பத்து புரோட்டா பார்சல்!
பஸ் ஸ்டாண்ட் புத்தகக் கடையில் புத்தகங்கள்
புரட்டிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர்
வந்தார்.
"ரமேஷு! அரை கிலோ ஆட்டா மாவு பாக்கெட்
ஒன்னு கொடுங்க" என்று கேட்டார்.
கடைக்காரர் ரமேஷ் (விழித்துவிட்டு) : " ரமேஷு என்
பேருதான். ஆனால், ஆட்டா மாவு, அது அடுத்த மளிகைக் கடை"
அந்த வாடிக்கையாளர் : "ஓ... ஆட்டா மாவு வாங்கினால்
ஒரு குங்குமம் பத்திரிகை ஃப்ரீன்னாங்களே, ரேடியோவிலே! "
ரமேஷ்: "தம்பி! சாருக்கு ஒரு குங்குமமும் ஒரு
ஆட்டா பாக்கெட்டும் குடுப்பா. சார், ஆட்டா மாவு
கேட்டிங்க, கொடுத்திட்டேன். அடுத்த வாரம் வந்து,
'10 புரோட்டா பார்சல்; அப்படியே சட்னி-சாம்பார்'
அப்படினுலாம் ஆர்டர் பண்ணாதீங்க. அப்புறம்,
மளிகைக் கடையை சொன்னமாதிரி காளியாக்குடி,
ஆரியபவன்லாம் என்னாலக் காட்டிக்கிட்டிருக்க முடியாது.
ஆட்டா பாக்கெட்ட எடுத்து , குடுத்து கையெல்லாம்
பிசுபிசுன்னு மாவு. அதுக்கு பதிலா தண்ணி பாக்கெட்டாவது
ஃப்ரியா கொடுத்திருக்கலாம்"
அதே வாடிக்கையாளர்: "அட தண்ணி பாக்கெட் ஃப்ரியா?"
ரமேஷ்: "சார் அது அடுத்த வாரம், இப்ப நீங்க போங்க சார்!"
நண்பர் சின்னஞ்சிறு கோபு சார் வருகிறார்.
சி.சி.கோபு: "என்ன என்னமோ தண்ணி பாக்கெட், அப்படின்னு
பேசினாமாதிரி இருந்ததே?"
நான்: "ஏன் சார், ஆட்டா மாவுலாம் ஃபிரியா
கொடுக்கறாங்களே, புக்கு வாங்கும்போது நோட் கொடுக்கலாமே?"
சி.சி.கோபு: " நோட்? கரன்சி நோட்? அப்படின்னா
புக்கு அசசடிக்கிறவங்களே நோட்டும் அச்சடிச்சா
அந்த மாதிரி பத்து ரூபாய்க்கு புக்கு வாங்கும்போது
இருபது ருபாய் நோட்டு இலவசமாய் கொடுக்கலாம்.
இல்லேன்னா அவிங்க நோட்டு எல்லாம் வேட்டுத்தான்.
அப்புறம் நடு ரோட்டுக்குத்தான் வரணும். நல்ல
ஐடியாக் கொடுக்கறிங்களே,!!!"
நான்: "ரமேஷ்! எனக்கு ஒரு ஆட்டா மாவு பாக்கெட்
குடுங்க!"
ரமேஷ்: " 'அதிரடி' பத்திரிகை வாங்கினால்
உருட்டுக்கட்டையால ஒரு அடி ஃப்ரியாம்; வேணுமா சார்?"
நான்: " அதிரடி' பத்திரிகை மட்டும் கொடுங்க; ஃப்ரி
நீங்களே வெச்சிக்குங்க..."
வாடிக்கையாளர்: " ரமேஷ், அந்த ஃப்ரி தண்ணி பாட்டிலு..."
ரமேஷ்: "அடுத்த வாரம் நானே எடுத்து வைக்கிறேன் சார்,
நீங்க இன்னும் கிளம்பலையா ?
(எங்களிடம் திரும்பி) சார், அப்பா வர்றாங்க..."
சி.சி.கோபு & நான்: " சரி அப்ப வர்றோம் நாங்க "
அரட்டை தொடர(முடிய)வில்லையே என்று வருத்ததோடு
புறப்பட்டோம் அங்கிருந்து.
டிஸ்கி: பெயர் குறிப்பிடப்பட்ட பத்திரிகை தவிர ,
மற்ற உரையாடல்கள் யாவும் இடுகையின் சுவை
கூட்டலுககான உண்மையற்ற உவமைகள்தான் அன்றி,
யாரையும் சம்பந்தப்படுத்தவில்லை.
ஜிகினா - 3-ல் : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

19 comments:

.....ஹா,ஹா,ஹா,.... இதுவும் நல்லா இருக்குதுங்க.
//Chitra said...

