...பல்சுவை பக்கம்!

.

Friday, February 26, 2010

#54 சில சிந்தனைகள் (பகுதி - 8)




சில சிந்தனைகள் (பகுதி - 8)

தழுவிக்கொள்ளுங்கள் -1
======================

* உங்களுடைய கோபதாபங்கள் உங்களுடனேயே இருக்கட்டும் -
வினியோகிக்க வெண்டாம்.

* ஆனால் உங்கள் உற்சாகத்தை இலவசமாக வினியோகியுங்கள்.

* நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

* நட்புடன் இருந்தால் பெரிதும் மதிக்கப்படுவீர்கள்.

* இறைவனின் படைப்பில் எல்லோருக்கும் பங்குண்டு. இந்த
முக்கியத்துவத்தை மற்றவர்கள் உணரச் செய்யுங்கள்.

* கீழேயோ, மேலோயோ அந்த அந்த நிலையில் மக்களை
சந்தியுங்கள்.

* புன்னகை என்ற ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

* நகர்ந்து கொண்டே இருங்கள்; ஓடுகின்ற நதி ஒருநாளும்
அழுக்காகாது.

* முயற்சி செய்து கொண்டிருங்கள். தேயாமல் இருக்க
இதுதான் தலைவாசல்.

* இரும்பானாலும் இதயத்தோடு பாருங்கள்.

* எந்த காரியமானாலும் அதன் ஆரம்பம் விழாவாக இருக்கட்டும்.

* தோல்வி அடைந்தாலும் மன்னித்துக் கொள்ளுங்கள்.

* கருணையில் தாராளமாக இருங்கள்.

* அதிகாரத்தைவிட, அன்பு ஆளட்டும்.

* சொன்னதைச் செய்யுங்கள்.

நன்றி: 'வெற்றியை வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

6 comments:

அண்ணாமலையான் said...

நல்ல விஷயம்தான்... பாராட்டுக்கள்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

முதலில் வந்து வாக்களித்து,
கருத்து சொன்ன அண்ணாமலையான் சார்,
நன்றி!

Riyaz said...

உங்கள் பக்கம் மிக்க அருமையாக இருக்கு , உங்களை நான் நிடூரில் பார்த்தது. உங்கள் போட்டோவை கண்டு உங்களை அடையாளம் கண்டு கொண்டேன். மிக்க மகிழ்ச்சி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Riyaz said...
உங்கள் பக்கம் மிக்க அருமையாக இருக்கு , உங்களை நான் நிடூரில் பார்த்தது. உங்கள் போட்டோவை கண்டு உங்களை அடையாளம் கண்டு கொண்டேன். மிக்க மகிழ்ச்சி//

(1)என்னை அடையாளம் கண்டு,
(2)பின் தொடர்ந்து,
(3)கருத்து தெரிவித்தமைக்கு
நன்றி... Riyaz!

mahaBangkok said...

"நல்ல கருத்துக்கு நன்றி நிஜாம் "

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//mahaBangkok said...
"நல்ல கருத்துக்கு நன்றி நிஜாம் " //

அன்பான கருத்திற்கு நன்றி mahaBangkok!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...