...பல்சுவை பக்கம்!

.

Monday, March 22, 2010

#58 தண்ணீரும் தங்கம்போலத்தான்!

தண்ணீரும் தங்கம்போலத்தான்!உலகப் பரப்பளவில் 71 சதவீதம் தண்ணீரால் சூழப்பட்டிருக்க,
மீதமுள்ள 29 சதவீத நிலப்பரப்பில்தான் நமது மனித இனமும்
விலங்கினங்களும் வாழ்ந்துவருகிறோம்.

இந்நிலையில், நாடுகளுக்கிடையில், மாநிலங்களுக்கிடையில், பக்கத்துப் பக்கத்து ஊர்களுக்கிடையில், ஏன் ஒவ்வொரு குழாயடியிலும்
தண்ணீருக்காக நடக்கின்ற சண்டைகள் நாம் அறிந்தவைதான்.

"காசை தண்ணீராய் செலவு செய்கிறான்" என்று சொன்ன
நிலைமாறி, உலக நாடுகளை அச்சுறுத்திக்
கொண்டிருக்கின்ற பொருளாதாரத் வீழ்ச்சியைப்போலவே,
தண்ணீர் பஞ்சமும் நம்மை பயமுறுத்தி கொண்டிருக்கின்றது.
தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.
இப்படியேபோனால், காசு இருக்கும்; தண்ணீர் இருக்குமா?

இன்று மார்ச் 22 'உலக தண்ணீர் தினம்'
கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இதையொட்டி, நமக்காகவும் பின்வரும்
நமது சந்ததியினருக்காகவும் தண்ணீரை
சிக்கனமாக பயன்படுத்தவும் சேமிக்கவும்
நமது பங்களிப்பைத் தந்து தண்ணீரைப்
பாதுகாத்து அனைவரும் பயன்பெறுவோம்.

(படம் உதவி:தினமலர்)

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

15 comments:

சே.குமார் said...

//காசு இருக்கும்; தண்ணீர் இருக்குமா?//

தண்ணீரை காசாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் உங்கள் கேள்வி சரிதான்.
பாட்டில்களில் நீர் அடைத்து விற்கும் உலகில் நல்ல தண்ணீருக்கு அலைய வேண்டிய காலம் எப்போதோ வந்தாச்சு.

நாடோடி said...

உண்மைதான்...சிறு வ‌ய‌திலேயே குழ‌ந்தைக‌ளுக்கு த‌ண்ணீரின் முக்கிய‌துவ‌த்தை சொல்லி வ‌ள‌ர்ப்ப‌து ந‌ம் ஒவ்வொருவ‌ரின் க‌ட‌மை.

இராகவன் நைஜிரியா said...

காலம் பதில் சொல்லும்.

malar said...

வரும் காலங்களில் நிலைமை எப்படி இருக்குமோ என்ற கவலை இப்பவே கவலை தொற்றிக்கொண்டுள்ளது..தண்ணிர்
+மின்சாரம் இரண்டையும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டியது தான்....

ஸாதிகா said...

சமூக அக்கரையுடன் எழுதப்பட்ட இடுகை.வாழ்த்துக்கள்.நன்றி.

NIZAMUDEEN said...

//சே.குமார் said...
//காசு இருக்கும்; தண்ணீர் இருக்குமா?//

தண்ணீரை காசாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் உங்கள் கேள்வி சரிதான்.
பாட்டில்களில் நீர் அடைத்து விற்கும் உலகில் நல்ல தண்ணீருக்கு அலைய வேண்டிய காலம் எப்போதோ வந்தாச்சு.//

அலையவேண்டிய காலம் வந்துவிட்டதாக, சரியாகச் சொன்னீர்கள்
சே.குமார். நாம் கவனமுடன் இருந்தால், அந்தக் காலம் கொஞ்சம்
தள்ளிப் போகும், அவ்வளவே!
நன்றி!

NIZAMUDEEN said...

//நாடோடி said...
உண்மைதான்...சிறு வ‌ய‌திலேயே குழ‌ந்தைக‌ளுக்கு த‌ண்ணீரின் முக்கிய‌துவ‌த்தை சொல்லி வ‌ள‌ர்ப்ப‌து ந‌ம் ஒவ்வொருவ‌ரின் க‌ட‌மை.//

கடமையைச் சொன்ன நாடோடி, நன்றி!

NIZAMUDEEN said...

//இராகவன் நைஜிரியா said...
காலம் பதில் சொல்லும்.//

கருத்திற்கு நன்றி, ராகவன் சார்!

NIZAMUDEEN said...

//malar said...
வரும் காலங்களில் நிலைமை எப்படி இருக்குமோ என்ற கவலை இப்பவே கவலை தொற்றிக்கொண்டுள்ளது..தண்ணிர்
+மின்சாரம் இரண்டையும் சிக்கனமாக செலவு செய்ய வேண்டியது தான்....//

கவலைப்பட்டு, கருத்து சொன்னமைக்கு
நன்றி!

NIZAMUDEEN said...

ஸாதிகா said...
சமூக அக்கரையுடன் எழுதப்பட்ட இடுகை.வாழ்த்துக்கள்.நன்றி.//

வாழ்த்துக்களுக்கு நன்றி!

இப்படிக்கு நிஜாம்.., said...

அருமையான பதிவு நிஜாம்பாய். போகப்போக தண்ணீர் தங்கத்தை விட விலையேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தொடர்ந்து எழுதுங்க..,

NIZAMUDEEN said...

//இப்படிக்கு நிஜாம்.., said...
அருமையான பதிவு நிஜாம்பாய். போகப்போக தண்ணீர் தங்கத்தை விட விலையேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தொடர்ந்து எழுதுங்க..,//

தண்ணீரின் விலை, தங்கத்தின் விலையைவிட
உயருமா? பயமுறுத்தறீங்களே, நிஜாம்!

Jaleela said...

தண்ணீரும் தங்கம் போல தான் , நல்ல சொல்லி இருக்கீங்க.

NIZAMUDEEN said...

//Jaleela said...
தண்ணீரும் தங்கம் போல தான் , நல்ல சொல்லி இருக்கீங்க./

கருத்திற்கு நன்றி சகோதரி!

Anonymous said...

தண்ணீர்.... நீரின்றி அமையாது உலகு.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...