Saturday, November 27, 2010 9:02:00 PM //
நன்றி, கருத்திற்கு நன்றி, சகோதரி!
சரக்கு இல்லாத புத்தகங்களை விக்க ஆட்டா மாவு வரைக்கும் வந்தச்சா...
உங்கள் இடைச்செருகல் வசனங்கள் அருமை.
நிஜாம். நகைச்சுவையில கலக்குறீங்க.
//சே.குமார் said...
சரக்கு இல்லாத புத்தகங்களை விக்க ஆட்டா மாவு வரைக்கும் வந்தச்சா...
உங்கள் இடைச்செருகல் வசனங்கள் அருமை.
Saturday, November 27, 2010 10:29:00 PM//
பத்திரிகைகள் இதுபோல் இலவசங்கள்
கொடுப்பதற்கு இரு காரணங்கள்.
1. தங்கள் பத்திரிகை விற்பனையைக் கூட்டுவது.
2. வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்
தயாரிப்புகளின் விற்பனையைக் கூட்டுவதற்காக
செய்கின்ற விளம்பரம். (விளம்பரக் கட்டணம்
மற்றும் சேவைக் கட்டணம் அந்நிறுவனங்களிடமிருந்து
வசூலிக்கப்படும்)
நன்றி, கருத்திற்கு நன்றி, சே.குமார்!
//சிநேகிதன் அக்பர் said...
நிஜாம். நகைச்சுவையில கலக்குறீங்க.
Saturday, November 27, 2010 11:32:00 PM//
வருக அக்பர்! கருத்திற்கு நன்றி சினேகிதரே!
nice one.... :)
//Premkumar Masilamani said...
nice one.... :)
Sunday, November 28, 2010 5:13:00 PM //
கருத்திற்கு நன்றி Premkumar Masilamani!
நல்ல கலக்கல் அதோடு நல்ல நக்கல் அந்த இடைச் சொருகல் சூப்பர்..நிஜாமுதீயண்ணா
//அன்புடன் மலிக்கா said...
நல்ல கலக்கல் அதோடு நல்ல நக்கல் அந்த இடைச் சொருகல் சூப்பர்..நிஜாமுதீயண்ணா
Sunday, November 28, 2010 6:38:00 PM //
[ma]வாங்க கவிஞரே! இரசித்து,
கருத்திட்டமைக்கு நன்றி![/ma]
நக்கல்,கலக்கல்..கடைசியில் படித்து விட்டு விக்கல்.
//ஸாதிகா said...
நக்கல்,கலக்கல்..கடைசியில் படித்து விட்டு விக்கல்.
Monday, November 29, 2010 11:28:00 PM //
வாங்க சகோதரி. படித்துவிட்டு சுவையாய்
கருத்து தந்த தங்களுக்கு, என் நன்றி நவிலல்!
ஹா,ஹா,இது நல்லா இருக்குது
Nice Nijam..
//r.v.saravanan said...
ஹா,ஹா,இது நல்லா இருக்குது //
கருத்திற்கு நன்றி, r.v.saravanan!
//அஹமது இர்ஷாத் said...
Nice Nijam.. //
கருத்திற்கு நன்றி, அஹமது இர்ஷாத் !
அப்ப... குங்குமத்தில இந்த இலவச அலப்பரை ரொம்ப ஓவரா இருந்தது.
இப்ப அதெல்லாம் இல்லென நினைக்கிறேன். ரமேஷும் நண்பர்தான் முன்பெல்லாம் அவரை அடிக்கடி சந்திப்பேன். சென்னைவந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது. சேர்ந்தார் போல் 5 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு போக முடியவில்லை. பொங்கலுக்கு மட்டும் லீவு எடுப்பதுண்டு.
தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.
//-தோழன் மபா, தமிழன் வீதி said...
அப்ப... குங்குமத்தில இந்த இலவச அலப்பரை ரொம்ப ஓவரா இருந்தது.
இப்ப அதெல்லாம் இல்லென நினைக்கிறேன். ரமேஷும் நண்பர்தான் முன்பெல்லாம் அவரை அடிக்கடி சந்திப்பேன். சென்னைவந்த பிறகு எல்லாமே மாறிவிட்டது. சேர்ந்தார் போல் 5 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு போக முடியவில்லை. பொங்கலுக்கு மட்டும் லீவு எடுப்பதுண்டு.
தொடர்ந்து தொடர்பில் இருப்போம்.//
வருக... நல்வரவு...
கருத்திற்கு நன்றி!
தொடர்பில் இருப்போம் தோழரே!
Post a Comment