...பல்சுவை பக்கம்!

.

Friday, April 2, 2010

நாம் எங்கே போகிறோம்?


எங்கள் கம்பெனியின் எம்.டி. ஒருநாள்

கான்ஃப்ரன்ஸ் மீட்டிங் வைத்தார். கம்பெனியின்

வளர்ச்சி, வியாபார உயர்வு, இலாப அதிகரிப்பு,

வருமானம் கூட்டுதல் போன்ற சப்ஜெக்ட்கள் பற்றி

ஆலோசனைகள் தந்து கொண்டிருந்தார்.





பேசும்போது, "நாம் வருமானம் ஈட்டி வரும்

பணத்தை நாமே வைத்துக் கொண்டு, நமக்காகவும்

நமது குடும்பத்திற்காகவும் மட்டுமே செலவு செய்து

கொண்டிருக்கிறோம்.அப்படியல்லாமல், நமக்கு

கொடையாக இறைவன் கொடுத்த அந்த பணத்திற்கு

நன்றி செய்யும் விதமாக, நம்மைவிட ஏழ்மையான,

உழைக்க முடியாத, செயல்பட முடியாத ஏழைகளுக்கு,

அனாதைகளுக்கு அதிலிருந்து ஒரு பகுதியை,

சிறு பகுதியை தானமாக, தர்மமாக, கொடையாக,

உதவியாக கொடுக்க வேண்டும். அப்படி செய்வது

நமது வியாபரத்தில் அபிவிருத்தியை உண்டாக்கும்."

என்று நல்லதொரு தெளிவான விளக்கம் அளித்தார்.



தொடர்ந்து, " நாம் பணம், பணம் என்று

அலைகிறோமே, போகும்போது பணத்தை எடுத்துக்

கொண்டா போகப் போகிறோம்?" என்று கேட்டார்.



அப்போது சக ஊழியர் ஒருவர், "போகும்போது

நாமளே எப்படி போக முடியும்? நாமே போக

முடியாதே! நம்மையே இன்னும் நாலு பேர்கள்

அல்லவா தூக்கிப் போகிறார்கள்? அப்பறம்

அந்தக் காசு, பணத்தை எப்படி சார் எடுத்து போக

முடியும்? நீங்கள் சொல்வது நல்லதொரு கருத்து

சார்" என்றார்.



அதற்கு, "சரியாகச் சொன்னீர்கள். நாமே

தன்னிச்சையாகப் போக முடியாதபோது,

பணத்தையா எடுத்துப் போக முடியும்? ஆகவே,

மற்றவர்களுக்கு நாம் உதவுவதற்கான வாய்ப்பைப்

பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று சொன்னார்

எம்.டி.



அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

27 comments:

ஜெய்லானி said...

இதை அடிக்கடி நினைவு படுத்த வேண்டியுள்ளது. ரொம்பவும் ஈஸியா மறந்து போய் விடுகிறோம் .

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஜெய்லானி said...
இதை அடிக்கடி நினைவு படுத்த வேண்டியுள்ளது. ரொம்பவும் ஈஸியா மறந்து போய் விடுகிறோம்.//

நல்ல கருத்துச் சொன்னதற்கு நன்றி, ஜெய்லானி!

இராகவன் நைஜிரியா said...

மிக நல்ல கருத்து. இந்த நினைவு வந்துவிட்டால், துரோகம் செய்யவும், மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்கவும் செய்யத் தெரியாது.

மற்றவர்களுக்கு சந்தோஷமாக கொடுக்க கொடுக்கத்தான் ஆண்டவன் நமக்கும் கொடுப்பார்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இராகவன் நைஜிரியா said...
மிக நல்ல கருத்து. இந்த நினைவு வந்துவிட்டால், துரோகம் செய்யவும், மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்கவும் செய்யத் தெரியாது.

மற்றவர்களுக்கு சந்தோஷமாக கொடுக்க கொடுக்கத்தான் ஆண்டவன் நமக்கும் கொடுப்பார்.//

உண்மை, உண்மை!
கருத்திற்கு நன்றி இராகவன் சார்!

