...பல்சுவை பக்கம்!

.

Tuesday, August 31, 2010

இ.ஆ. இ.ஆ. = இனிதே ஆரம்பம், இரண்டாம் ஆண்டு!

இ.ஆ. இ.ஆ. = இனிதே ஆரம்பம், இரண்டாம் ஆண்டு!


   அன்பிகினிய அன்பர்கள் அனைவரையும்
மகிழ்வோடு வரவேற்கிறேன்.

   இன்று, இனிய நாள்! அதாவது நமது
'நிஜாம் பக்கம்' இன்று இரண்டாம் ஆண்டில்
உங்கள் உள்ளார்ந்த ஆதரவோடு அடியெடுத்து
வைக்கின்றது.

   சற்றே பின்னோக்கிப் பார்க்கிறேன். இதே
ஆகஸ்ட் 31-ஆம் நாள் சென்ற ஆண்டில்
'தமிழ்குடும்பம் திரு. தமிழ்நேசன் அவர்களின்
நல்வாழ்த்துக்களோடும் எழுத்தாளர் திருமதி.சுமஜ்லா
அவர்களின் உதவியோடும் ஆரம்பமாகியது
நமது வலைப்பூ.

52 வாரங்கள்;
67 இடுகைகள்;
50+ தொடரும் அன்பர்கள்;
பல விருதுகள்;
பற்பல பின்னூட்டங்கள்;
அதிகமான வாக்குகள்
-என்று இந்த ஓர் ஆண்டு மகிழ்வோடு
நிறைவடைந்துள்ளது.
  
   வேலைப் பளு காரணமாக அதிக எண்ணிக்கையில்
பதிவுகள் அளிக்க இயலவில்லை.இருப்பினும்
செப்டம்பர் 2009-ல் அதிகபட்சமாக 25 இடுகைகள்
பதிந்துள்ளேன்.
  
   இந்த ஓராண்டில் என்னிடம் வலைப்பூ ஆரம்பிப்பது
பற்றி சில அன்பர்கள் விவரம் கேட்டார்கள்.
அதில் சிலர் புதிதாய் வலைப்பூவும்
ஆரம்பித்துள்ளார்கள்.

    சமீபத்தில் நண்பர் இளம் தூயவன் பின்னூட்டத்தில்,
"என்ன நகைச்சுவைக்கு மாறிட்டீங்க?" என்று
கேட்டார். அதன் பிறகுதான் நானே கவனித்தேன்,
எனது லேபில்களை. அதில்,
பல்சுவை + கதம்பம் =7
செய்திக்குறிப்புக்கள் =6
கவிதைகள் =6
பாடல்கள் =7
சிந்தனைகள் =9
நகைச்சுவை =33
-என்று பட்டியல் இருக்கக் கண்டேன்.
ஆக, எனது இடுகைகளில் கிட்டத்தட்ட
பாதியளவில் நகைச்சுவை இடம்பெற்றிருக்கிறது
என்பதை காணமுடிந்தது.

   இனிவரும் காலங்களில் அடிக்கடி இடுகைகள்
எழுதிட நினைத்துள்ளேன், இறைவன் நாடினால்.

   இந்த மகிழ்வான தருணத்தில், எனது இடுகைளைப்
படித்து, பின்னூட்டமிட்டவர்கள், கருத்துரை
வழங்கியவர்கள், வாக்குகள் அளித்தவர்கள்,
விருதுகள் வழங்கியவர்கள், பின் தொடர்பவர்கள்,
மெயில்மூலமும் தொலைபேசிமூலமும் தொடர்புகொண்டு
கலந்துரையாடியவர்கள், இடுகைகளிற்கான
இணைப்பாகயிருந்து உதவிய அனைத்து
திரட்டிகள், கூகுள் நிறுவனம், தங்களது
வலைப்பூகளில் எனது வலைப்பூவிற்கு
இணைப்புக் கொடுத்துள்ளவர்கள், எனது
வலைப்பூ படித்து கருத்துரைகள் கூறிடும்
எனது அருமை நண்பர் முஹம்மது ஃபயாஸ்
மற்றும், மற்றும், மற்றும், மற்றும்
இரசித்து மகிழ்ந்த அன்பான உள்ளங்கள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த
நன்றிகளைக் கூறிக் கொள்கிறேன்.

