...பல்சுவை பக்கம்!

.

Sunday, March 28, 2010

நகைச்சுவை; இரசித்தவை 9


நகைச்சுவை; இரசித்தவை - 9

பணிப்பெண்: "மன்னா, அந்தப்புரம் உள்ளே
வராதீர்கள். மகாராணியார் உங்கள்மேல்
ரொம்ப கோபமாக உள்ளார்கள்"

மன்னன்: "ஏன், ஏன், ஏன், எதனால்?"

பணிப்பெண்: "தெரியவில்லை, மன்னா!
ஆனால், மகாராணியார் சமையலறையில்
ஆப்பிளை அரிவாள்மனையில் அரிந்துகொண்டே,
'உன்னைத்தான் நானரிவேன்,
என் மன்னவனை யாரரிவார்?' என்று
பாடிக்கொண்டிருக்கிறார்கள், மன்னா!"
=============================================

மனைவி: "என்னங்க, துவரம் பருப்பு இல்லை.
மல்லி இல்லை. தேங்காய் எண்ணெய் இல்லை.
ஜீனி இல்லை. ஆஃபிஸிலிருந்து வரும்போது
வாங்கிட்டு வாங்க..."

கணவன்: "ஏன்டி, ஆஃபிஸ் போகும்போது,
'இல்லை, இல்லை'ன்னு சொல்லி எரிச்சலைக்
கிளப்புற?"

மனைவி: துவரம் பருப்பு டப்பா காலியா இருக்கு.
மல்லி டப்பா காலியா இருக்கு.
தெங்காய் எண்ணெய் பாட்டில் காலிய இருக்கு.
ஜீனி டப்பா காலியா இருக்கு. இப்ப ஓகேயா?"
=============================================

ஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை?
இனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும்"

மாணவன்: "சரி சார். நாளைக்கு எனக்கு
வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!"
--------------------------------------------------------------

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

27 comments:

Jaleela said...

நல்ல நகைச்சுவை, நல்ல சிரிச்சாச்சு

NIZAMUDEEN said...

//Jaleela said...
நல்ல நகைச்சுவை, நல்ல சிரிச்சாச்சு//

நல்லா சிரிச்சு,
நல்லா க்மெண்ட் போட்டதற்கு
நல்ல நன்றி!

நாடோடி said...

க‌ல‌க்க‌ல் ந‌கைச்சுவை..சிரிப்பு தாங்க‌லை.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்தல் நகைச்சுவை கலக்குங்கள்..

NIZAMUDEEN said...

//நாடோடி said...
க‌ல‌க்க‌ல் ந‌கைச்சுவை..சிரிப்பு தாங்க‌லை.//

தாங்கமுடியாமல் சிரிச்சதற்கு நன்றி, நாடோடி!

NIZAMUDEEN said...

//ஸ்ரீ.கிருஷ்ணா said...
அசத்தல் நகைச்சுவை கலக்குங்கள்..//

கலக்கச் சொன்னதற்கு நன்றி, ஸ்ரீகிருஷ்ணா!

Geetha Achal said...

எப்படி இப்படி எல்லாம்...நல்லா சிரிச்சாச்சு...

NIZAMUDEEN said...

//Geetha Achal said...
எப்படி இப்படி எல்லாம்...நல்லா சிரிச்சாச்சு...//

அப்படி அப்படித்தான்!
நன்றி, கீதா ஆச்சல்!

ஜெய்லானி said...

ஆரம்பத்திலேயே சிநேகாவை சிரிக்க வச்சுட்டீங்க!! நமக்கு வராதா என்ன ? . :-))

இராகவன் நைஜிரியா said...

ஸ்கூல் பையன் ஜோக் சூப்பரோ சூப்பர்.

ஸாதிகா said...

ஹாஹா..ஹிஹி..ஹேஹே..

NIZAMUDEEN said...

//ஜெய்லானி said...
ஆரம்பத்திலேயே சிநேகாவை சிரிக்க வச்சுட்டீங்க!! நமக்கு வராதா என்ன ? . :-)) //


ஆரம்பத்திலேயே சினேகா சிரிக்காட்டியும்கூட
உங்களுக்கு சிரிப்பு வராதா என்ன?
சிரிப்பான கருத்துக்கு, அல்ல சிறப்பான
கருத்துக்கு நன்றி ஜெய்லானி!

