...பல்சுவை பக்கம்!

.

Sunday, December 5, 2010

ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

விகடன் வலையோசையில் வந்த இந்தப் பதிவை 
இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

ஜிகினா 3 : குஷ்புவுக்கும் எனக்கும் என்ன  சம்பந்தம்?

சாவி அவர்களின் 'சாவி' வார இதழை 'அஷோக் 
உமா பப்ளிகேஷன்' வெளியிட்டுவந்தது. இன்னும்
திசைகள் (ஆசிரியர் மாலன்), மோனா (மாத நாவல்),
பூவாளி (மாத டைஜஸ்ட்) மற்றும் 'சுஜாதா' எனும்
மகளிர் இதழ் ஆகியனவற்றையும் இந்த பப்ளிகேஷன் 
வெளியிட்டது. 

பின்னாட்களில் இந்தப் பத்திரிகைகள் நிறுத்தப்பட்டாலும்
'பார்வதி பப்ளிகேஷன்ஸ்' நிறுவனத்தினர் 'சுஜாதா'
என்ற பெயரில் மாத நாவல் பத்திரிகையை ஆரம்பித்தனர்.
('பூந்தளிர்' சிறுவர் இதழை தமிழில் வெளியிட்டவர்களும் 
இவர்களே!)

இந்த சுஜாதா இதழில் கேள்வி பதில் பகுதியும் உண்டு.
சிறப்பான ஒரு கேள்விக்கு பரிசும் உண்டு. ஒரு முறை நான் எழுதிய  கேள்வியையும் அதன்
பதிலையும் பிரசுரித்து, சிறந்த கேள்வி என்று எனது
கேள்விக்கு பரிசும் அறிவித்து கேள்வியின்மேலேயே 
எனது பெயர், ஊரை முழு முகவரியுடன் பிரசுரித்திருந்தார்கள்
இந்த மாத நாவல் இதழ் வெளியாகி சுமார் நான்கு
அல்லது ஐந்து நாட்களுக்குப்பின் எனக்கு ஒரு
'இன்லான்ட் லெட்டர்' வந்தது. திருப்பத்தூரிலிருந்து
குணசேகரன் அனுப்பியிருந்தார் என்று ஃபிரம் அட்ரஸ்
பார்த்து தெரிந்துகொண்டேன். அப்படி ஒரு
ந(ண்)பரை எனக்குத் தெரியாதே என்ற யோசனையுடனே 
கடிதத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன். 

"அன்புள்ள குஷ்பு அவர்களுக்கு" என்று ஆரம்பமாக
எழுதியிருந்ததும் அதிர்ச்சியாகி மீண்டும் 'டூ அட்ரஸ்' 
பார்த்தேன். சரியாக என் முகவரிதான் எழுதப்பட்டிருந்தது.
'சரிதான்' என்று மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

அன்புள்ள குஷ்பு  அவர்களுக்கு,
எனது பெயர் பி.குணசேகரன்.
நான் உங்களது ரசிகன். உங்களது எல்லாப் படத்தையும்
பார்த்து விடுவேன். எந்தப் புதுப்படம் நீங்கள் நடித்து
வந்தாலும் பார்த்துவிடுவேன். முதல் நாளே
பார்த்துவிடுவேன். திரும்பத் திரும்பப் பார்ப்பேன். 
நீங்கள் அழகாயிருக்கிறீர்கள்.  நன்றாக நடிக்கிறீர்கள்.
உங்கள் பாட்டு கேசட் வாங்கி அடிக்கடி பாட்டு 
கேட்பேன். 

நான் சிவகங்கை பக்கத்தில் திருப்பத்தூர் என்ற ஊரில்
இருக்கிறேன். எட்டாம் வகுப்பு படிக்கிறேன். என் தம்பி
ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கும் உங்க 
படம்லாம் பிடிக்கும். எங்க அப்பா ரைஸ் மில் 
வச்சிருக்காரு. அவருக்கும் உங்க படம்லாம்
பிடிக்கும். அதனால், உங்க  ஃபோட்டோ ஒன்னு
கண்டிப்பா எனக்கு அனுப்பி வைக்கவும்.
இப்படிக்கு,
பி.குணசேகரன்.