   அடுத்து வரும் இடுகைகளில்
நான் பார்த்த(வை), படித்த(வை), கேட்ட(வை)
சில குறிப்புக்களை பதிவிடலாம் என்று
விருப்பம் கொண்டுள்ளேன்.   இதுவரை தொடர்ந்து வந்ததைப் போன்றே
இனியும் தொடர்ந்துவர இருக்கும் அனைத்து
நல்லிதயங்களுக்கும் எனது மனங்கனிந்த
நன்றிகள்!அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

29 comments:

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள் நிஜாம்

NIZAMUDEEN said...

//அருண் பிரசாத் said...
வாழ்த்துக்கள் நிஜாம்//

வாருங்கள் முதல்வ(ருகையாள)ரே!
வாழ்த்துக்களுக்கு நன்றி, அருண் பிரசாத்;
தொடர்ந்து வருக என அழைக்கிறேன்!

புதிய மனிதா said...

கலக்குங்கள் நிஜாம்....

NIZAMUDEEN said...

//புதிய மனிதா said...
கலக்குங்கள் நிஜாம்....//

நல்வரவு புதிய மனிதா!
கலக்க நான் தயார்! என்னுடன் கை
குலுக்கி உடன் வர நீங்களும் தயார்தானே!

சே.குமார் said...

வாழ்த்துக்கள் நிஜாம்.

NIZAMUDEEN said...

//சே.குமார் said...
வாழ்த்துக்கள் நிஜாம்.//

வாங்க (மன)சே.குமார்!
நன்றி!

சீமான்கனி said...

வாழ்த்துகள் நிஜாம் அண்ணா...ஆஹா உங்கள் வளை பக்கத்தை இவ்வளவு அலசி ஆராய்ந்து இருக்கிங்க கிரேட்...மேலும் பல பல இடுக்கைகள் பளபளன்னு வரட்டும்...

இளம் தூயவன் said...

உங்கள் இரண்டாம் ஆண்டு துவக்கம் இனிதே அமைய என் வாழ்த்துக்கள். உங்கள் வேலை பழுவிலும்
பல நல்ல விசயங்களை எழுத முயற்சிக்கும் உங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும்
தெரிவித்து கொள்கின்றேன்.

Ananthi said...

இனிய இரண்டாம் ஆண்டிற்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...!!
உங்களுக்கு பிடித்த விஷயங்கள் பகிர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..
தொடரட்டும் உங்கள் பயணம்.. :-)))

அப்துல் பாஸித் said...

இடுகை உலகில்(?)
இரண்டாம் ஆண்டை
இனிதாய் தொடங்கும்
இனிய சகோதரருக்கு
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...!

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் சகோதரரே.உங்கள் பதிவுலகைப்பற்றிய சுய அலசல் அருமை.நிறைய எழுதுங்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் நிஜாம்.

நாடோடி said...

இர‌ண்டாவ‌து வ‌ருட‌ ப‌திவுல‌க‌ ப‌ய‌ண‌ம் சிற‌ப்பாக‌ அமைய‌ வாழ்த்துக்க‌ள் நிஜாம்...

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்கள்...

மதுரை பாண்டி said...

இந்த ஆண்டும் மிக சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்..இன்னும் நிறைய எழுதுங்கள்

Abu Nadeem said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

NIZAMUDEEN said...

//சீமான்கனி said...
வாழ்த்துகள் நிஜாம் அண்ணா...ஆஹா உங்கள் வளை பக்கத்தை இவ்வளவு அலசி ஆராய்ந்து இருக்கிங்க கிரேட்...மேலும் பல பல இடுக்கைகள் பளபளன்னு வரட்டும்... //

பளபளான்னு நிச்சயம் வரும்;
நன்றி சீமான்கனி!

//இளம் தூயவன் said...
உங்கள் இரண்டாம் ஆண்டு துவக்கம் இனிதே அமைய என் வாழ்த்துக்கள். உங்கள் வேலை பழுவிலும்
பல நல்ல விசயங்களை எழுத முயற்சிக்கும் உங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும்
தெரிவித்து கொள்கின்றேன்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி இளம் தூயவன்!

