...பல்சுவை பக்கம்!

.

Thursday, February 2, 2017

முல்லை தங்கராசன் #131

 முல்லை தங்கராசன்.

 No automatic alt text available.


முல்லை தங்கராசன்.
இந்தப் பெயர் 'முத்து காமிக்ஸ்' மூலமாக அறிமுகம். முத்து காமிக்ஸ் அட்டையிலேயே 'பதிப்பாசிரியர்: முல்லை தங்கராசன்' என்று அச்சிட்டிருக்கும்.

சிறிய கால இடைவெளிக்குப் பின்னால், "ரத்னபாலா" எனும் பாலர் வண்ண மாதமலர் ஆசிரியராகவும், தொடர்ந்து 'மணிப்பாப்பா' ஆசிரியராகவும் தெரியும்.

சுப்ரஜா ஸ்ரீதரன் ஆசிரியராகவும்  கீழை அ. கதிர்வேல் உதவி ஆசிரியராகவும் கொண்டு வெளிவந்த 'வாதினி' மாத இதழில் சமீபத்தில் முல்லை தங்கராசன் எழுதிய 'பணம், பெண், பகை' எனும் புதினத்தைப் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.

மேலே குறிப்பிட்டிருந்த இடைவெளி காலத்தில் 'மக்கள் குரல்' நாளிதழின் 'நவரத்தினம்' மாத இதழில் முல்லை தங்கராசன் எழுதிய புதினம் வந்திருந்தது. தலைப்பு: "ஊர் சிரித்த கதை".

கதையின் ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும், "இப்படியாக அந்த ஊர் சிரித்தது" என்று முடித்திருப்பார்.

இதற்குமுன் இப்படி எந்த எழுத்தாளரும் செய்தார்களா என்பது தெரியாது. ஆனால் சுஜாதா பிறகுதான் "ஆ..." என்ற பாணியில் ஆனந்த விகடனில் தொடர்கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.



. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முல்லை தங்கராசன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளத்தை blogspot.com என்று மாற்றி விடுங்கள்...

ஏன் என்பதை கீழே இணைப்பில் சென்று வாசிக்கவும்...

http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html

உதவி தேவையென்றால் தொடர்பு கொள்ளுங்கள்... நன்றி...

வை.கோபாலகிருஷ்ணன் said...

முல்லை தங்கராசன் என்ற ஓர் பத்திரிகை ஆசிரியரைப் பற்றி தங்களின் இந்தப்பதிவின் மூலம் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள், நண்பரே.

KILLERGEE Devakottai said...

ஆ எனக்கும் ஞாபகம் வருகிறது

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல தகவல் நண்பரே! புதிய தகவலும் கூட மிக்க நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

முத்துகாமிக்ஸ், ரத்னபாலா படக்கதைகளும், முல்லை தங்கராஜனும் நினைவில் வந்தார்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நாவல் பகிர்வுக்கு நன்றி.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...