...பல்சுவை பக்கம்!

.

Friday, April 9, 2010

அது ஒரு கதைக்காலம்!

அது ஒரு கதைக்காலம்!



'கதை கேளு' என்ற தொடர் பதிவிற்கு அழைப்பு

விடுத்துள்ளார் நண்பர் ஸ்டார்ஜன். இதோ கதையுடன்

வந்துவிட்டேன்.



எனது சிறுவயதில் எங்கள் பாட்டியிடம் (அம்மாவின்

அம்மா) நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அதே

சமயம் சிதம்பரத்தில் இருந்த எங்கள் பெரியம்மா

அவர்களும் எனக்கு நிறைய கதைகள் சொல்வார்கள்.

இதனால், அடிக்கடி எங்கள் அம்மாவுடன் சிதம்பரம்

போய்வருவதுண்டு. அடிக்கடி பெரியம்மாவும் எங்கள்

வீட்டிற்கு வருவார்கள். அந்த நேரங்களில் சுமார்

25 அல்லது 30 கதைகள்வரை பெரியம்மா

சொல்வார்கள். அவையெல்லாம் 'அம்புலிமாமா'வில்

படித்ததாகச் சொல்வார்கள். இப்போது அவர்கள்

சொன்ன கதை:


ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.



ம்ஹூம், இந்தக் கதை வேணாம்; வேற கதை

சொல்லுங்கள்.


சரி வேற கதை. வேற ஒரு ஊர்ல வேற ஒரு

ராஜா இருந்தானாம்.


ம், சொல்லுங்க, சொல்லுங்க.


இது வேணாம். ஒரு ஊர்ல பெரியண்ணன் அப்படிங்கிற

அண்ணனும் சின்னத்தம்பி அப்படிங்கிற தம்பியும்

இருந்தாங்க.


ஒரு நாள் இரண்டு பேரும் வியாபார சம்பந்தமாக

வெளியூருக்குப் புறப்பட்டுப் போனாங்க. போக்குவரத்து

வசதி இல்லாததால நடந்துதான் போனாங்க. அப்போ

உச்சிவெயில் மதியம் நேரம் வந்துடுச்சி. பசியா

இருந்ததால் சாப்பிடலாம்னு உட்கார்ந்து அவங்கவங்க

மனைவி கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப்

பிரிச்சாங்க.

 
பெரியண்ணன் பொட்டலத்தில மூன்று தோசைகளும்

சின்னத்தம்பி பொட்டலத்தில இரண்டு தோசைகளும்

இருந்திச்சி.


(ஆஹா மறுபடியும் தோசை கதையா!!!?

முதல் தோசைக் கதை இங்கே படிக்கலாம்.

அடுத்து தோசை நகைச்சுவை இங்கு படிக்கலாம்.)



சாப்பிடலாம்னு தோசையில் கையை வைக்கும்போது

ஒரு பிச்சைக்காரர் மாதிரியான வயசானவர் வந்து,

"ஐயாக்களே! ரொம்ப பசியா இருக்கு. சாப்பிட

ஏதாவது கொடுங்கள் ஐயா!" என்று கெஞ்சிக்

கேட்டார்.


பெரியண்ணனும் சின்னத்தம்பியும் என்ன செய்வது

என்று யோசித்தார்கள். பிறகு இருவருடைய

தோசைகள் ஐந்தையும் ஒன்னாச் சேர்த்து அந்த

ஐந்து தோசைகளையும் ஒவ்வொரு தோசையையும்

நான்கு, நான்கு துண்டுகளாகப் பிய்த்தார்கள். இப்போ

மொத்தம் இருபது துண்டுகள் இருந்தன.


அதில், 6 துண்டுகளை அந்தப் பெரியவருக்குக்

கொடுத்துவிட்டு மீதம் இருந்ததில் 7 துண்டுகளை

பெரியண்ணனும் 7 துண்டுகளை சின்னத்தம்பியும்

சாப்பிட்டார்கள்.


