...பல்சுவை பக்கம்!

.

Wednesday, March 28, 2012

சில சிந்தனைகள் (பகுதி 12)

சில சிந்தனைகள் (பகுதி 12)

1.உபதேசம் கேட்க 6 மைல் செல்வது பெரிய காரியமல்ல. வீடு திரும்பிய பின் அதைப்பற்றி சிந்திக்க 15 நிமிடம் செலவழிப்பதே பெரிய காரியம் -பிலிப் ஹென்றி

2.
நன்றியை எதிர்பார்க்காதவனுக்கு ஏமாற்றம் இருக்காது.

3.நடத்தை எனும் நிலைக் கண்ணாடியில் ஒவ்வொருவருடைய உருவமும் தெரிகின்றது -ராபர்ட் கதே


4.காற்றும் அலைகளும் திறமையான மாலுமிகளுக்கு அனுகூலம்தான். -கிப்பன்


5.விழிப்புடன் செயல்படும் எந்த சமுதாயத்தையும் நாட்டையும் எந்த எதிரியாலும் அடக்கி விட முடியாது - லாலா லஜபதிராய்


6.வெற்றி, பல நண்பர்களைக் கொடுக்கும். அவர்களைத் தேர்வு செய்வதில் கவனம் தேவை.


7.நம்பிக்கையை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு. அறிஞர் அண்ணா


8.உன் உயர்வை உன்னைவிட உயர்ந்தவர்களோடு ஒப்பிட்டுப் பார் -மகாத்மா காந்தி


9.செல்வநிலை எப்படியிருந்தாலும் திருப்தி மனம் கொண்டால், அது ஆறுதலைத் தருவதோடு பாலைவனத்தில்கூட பசுந்தோட்டத்தை அமைத்து விடும் -ஒயிட்


10.உழைக்காமல் உண்பவனும் திருடன்தான்
.

11.ஒரு நல்ல சிந்தனை, பல நல்ல செயல்களாக மாறும்.

12.திறமைதான் ஏழையின் செல்வம்

13.அதிக ஓய்வு வேதனை தரும்


14.பொருளாசையே உலக அமைதியைக் கெடுக்கின்றது


15.விழிப்புடன் செயல்பட்டால் வெற்றி நம்மைத் தேடி வரும்.


16.மனசாட்சி நீதிபதியைப் போன்றது.

17.மற்றவரை மகிழ வைப்பதே நம் மகிழ்ச்சிக்கு வழி.

18.பாவத்திற்கு பயப்படு; நற்பண்புகளை நாடு.

19.உண்மை ஒன்றே அசையாத அஸ்திவாரம் .


20.மனமுருகி அழத் தெரியாதவனுக்கு மனம்விட்டு சிரிக்கவும் தெரியாது. - யாரோ


21.தன்னம்பிக்கையே நிகரில்லாத செல்வம்


22.கடந்த காலம் நமக்கு பாடமாக இருக்கலாம்; பாரமாக அல்ல.


23.இன்பமும் துன்பமும் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும். இன்பம் மட்டுமே இருந்தால் சலித்துவிடும். துன்பத்தை நேசியுங்கள். மகிழ்ச்சியடைவீர்கள்.


24.சந்தர்ப்பத்தை உருவாக்குபவனே வெற்றி பெறுகிறான்.


25.அன்பைக் கெடுக்கும் சுயநலம்; அதை விட்டு விலகுதல் வெகுநலம்..படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

16 comments:

Jaleela Kamal said...

http://samaiyalattakaasam.blogspot.com/2012/02/blog-post_17.html

சிந்தனைகள் அனைத்தும் அருமை

உங்களூக்கு அவார்டு கொடுத்து இருந்தேன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்ப தான் பதிவு போட்டு இருக்கீங்க வந்து பெற்றுகொள்ளவும்

Jaleela Kamal said...

மனசாட்சி நீதிபதியை போன்றது சூப்பர்

NIZAMUDEEN said...

@ Jaleela Kamal

வாங்க...
விருது தந்தமைக்கு எனது அன்பான நன்றி!

NIZAMUDEEN said...

//Jaleela Kamal said...

மனசாட்சி நீதிபதியை போன்றது சூப்பர்//

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

VANJOOR said...

அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டிய முத்துக்கள்.

r.v.saravanan said...

சிந்தனைகள் அனைத்தும் சிறப்பாய் இருக்கிறது நிசாமுதீன் thanks

Seeni said...

azhakaana sinthanaikal!
arumai !

nantri!

Anonymous said...

sinthanaigal super, NIZAMUDEEN.
thanks.

NIZAMUDEEN said...

//r.v.saravanan said...

சிந்தனைகள் அனைத்தும் சிறப்பாய் இருக்கிறது நிசாமுதீன் thanks//

கருத்துரைக்கு நன்றி...

NIZAMUDEEN said...

//Seeni said...

azhakaana sinthanaikal!
arumai !

nantri!//

கருத்துரைக்கு நன்றி...

NIZAMUDEEN said...

//Anonymous said...

sinthanaigal super, NIZAMUDEEN.
thanks//

கருத்துரைக்கு நன்றி...
உங்க பெயரைக் குறிப்பிட மறந்துட்டீங்களே?!

enrenrum16 said...

நல்ல சிந்தனைகளை எங்களோடு பகிர்ந்ததில் மகிழ்ச்சி.

E.K.SANTHANAM said...

அருமையான சிந்தனைகள்..

Anonymous said...

அருமை!

விச்சு said...

அருமையான சிந்தனைகளின் தொகுப்பு.

Pattabi Raman said...

உயர்வு தரும் சிந்தனைகள்
மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்
தொகுத்து வழங்கியமைக்கு பாராட்டுக்கள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...