...பல்சுவை பக்கம்!

.

Friday, March 5, 2010

#56 'எத்தனை நாள் பிரிந்து' பாடல்
'எத்தனை நாள் பிரிந்து' பாடல்
============================

இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனம் (சுருக்கமாக சிலோன் ரேடியோ). தமிழ்ச் சேவை 1, தமிழ்ச் சேவை 2, வர்த்தகச் சேவை என்பதெல்லாம் 1980-களில் மிகப் பிரபலம். அப்போது அடிக்கடி தமிழ்ச் சேவையில் ஒலித்த பாடல் இ‌து. கணீரென்ற குரலில் எம்.குணசீலநாதன் பாடிய இந்தப் பாடலை நீங்கள் கேட்டு இருக்கீங்களா?


எத்தனை நாள் பிரிந்து இங்கிருப்பேன் என்னுயிரே?
நித்தமுன் நினைவால் நீரலைதான் விழிகளிலே!
சத்தமின்றி என்னுயிரில் சங்கமித்த வான்மயிலே
சித்தமென்னும் சிறகெடுத்து சேர்ந்திடாய் என்னருகே!
(எத்தனை நாள் பிரிந்து...)

ஆனந்த வெள்ளம் அள்ளி நீ தந்தாய்
நானந்த வெள்ளத்தில் நாளெல்லாம் மூழ்கி
மோனத்தில் இருக்கும் முனிவனைப் போலே
ஞானத்தில் இருப்பேன் நீந்தி நீ வாராய்
(எத்தனை நாள் பிரிந்து...)

வண்ண மணிப்புறா துணையின்றி வாழாது
எண்ண இனித்திடும் நீயின்றி நானா?
இன்னமும் நானும் ஏங்குதல்தானா?
இனியொருபோதும் இருந்திடேன் வாராய்
(எத்தனை நாள் பிரிந்து...)


நீங்கள் இந்தப் பாடலைக் கேட்டு இருக்கிறீர்களா?
பாடல் எழுதியவர் பெயர் தெரியுமா?
தங்கள் பதில்கள் எதிர்பார்க்கிறேன்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

14 comments:

கவிதை வீதி said...

"தெரியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்களேன்..."
-தோழன் மபா

NIZAMUDEEN said...

//கவிதை வீதி said...
"தெரியவில்லை. நீங்களே சொல்லிவிடுங்களேன்..."
-தோழன் மபா//

வாருங்கள் மபா!
வேறு யாரும் சொல்வார்களா?

Madurai Saravanan said...

பாடல் அருமை. யார் பாடியது. விடை கொடுங்கள். அய்யா நான் சொல்வது வினாவிற்கு விடை. வாழ்த்துக்கள்

NIZAMUDEEN said...

// பாடல் அருமை. யார் பாடியது. விடை கொடுங்கள். அய்யா நான் சொல்வது வினாவிற்கு விடை. வாழ்த்துக்கள்
(Madurai Saravanan) //

கருத்திற்கு நன்றி மதுரை சரவணன்! தங்களின் வாழ்த்துக்கள் பாடல் எழுதியவருக்கு!

mymuji said...

நிஜாம் பாய்.

கொஞ்ச‌ம் நாளாய் ரொம்ப‌ பிஸி. அதான் விசிட் அடிக்க‌ முடிய‌வில்லை.

அத‌ற்குள் இத்த‌னை ப‌டைப்புக‌ளா?

த‌ங்கள் ப‌ணி தொட‌ர வாழ்த்துக்க‌ள்.

NIZAMUDEEN said...

//mymuji said...
நிஜாம் பாய்.

கொஞ்ச‌ம் நாளாய் ரொம்ப‌ பிஸி. அதான் விசிட் அடிக்க‌ முடிய‌வில்லை.

அத‌ற்குள் இத்த‌னை ப‌டைப்புக‌ளா?

த‌ங்கள் ப‌ணி தொட‌ர வாழ்த்துக்க‌ள்.//

அருமை mymuji,

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

தொடர்ந்து வாருங்கள்.

கானா பிரபா said...

அருமையான பாடல், இந்தப் பாடகர் குணசீலநாதனின் மற்றைய பாடல்கள் சில என்னிடம் இருக்கின்றன. ஆனால் குறித்த பாடல் என்னிடம் இல்லை. நண்பர்களிடம் கேட்டுச் சொல்கின்றேன் நண்பா

NIZAMUDEEN said...

//கானா பிரபா said...
அருமையான பாடல், இந்தப் பாடகர் குணசீலநாதனின் மற்றைய பாடல்கள் சில என்னிடம் இருக்கின்றன. ஆனால் குறித்த பாடல் என்னிடம் இல்லை. நண்பர்களிடம் கேட்டுச் சொல்கின்றேன் நண்பா//

தகவலுக்கு நன்றி கானா!
இன்னும் சில பாடல்கள் பற்றி
தங்களிடம் கேட்கவேண்டும்.
பிறகு கேட்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

எனக்கு தெரியவில்லையணா? எனக்கு சினிமாப்பாடல்கள் அவ்வளவாக அறிந்துவைத்திருப்பதில்லையண்ணா

NIZAMUDEEN said...

//அன்புடன் மலிக்கா said...
எனக்கு தெரியவில்லையணா? எனக்கு சினிமாப்பாடல்கள் அவ்வளவாக அறிந்துவைத்திருப்பதில்லையண்ணா//

கருத்திற்கு நன்றி கவிஞர் மலிக்கா!

ம.தி.சுதா said...

நல்லவரிகளாக இருக்கிறது உண்மையில் எனக்கு இது கேட்டாதாக நினைவிருக்கிறதே தவிர இதன் விபரங்கள் எதுவுமே தெரியவில்லை சகோதரா... மன்னிக்கணும்...

NIZAMUDEEN said...

//ம.தி.சுதா said...
நல்லவரிகளாக இருக்கிறது உண்மையில் எனக்கு இது கேட்டாதாக நினைவிருக்கிறதே தவிர இதன் விபரங்கள் எதுவுமே தெரியவில்லை சகோதரா... மன்னிக்கணும்... //

உங்களுக்குத் தெரிந்திருந்தால் நானும்
தெரிந்துகொள்ளலாம் என எண்ணினேன்.
பரவாயில்லை. தனி மடல் உங்களுக்கு
அனுப்புகிறேன், விரைவில்...

அஹமட் சுஹைல் said...

முன்னைய வர்த்தக சேவை தற்போது “தென்றல்” என்று பெயர் மாற்றம் பெற்றுவிட்டது.

வர்தக சேவையானது தற்போது தேசிய சேவையில் குறிப்பிட்ட சில மணித்தியால ஒலிபரப்பாக இடம்பெறுகின்றது.


நீங்கள் மேலே சொன்ன பாடலை இளையவனான நான் கேட்டதில்லை.
ஆனாலும் அடுத்த முறை கடமைக்கு செல்லும் போது கண்டிப்பாக சிரேஸ்ட்ட அறிவிப்பாளர்களிடம் விசாரித்து சொல்கிறேன்.

NIZAMUDEEN said...

நன்றி அஹமத் சுஹைல்!
தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கின்றேன்.
மேலும் தங்கள் இமெயில் முகவரியை
எனக்கு மெயில் செய்யுங்கள்.
nidur_nizam@hotmail.com

அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது பற்றியும்
ஒரு பதிவு:
http://nizampakkam.blogspot.com/2010/08/67radiocw.html

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...