இன்ட்லாந்து லெட்டர் உள்ளே உள்ள செய்தி எல்லாம் 
குஷ்புவுக்கு. மேலே அட்ரஸ் மட்டும் எனது பெயரும்
எனது முகவரியும்.  சிறிது யோசனை செய்த நான்
மறுபடியும் சுஜாதா இதழைத் தேடி எடுத்துப் பார்த்தேன்.

அட, முதல் கேள்வி நடிகை  குஷ்பு பற்றி ஒரு வாசகர்
எழுப்பிய கேள்வியும் அதற்கான பதிலும் முடிந்து 
அதைத் தொடர்ந்து எனது முழு முகவரி மற்றும்
கேள்வியும் பிரசுரமாகியிருந்தது. ஆக, என்
முகவரியைத்தான் குஷ்பு முகவரி என்று நினைத்து,
அந்தப் பையன் லெட்டரை  எனக்கு அனுப்பிவிட்டான்
என்று புரிந்து கொண்டேன். எனவே, அவனுக்கு பதில் எழுதினேன்.

   " தம்பி, அது குஷ்பு முகவரியில்லை;
   என்னுடைய முகவரி.   அதனால், நீ
   வேறு கடிதம் எழுதி குஷ்புவின் முகவரிக்கு
   அனுப்பு. 'நடிகை குஷ்பு, சென்னை ' என்று போட்டு அனுப்பு.
   அல்லது நானே விசாரித்து குஷ்புவின் முகவரி அடுத்த
   கடிதத்தில் எழுதி அனுப்புகிறேன்.  குஷ்பு ஃபோட்டோ
   என்னிடம் இல்லை; வேண்டுமெனில் என்னுடைய 
   ஃபோட்டோவை உனக்கு அனுப்பி  வைக்கிறேன்."
-என்று பதில் எழுதி 'நன்றாகப் படிக்கணும்' என
அறிவுரைகள் எழுதி, (மாட்டினாண்டா  ஓர் அடிமை!)
போஸ்ட் செய்துவிட்டு அதை மறந்தும்விட்டேன்.  

அடுத்த ஐந்தாறு தினங்களில் அந்தப் பையனிடமிருந்து
பதில் கடிதம் வந்தது.
"அன்பிற்கும் பரியாதைக்குமுரிய  அண்ணாவிற்கு,
(நல்ல பாசக்காரப்  பையனாயிருக்கானே!) 
வணக்கம்.  உங்க கடிதம் கிடைத்தது.
நடிகை குஷ்பு என்று நினைத்து உங்க முகவரிக்கு
கடிதம் அனுப்பிவிட்டேன். மன்னிக்கவும்.
(நல்ல பண்புள்ளவனாயிருக்கானே!)
குஷ்புவோட அட்ரஸ் அனுப்புறதா எழுதியிருந்தீங்க.
அப்படி குஷ்பு அட்ரஸ் அனுப்பாட்டியும் பரவாயில்லை. 
உங்க ஃபோட்டோவை தயவு செய்து அனுப்பிடாதீங்க.
இப்படிக்கு,
பி.குணசேகரன்."
(அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ....!.)

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

61 comments:

Unknown said...

அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ....!

Unknown said...

//உங்க ஃபோட்டோவை தயவு செய்து அனுப்பிடாதீங்க//
நீஙக் இல்ல பயங்கர கறுப்பா இருப்பீங்களா? கறுப்பா பயங்கரமா இருப்பீங்களா? .

Unknown said...

