...பல்சுவை பக்கம்!

.

Sunday, May 16, 2010

தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!!

தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!!கட்டடம் கட்டும் கொத்தனார்
தோட்டம் பயிரிடும் தோட்டக்காரர்

துணிகள் நெய்யும் நெசவாளர்
வீட்டில் உதவும் வேலையாளர்

சமையல் செய்யும் சமையல்காரர்
சலவை செய்யும் சலவைக்காரர்

வாகனம் ஓட்டும் ஓட்டுனர்
சீட்டு கொடுக்கும் நடத்துனர்

தலைமுடி திருத்தும் நிபுணர்
துப்புறவு செய்யும் பணியாளர்

சேவை செய்யும் செவிலியர்
காவல் செய்யும் காவலாளி

கவிதை எழுதும் கவிஞன்
கதைகள் சொல்லும் கதைஞன்

துணிகள் தைக்கும் தையல்காரர்
அஞ்சல் தரும் அஞ்சல்காரர்

பத்திரிகை போடும் சிறுபையன்
பால்தனை ஊற்றும் பால்காரர்

தானியம் தருவான் விவசாயி
பொருட்கள் விற்கும் வியாபாரி

மூட்டை தூக்கும் சுமைகூலி
ஆடுகள் மேய்க்கும் இடையர்

கணக்குப் போடும் கணக்காளர்
கணிணியில் கலக்கும் பொறியாளர்

சட்டம் காக்கும் காவலர்
மருத்துவம் பார்க்கும் மருத்துவர்

நீதியை நா(ட்)டும் வழக்கறிஞர்
மக்களை ஆளுகின்ற அதிகாரி

இவர்கள் அனைவரும் உழைப்பாளி
இப்படியும் அழைக்கலாம் 'தொழிலாளி'

திகட்டாத வளங்கள்பெற வாழ்த்துவோம்!
தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!

உலகத் தொழிலாளர் அனைவருக்கும்
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!!!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

29-04-2009 அன்று தமிழ்குடும்பத்தில் இது வெளியானது.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

30 comments:

நாடோடி said...

ஒருவ‌ரையும் விட‌வில்லை என்று நினைக்கிறேன்.. ஆனால் என்னை போல் பொட்டி த‌ட்டுற‌வ‌ன்(Computer Operator) ப‌ற்றி சொல்ல‌வில்லை... அப்ப‌ நான் எல்லாம் தொழிலாளி இல்லையா?...

உங்க‌ளுக்கும் என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்..

NIZAMUDEEN said...

தங்களுக்கும் வாழ்த்துக்கள் நாடோடி!
கருத்திற்கு நன்றி!

SUFFIX said...

நல்லா இருக்கு நிஜாம், சிறுகுழந்தைகள் பாடப்புத்தகத்தில் அரசு வெளியிடலாமே?

NIZAMUDEEN said...

//SUFFIX said...
நல்லா இருக்கு நிஜாம், சிறுகுழந்தைகள் பாடப்புத்தகத்தில் அரசு வெளியிடலாமே?//

ஆத்தாடி... என்னா ஓர் ஐடியா!
நன்றி SUFFIX!
(சீரியஸ்??)

சைவகொத்துப்பரோட்டா said...

நல்ல சிந்தனை!! வாழ்த்துக்கள் நண்பரே.

ஜெய்லானி said...

:-))))

seemangani said...

//கவிதை எழுதும் கவிஞன்
கதைகள் சொல்லும் கதைஞன்//

கதை எழுதுபவன் கதைஞன் ஆஹா...அற்புத கண்டுபிடிப்பு...நிஜாம் அண்ணா...
நல்லா இருக்கு வாழ்த்துகள்...

NIZAMUDEEN said...

//சைவகொத்துப்பரோட்டா said...
நல்ல சிந்தனை!! வாழ்த்துக்கள் நண்பரே.//

பாராட்டிய நண்பருக்கு மிக்க நன்றி!

NIZAMUDEEN said...

//ஜெய்லானி said...
:-)))) //

நன்றி ஜெய்லானி!

NIZAMUDEEN said...

//seemangani said...
//கவிதை எழுதும் கவிஞன்
கதைகள் சொல்லும் கதைஞன்//

கதை எழுதுபவன் கதைஞன் ஆஹா...அற்புத கண்டுபிடிப்பு...நிஜாம் அண்ணா...
நல்லா இருக்கு வாழ்த்துகள்... //

நன்றி சீமான்+கனி!!

NIZAMUDEEN said...

நாடோடியின் கருத்தின்படி
சிறிது மாற்றம் செய்துள்ளேன்.

ஸாதிகா said...

ஒருவரையும் விடவில்லை.ஆஹா..அருமை..

NIZAMUDEEN said...

ஸாதிகா said...
ஒருவரையும் விடவில்லை.ஆஹா..அருமை..

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி
சகோதரி!

இப்படிக்கு நிஜாம்.., said...

உலகத்தில் ஒருவன் மட்டுமே முதலாளி..,மற்ற எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் யாருக்கோ தொழிலாளி என்பதை அற்புதமாக சொல்லியுள்ளீர்கள். அருமை

NIZAMUDEEN said...