NIZAMUDEEN said...

//இராகவன் நைஜிரியா said...
ஸ்கூல் பையன் ஜோக் சூப்பரோ சூப்பர்.//

தங்கள் சூப்பர் கருத்திற்கு...
நன்றியோ நன்றி இராகவன் சார்!

NIZAMUDEEN said...

//ஸாதிகா said...
ஹாஹா..ஹிஹி..ஹேஹே..//

ஓஹோ... ஓஹோ...
நன்றி சகோதரி ஸாதிகா!

சே.குமார் said...

நல்ல நகைச்சுவை, நல்ல சிரிச்சாச்சு

அக்பர் said...

நல்ல நகைச்சுவை. அதிலும் அந்த ரெண்டாவது சூப்பர்.

NIZAMUDEEN said...

//சே.குமார் said...
நல்ல நகைச்சுவை, நல்ல சிரிச்சாச்சு//

நல்லா இரசிச்சதுக்கும் நல்லா சிரிச்சதுக்கும்
நல்லா கருத்துரையிட்டதுக்கும்
நன்றி சே.குமார்!

NIZAMUDEEN said...

//அக்பர் said...
நல்ல நகைச்சுவை. அதிலும் அந்த ரெண்டாவது சூப்பர்.//

நகைச்சுவைகளில் இரண்டாவதாக உள்ளதை சூப்பர் என்று கருத்திட்ட அக்பர், நன்றி உங்களுக்கு!

அன்புடன் மலிக்கா said...

ஆசிரியர்: நேற்று ஏன்டா ஸ்கூலுக்கு வரலை?
இனிமேல் முதல் நாளே லீவு சொல்லிடணும்"

மாணவன்: "சரி சார். நாளைக்கு எனக்கு
வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!"
//
mudiyala முடியலை. நானும் லீவ் எடுக்கும்போது இனி இதைச்சொல்லிறலாமோ ஹ ஹா ஹா

NIZAMUDEEN said...

//அன்புடன் மலிக்கா said...

மாணவன்: "சரி சார். நாளைக்கு எனக்கு
வயிற்று வலி சார். நாளைக்கு எனக்கு லீவு சார்!"
//
mudiyala முடியலை. நானும் லீவ் எடுக்கும்போது இனி இதைச்சொல்லிறலாமோ ஹ ஹா ஹா//

வாங்க மலிக்கா!

நீங்கதான் சகலகலா "வல்(ம)லி"கா அயிற்றே,
உங்களுக்கு எதற்குங்க லீவு?

நன்றி கருத்திற்கு!

அஹமது இர்ஷாத் said...

சிரிப்போ.. சிரிப்பூ....

NIZAMUDEEN said...

//அஹமது இர்ஷாத் said...
சிரிப்போ.. சிரிப்பூ....//

வாங்க அஹமது இர்ஷாத்!
இந்த வலைப்பூ...
படித்து உங்களுக்கு
சிரிப்போ சிரிப்பூ!
இதோ உங்களுக்கு
எனது நன்றிப்பூ!

ஸாதிகா said...

தங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் கிரீடத்தை பெற்றுக்கொள்ளவும்.

http://shadiqah.blogspot.com/2010/04/blog-post.html

சைவகொத்துப்பரோட்டா said...

நல்லா இருக்கு நகைச்சுவை.

NIZAMUDEEN said...

//ஸாதிகா said...
தங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் கிரீடத்தை பெற்றுக்கொள்ளவும்.

http://shadiqah.blogspot.com/2010/04/blog-post.html
//

ஆஹா இந்தக் கிரீடம் பார்க்க மட்டும்தான் காஸ்ட்லி.
தலையில வச்சா ரொம்ப லேசு. (தலைக்கணம்
கிடையவே கிடையாது)

நன்றி சகோதரி ஸாதிகா!

NIZAMUDEEN said...

//சைவகொத்துப்பரோட்டா said...
நல்லா இருக்கு நகைச்சுவை.//


நல்லா சொன்னீங்க கருத்து!
கருத்திற்கு நன்றி சைவக்கொத்துப்பரோட்டா!

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...