//உங்க ஃபோட்டோவை தயவு செய்து அனுப்பிடாதீங்க.
இன்ட்லியில் உங்க போட்டா பாத்தேன்.//

எம்.சி.யாரு மாதிரி சும்மா தகதகனு மின்னுறிங்க..
பய புள்ள பொறாமையில சொல்லுது..
நீங்க கவல படாதீக...

Unknown said...

அடுத்து நமீதா photo கேட்டு ஒரு letter வரும். அதுக்கு ஒரு நமீதா photo வை ஒழுங்கா அனுப்பி வைச்சிருங்க. அதில்லமா புத்திமதி சொல்றேன்னு letter அனுப்பாதிங்க

ராஜவம்சம் said...

இதை தான் சொந்த செலவுல சூனியம் வைப்பது என்பதா?

ஹா ஹா ஹா.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பாரத்... பாரதி... said...
அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ....! //


நீங்களும் அந்தப் பையனைத்தான் சொன்னீங்களா?
என்னைத்தான் சொல்றீஙளோன்னு பயந்துட்டேன்.

//பாரத்... பாரதி... said...
//உங்க ஃபோட்டோவை தயவு செய்து அனுப்பிடாதீங்க//
நீஙக் இல்ல பயங்கர கறுப்பா இருப்பீங்களா? கறுப்பா பயங்கரமா இருப்பீங்களா? . //

நெகட்டிவ் ஃபிலிம்ல பார்த்தா கறுப்பாகவும் இருப்பேன்;
பயங்கரமாகவும் இருப்பேன்.

//பாரத்... பாரதி... said...
"உங்க ஃபோட்டோவை தயவு செய்து அனுப்பிடாதீங்க."
இன்ட்லியில் உங்க போட்டா பாத்தேன்.

எம்.சி.யாரு மாதிரி சும்மா தகதகனு மின்னுறிங்க..
பய புள்ள பொறாமையில சொல்லுது..
நீங்க கவல படாதீக... //

நன்றிங்கோகோகோகோகோகோகோ....!
''எம்.சி.யாரு மாதிரி''
யாரு மாதிரி? யாரு மாதிரி?
எம்.சி.யாரு மாதிரி?
ஓஹோ...ஹோ...
எம்.ஜி.ஆர். மாதிரியா?
அப்ப சரி ஏதோ காரணத்தோடதான் ஏதோ
நடக்குதுன்னு புரியுது. என்னன்னுதான் புரியல...

கருத்துக்களுக்கு நன்றி பாரத்... பாரதி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Moorthy said...
அடுத்து நமீதா photo கேட்டு ஒரு letter வரும். அதுக்கு ஒரு நமீதா photo வை ஒழுங்கா அனுப்பி வைச்சிருங்க. அதில்லமா புத்திமதி சொல்றேன்னு letter அனுப்பாதிங்க //

சரிங்க, லட்டரு வந்தால் அனுப்பிடுறேன்.
''அதில்லமா புத்திமதி சொல்றேன்னு லெட்டெர் அனுப்பாதிங்க''
சரிங்க, நீங்க புத்திமதி சொன்னதுபோலவே செய்றேனுங்க.
அப்புறம், தங்கள் முதல் வருகைக்கும்
பின் தொடர்தலுக்கும் கருத்துரைக்கும்
மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ராஜவம்சம் said...
இதை தான் சொந்த செலவுல சூனியம் வைப்பது என்பதா?

ஹா ஹா ஹா. //

பரவாயில்லை; சொந்த செலவுல சூனியம் நான்
வச்சிக்கிட்டா உங்களுக்கு ''ஹா...ஹா...'வா?
சிரிச்சீங்களா நல்லா?
கருத்துரைக்கு நன்றி, தொடர்ந்து வாங்க!

GEETHA ACHAL said...

ஆஹா....இப்படி இருங்காங்களே...என்னத சொல்ல...

