திருப்பூர் சாரதி ஜோக்ஸ் (2)
...பல்சுவை பக்கம்!
.
Saturday, July 30, 2022
திருப்பூர் சாரதி ஜோக்ஸ் (2) #167
திருப்பூர் சாரதி ஜோக்ஸ் (1) #166
Thursday, July 28, 2022
சிறுகதைப் போட்டி! #165
சிறுகதைப் போட்டி #165
24/07/2022 ஞாயிறன்று 'தமிழக எழுத்தாளர்கள்' குழுமத்தில், ஒரு கதையைப் பதிவிட்டு, அதன் சரியான முடிவை எழுதுங்கள் என்பதாக ஒரு போட்டி வைக்கப்பட்டது.
பரிசு பெற்ற மூன்றில் நான் எழுதிய கதை முடிவும் ஒன்று!
இதோ கதையும் மூன்று முடிவுகளும்!
சிறுகதை:
நேரம்! - திருப்பூர் சாரதி
====== ===============
" கோபுசாரைப் பார்க்கணும்! "
குரல் கேட்டு நிமிர்ந்தார் அந்தக் கம்பெனியின் செக்யூரிட்டி. எதிரே கல்லூரி மாணவன் ஒருவன் நின்றிருந்தான்.
" அப்பாயின்மென்ட் இருக்கா தம்பி? "
" இல்லேங்க "
செக்யூரிட்டி சிரித்தபடியே,
" சாரைப் பார்க்க அப்பாயின்மென்ட் வாங்கவே எத்தனை நாளாகும்னு தெரியுமா? சும்மா நினைச்ச நேரத்தில் யாரும் பார்த்திட முடியாது. உங்க பேரையும், போன் நம்பரையும் எழுதிவச்சுட்டுப் போங்க, உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தாக் கூப்பிடுவாங்க. " என்றார் நக்கலாக!
" ஆனா அவர் எங்க காலேஜ் விழாவுக்கு வந்தப்போ, மாணவர்கள் ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா எந்த நேரமும் என்னை வந்து பார்க்கலாம்னு சொல்லிட்டு வந்தாரே...! "
" அவங்க மேடைக்காக பேசறதை எல்லாம் நம்பி இப்படி வரக்கூடாது தம்பி. வேலை ஆகணும்னா காத்திருந்துதான் ஆகணும். கிளம்புங்க, போன் வரும்! "
ஏமாற்றத்துடன் கிளம்பினான் அந்தக் கல்லூரி மணவன்.
அடுத்தநாள் காலை...
" எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா... " என்றபடி ...
கதாசிரியர் எழுதியிருந்த முடிவு:
திரு.திருப்பூர் சாரதி அவர்கள் எழுதிவைத்திருந்த முடிவு:
தன் பங்களாவுக்கு வெளியே, கக்கா போக முரண்டு பிடித்த நாயைப் பிடித்துக்கொண்டு ஒருமணி நேரமாகக் காத்திருந்தார் கோபு!
திருப்பூர் திரு. சாரதி அவர்கள்
...................................
இனி பரிசு பெற்ற 3 முடிவுகள்:
பரிசு பெற்றவை:
அடுத்தநாள் காலை...
" எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா... " என்றபடி ...
தொடர்ச்சி:
டாய்லட் வாசலருகே நின்றவர், "ஒன்றறை லிட்டர் காஃபி குடிச்சும் இந்த கக்கா வருவேனாங்குதே!?!" என புலம்பலானார்!
முடிவு எழுதியவர்:
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
...................................
இன்றைய போட்டிக்காக...
"எனக்காக எத்தனைபேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடான்னா நான்தான் கூட்டிட்டு போகணும்னு அடம் பிடிக்குறே..." என்றபடி தனது செல்லநாயை வாக்கிங் அழைத்துச் சென்றார் கோபு.
- அஜித்
...................................
திருப்பூர் சாரதி சாரின் நேரம் கதையின் முடிவை யூகிக்கும் போட்டி!
