2015 நிறைவுப் பதிவு!
வாடிக்கை மறந்ததும் ஏனோ? பதிவு - 126
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.
வாடிக்கை மறந்ததும் ஏனோ? பதிவு - 126
எனக்குத் தெரிந்த ஒரு நபர், தனது வாடிக்கையாளருக்கு பொருள்களை கடனில் விற்பனை செய்திருந்தார். வாடிக்கையாளர் அத்தொகையை ஒரு மாதத்தில் தருவதாகச் சொன்னவர், சொன்னபடி தரவில்லை.
இந்த நபர், வாடிக்கையாளரிடம் பல முறை கேட்டுவிட்டார். வாடிக்கையாளர் 'அடுத்த மாதம் தருகிறேன், அடுத்த மாதம் தருகிறேன்' என்று கால நீட்டிப்பு செய்துவந்தார். மாதங்கள் 6 கடந்தபின்னும் பணம் வசூலாகவில்லை.
இந்த நபர், வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று சப்தம் போட்டுக் கேட்டும் வாடிக்கையாளர் அசரவில்லை. அதே "அடுத்த மாதம் தருகிறேன்" பதிலைத்தான் சொன்னார்.
இந்த நபருக்கு கோபம் அதிகமாகிவிடவே, "இந்தப் பாரு, அடுத்த வாரம் வருவேன்... பணம் தரலைன்னு வச்சிக்க; துப்பாக்கி எடுத்து சுட்ருவேன், ஜாக்கிரதை" என்று கத்திவிட்டார்.
வாடிக்கையாளரோ, "அண்ணே, சுடுங்க! நல்லா சுடுங்க!! ஆனால், நெஞ்சில சுடுங்க! அப்பத்தான் பொட்டுனு உயிர் போகும்! ஆனால், உங்களுக்கு சல்லி வரவே வராது! அதனால, நெஞ்சில சுடுங்க!" என்று கூலாக பதில் சொன்னாராம்.
இந்த நபர் மிரண்டு போய் திரும்பி வந்து, எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
மீதியை அடுத்த வாரம் சொல்றேன். (இன்ஷா அல்லாஹ்!)
குறிப்பு: இந்த சம்பவம், நமது தாய் நாட்டில் நடக்கவில்லை!
'சல்லி' என்பது 'காசு' அல்லது 'பணம்' ஆகும்.
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.
6 comments:
அட! பாவமே! பாவம் மனுஷர் இது நாளை தருகின்றேன் என்று கடனாளி வீட்டில் எழுதி வைத்திருப்பாராம் அது போல இருக்கிறதே...சல்லி என்றால் தெரியும் சதம் என்றாலும் தெரியும்...
அதான் நம்மூர்ல சல்லிக் காசு கூட பேராதுனு சொல்லுவாங்களே..
கடன்காரனை சமாளிக்க நல்ல யோசனை தந்தமைக்கு நன்றி நண்பரே
வணக்கம்
கடன் காரனுக்கு நல்ல ஆறுதல்... நகைச்சுவையாக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நிறைவுப்பகுதி என மேலே போட்டுவிட்டு, கீழே மீதியை அடுத்த வாரம் சொல்றேன் எனச்சொல்லியுள்ளீர்கள்.
இங்கு நம் ஊரில், வெறும் ’சல்லி’ என மட்டும் சொல்லாமல் ‘சல்லிக்காசு கூட கிடையாது’ எனச் சொல்லும் வழக்கம் இன்றும் உள்ளது.
மீதியை அறியும் ஆவலுடன் உள்ளேன்.
@ வை.கோபாலகிருஷ்ணன் ...
சார்...
இவரும் போகலை!
அவரும் தந்த பாடில்லை!!
அதன் பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை!!!
//அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...
@ வை.கோபாலகிருஷ்ணன் ...
சார்...
இவரும் போகலை!
அவரும் தந்த பாடில்லை!!
அதன் பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை!!!//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதுபோலத்தான் இருக்கும் என்று நானும் நினைச்சேன். :)
வாடிக்கை மறந்ததும் ஏனோ? .... நல்ல தலைப்பு.
Post a Comment