மரியாதைக்கு திரும்பவும் அந்த பையனுக்கு பதில் கடிதம் அனுப்பினால்...இப்படியா...நல்ல காமெடி உங்ளை வைத்து ...

mohamedali jinnah said...

நீங்க ஒரு தனி டைப் (எழுதுவதில்)
நீங்கள் குஸ்புவிற்கு ஒரு வைர மாலை அனுப்புங்கள். குஸ்புவினால்தான் இந்த கட்டுரை.

ஜெய்லானி said...

உங்களை ஒரு வேளை பய புள்ள முன்ன பின்ன பாத்துட்டானோ என்னவோ இந்த ஒரு வாரத்துல .. அதான் அப்படி ஒரு நடுக்கம் ஹா..ஹா.

ஹுஸைனம்மா said...

அட, இவ்வளவு நல்லவராவா இருப்பீங்க? (குஷ்பு) ஃபோட்டோ அனுப்பணும்னா, 200 ரூபாய் மணியார்டர் செய்யவும்னு பதில் எழுதிருக்கலாம்ல? :-))))

'பரிவை' சே.குமார் said...

சிவகெங்கை மாவட்டக்காரனுல்ல அப்படித்தான் இருப்பாங்க....

அஹா..... சிரிக்க முடியலை போங்க....

r.v.saravanan said...

ஹா ஹா ஹா ஹா

ஸாதிகா said...

சிரித்து முடியலே..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//GEETHA ACHAL said...
ஆஹா....இப்படி இருங்காங்களே...என்னத சொல்ல...

மரியாதைக்கு திரும்பவும் அந்த பையனுக்கு பதில் கடிதம் அனுப்பினால்...இப்படியா...நல்ல காமெடி உங்ளை வைத்து ... //

ஆமாங்க, என்னைய வைத்து காமெடி பண்றாய்ங்க,
ஐ அம் பாவம்-ங்க!
நன்றி சகோதரி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//nidurali said...
நீங்க ஒரு தனி டைப் (எழுதுவதில்)
நீங்கள் குஸ்புவிற்கு ஒரு வைர மாலை அனுப்புங்கள். குஸ்புவினால்தான் இந்த கட்டுரை.//

எனக்கு சுஜாதாவிடமிருந்து கிடைத்தது
சில ரூபாய்கள். ஆனால், குஷ்புவுக்கு
பூமாலைகூட இல்லீங்க, வைரமாலை
போடணுமாம்.
எனக்கு செலவு வைக்காமல் விடமாட்டிங்கபோல்!
கருத்துரைக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஜெய்லானி said...
உங்களை ஒரு வேளை பய புள்ள முன்ன பின்ன பாத்துட்டானோ என்னவோ இந்த ஒரு வாரத்துல .. அதான் அப்படி ஒரு நடுக்கம் ஹா..ஹா. //

வாங்க ஜெய்லானி, இங்கே வந்தும் உங்களுக்கு
சந்தேகமா? முன்ன, பின்ன, பக்கசைடுல,
சைடுபக்கத்துல எங்கியோ பார்த்திருப்பானோ?
இருக்கும் இருக்கும்.
நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஹுஸைனம்மா said...
அட, இவ்வளவு நல்லவராவா இருப்பீங்க? (குஷ்பு) ஃபோட்டோ அனுப்பணும்னா, 200 ரூபாய் மணியார்டர் செய்யவும்னு பதில் எழுதிருக்கலாம்ல? :-)))) //

அட வருமானத்திற்கு இப்படியொரு ஐடியா
இருக்கா, அடடா எனக்குத் தெரியாமல்போச்சே!
கருத்துக்கு நன்றி சகோ!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

// சே.குமார் said...
சிவகெங்கை மாவட்டக்காரனுல்ல அப்படித்தான் இருப்பாங்க....