மூவரும் சாப்பிட்டு முடித்ததும் அந்தப் பெரியவர்

எழுந்து நன்றி சொல்லிவிட்டுப் புறப்படும்முன்

பெரியண்ணனிடம் 6 பொற்காசுகளை (24 கேரட்)

கொடுத்து, "ஐயா, நீங்கள் இருவரும் பிரித்து

எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு

சென்றுவிட்டார்.



இப்போ பெரியண்ணன் 4 பொற்காசுகளை தான்

எடுத்துக் கொண்டு, 2 பொற்காசுகளை தம்பியிடம்

கொடுத்தான்.



தம்பியோ, "அந்தப் பெரியவர் ரெண்டு பேரும்

பிரிச்சிக்குங்க என்றுதான் சொன்னார். அதனால

சமமா நீ 3 பொற்காசுகள் எடுத்துக் கொண்டு

எனக்கும் 3 பொற்காசுகள் கொடுத்தால்தான்

வாங்குவேன்" என்று சண்டை போட்டான்.



பெரியண்ணன் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்

அடுத்த ஊருக்குப் போனதும் ஆலமரத்தடி (+சொம்பு)

நாட்டாமையிடம் முறையிட்டார்கள்.



நாட்டாமை நல்லா விசாரிச்சிட்டு தீர்ப்புச் சொன்னார்.

(நாட்டாமை, தீர்ப்பை மாத்தமுடியாது.)



நாட்டாமை தம்பிக்காரனைக் கூப்பிட்டார்.


"தம்பி, நீ கொண்டு வந்தது 2 தோசைகள். அதை

8 துண்டுகள் போட்டு, 7 துண்டுகள் நீ சாப்பிட்டாய்.

அந்தப் பெரியவருக்கு நீ ஒரு துண்டுதான் கொடுத்தாய்.

அதனால உனக்கு ஒரு பொற்காசுதான்" என்றார்.



நாட்டாமை அண்ணனைக் கூப்பிட்டார்.


"ஏனப்பா, நீ கொண்டு வந்தது 3 தோசைகள். அதை

12 துண்டுகள் போட்டு, 7 துண்டுகள் நீ சாப்பிட்டாய்.

அந்தப் பெரியவருக்கு நீ 5 துண்டுகள் கொடுத்தாய்.

அதனால் உனக்கு 5 பொற்காசுகள்" என்றார்.



தீர்ப்பைக் கே(கெ)ட்டு தம்பி 'உள்ளதும் போச்சே' என்று

நொந்து நூடுல்ஸ் ஆகிப் போனான். (தோசைக் கதையில்

நூடுல்ஸும் வந்திடுச்சே!)


சரி, இப்ப கதையின் நீதியைச் சொல்லிடலாமா?

அ, கதையைப்  படிச்சீங்கள்ல? நீங்களே சொல்லிடுங்க.



தொடர் பதிவில், இணைந்துகொள்ள இவர்களை

அழைக்கிறேன்.



1.ஸ்ரீகிருஷ்ணா

2.இப்படிக்கு நிஜாம்

3.கவிஞர் மலிக்கா.



அன்பன்,

அ.முஹம்மது நிஜாமுத்தீன்.



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

27 comments:

சீமான்கனி said...

இருப்பதாய் வைத்து கொண்டு திருப்தி (திருப்பதி இல்லை)படு...
அட பார்ரா நீதி எல்லாம் சொல்லறாரு...அப்டின்னு மலிக்கா கா கேக்குறாங்க சரி உருப்படியா ஒன்னு சொல்லறேன்...நான்தான் பஸ்ட்டு...நான்தான் பஸ்ட்டு...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இருப்பதாய் வைத்து கொண்டு திருப்தி (திருப்பதி இல்லை)படு...
அட பார்ரா நீதி எல்லாம் சொல்லறாரு...அப்டின்னு மலிக்கா கா கேக்குறாங்க சரி உருப்படியா ஒன்னு சொல்லறேன்...நான்தான் பஸ்ட்டு...நான்தான் பஸ்ட்டு...//

அன்புடன் வந்து கருத்து தந்ததற்கு
மிக்க நன்றி! நீங்கதான் ஃப்ர்ஸ்ட்,
நீங்கதான் ஃப்ர்ஸ்ட்!

