினாரோ என்னவோ! :)))

ஜெய்லானி said...

//அதிக
விளம்பரங்கள் வெளியிடுவதற்காக அதிக
பக்கங்கள் தருகின்றீர்கள். விளம்பரதாரர்களிட்மிருந்தே
தொகையை வசூலித்துவிடும் நீங்கள் , எங்களிடம்
அதிக விலை கேட்பது ஏன்?//

என் மனதில் ரொம்ப நாளா ஓடிய கேள்வி இது , நீங்க கேட்டுட்டீங்க :-))

சின்ன கண்ணன் said...

சாட்டையடி கேள்விகள்
மிக அருமை.
மூங்கீல் மூச்சு - தொடர்ந்து சுவாசித்தாள் (”சுகா” மீண்டும் எழுதினாள்) நன்றாக இருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

அஸ்ஸலாமு அலைக்கும் நிஜாமண்ணா நலமா?

அருமையான கேள்விகள். அட்டகாசம்..

r.v.saravanan said...

அதிக
விளம்பரங்கள் வெளியிடுவதற்காக அதிக
பக்கங்கள் தருகின்றீர்கள். விளம்பரதாரர்களிட்மிருந்தே
தொகையை வசூலித்துவிடும் நீங்கள் , எங்களிடம்
அதிக விலை கேட்பது ஏன்?

good question nijam

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

E.K.SANTHANAM said...
சபாஷ்...
சரியான கேள்விகள்...
சுவாரஸ்யமான தகவலகள்... //

வ(ந்து கருத்து த)ந்தமைக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//C.P. செந்தில்குமார் said...
விகடனுக்கு வினாக்கள்?? //


ஆமாம்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Kannan said...
மிகவும் நல்ல பதிவு.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com //


கருத்து தந்தமைக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஆர்.சண்முகம் said...
நல்ல பதிவு தான்,,, //


நானும் ஒப்புக் கொள்கிறேன். (ஹி... ஹி...)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

// "என் ராஜபாட்டை"- ராஜா said...
good post //

Thanks...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சே.குமார் said...
விகடனுக்கே வினாக்கள்...
நல்ல கேள்விகள். //


-நன்றி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

// சமுத்ரா said...
சபாஷ்...
சரியான கேள்விகள்//


வாங்க...நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//வருண் said...
***இந்த வாரம் மேலாண்மை பொன்னுசாமி சாரின்
சிறுகதையில் வர்ணனைகள் மிக அதிகம். ***

சாண்டில்யன் ஸ்டைல்ல எழுதுவதாக நெனச்சு எழுதினாரோ என்னவோ! :))) //


-இருக்கலாம்...நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

// ஜெய்லானி said...
//அதிக
விளம்பரங்கள் வெளியிடுவதற்காக அதிக
பக்கங்கள் தருகின்றீர்கள். விளம்பரதாரர்களிட்மிருந்தே
தொகையை வசூலித்துவிடும் நீங்கள் , எங்களிடம்
அதிக விலை கேட்பது ஏன்?//

என் மனதில் ரொம்ப நாளா ஓடிய கேள்வி இது , நீங்க கேட்டுட்டீங்க :-)) //


-நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

// சின்ன கண்ணன் said...
சாட்டையடி கேள்விகள்
மிக அருமை.
மூங்கீல் மூச்சு - தொடர்ந்து சுவாசித்தாள் (”சுகா” மீண்டும் எழுதினாள்) நன்றாக இருக்கும். //

-சுகா கட்டுரைத் தொடர் அருமைதான்.வ(ந்து கருத்து த)ந்தமைக்கு நன்றி

தூயவனின் அடிமை said...

பாஸ் வித்தியாசமான வினாக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அன்புடன் மலிக்கா said...

அஸ்ஸலாமு அலைக்கும் நிஜாமண்ணா நலமா?

அருமையான கேள்விகள். அட்டகாசம்..//

வ அலைக்குமுஸ்ஸலாம் கவிஞரே...
நலம்தான்...
கருத்திற்கு நன்றி!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//r.v.saravanan said...

அதிக
விளம்பரங்கள் வெளியிடுவதற்காக அதிக
பக்கங்கள் தருகின்றீர்கள். விளம்பரதாரர்களிட்மிருந்தே
தொகையை வசூலித்துவிடும் நீங்கள் , எங்களிடம்
அதிக விலை கேட்பது ஏன்?

good question nijam//

Thanks RVS!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இளம் தூயவன் said...

பாஸ் வித்தியாசமான வினாக்கள்.//

கருத்திற்கு நன்றி இளம்தூயவன்!!!

Jaleela Kamal said...

சரியான கேள்வி

ADMIN said...

நல்ல பல விமர்சனங்களை தரும் விகடனையே விமர்சித்துவிட்டீர்கள்..! எங்கு எந்த குறை என்று நுணுகிதெரிந்து கூறியிருக்கிறீர்கள். உபயோகமில்லை சினிமா விமர்சனத்தை விட உங்கள் விமர்சனம மகத்தானது. ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். எனது மனமுவந்த பாராட்டுக்கள்..


கீழிருப்பது எம்முடைய வலைப்பூவைப்பற்றியது:


எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

ADMIN said...

உங்களின் ஒவ்வொரு இடுகையும் பயனுள்ளதாக, உண்மையை எடுத்துச்சொல்வதுமாவும் உள்ளது.

உங்கள் தளத்தில் பாலோவராக இணைந்திருக்கிறேன்.. எனக்கு மகிழ்ச்சி.. எம் தளத்தை பார்வையிட்டுவிட்டு பிடித்திருந்தால் நீங்களும் இணையலாம். நன்றி நண்பரே..!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

நண்பரே... படிக்கும் காலத்தில் வகுப்பு மேசைக்கு கீழே விகடனை படிச்சிருக்கேன். அவ்ளோ நாட்டம். இப்போ விகடனை படிக்க நேரம் இல்லை. இருந்தாலும் என் மலரும் நினைவுகளை மீட்டு விட்டுட்டிங்க.

உங்கள் கேள்விகள் அனைத்தும் சரியே... விகடன் இப்போ நிறைய மாறிவிட்டது என நினைக்கிறேன்.


நம்ம தளத்தில்:
"வொய் திஸ் கொலவெறி டி" - Why This Kolaveri Di

இலக்ஷ்மிராஜன் said...

சின்ன வயசில விகடன அட்டை முதல் அட்டை வரை படிச்சி முடிச்சு தான் கீழ வைப்பேன். பழைய நினைவுகள மலர வச்சதுக்கு நன்றி, நண்பரே

-piramu.blogspot.com

jeyippom said...

arumai

Anonymous said...

அருமை, super sir.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...