அஹா..... சிரிக்க முடியலை போங்க.... //

சிவகங்கை... அப்படியா,
அப்ப எச்சரிக்கையாகத்தான் இருக்கோணும்.
(உங்களுக்கும் அதே ஊரா?!!!)
கருத்துக்கு நன்றி சகோ!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//r.v.saravanan said...
ஹா ஹா ஹா ஹா //

நான் நொந்த கதையை எழுதினேன்.
இதனால் மற்றவர்களை மகிழ்விக்க
முடிந்ததே என்று எனக்கு மகிழ்வு!
கருத்துக்கு நன்றி சகோ!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸாதிகா said...
சிரித்து முடியலே.. //

அப்படியா, எப்பத்தான் முடியும்?
கருத்துக்கு நன்றி சகோ!

அஹமது இர்ஷாத் said...

unmaiyila nalla sirichutten Nizam sariyaana Aaluthaan neenga..

i Love this post...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அஹமது இர்ஷாத் said...
unmaiyila nalla sirichutten Nizam sariyaana Aaluthaan neenga..

i Love this post... //

வாங்க, அஹமது இர்ஷாத்!
நல்லா சிரிச்சதுக்கும் என்னை சரியான
ஆளுதான் என்று ஒத்துக் கொண்டதற்கும் நன்றி!
I LOVE YOUR COMMENT!

Venkat Saran. said...

நல்ல வேல உங்க போட்டோ அவருக்கு அனுப்பி கோல கேசுல உள்ள போயிருபீங்க ..

தூயவனின் அடிமை said...

பாஸ் சொல்லவே இல்ல?, குஷ்பு இவ்வளவு நெருக்கம் என்று, கலக்கிட்டிங்க.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Venkat Saran. said...
நல்ல வேல உங்க போட்டோ அவருக்கு அனுப்பி கோல கேசுல உள்ள போயிருபீங்க ..//

நல்ல வேலை, வெங்கட் சரண்! கொலை
கேசில் உள்ள போகாமல் தப்பிச்சிட்டேன்.
நன்றி, தொடர்ந்து வாங்க!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//இளம் தூயவன் said...
பாஸ் சொல்லவே இல்ல?, குஷ்பு இவ்வளவு நெருக்கம் என்று, கலக்கிட்டிங்க.//

ஐய, நீங்க வேற, குழப்பத்தை உண்டு
பண்ணிறாதீங்க.
இதனால், சகலமானவர்களுக்கும்
தெரிவிப்பது என்னன்னா, 'எனக்கு
குஷ்புன்னா யாருன்னே தெரியாது!'

தாயகத்திலிருந்து திரும்பிவந்து
கமெண்ட் போட்டிருக்கும்
இளம்தூயவன் அவர்களுக்கு நன்றி!

Jahir Hussain said...

made me laugh....( i cannot type here in tamil).

Nizam... the 'detail' super star...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Jahir Hussain said...
made me laugh....( i cannot type here in tamil).

Nizam... the 'detail' super star...//

Thank you for your comment Jahir!

mohamed said...

nizam bhai ungkalukkum kushbu ukkum enna smbantham endru ivvalavu naala sollamal ippathan solli irukkireerkal, ippadi oru uravu irukkiratha ungkalukkulla?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//mohamed said...
nizam bhai ungkalukkum kushbu ukkum enna smbantham endru ivvalavu naala sollamal ippathan solli irukkireerkal, ippadi oru uravu irukkiratha ungkalukkulla? //

முஹம்மது... வாங்க!

இடுகையை முழுவதும் படிச்சிட்டீங்கள்ல?
அந்தப் பையனுக்கும் எனக்குமாச்சும் கடித
பேனா நட்பு இருந்தது. குஷ்புவுக்கும்
எனக்கும் எந்த தொடர்பும் இல்லீங்கோகோகோ...!

தலைப்பைன்னா "குஷ்புவுக்கும் எனக்கும்
எந்தத் தொடர்பும் இல்லீங்ங்ங்ங்ங்ங்க"ந்ன்னு
மாத்திறவா?