நாடோடி said...

நாட்டாமை நல்ல‌ தீர்ப்பு சொல்லுகிறாரே... அவ‌ரை ந‌ம்ம‌ உச்ச‌ நீதி ம‌ன்ற‌த்துக்கு நீதிப‌தியாய் வ‌ச்சுக‌லாமா?...

சைவகொத்துப்பரோட்டா said...

தோசை நல்லா மொறுமொறுன்னு இருக்கு!! :))

ஜெய்லானி said...

நாட்டாமை தீர்ப்பு கரெக்ட் . நான் ஒத்துக்கொள்கிறேன்.

நிஜாம் கான் said...

நல்லாயிருக்கு நிஜாம் பாய்! நாமளும் எழிதிடுவோம்..,

ஸாதிகா said...

பெரியண்ணன் கதை சூப்பர்.நீங்கள் சுட்ட தோசைக்கதை லின்ங் கொடுத்து இருந்தீர்கள்.அக் மார்க் மொக்கை என்றால் இதுதானா?நிறைய சிரிக்கவைத்துவிட்டீர்கள் சகோ.

Ahamed irshad said...

சுவராஸ்யம், தொடருங்கள்....

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை ரொம்ப சுவாரசியமா இருந்தது., நல்ல தீர்ப்பு ரசித்தேன்., மிக அருமை நிஜாம்.

தொடருங்க‌ள் நண்பர்களே..

மின்மினி RS said...

கதை ரொம்ப இன்ரஸ்டிங்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமை ..அழைப்புக்கு நன்றி ...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நாடோடி said...
நாட்டாமை நல்ல‌ தீர்ப்பு சொல்லுகிறாரே... அவ‌ரை ந‌ம்ம‌ உச்ச‌ நீதி ம‌ன்ற‌த்துக்கு நீதிப‌தியாய் வ‌ச்சுக‌லாமா?...//

நமது இந்திய அரசிடம் கேட்டுருவோம்.
கருத்திற்கு நன்றி, நாடோடி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சைவகொத்துப்பரோட்டா said...
தோசை நல்லா மொறுமொறுன்னு இருக்கு!! :))//

(சைவக்கொத்துப்)பரோட்டா போடுபவருக்கு
தோசையும் பிடிக்குமோ?
கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஜெய்லானி said...
நாட்டாமை தீர்ப்பு கரெக்ட் . நான் ஒத்துக்கொள்கிறேன்.//

உங்க கருத்து கரெக்ட். நான்
நன்றி சொல்கிறேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இப்படிக்கு நிஜாம்.., said...
நல்லாயிருக்கு நிஜாம் பாய்! நாமளும் எழிதிடுவோம்..,//

கருத்திற்கு நன்றி நிஜாம்!
தாங்கள் எழுதுவதைத்
தொடர்(ந்து) படிக்க
ஆவலாய் உள்ளேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸாதிகா said...
பெரியண்ணன் கதை சூப்பர்.நீங்கள் சுட்ட தோசைக்கதை லின்ங் கொடுத்து இருந்தீர்கள்.அக் மார்க் மொக்கை என்றால் இதுதானா?நிறைய சிரிக்கவைத்துவிட்டீர்கள் சகோ.//

பெரியண்ணன் கதை, அக்மார்க் மொக்கை
இரண்டையும் இரசித்ததற்கு நன்றி,
சகோதரி ஸாதிகா!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அஹமது இர்ஷாத் said...
சுவராஸ்யம், தொடருங்கள்....//

தொடரச் சொல்லி கருத்துச் சொன்ன
அஹமது இர்ஷாத், நன்றி!
தொடர்ந்து வாருங்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கதை ரொம்ப சுவாரசியமா இருந்தது., நல்ல தீர்ப்பு ரசித்தேன்., மிக அருமை நிஜாம்.