நேரம்!
======
"எனக்காக எத்தனை பேர் மணிக்கணக்கா காத்திருக்காங்க, நீ என்னடானா", என்றபடி
தன்மேல் ஆசையாய் தாவி ஏறிய டாமியை கட்டிக்கொண்டார் கோபு
அ.வேளாங்கண்ணி, திருச்சி.
.
Saturday, June 4, 2022
கரந்தை ஜெயக்குமார் இல்லத் திருமணம்! #164
கரந்தை ஜெயக்குமார் இல்லத் திருமணம்!
கரந்தை ஜெயக்குமார் என்கிற பெயரிலே வலைப்பூவினை நடத்தி வருகிறார் கரந்தை பட்டதாரி ஆசிரியர் திரு.ஜெயக்குமார் அவர்கள்!
அவர்களின் மகன் கி.ஜெ.பிரேம்குமார் M.C.A. மணமகனுக்கும் தலைமையாசிரியர் திரு.இளங்கோவன் அவர்களின் மகள் இ.இளமதி D.T.Ed., B.A. மணமகளுக்கும் நேற்று 03/06/2022 வெள்ளி காலையில் கபிஸ்தலம் R.S.மஹால் திருமண மண்டபத்தில் ஆன்றோர், சான்றோர் முன்னிலையில் சிறப்பாக, அழகாக நிகழ்வுற்ற திருமணத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது!
ஜெயக்குமார் சார் அவர்களிடம் பேசினேன். பரபரப்பான சூழலிலும்
சிறிது நேரம் என்னிடம் அன்புடன் உரையாடினார்.
நானும் 'பல்லாண்டு வாழ்க' என மணமக்களை வாழ்த்தினேன்.
சுவையான சிற்றுண்டி அருந்தினேன்!
இனிமையான நிகழ்வை மனதில் இருத்தி, மகிழ்வுடன் புறப்பட்டேன்!
மணமக்கள் வாழிய பல்லாண்டு!
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
Saturday, February 5, 2022
உறவுகள் தொடரும் -சிறுகதை #163
*
உறவுகள் தொடரும்! (சிறுகதை)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
உறவுகள் தொடரும்!
(சிறுகதை)
-நீடூர் அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
வெளியே மழை 'ஜோ'வென பெய்து கொண்டிருந்தது.
'பாண்டியன் கடை'-க்கு மளிகை சாமான்கள் வாங்கச் சென்றிருந்த மகள் மதனா இன்னும் திரும்பி வரவில்லை.
அப்போதுதான் வாங்கவேண்டிய மளிகைப் பட்டியலில்,
'கடலைப் பருப்பு' என எழுதாதது நினைவில் வந்தது விமலாவுக்கு.
மதனாவுக்கு எப்படி தெரிவிப்பது? கடை அண்ணாச்சிக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று பார்த்தால், அலைபேசியில் மின்கலத்தின் சக்தி தீர்ந்திருந்தது! வீட்டிலும் மின்சாரம் இல்லை.
மழையும் சீராக பெய்து கொண்டிருந்ததால், தானும் செல்ல இயலாமல் விமலா தவித்தாள்.
மழை விட்டு சிறிது நேரத்தில் மதனா வந்துவிட்டாள்.
பையிலிருந்து பொருட்களை எடுக்கும்போது, அதில் கடலைப் பருப்பும் இருந்தது.
"அம்மா! எனக்கு பள்ளி விடுமுறைங்கறதால, நாளைக்கு ஊரிலிருந்து ரெண்டு தாத்தாவும் ரெண்டு பாட்டியும் வர்ராங்கள்ல?