//இப்படிக்கு நிஜாம்.., said...
உலகத்தில் ஒருவன் மட்டுமே முதலாளி..,மற்ற எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் யாருக்கோ தொழிலாளி என்பதை அற்புதமாக சொல்லியுள்ளீர்கள். அருமை//

தங்கள் கருத்து படித்து மிக்க மகிழ்ச்சி, நிஜாம்!

r.v.saravanan said...

எல்லோரையும் குறிப்பிட்ட விதம் நன்று
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

NIZAMUDEEN said...

//r.v.saravanan said...
எல்லோரையும் குறிப்பிட்ட விதம் நன்று
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்//

கருத்திற்கு நன்றி... r.v.saravanan!
தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

இளம் தூயவன் said...

உழைபவர் வியர்வை உணரும் முன் அவருக்கு ஊதியம் கொடுத்துவிட்டால் ,இப்படி ஒருதினம் தேவைபடாது.

அன்புடன்
இளம் தூயவன்
http://ilamthooyavan.blogspot.com

NIZAMUDEEN said...

//இளம் தூயவன் said...
உழைபவர் வியர்வை உணரும் முன் அவருக்கு ஊதியம் கொடுத்துவிட்டால் ,இப்படி ஒருதினம் தேவைபடாது.

அன்புடன்
இளம் தூயவன்
http://ilamthooyavan.blogspot.com//

"உழைப்பவர் வியர்வை 'உலரும்' முன் அவருக்கு ஊதியம் கொடுத்துவிடுங்கள்" என்று
அருமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன ஹதீஸ் எனும் நபிமொழியை அழகாய்
ஞாபகப்படுத்தினீர்கள். நன்றி இளம் தூயவன்!

(குறிப்பு: 'உலரும்முன்' என்று படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.)

அன்புடன் மலிக்கா said...

//நல்லா இருக்கு நிஜாம், சிறுகுழந்தைகள் பாடப்புத்தகத்தில் அரசு வெளியிடலாமே//

அதேதான் நிஜாமுதீன் அண்ணா நானும் சொல்கிறேன் மிக அழகான வடித்துள்ளீர்கள் வார்த்தைகளை..

அக்பர் said...

//ஒருவ‌ரையும் விட‌வில்லை என்று நினைக்கிறேன்.. ஆனால் என்னை போல் பொட்டி த‌ட்டுற‌வ‌ன்(Computer Operator) ப‌ற்றி சொல்ல‌வில்லை... அப்ப‌ நான் எல்லாம் தொழிலாளி இல்லையா?...//

ஹிஹிஹி.. நீங்கள்லாம் முதலாளிங்க பாஸ்.

பொட்டியோட இருக்கிறீங்கள்ல.

@ நிஜாம்

மிக அருமையாக எழுதியிருக்கீங்க.

NIZAMUDEEN said...

//அக்பர் said...
//ஒருவ‌ரையும் விட‌வில்லை என்று நினைக்கிறேன்.. ஆனால் என்னை போல் பொட்டி த‌ட்டுற‌வ‌ன்(Computer Operator) ப‌ற்றி சொல்ல‌வில்லை... அப்ப‌ நான் எல்லாம் தொழிலாளி இல்லையா?...//
ஹிஹிஹி.. நீங்கள்லாம் முதலாளிங்க பாஸ்.
பொட்டியோட இருக்கிறீங்கள்ல.
@ நிஜாம்
மிக அருமையாக எழுதியிருக்கீங்க.//

தங்களின் பாராட்டிற்கு எனது அன்பு நன்றிகள் அக்பர்!

Muji said...

க‌விதை பிர‌மாத‌ம் நிஜாம்.

NIZAMUDEEN said...

//Muji said...
க‌விதை பிர‌மாத‌ம் நிஜாம். //

மிக்க நன்றி நண்பர் முஜி!
தொடர்ந்து இணைந்திருங்கள்!

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக கோர்வையாக எல்லோரையும் பற்றி எழுதி இருக்கீஙக்

வாழ்த்துக்கள்

NIZAMUDEEN said...

//Jaleela Kamal said...
ரொம்ப அருமையாக கோர்வையாக எல்லோரையும் பற்றி எழுதி இருக்கீஙக்

வாழ்த்துக்கள்//

பாராட்டி வாழ்த்தியமைக்கு நன்றி, சகோதரி ஜலீலா!

mahendran said...

Excellent

NIZAMUDEEN said...

//mahendran said...
Excellent//

கருத்திற்கு நன்றி, mahendran!
தொடர்ந்து வாருங்கள்!

Sasi Kala said...

என்ன அழகான வாழ்த்து ஒருவரையும் தவற விடாமல் . சிறப்புங்க.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

/Sasi Kala said...
என்ன அழகான வாழ்த்து ஒருவரையும் தவற விடாமல் . சிறப்புங்க.//

சிறப்பாக தங்கள் கருத்தை தந்தமைக்கு நன்றி சகோதரி!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...