NIZAMUDEEN said...

//Ananthi said...
இனிய இரண்டாம் ஆண்டிற்கு மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...!!
உங்களுக்கு பிடித்த விஷயங்கள் பகிர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..
தொடரட்டும் உங்கள் பயணம்.. :-))) //

உங்கள் ஆவலுக்கு நன்றி. எனது பயணத்தைச்
தொடரச் சொன்னதற்கு நன்றி Ananthi!

//அப்துல் பாஸித் said...
இடுகை உலகில்(?)
இரண்டாம் ஆண்டை
இனிதாய் தொடங்கும்
இனிய சகோதரருக்கு
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...! //

இப்படி
இனிய
வாழ்த்துச் சொன்ன அப்துல் பாஸித், நன்றி!

NIZAMUDEEN said...

//ஸாதிகா said...
வாழ்த்துக்கள் சகோதரரே.உங்கள் பதிவுலகைப்பற்றிய சுய அலசல் அருமை.நிறைய எழுதுங்கள். //

அருமை என்று பாராட்டிய சகோதரி ஸாதிகா, நன்றி!

//சைவகொத்துப்பரோட்டா said...
வாழ்த்துக்கள் நிஜாம்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி, சைவக்கொத்துப்பரோட்டா!

NIZAMUDEEN said...

//நாடோடி said...
இர‌ண்டாவ‌து வ‌ருட‌ ப‌திவுல‌க‌ ப‌ய‌ண‌ம் சிற‌ப்பாக‌ அமைய‌ வாழ்த்துக்க‌ள் நிஜாம்... //

வாழ்த்துக்களுக்கு நன்றி, நாடோடி!

//அஹமது இர்ஷாத் said...
வாழ்த்துக்கள்... //

வாழ்த்துக்களுக்கு நன்றி அஹமது இர்ஷாத்!

NIZAMUDEEN said...

//மதுரை பாண்டி said...
இந்த ஆண்டும் மிக சிறந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரை பாண்டி! தொடர்ந்து வாருங்கள்!

//வால்பையன் said...
வாழ்த்துக்கள் தல! //

வாழ்த்துக்களுக்கு நன்றி வால்பையன்!

NIZAMUDEEN said...

//ஜெய்லானி said...
வாழ்த்துக்கள்..இன்னும் நிறைய எழுதுங்கள்//

வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெய்லானி!

//Abu Nadeem said...
மனமார்ந்த வாழ்த்துக்கள்!! //

வாழ்த்துக்களுக்கு நன்றி Abu Nadeem!

r.v.saravanan said...

மன பூர்வமான வாழ்த்துக்கள் நிஜாம் தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறோம் உங்களை

ஒ.நூருல் அமீன் said...

இன்னும் பல்லாண்டுகள் பல்சுவை தகவல் தர வாழ்த்துக்கள் அதற்காக நகைச்சுவையை மிகவும் குறைத்திட வேண்டாம்.

nidurali said...

மிகவும் மகிழ்ச்சி .அன்புடன் வாழ்துக்கள்

NIZAMUDEEN said...

//r.v.saravanan said...
மன பூர்வமான வாழ்த்துக்கள் நிஜாம் தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறோம் உங்களை //

தொடர்ந்து வாருங்கள்! நன்றி சரவணன்!

//ஒ.நூருல் அமீன் said...
இன்னும் பல்லாண்டுகள் பல்சுவை தகவல் தர வாழ்த்துக்கள் அதற்காக நகைச்சுவையை மிகவும் குறைத்திட வேண்டாம்.//

நகைச்சுவைதான் உங்கள் அமோக விருப்பமா?
நகைச்சுவை அதிகமாக வரும்.
நன்றி நூருல் அமீன் அண்ணன்!

NIZAMUDEEN said...

//nidurali said...
மிகவும் மகிழ்ச்சி .அன்புடன் வாழ்துக்கள்//

மகிழ்சிக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி அண்ணன்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...