முஹம்மது உங்க கமெண்ட், ரொம்ப வம்புங்க!
இப்பவாச்சும் இந்த உண்மையை நம்புங்க!

நீங்க உங்க பிளாக்கில புதிய பதிவு எதுவும் போடலியா?

அந்நியன் 2 said...

உங்கள் பதிவு காமடியாக இருக்கு வரவேற்கிறேன்,அந்த தம்பி குஷ்பூவை நேரடியாக பார்த்திருந்தால் மயங்கியே விழுந்திருப்பான்,சினிமா நடிகைகளில் மேக்கப் இல்லாமல் அழகாக இருக்கும் தமிழ் நடிகைகள்.
சினேகா,ஜோதிகா,சாலினி,சுகாசனி,ரேவதி,நதியா,கூட்டி கழிச்சி பார்த்தால் பத்து பேருகூட தேராதுக.
நல்ல புத்திமதி சொல்லி இருக்கிர்கள் அந்த தம்பிக்கு. கடைசியா அவன் உங்களுக்கு வச்சுட்டானே......ஆ......

ஏழை வீட்டிற்கும் வாருங்கள் அண்ணே.

http://naattamain.blogspot.com/

சிநேகிதன் அக்பர் said...

சரியான காமெடி...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அந்நியன் 2 said...
உங்கள் பதிவு காமடியாக இருக்கு வரவேற்கிறேன்,அந்த தம்பி குஷ்பூவை நேரடியாக பார்த்திருந்தால் மயங்கியே விழுந்திருப்பான்,சினிமா நடிகைகளில் மேக்கப் இல்லாமல் அழகாக இருக்கும் தமிழ் நடிகைகள்.
சினேகா,ஜோதிகா,சாலினி,சுகாசனி,ரேவதி,நதியா,கூட்டி கழிச்சி பார்த்தால் பத்து பேருகூட தேராதுக.
நல்ல புத்திமதி சொல்லி இருக்கிர்கள் அந்த தம்பிக்கு. கடைசியா அவன் உங்களுக்கு வச்சுட்டானே......ஆ......

ஏழை வீட்டிற்கும் வாருங்கள் அண்ணே.

http://naattamain.blogspot.com/ //

வாங்க அந்நியன்(2) !
தமிழ் நடிகைகளின் அழகுபற்றிய கருத்து
சொன்னீர்கள். 'வச்சிட்டானே ஆ...' என்று
மறைத்தாலும் மறைவு என்னன்னுதான்
தெரியுதே!
அப்புறம் உங்க வீட்டிற்கும் வந்தேனே,
கருத்தும் தந்தேனே! வாழ்த்துக்கள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//சிநேகிதன் அக்பர் said...
சரியான காமெடி... //

வாங்க சினேகிதன்!
கருத்திற்கு நன்றி!

Mohamed Fayas said...

அருமை :-)

http://nayaspaarvayil.blogspot.com/

Nothing said...

Your blog is great
If you like, come back and visit mine: http://b2322858.blogspot.com/

Thank you!!Wang Han Pin(王翰彬)
From Taichung,Taiwan(台灣)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Nayas bangkok said...
அருமை :-)

http://nayaspaarvayil.blogspot.com/ //

வாங்க... Nayas bangkok !
கருத்துரைக்கு நன்றி! தொடர்ந்து வாருங்கள் சகோ!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//superstar racing said...
Your blog is great
If you like, come back and visit mine: http://b2322858.blogspot.com/

Thank you!!Wang Han Pin(王翰彬)
From Taichung,Taiwan(台灣) //

Thank you for your comment 'superstar racing!

Jaleela Kamal said...

ரொம்ப சீரியாசா படித்து வந்தேன்
கடைசியில் சிரிப்பு தாங்க முடியல,.

இதைhttp://allinalljaleela.blogspot.com இப்படி http://samaiyalattakaasam.blogspot.com மாற்றியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து கருத்திடவும்.