நாடோடி said...

இதை புரிந்தாலே பாதி தவறுகள் குறைந்து விடும்... வாழ்த்துக்கள்

GEETHA ACHAL said...

நல்ல எண்ணம்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நாடோடி said...
இதை புரிந்தாலே பாதி தவறுகள் குறைந்து விடும்... வாழ்த்துக்கள்//

நாடோடியின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Geetha Achal said...
நல்ல எண்ணம்...//

நல்ல கருத்திட்ட கீதா ஆச்சல், நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

/thalaivan said...
வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.//
அழைப்பிற்கு நன்றி தலைவன்!
முயற்சிக்கிறேன்.
/

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பகிர்வு நிஜாம்.

Ahamed irshad said...

நல்ல கருத்துள்ள ஆக்கம். எண்ணம் போல் வாழ்வு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அஹமது இர்ஷாத் said...
நல்ல கருத்துள்ள ஆக்கம். எண்ணம் போல் வாழ்வு.//

வாங்க அஹமது இர்ஷாத்.
தங்கள் கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான பகிர்வு நிஜாம்.//

ஊக்கமூட்டும் கருத்திற்கு நன்றி 'ஸ்டார்'ஜன்!

நிஜாம் கான் said...

நாம் மேற்கொள்ளும் பயணம் என்றைக்கும் மரணத்தை நோக்கி தான் என்பதை மிக சிம்பிலாகச் சொல்லியிருக்கிறீர்கள். சிறப்பு. தொடருங்கள். எங்க போனாங்க உங்க குண்டப்பா! மண்டப்பா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இப்படிக்கு நிஜாம்.., said...
நாம் மேற்கொள்ளும் பயணம் என்றைக்கும் மரணத்தை நோக்கி தான் என்பதை மிக சிம்பிலாகச் சொல்லியிருக்கிறீர்கள். சிறப்பு. தொடருங்கள். எங்க போனாங்க உங்க குண்டப்பா! மண்டப்பா?//

தங்களின் மேன்மையான கருத்திற்கு
நன்றி 'இப்படிக்கு நிஜாம்'!
ஆஹா... குண்டப்பா, மண்டப்பா 3
விரைவில் (இன்ஷா அல்லாஹ்) வரும்.

ஸாதிகா said...

/// நமக்கு

கொடையாக இறைவன் கொடுத்த அந்த பணத்திற்கு

நன்றி செய்யும் விதமாக, நம்மைவிட ஏழ்மையான,

உழைக்க முடியாத, செயல்பட முடியாத ஏழைகளுக்கு,

அனாதைகளுக்கு அதிலிருந்து ஒரு பகுதியை,

சிறு பகுதியை தானமாக, தர்மமாக, கொடையாக,

உதவியாக கொடுக்க வேண்டும். அப்படி செய்வது

நமது வியாபரத்தில் அபிவிருத்தியை உண்டாக்கும்."///சத்தியமான வார்த்தை.பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய வார்த்தை.இஸ்லாம் இயம்பும் வார்த்தையும்.இடுகை படிக்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது சகோதரரே.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸாதிகா said...
/// நமக்கு கொடையாக இறைவன் கொடுத்த அந்த பணத்திற்கு நன்றி செய்யும் விதமாக, நம்மைவிட ஏழ்மையான, உழைக்க முடியாத, செயல்பட முடியாத ஏழைகளுக்கு, அனாதைகளுக்கு அதிலிருந்து ஒரு பகுதியை,
சிறு பகுதியை தானமாக, தர்மமாக, கொடையாக,
உதவியாக கொடுக்க வேண்டும். அப்படி செய்வது
நமது வியாபரத்தில் அபிவிருத்தியை உண்டாக்கும்."///சத்தியமான வார்த்தை.பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய வார்த்தை.இஸ்லாம் இயம்பும் வார்த்தையும்.இடுகை படிக்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது சகோதரரே.//

தங்களின் மகிழ்ச்சியான கருத்துரைப்
படிக்கையில், மிக மகிழ்ச்சியாக
இருக்கிறது, சகோதரி ஸாதிகா!

