...பல்சுவை பக்கம்!

.

Tuesday, November 16, 2010

75. ஜில்ஜில் ஜிகிர்தண்டா!

ஜில்ஜில் ஜிகிர்தண்டா!

இந்த இடுகையில் இரு இனிப்பான சங்கதிகள்!


இனிப்பு 1 :

இதை 75 -ஆவது இடுகையாய் இடுகிறேன். ஆதரவுகரம் நீட்டிவரும் அனைவருக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள். உங்கள் ஊக்கம், உற்சாகம் இவையே காரணங்கள்!

இனிப்பு 2 :



இன்சுவை குளிர்பானம் 'ஜிகிர்தண்டா'. இதன் செய்முறை இங்கே பதிவிடுகிறேன்.
 
இந்தக் குறிப்பை வெளியிட்ட குங்குமம் (11.01.2010)
இதழுக்கும் வழங்கிய திருமதி ரேவதி சண்முகம்
அவர்களுக்கும் நன்றிகள்.


மதுரையின் புகழ்பெற்ற 'ஜிகிர்தண்டா'வை நமது வீடுகளில்
தயா‌ர் செய்ய முடியும்? அதில் என்ன ஸ்பெஷல்?

பதில் சொல்கிறார் சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம்:

நிறைய பொறுமையும் ஆர்வமும் இருந்தால்
ஜிகிர்தண்டாவை வீட்டிலேயே செய்யலாம். அதே
ஒரிஜினல் சுவையுடன் வேண்டுமானால், பாசந்தியும்
குல்ஃபியும் கடல்பாசியும் முக்கியம்.



பாசந்திக்கு:

ஒரு லிட்டர் ஃபுல் க்ரீம் பாலைக் காய்ச்சவும். குறைந்த தணலில் கொதிக்கவிட்டு, மேலே படிகிற ஆடையைத் தனியே ஒரு கிண்ணத்தில் சேகர்க்கவும். பால் நன்கு இறுகியதும், அதில் அரை ஆழாக்கு சர்க்கரை சேர்க்கவும். பால் மீண்டும் நீர்த்துக் கொள்ளும்.

மறுபடி அது கெட்டியாகிற வரை காய்ச்சி, இறுகி வரும்போது, சேகரித்து வைத்துள்ள ஆடையைச் சேர்த்து, ஆற வைக்கவும். சீவிய பாதாம் தூவி, பாசந்தியாக இதை அப்படியேவும் பரிமாறலாம்.

குல் ஃபி ஐஸ்கிரீமுக்கு:

ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சவும். கெட்டியானதும், முக்கால் ஆழாக்கு சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சவும். குழம்பு பதத்திற்கு வரும்போது இறக்கி, ஓரங்கள் நீக்கி, மிக்சியில் உதிர்த்த பிரெட் தூவிக் கலக்கவும். அதன்மேல் ஏலக்காய் தூள், பாதாம் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கி, ஆற வைக்கவும். குல்ஃபி மோல்டு அல்லது சின்ன கிண்ணத்தில் ஊற்றி, செட் ஆகிற வரை வரை ஃப்ரீசரில் வைக்கவும்.

*25 கிராம் கடல் பாசியை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு வெந்நீரில் அதைக் கொட்டினால் கரைந்து விடும். அதை ஒரு தட்டில் ஊற்றி ஆற வைத்தால் செட் ஆ‌கி விடும். பிறகு அதை சிறிய துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும்.

உயரமான ஒரு டம்ளரில் முதலில் பாசந்தி விடவும்.
அதன் மேல் பொடியாக நறுக்கிய கடல் பாசி போடவும்.
அதன் மேல் குல்ஃபி ஐஸ் கிரீம் போடவும்.
அதன் மேல் நன்னாரி சிரப் சிறிது ஊற்றவும்.

இதே மாதிரி இரண்டு லேயர்கள் ஒவ்வொன்றையும்
சேர்க்கவும்.  கடைசியாக பொடியாக நறுக்கி வறுத்த
பாதாம், முந்திரி சேர்த்து அப்படியே சுவைக்கலாம்.


ரொம்பவும் குளிர்ச்சியான பானம் ஜிகிர்தண்டா. காரணம்
அதில் சேர்க்கிற கடல் பாசி. வயிற்றுப் புண்களை ஆற்றும்
குணமும் அதற்கு உண்டு. வெயில் காலத்தில் சாப்பிட ஏற்றது.
 
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

24 comments:

Unknown said...

75 க்கு வாழ்த்துக்கள்.. பதிவு உலகில் ஜில் ஜில் ஜிகர்தண்டாவாக இனிக்க வாழ்த்துக்கள்.

இங்கே நாளை பெரு நாள். அதனால் மீண்டும் ஒரு முறை பெருநாள் வாழ்த்துக்கள்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பாரத்... பாரதி... said...
75 க்கு வாழ்த்துக்கள்.. பதிவு உலகில் ஜில் ஜில் ஜிகர்தண்டாவாக இனிக்க வாழ்த்துக்கள்.

இங்கே நாளை பெரு நாள். அதனால் மீண்டும் ஒரு முறை பெருநாள் வாழ்த்துக்கள்.. //

தங்கள் அன்பான முதல் வாழ்த்திற்கும்
பெருநாள் வாழ்த்திற்கும் மனமார்ந்த
நன்றிகள், பாரத்...பாரதி!

