விழுந்தா உங்க தலையிலதான் விழும்! [#116]
பாக்யா மார்ச் 15 - 21 இதழில் வெளியானது இந்தக் கட்டுரை!
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு அரசு
விரைவுப் பேருந்தில் வந்துகொண்டிருந்தேன். நடுவில்
பாதையை ஒட்டிய இருக்கையில் இடதுபுறமாக நான்
அமர்ந்திருந்தேன். அதே பாதையை ஒட்டிய வலதுபுறமாக
ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
அவருக்கு மேலே சாமான்கள் வைக்கும் லக்கேஜ் கேரியரில்
சற்றே பெரியதொரு பேக் இருந்தது. நான் பார்க்கும்போது
அந்த பேக்கின் பாதிக்கும் அதிகமாக அந்த கேரியரிலிருந்து
வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
நான் உடனே அந்த பெரியவரிடம், "சார் அந்த பேக்
விழுந்திடுறமாதிரி இருக்கு சார்" என்றேன்.
அதற்கு அவர், "அந்த பேக் என்னுடையதில்லை" என்று
விரைப்பாகச் சொன்னார்.
"பேக் உங்களுடைதில்லைன்னே வச்சுக்குவோம்;
தலை உங்களுதுதானே? விழுந்தா உங்க தலையிலதான்
விழும். டேமேஜ் அந்த பேக்குக்கு இல்ல; உங்களுக்குத்தான்
பார்த்துக்குங்க" என்று நான் சொன்னேன்.
கடுப்போடு அவர் அண்ணாந்து பார்க்கும்போது சரியாக
அந்த பேக் அவர் மேல் விழுந்தது.
அவர் பார்த்துக் கொண்டே இருந்ததால், தலையில்
விழாமல் கையால் பிடித்துக் கொண்டார்.
பிறகு சிரித்துக் கொண்டே என்னிடம் சொன்னார்:
"தேங்க்ஸ் சார்" என்று.
எனக்கு ஓர் உதவி புரிந்த நிம்மதி!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
(நன்றி : பாக்யா)
20 comments:
பாடம் சொல்லும் நிகழ்வு
//T.N.MURALIDHARAN said...
பாடம் சொல்லும் நிகழ்வு//
தங்கள் கருத்தான கருத்திற்கு நன்றி சார்!
சிலருக்கு பட்டால்தான் திருந்த மனம் வரும்போலும்....
valaissaraபாராட்டுக்கு நன்றி திரு நிஜாமுதீன் அவர்களே!
நல்ல வேலை(ளை)...
உதவி புரிந்தமைக்கு நன்றி பாக்யாவில் இக் கட்டுரை வெளியானதற்கு வாழ்த்துக்கள்
//Erode M.STALIN said...
சிலருக்கு பட்டால்தான் திருந்த மனம் வரும்போலும்.... //
மனமுவந்து கருத்தளித்தமைக்கு நன்றி!
//Bagawanjee KA said...
valaissaraபாராட்டுக்கு நன்றி திரு நிஜாமுதீன் அவர்களே! //
கருத்திற்கு நன்றி சார்!
//திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல வேலை(ளை)... //
ஆமாம்... கருத்திற்கு நன்றி சார்!
//r.v.saravanan said...
உதவி புரிந்தமைக்கு நன்றி பாக்யாவில் இக் கட்டுரை வெளியானதற்கு வாழ்த்துக்கள்//
தங்கள் நன்றிக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சார்!
பட்டால்தான் புத்தி வரும் என்பார்கள்...
அருமை...
அலட்சியப் புத்தி கொண்டோருக்குப் பாடம் கற்பிக்கும் அருமையான அனுபவப் பதிவு.
அவரின் அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல் உதவி செய்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
//சே. குமார் said...
பட்டால்தான் புத்தி வரும் என்பார்கள்...
அருமை... //
பாராட்டிற்கு நன்றி!
/பசி பரமசிவம் said...
அலட்சியப் புத்தி கொண்டோருக்குப் பாடம் கற்பிக்கும் அருமையான அனுபவப் பதிவு.//
தங்கள் கருத்திற்கு நன்றி!
//மனோ சாமிநாதன் said...
அவரின் அலட்சியத்தைப் பொருட்படுத்தாமல் உதவி செய்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்! //
பாராட்டிற்கு நன்றி!
விழும் முன்பே, தக்க சமையத்தில் அந்த நபரை காப்பாற்றிவிட்டீர் வாழ்த்துகள். நம்ம பக்கம் பஸ்ஸும் அப்படிதான், பயணிகளும் அப்படிதான். ரெண்டு பேருமே பேலன்ஸ் பண்ணிதான் வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்காங்க.
நம்ம ஊர் பதிவு என்பதால் ரசிக்கும்படியே இருந்தது!
//-தோழன் மபா, தமிழன் வீதி said...
விழும் முன்பே, தக்க சமையத்தில் அந்த நபரை காப்பாற்றிவிட்டீர் வாழ்த்துகள். நம்ம பக்கம் பஸ்ஸும் அப்படிதான், பயணிகளும் அப்படிதான். ரெண்டு பேருமே பேலன்ஸ் பண்ணிதான் வண்டியை ஓட்டிக்கொண்டு இருக்காங்க.
நம்ம ஊர் பதிவு என்பதால் ரசிக்கும்படியே இருந்தது! //
நம்ம ஊரு பஸ்ஸு, நம்ம பயணிகள் பற்றி தங்கள் கருத்து இரசிக்கும்படியிருந்தது. நன்றி!
Rijvan...
அந்த பெரியவர்! நீ என்ன சொல்றது நான் என்ன கேட்பது என்று நினைத்துருப்பார்...
rijivan boss Rijivan ...
வருக ரிஜ்வான்!
வருகைக்கும் படித்தமைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றிகள்!
Post a Comment