ஸ்ரீராம். said...

நல்லதொரு கருத்தை நயமாகச் சொன்னீர்கள்..

'பரிவை' சே.குமார் said...

மிக நல்ல கருத்து. இந்த நினைவு வந்துவிட்டால், துரோகம் செய்யவும், மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்கவும் செய்யத் தெரியாது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

/// நமக்கு கொடையாக இறைவன் கொடுத்த அந்த பணத்திற்கு நன்றி செய்யும் விதமாக, நம்மைவிட ஏழ்மையான, உழைக்க முடியாத, செயல்பட முடியாத ஏழைகளுக்கு, அனாதைகளுக்கு அதிலிருந்து ஒரு பகுதியை,
சிறு பகுதியை தானமாக, தர்மமாக, கொடையாக,
உதவியாக கொடுக்க வேண்டும். அப்படி செய்வது
நமது வியாபரத்தில் அபிவிருத்தியை உண்டாக்கும்."///சத்தியமான வார்த்தை.பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய வார்த்தை.இஸ்லாம் இயம்பும் வார்த்தையும்.இடுகை படிக்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றது சகோதரரே.//

மகிழ்ச்சியான தங்களின் கருத்திற்கு,
மிக்க மகிழ்ச்சி சகோதரி ஸாதிகா!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸ்ரீராம். said...
நல்லதொரு கருத்தை நயமாகச் சொன்னீர்கள்..//

நயமான கருத்து சொன்ன சகோதரர் ஸ்ரீராம், மிக்க நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சே.குமார் said...
மிக நல்ல கருத்து. இந்த நினைவு வந்துவிட்டால், துரோகம் செய்யவும், மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்கவும் செய்யத் தெரியாது.//

மிக நல்ல கருத்து சொன்ன சகோதரர் சே.குமார், மிக்க நன்றி!

அன்புடன் மலிக்கா said...

நினைவிலிருக்க வேண்டியதெல்லாம் நினைவுதப்பிபோய்
மறக்கவேண்டிதெல்லாம்
மனதில் குடிகொள்வதால்
வரும் பிரச்சனைதான் இதுவெல்லாம்

நல்லகருத்துக்கள் அடங்கிய இடுகை நிஜாமுதீண்ணா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அன்புடன் மலிக்கா said...
நினைவிலிருக்க வேண்டியதெல்லாம் நினைவுதப்பிபோய்
மறக்கவேண்டிதெல்லாம்
மனதில் குடிகொள்வதால்
வரும் பிரச்சனைதான் இதுவெல்லாம்
நல்லகருத்துக்கள் அடங்கிய இடுகை நிஜாமுதீண்ணா
//

பிரச்சனையின் காரணியை மிக
இலகுவாய்ச் சொன்ன
கவிஞர் மலிக்கா,
மிக்க நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஜெய்லானி said...
################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி
http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
########### //

அன்புடன் தந்த விருதினை,
அப்பவே எடுத்து...
அலங்கரித்துவிட்டேன்.
நன்றி, சகோதரரே!

r.v.saravanan said...

இறைவன் கொடுத்த அந்த பணத்திற்கு

நன்றி செய்யும் விதமாக, நம்மைவிட ஏழ்மையான,

உழைக்க முடியாத
அனாதைகளுக்கு அதிலிருந்து ஒரு பகுதியை,

சிறு பகுதியை தானமாக, தர்மமாக, கொடையாக,

உதவியாக கொடுக்க வேண்டும்.

சரியான வார்த்தை
நல்ல கருத்து நன்றி நண்பரே

mohamedali jinnah said...

பாங்காக் நோக்க போகிறோம்!
அட நம்ம ஊரு நலமா !

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...