தொடருங்க‌ள் நண்பர்களே..//

இரசித்த நாளைய ராஜாவுக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//மின்மினி said...
கதை ரொம்ப இன்ரஸ்டிங்.//

கருத்திற்கு நன்றி சகோ மின்மினி!
தங்கள் பதிவுகளும் வெகு சுவாரஸ்யம்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸ்ரீ.கிருஷ்ணா said...
அருமை ..அழைப்புக்கு நன்றி ...//

நல்லது ஸ்ரீ.கிருஷ்ணா!
தங்கள் பதிவு எப்போ?

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு...

வேறொன்னும் சொல்ல மனசுக்கு தெரியலை...

வாழ்த்துக்கள்..!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சே.குமார் said...
நல்லாயிருக்கு...

வேறொன்னும் சொல்ல மனசுக்கு தெரியலை...

வாழ்த்துக்கள்..!//

நல்லது!
வேறொன்னும் சொல்ல (என்) மனசுக்கு தெரியலை...
நன்றிகள்!

அன்புடன் மலிக்கா said...

அண்ணா நாந்தான் லேட்டு. பென்ச்சில் ஏறி நிக்கனுமா. இதே கதையெழுத அழைத்திருக்காங்க அக்பரும் இருவருக்காவும் சீக்கிரம் எழுதிவிடுகிறேன்.
காக்கா கத எழுதவா அச்சோ அது பழசா. என்ன எழுதுறதுன்னு யோசிச்சிட்டு வாரேன்.

நல்ல சிந்தனையும் தீப்பும் நாட்டமா தீர்ப்பு இப்படியே சொல்லுங்க..


இருப்பதாய் வைத்து கொண்டு திருப்தி (திருப்பதி இல்லை)படு...
அட பார்ரா நீதி எல்லாம் சொல்லறாரு...அப்டின்னு மலிக்கா கா கேக்குறாங்க சரி உருப்படியா ஒன்னு சொல்லறேன்...நான்தான் பஸ்ட்டு...நான்தான் பஸ்ட்டு.....//

என்னா ஒரு குசும்பு வம்புல மாட்டிவிடவா பாக்குறீங்க மாங்கனி.பஸ்டு வந்த தோசைன்னத்தும் பஸ்டு வந்துட்டு பேச்சைப்பாரு. ஹி ஹி

GEETHA ACHAL said...

அருமையான கதை..தென்னாலிராமன் கதையில் வருவது மாதிரி இருக்கின்றது..எந்த வயதில் இப்படி கதைகளை படிக்க அனைவருக்கும் விருப்பம் கண்டிப்பாக இருக்கும்...நன்றி..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அன்புடன் மலிக்கா said...
அண்ணா நாந்தான் லேட்டு. பென்ச்சில் ஏறி நிக்கனுமா. இதே கதையெழுத அழைத்திருக்காங்க அக்பரும் இருவருக்காவும் சீக்கிரம் எழுதிவிடுகிறேன்.
காக்கா கத எழுதவா அச்சோ அது பழசா. என்ன எழுதுறதுன்னு யோசிச்சிட்டு வாரேன்.

நல்ல சிந்தனையும் தீப்பும் நாட்டமா தீர்ப்பு இப்படியே சொல்லுங்க.. //

நன்றி கவிஞர் மலிக்கா!
பெஞ்சில் ஏறி நிற்க வேண்டாம்.
நல்லதா ஒரு கதை எழுதிட்டு வாங்க, அது போதும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Geetha Achal said...
அருமையான கதை..தென்னாலிராமன் கதையில் வருவது மாதிரி இருக்கின்றது..எந்த வயதில் இப்படி கதைகளை படிக்க அனைவருக்கும் விருப்பம் கண்டிப்பாக இருக்கும்...நன்றி..//

படித்து கருத்து சொல்ல வந்ததற்கு நன்றி
சகோதரி கீதா ஆச்சல்!
தொடர்ந்து வருக!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நீதி 1:
அவரவர்க்கு உரியதே, அவரவர்க்குக் கிடைக்கும். (இது பொதுக் கருத்து நீதி)
நீதி 2:
ஆண்டவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது; ஆண்டவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது. (இது பஞ்ச் டயலாக் நீதி)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...