போளூர் தயாநிதி said...

parattugal nanbare nalla seyal ondrai seytheer indrulla ilainargal ippadiththan seerazhikintranar .nandri

ஆயிஷா அபுல். said...

சகோ,இன்று தான் உங்கள் பதிவை படித்தேன்.
காமெடி கலந்த பதிவு.எல்லோரையும் சிரிக்க
வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்'

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Jaleela Kamal said...
ரொம்ப சீரியாசா படித்து வந்தேன்
கடைசியில் சிரிப்பு தாங்க முடியல,.

இதைhttp://allinalljaleela.blogspot.com இப்படி http://samaiyalattakaasam.blogspot.com மாற்றியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து கருத்திடவும்.//

நன்றி சகோ! தங்கள் பிளாக் வந்து படிக்கிறேன்.
நேரமின்மையால் நிறைய படிக்க முடியவில்லை;
பதிவுகள் இட முடியவில்லை. மன்னிக்கவும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//polurdhayanithi said...
parattugal nanbare nalla seyal ondrai seytheer. indrulla ilainargal ippadiththan seerazhikintranar. nandri//


தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி, சகோ!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஆயிஷா அபுல் said...
சகோ,இன்று தான் உங்கள் பதிவை படித்தேன்.
காமெடி கலந்த பதிவு.எல்லோரையும் சிரிக்க
வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்'//

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி, சகோ!
தொடர்ந்து வாங்க...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..இப்படி எல்லாம் யோசிக்கலாமா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
அட..இப்படி எல்லாம் யோசிக்கலாமா? //

ஆச்சரியக் கருத்து தந்தமைக்கு நன்றி சார்.
தொடர்ந்து வாங்க!!!

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு "அவார்ட்" கொடுத் திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!! நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//எம் அப்துல் காதர் said...
உங்களுக்கு "அவார்ட்" கொடுத் திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!! நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html//


எனக்கு விருது வழங்கி சிறப்பித்த
தங்களுக்கு எனது மனமார்ந்த
நன்றிகள் சகோ!

Anbulla raji said...

ha ha........
intha kalathu chinna pasangata pesa mudiyala.....
athukku ithu oru nalla udharanam

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Anbulla raji said...
ha ha........
intha kalathu chinna pasangata pesa mudiyala.....
athukku ithu oru nalla udharanam//

வாங்க 'அன்புள்ள ராஜி'!
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி!!
தொடர்ந்து வாங்க!!!

Umesh Srinivasan said...

Mudivil vaai vittu sirithen.....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Umesh Srinivasan said...
Mudivil vaai vittu sirithen.....//

வாய் விட்டு சிரிச்சதுக்கும்
கருத்து தெரிவித்ததற்கும் நன்றி!
தொடர்ந்து வாங்க...

Unknown said...

Superb....Nizam,
romba nalla irukku,
ungalai yar ipadielam yosika solradhu..?
romba yosikaathinga - Marzuk -Bangkok

arul said...

nice post

அனைவருக்கும் அன்பு  said...

நகை விற்கிற விலைக்கு இப்படிதான் வாங்கறதா இருக்கு ( அருமையான சுவை மகிழ்ந்தேன் )

Haleem said...

Kushbu Pic vs. Nizam Pic is hilarious.

BTW, I forwarded your page to a friend from Nidur (living in North Carolina, USA now).

Warm wishes,

Haleem from New York.

keezhai.a.kathirvel said...

ha ha ha

Admin said...

ஹா...ஹா..ஹா...

(சாரி, இப்ப தான் படிச்சேன்!)

ரிஷபன் said...

அப்படி குஷ்பு அட்ரஸ் அனுப்பாட்டியும் பரவாயில்லை.
உங்க ஃபோட்டோவை தயவு செய்து அனுப்பிடாதீங்க.// Ha Ha ha :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...