தாத்தா ரெண்டு பேருக்குமே
மசாலா வடை பிடிக்கும்; கடலைப் பருப்பு தீர்ந்து போச்சி-னு நீ நேத்து அப்பாட்ட சொல்லிட்டிருந்தியே, அது ஞாபகம் வந்தது. பட்டியலில் நீ எழுத மறந்திட்டே! ஆனா, நான் வாங்கி வந்திட்டேன்! கடலைப் பருப்பைதானேம்மா நீ முதலில் எழுதியிருக்கணும்?" என்று
உறவுகளை மதிக்கும் மதனா கேட்டதும் விக்கித்துப்போன விமலா, மகிழ்ச்சி மேலிட "என் செல்லக்குட்டி" என்று மதனாவை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டாள்!
*
நன்றி: தமிழ் நெஞ்சம்
Labels:
சிறுகதை,
தமிழ் நெஞ்சம் - ஃப்ரான்ஸ்
Friday, January 28, 2022
கத்தியின்றி ரத்தமின்றி வித்யா -விமர்சனம்!#162
'கத்தியின்றி ரத்தமின்றி... வித்யா!' புதின விமர்சனம்.
வீரன்வயல் வி. உதயகுமாரன் எழுதிய 'கத்தியின்றி ரத்தமின்றி... வித்யா' என்ற புதினத்தின் விமர்சனம்
.
கதையின் நாயகியாக வரும் வித்யா, மாண்பமை பண்புகளுடன்
சாத்வீக தேவதையாக கதைமுழுவதும் வலம் வருகிறார்.
இங்கே ஒரு செய்தியை குறிப்பிட வேண்டும். ஆனால் அதை நான் விமர்சனத்தில் கடைசியாக தெரியப்படுத்துகிறேன்.
பொதுவாக பெண்களை 'பலவீனமான பாலினம்' என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இக்கதையின் நாயகி வித்யா, தான் போராட வேண்டிய ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்த்து நின்று போராடி அதை வெற்றிகரமாக மாற்றிவிடுகிறார். அதிலும் குறிப்பாக தன்னுடைய வித்தியாசமான அணுகு முறைகளாலும் வியக்கத்தக்க அறிவுபூர்வமான செயல்பாடுகளினாலும் அதை சாத்தியப் படுத்துகிறார்.
தெருவில் பாலின சீண்டல்கள் செய்யும் கயவர்களையும் திருத்துகிறார். தொழில் நிறுவன மேலாளரின் கயமைத்தனத்தையும் திருத்துகிறார்.
ஊனமான மணமகனை மறுதலிக்கும் ஒரு பெண்ணையும் அவளது தவறை உணர வைக்கிறார்.
இன்னும் தனது மருமகளையும் அவளது வெறுப்பை மாற்றி தன் மீது பாசம் கொள்ள வைக்கிறார். தனது சம்பந்தியையும் மன்னித்து அவரை மனம் திருந்த வைக்கிறார்.
மேலும் அந்த ஊரின் எம்எல்ஏவையும் கூட அவரது மகனின் உயிரை காப்பாற்றியதன் மூலம் மனம் திருந்த வாய்ப்பு அளிக்கிறார்.
இப்போது நான் சொல்வதாக கூறிய அந்த முக்கியமான விஷயத்திற்கு வருகிறேன். இப்படியெல்லாம் செய்து மன்னிக்கும் குணம், தயாள குணம் உள்ளவர்களை இந்த உலகம் என்ன சொல்கிறது? 'பிழைக்கத் தெரியாதவன்', 'வெகுளி' என்றெல்லாம் பட்டம்கட்டி பகடி செய்து பேசி, மறைமுகமாக முதுகுக்குப் பின்னால் கிண்டல் செய்கிறது.
ஆனால் இப்படியான மனிதநேயப் பண்புகள், மாண்புகள் அமையப் பெற்றால் தான் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக, உற்றார் உறவினர்களை அனுசரித்து, நண்பர்களை பேணி வாழ்ந்து கொண்டால்தான், அவர்களின் வாழ்வு என்றும் சிறக்கும்! அவருக்கே இறைவனின் பாதங்களின் கீழ் அடைக்கலம் கிடைக்கும் என்ற கருத்தை முத்தாய்ப்பாக சொல்லியிருக்கிறார் புதின ஆசிரியர் வீரன்வயல் வீ.உதயகுமாரன் அவர்கள்!
