நகைச்சுவை; இரசித்தவை 18
========================
வாங்க சிரிக்கலாம்...
1. "உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?"
"எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்!"
==========================================
2. "அந்தக் கட்சிக் கூட்டத்தில எல்லோரும் சேர்ந்து
அழறாங்களே , ஏன்?"
"அங்கே 'துயர் மட்டக் குழு கூட்டம்' நடக்குதாம்"
==========================================
3. "இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்"
"அவ்வளவு பிசி ஒர்க்கா?"
"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
எழுப்பிவிடலை"
=========================================
4. "தொழில் படுத்திடுச்சின்னீ ங்களே , என்ன தொழில்?"
"பாய் வியாபாரம்!"
=========================================
5. டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"
நோயாளி: "டாக்டர், நீங்க ஃபீசை குறைக்கணும்"
===========================================
6. ஒருவர்: "தாமஸ் ஆல்வா எடிசன் பல புதிய
கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிக்காமலிருந்தால்
என்னவாயிருக்கும்?"
மற்றவர்: "வேற ஒருத்தர் கண்டுபிடிச்சிருப்பார்"
==========================================
7. நீதிபதி : " அந்த வீட்டுப் பூட்டை உடைத்து ஏன்
திருடினாய்?"
திருடன்: "என்னோட சாவி எதுவுமே அந்தப்
பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டை
உடைக்க வேண்டியதாப் போச்சிங்க"
==========================================
8. தொண்டர் 1 : "தலைவர் ரொம்ப அப்பாவியா
இருக்காரா, எப்படி?"
தொண்டர் 2 : " சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
'எந்த வட்டத்தின் சார்பில போடுறே'ன்னு கேட்கிறாரு"
==========================================
9. "வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"
"ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க"
"ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்"
"ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்"
"அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"
==============================================
10. "இந்த ஆசிரியர் வித்தியாசமானவரா, எப்படி?"
"பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னனு கேட்பார்"
===============================================
11. "டாக்டர், நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை"
"அதை என்னிடம் வந்து ஏன் சொல்றீங்க?"
"காது சரியா கேட்கலை; அதை சரி பண்ணுங்க டாக்டர்!"
===============================================
12. தொண்டர் 1: "தேர்தல்ல தோல்வி அடையாமல் இருக்க
என்ன வழி?"
தொண்டர் 2: "போட்டி போடாமல் இருந்திடறதுதான் ஒரே வழி!"
==============================================
13. "சுவரில் எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி..."
"என்ன செய்தே?"
" 'சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்" =============================================
14. ஆசிரியை : "ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா
பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?"
மாணவன்: "ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்
விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்"
=============================================
15. "ஏனப்பா கால் கை நல்லாத்தானே இருக்கு, இப்படி உட்கார்ந்து பிச்சை எடுக்கலாமா?"
" 'உடம்பை ரொம்ப அலட்டக்கூடாது'னு டாக்டர் சொல்லிட்டார் சார்"
=============================================
16. "இந்த விவாக மேடையில் மணமக்களையே காணோமே?"
"இது விவாக மேடை இல்லை தலைவரே; 'விவாத மேடை' !
=============================================
.
21 comments:
ha....ha....
thanks nizamudhen
happy new year
அஸ்ஸலாமு அலைக்கும்...
:) :)
நகைச்சுவைகள் பலவும் அருமை.
//தொண்டர் 1 : "தலைவர் ரொம்ப அப்பாவியா
இருக்காரா, எப்படி?"
தொண்டர் 2 : " சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
'எந்த வட்டத்தின் சார்பில போடுறே'ன்னு கேட்கிறாரு"//
டாப்...
வஸ்ஸலாம்...
//r.v.saravanan said...
ha....ha....
thanks nizamudhen
happy new year//
வந்து கருத்து தந்தமைக்கு நன்றி!
//Aashiq Ahamed said...
அஸ்ஸலாமு அலைக்கும்...
:) :)
நகைச்சுவைகள் பலவும் அருமை.
//தொண்டர் 1 : "தலைவர் ரொம்ப அப்பாவியா
இருக்காரா, எப்படி?"
தொண்டர் 2 : " சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
'எந்த வட்டத்தின் சார்பில போடுறே'ன்னு கேட்கிறாரு"//
டாப்...
வஸ்ஸலாம்...//
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
வந்து கருத்து தந்தமைக்கு நன்றி!
ஹா ஹாஹா சிரி சிரி ந்னு சிரிச்சாச்சு
//Jaleela Kamal said...
ஹா ஹாஹா சிரி சிரி ந்னு சிரிச்சாச்சு//
வந்து கருத்து தந்தமைக்கு நன்றி!
புது வருடம் சிரிப்புடன் ஆரம்பித்துள்ள்அது
//"வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"
"ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க"
"ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்"
"ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்"
"அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"//
BEST !!!
பழ வியாபாரி 'குண்டக்க' வடிவேல்.
வாடிக்கையாளர் 'மண்டக்க' பார்த்திபன்.
------------------------
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
****** 1.
புலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2.
மன்னிப்போம் மறக்கமாட்டோம்.
புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா? இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா? என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.
ரணில்-பிரபாகரன் சமாதான ஒப்பந்ததின் போது நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் பிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்?…….. **********
…….
2. *******
ஈழத்தமிழ் முஸ்லீம் இனஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1 மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********
//Jaleela Kamal said...
புது வருடம் சிரிப்புடன் ஆரம்பித்துள்ள்அது//
வந்து கருத்து தந்தமைக்கு நன்றி! (2)
//VANJOOR said... //
//BEST !!!
பழ வியாபாரி 'குண்டக்க' வடிவேல்.
வாடிக்கையாளர் 'மண்டக்க' பார்த்திபன்.//
வருகைக்கு நன்றி!
கருத்திற்கு நன்றி!
அழைப்பிற்கு நன்றி!
எனது 'குண்டப்பா மண்டப்பா' நகைச்சுவைகளும்
படித்துப்பாருங்கள்.
டிவி ரிப்பேர் என்றால் அழுது வடியும் வீடுகள் அதிகமுண்டு
@nidurali
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி!
எல்லாமே சூப்பர் அதிலும் அந்த வாழைப்பழ காமெடி செம...சூப்பர் பகிர்வு..மனசு லேசானது போன்றொரு ஃபீலிங்...அருமைங்க நிஜாம் அவர்களே..
@அஹமது இர்ஷாத்
வருகைக்கு கருத்துக்கு நன்றி.
எல்லாமே நல்ல ஜோக்தான் :-)
@ஜெய்லானி
வருகைக்கு, கருத்துக்கு நன்றி!
அருமையான கடி வாழ்த்துகள்.
@ dhanasekaran .S
வருகைக்கு, கருத்துக்கு நன்றி!
haa haa!
//Seeni said...
haa haa! //
Thanks Seeni Sir!
நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
Post a Comment