...பல்சுவை பக்கம்!

.

Wednesday, January 4, 2017

அன்பு சோதரா! என் அன்பு சோதரா!! (பாடல்) #130

அன்பு சோதரா! என் அன்பு சோதரா!! (பாடல்) #130

பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட பாடல், இது!
திரை : தேன்  நிலவு.
மெட்டு : பாட்டு பாடவா!
இயற்றியவர்: எஸ். ஏ. மன்சூர் அலி.

அன்பு சோதரா!  என் அன்பு சோதரா!!
விரைந்து ஓடி வா!  விரைந்து ஓடி வா!!
வல்ல நாயன் தந்த மார்க்கம் நிலை நிறுத்த வா! - ஒரு
நல்ல மாற்றம் காண்பதற்கு தோள் கொடுக்க வா!!
                                                             (அன்பு சோதரா...)

கொஞ்சமல்ல நஞ்சமல்ல இந்த நாட்டிலே - தீமை
எங்கு நோக்கினும் தலை விரித்து ஆடுதே.
மாற்றம் காண வேடமிட்டு  வந்த கொள்கைகள் - மேலும்
சிக்கலுக்குள் சிக்கலாகி தோற்று  போனதே
தீர்வு சொல்ல வா!  நல்ல தீர்வு சொல்ல வா - எங்கும்
தீமை நீக்கி நீதி காக்கும் தீனை சொல்ல வா!
                                                             (அன்பு சோதரா...)

வல்லவன் தன கட்டளைகள் இந்த நாட்டையே
ஆளும் சட்டமாக ஆக்கிக் காட்டும் ஆட்சி காண வா!
குற்றமற்ற சூழல் தந்து தீமை நீக்க வா! - மக்கள்
அச்சமற்று வாழுகின்ற மாட்சி காண வா!
சாட்சி சொல்ல வா!  நீயும் சாட்சி சொல்ல வா!
மறுமை வாழ்வு நம்மைத் தேடி வந்து, அழைக்கும் ஓடி வா!
                                                               (அன்பு சோதரா...)   . படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாசித்துப் (பாடிப்) பார்த்தேன்...

அருமை ஜி... தொடர வாழ்த்துகள்...

KILLERGEE Devakottai said...

நல்ல பாடல் வரிகள் நண்பரே

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பதிவு

வை.கோபாலகிருஷ்ணன் said...

நண்பனை சகோதரனாக பாவித்து பாடியுள்ள மிகவும் அருமையான + இனிமையான அந்தக்காலத் திரைப்படப் பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பாடலின் வரிகளை இங்குப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...நண்பரே!

பரிவை சே.குமார் said...

அருமை....
ரொம்ப நாளாச்சு... தொடர்ந்து எழுதுங்க...

ஆல் இஸ் வெல்....... said...

ரொம்ப நல்லா இருக்குது..

தூயவனின் அடிமை said...

nizam call me.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...