குறிப்பு: நூல் விமர்சனப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றது இந்த விமர்சனம்.
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
எழுத்தாளர் வீரன்வயல் வீ.உதயகுமாரன்.
நூலினைப் பெற தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:
Sunday, January 16, 2022
பிக் பாக்கெட் (சிறுகதை) # 161
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
மிகுந்த கூட்டமாக இருந்த பேருந்தில் மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் ஏறினார் ஒரு தாய். என்னருகே வந்து நின்று கொண்டவரிடமிருந்து அந்த குழந்தையை, உட்கார்ந்திருந்த நான் வாங்கிக் கொண்டேன்.
புன்னகை முகத்துடன் இருந்த குழந்தையின் உடலில் காது, கழுத்து, கை, கால் எங்கும் பொன்னகைகள் அலங்கரித்தன.
அந்த தாயிடம், "என்னம்மா, குழந்தையின் உடம்பு முழுதும் கவரிங் நகைகளா?" என்று சத்தமாக நான் கேட்டேன்.
"என்னது, கவரிங் நகைகளா? எல்லாம் பவுன் நகைகள்!" என்று உடனடியாக பதில் சொன்னார் அந்த தாய்.
இப்பொழுது பேருந்தில் இருந்தவர்கள் அனைவரின் பார்வைகளும் அந்த குழந்தையின் மேல் தான்.
'அப்பாடா, இனி பிக்பாக்கெட் திருடன் எவனும் குழந்தையை நெருங்க மாட்டான். நகை கீழே விழுந்து விட்டாலும் கூட நமக்கு எந்த கவலையும் இல்லை; ஏனென்றால் பஸ்ஸில் எல்லோருடைய பார்வையும் குழந்தையின் மேலேதான்' என நிம்மதியாக பயணத்தை தொடர்ந்தேன்.
*
திருவண்ணாமலையில் 26/12/2021 அன்று நடந்த 'தமிழக எழுத்தாளர்கள்' குழுவின் 7-ஆவது சந்திப்பில் வெளியிடப்பட்ட, குழு உறுப்பினர்களின் படைப்புகளின் தொகுப்பு நூலான 'அருணையில் பூத்த மலர்கள்' நூலில் இடம்பெற்ற எனது படைப்பு.
++++++++++++++++++++++++++++++
Labels:
சிறுகதை,
தமிழக எழுத்தாளர்கள் குழுமம்
Friday, December 31, 2021
அவரவர்க்கு உரியது - சிறுகதை #160
ஃப்ரான்ஸிலிருந்து வெளிவரும் 'தமிழ் நெஞ்சம்' ஜனவரி 2022 இதழில் பிரசுரமான எனது சிறுகதை!
*
அவரவர்க்கு உரியது (சிறுகதை)
- அ.முஹம்மது நிஜாமுத்தீன்
------------ --------
எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அலுவலகத்திலிருந்து சிராஜுத்தீன் வெளியில் வந்தபோது நேரம் மணி ஏழை நெருங்கிக் கொண்டிருந்தது. அலுவலகக் கட்டடத்தின் வாயிலருகிலேயே இருந்த பஸ் ஸ்டாண்டுக்கு வந்து பஸ்ஸுக்காக காத்திருந்தான்.
பஸ் வரக்காணோம்.
அப்பொழுது தரையில் கிடந்த கலர் பேப்பரை எடுத்துப்பார்த்தான். அட! ரிசர்வ் பேங்க் கவர்னர் கையெழுத்துப் போட்டிருந்த 500 ரூபாய் தாள்!
சிராஜுத்தீனுடைய டூ வீலர் பழுதாகி, உதிரி பாகங்கள் மாற்ற 450 ரூபாய் ஆகும் என்று பழுது நீக்குநர் சொன்னதால் அவன் இன்று பஸ்ஸில் அலுவலகத்திற்கு வந்திருந்தான்.