அஸ்மா said...

திருமதி ரேவதி சண்முகம் அவர்களின் ஜிகர்தண்டா அருமை! இந்த குறிப்பைக் கொடுத்த உங்களுக்கும் நன்றி நானா. உங்களோடு உங்கள் குடும்பத்தினரும் நலமோடு வாழ இத்தியாக திருநாளில் வாழ்த்துகிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அஸ்மா said...
திருமதி ரேவதி சண்முகம் அவர்களின் ஜிகர்தண்டா அருமை! இந்த குறிப்பைக் கொடுத்த உங்களுக்கும் நன்றி நானா. உங்களோடு உங்கள் குடும்பத்தினரும் நலமோடு வாழ இத்தியாக திருநாளில் வாழ்த்துகிறேன். //

தங்கள் கருத்துரைக்கு நன்றி சகோதரி அஸ்மா!
தங்களுக்கும் தங்கள் இல்ல அங்கத்தினர்கள்
அனைவருக்கும் எனது மனங்கனிந்த
ஈத் முபாரக்!

r.v.saravanan said...

பெருநாள் வாழ்த்துக்கள் nizamudeen

'பரிவை' சே.குமார் said...

75க்கு வாழ்த்துக்கள்.... இன்னும் மேலே பறக்க வாழ்த்துக்கள்.
ஜிகர்தண்டா ருசியே தனி தான்... அதுகுறித்த உங்கள் பதிவும் ஜிகர்தண்டாதான்... வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

// r.v.saravanan said...
பெருநாள் வாழ்த்துக்கள் nizamudeen //

மிகவும் நன்றி, r.v.saravanan!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சே.குமார் said...
75க்கு வாழ்த்துக்கள்.... இன்னும் மேலே பறக்க வாழ்த்துக்கள்.
ஜிகர்தண்டா ருசியே தனி தான்... அதுகுறித்த உங்கள் பதிவும் ஜிகர்தண்டாதான்... வாழ்த்துக்கள்.//

தங்கள் அனைத்து வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி, சே.குமார்!

Ahamed irshad said...

Congrats Nizamudeen..

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html

Anonymous said...

all the best for 75th post.. I definitely dont have the patience to prepare this at home... I will drink this in madurai only :)

GEETHA ACHAL said...

வாழ்த்துகள் நிஜாம் அண்ணா..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அஹமது இர்ஷாத் said...
Congrats Nizamudeen..

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html //

வலைச்சரத்தில் என்னை(யும் என் பதிவை)யும்
அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி, இர்ஷாத்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Premkumar Masilamani said...
all the best for 75th post.. I definitely dont have the patience to prepare this at home... I will drink this in madurai only :) //

வாழ்த்துக்களுக்கு நன்றி ப்ரேம்குமார்!
அப்புறம்... அப்படின்னா மதுரைக்குப்
போய் குடிக்கிறதுக்கு உங்களுக்கு
பொறுமை இருக்குன்றீங்க, சரியா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//GEETHA ACHAL said...
வாழ்த்துகள் நிஜாம் அண்ணா.. //

வாழ்த்துக்களுக்கு, தங்களுக்கு மிக்க
நன்றி சகோதரி!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

திருமதி ரேவதி சண்முகம் அவர்களின் ஜிகர்தண்டா அருமை!
வாழ்த்துக்கள் நண்பரே...

ஸாதிகா said...

75 வது இடுகையை குளு குளு வென்ற ஜிகிர்தண்டாவுடன் பறிமாறிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.இன்னும் பற்பல சதங்கள் தர வாழ்த்துக்கள்!

அன்புடன் மலிக்கா said...

75 க்கும் வாழ்த்துக்கள்
குளு குளு ஜிகிர்தண்டாவுக்கும் வாழ்த்துக்கள் நிஜாமுதீன் அண்ணா.

நலமா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பிரஷா said...
திருமதி ரேவதி சண்முகம் அவர்களின் ஜிகர்தண்டா அருமை!
வாழ்த்துக்கள் நண்பரே..//

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸாதிகா said...
75 வது இடுகையை குளு குளு வென்ற ஜிகிர்தண்டாவுடன் பறிமாறிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.இன்னும் பற்பல சதங்கள் தர வாழ்த்துக்கள்!//

வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி சகோதரி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அன்புடன் மலிக்கா said...
75 க்கும் வாழ்த்துக்கள்
குளு குளு ஜிகிர்தண்டாவுக்கும் வாழ்த்துக்கள் நிஜாமுதீன் அண்ணா.

நலமா?//

வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி கவிஞரே!
இறைவனருளால் நலம்தான் கவிஞரே!

mohamedali jinnah said...

ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் !
http://nidurseason.wordpress.com/
இணையத்திற்கு வந்து கருத்துக்களை அற்புதமாய் தாருங்கள் .

நானானி said...

அருமை....ஜில்லுன்னு இருக்கு!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//nidurali said...
ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் !
http://nidurseason.wordpress.com/
இணையத்திற்கு வந்து கருத்துக்களை அற்புதமாய் தாருங்கள் .//

அழைப்பிற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நானானி said...
அருமை....ஜில்லுன்னு இருக்கு!//

தங்கள் கருத்திற்கு நன்றி நானானி!
தொடர்ந்து வாருங்கள்;
உங்கள் கருத்து தாருங்கள்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...