கைவசம் இருப்பதோ 500 ரூபாய் மட்டிலுமே. இன்னும் இந்த மாதத்தின் ஐந்து நாட்களை ஓட்டவேண்டும். இந்த நிலையில்தான் அந்த பஸ் ஸ்டாண்டில் 500 ரூபாய் கிடக்கிறது.
சிராஜுத்தீன் சுற்றும் முற்றும் பார்த்தான். இது யாருடைய பணம்? இதை எப்படி உரியவரிடம் சேர்ப்பது? காவல் நிலையத்தில் கொடுத்தாலும் அது எங்கு போய் சேரும் என்பதை யோசித்தான்.
'சரி, இந்த பணத்தை பள்ளிவாசலின் உண்டியலில் சேர்த்துவிடுவோம்' என்ற முடிவுடன், வந்த பஸ்ஸில் ஏறினான்.
கடைத்தெரு பஸ் ஸ்டாப்பில் இறங்கி, ஐந்து வயது மகள் ஜன்னத்திற்கு மிகவும் பிடித்த மாதுளம் பழம் வாங்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.
"அத்தா" என்று மகிழ்வோடு ஓடிவந்தவளை தூக்கி கன்னத்தில்
முத்தமிட்டு, கீழே இறக்கியபோது, "அத்தா, அத்தா, ஒரு காரு
வேகமா என்மேலே மோதவந்துச்சித்தா..." என்றாள் ஜன்னத்.
"பஸ்ஸிலே வந்து ரொம்ப களைப்பா இருக்கீங்க, இந்த டீயைக்
குடிங்க" என்று சொல்லி டீயைக் கொடுத்த அவன் மனைவி ஆபிதா,
"நம்ம ஜன்னத் சாயங்காலம் தெருவிலே விளையாடிக்கிட்டிருக்கும் போது யாரோ ஒருத்தன், என்னத்தைக் குடிச்சிருந்தான்போல... தாறுமாறாக் காரை வளைச்சி, வளைச்சி ஓட்டிட்டு வந்திருக்கான். அப்போ எதிர்வீட்டுக்கு வந்து வெயிட்டிங்ல இருந்த ஆட்டோ
டிரைவர் அபுல்ஹஸன் பாய்ஞ்சி புள்ளையைத் தூக்கிக்கிட்டு
உருண்டு சின்ன காயம்கூட படாம புள்ளயக் காப்பாத்திட்டான். ஆனால் அவனுக்குத்தான் கை, காலெல்லாம் அடி. அப்படியும் அவன் உடனே சவாரிக்குப் போயிட்டான்" என்று விளக்கமாகச்
சொல்லி முடித்தாள்.
ஆட்டோ டிரைவர் அபுல்ஹஸன் நாணயமானவன். சரியான
கட்டணம்தான் வாங்குவான். இருப்பினும் கஷ்டப்படும்
குடும்பம்தான்.
"அல்ஹம்துலில்லாஹ்!" (அல்லாஹ்வுக்கு நன்றி!) என்று கூறி எழுந்தவன், "இதோ அஞ்சி நிமிஷத்துலே வந்திடுறேன்,
ஆபிதா" என்றவண்ணம் செருப்பினுள் காலை நுழைத்தான்.
அந்த ஐனூறு ரூபாயை எங்கே, யாரிடம் கொடுக்கவேண்டும் என்பதை அவன் முடிவு செய்துவிட்டான். 'சம்பளம் வந்ததும் பள்ளிவாசல் பைத்துல்மால் உண்டியலில் முன்பு நினைத்த
ஐனூறு ரூபாயைப் போடணும்' என்று
நிய்யத் (நேர்ச்சை) செய்துகொண்டான்.
*
நன்றி: தமிழ் நெஞ்சம் .
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
Subscribe to:
Posts (Atom)