ஜிகினா 1: விவ(கா)ரமான வியாபாரிகள்!
குமுதம் விலை 3 ரூபாய்! அடுத்தடுத்து 7 அல்லது 8
கடைகளில் விசாரித்துவிட்டேன். ஆனால் குமுதம்
கிடைக்கவில்லை. "வித்துப்போச்சு", "சரியாப்போச்சு" ,
தீர்ந்துப்போச்சு" என்றுதான் எல்லாக் கடைகளிலும்
சொன்னார்களே அன்றி, புத்தகம் எங்குமே கிடைக்கவில்லை.
அடுத்ததாய் ஒரு கடையில் விசாரித்துவிட்டு, கிடைக்காமல்
யோசனையாய் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியே
வந்துகொண்டிருந்த நண்பன், "என்ன நிஜாம் இங்கே
யோசனையா நிக்கிறமாதிரி தெரியுதே" என்று கேட்டான்.
அவனிடம் விவரத்தை சொன்னேன். அந்தக் கடையைத்
திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு, "கடைக்காரர்கிட்டப்
போயி 'குமுதம் மட்டும் தாங்க' என்று கேள்" என்றான்.
நான் அவனை ஙே என்று விழித்துப் பார்த்தேன்.
"போ! மறுபடியும் போய் நான் சொன்னமாதிரி கேள்" என்றான்.
நான் தயக்கமாய் கடைக்காரரிடம் சென்று, "குமுதம்
மட்டும் கொடுங்க" என்று கேட்டேன். அலமாரி
உள்ளிருந்து அடுக்கியிருந்த குமுதத்தில் ஒன்று
எடுத்து என்னிடம் கொடுத்தார்.
அட! வாங்கிப் பார்த்தேன். 'இந்த இதழுடன் விக்ஸ்
வேபோரப் ஒன்று இலவசம்' என்று அட்டையில்
போட்டிருந்ததைப் பார்த்து கடைக்காரரிடம், 'அண்ணே..."
என்று ஆரம்பித்தேன். "தம்பி, குமுதம் மட்டும் கேட்டிங்க.
வாங்கிட்டிங்கள்ல? போய்ட்டேயிருங்க!" என்று விரட்டினார்
அவர்.
நண்பன் விளக்கம் சொன்னான்.
"குமுதம் 3 ரூபாய். விக்ஸ் வேபோரப்பும் 3 ரூபாய்! குமுதம்
வித்தா 30 பைசா கிடைக்கும். விக்ஸ் டப்பா ஃப்ரியாக்
கொடுக்கணும். அதனால் குமுதத்தை உள்ள்ள்ளே
எடுத்து ஒளிச்சிட்டு, விக்ஸை எடுத்து ஷோகேஸ்ல
வரிசையா அடுக்கிட்டாங்க. குமுதம்
வித்துப்போயிடுச்சின்னு சொல்லிடுறாங்க. சிலபேரு
குமுதம் மட்டும் கொடுன்னு கேக்குறவங்களுக்கு அதை
மட்டும் கொடுத்திடறாங்க. விக்ஸ் வேபோரப்பை ஸ்டாக்
பண்ணிட்டு, அதை 3 ரூபாய்க்கு வித்திடுவாங்க. 2 ரூபாய்
70 பைசா அடக்கவிலை குமுதத்தவச்சி 6 ரூபாய்
சம்பாதிக்கிறாங்க. இதுதான் விஷயம்." இப்படி நண்பன்
சொன்னதைக் கேட்டு அசந்துபோனேன். (122% இலாபம்.)
அடுத்த முறை இலவசத்தைக் கொடுக்கும்போது,
பொருளைத் தனியாகக் கொடுக்காமல்,
பாலித்தீன் கவரில் குமுததையும் இலவசப்
பொருளையும் போட்டு பேக் செய்து கொடுத்து
விட்டது குமுதம். இப்போது வியாபாரிகள்
பாலித்தீன் கவரிலிருந்து எடுத்து குமுததை
ஒளித்து வைக்கவுமில்லை; இலவசப்
பொருளை ஷோகேசில் அடுக்கவுமில்லை.
காரணங்கள்:
1. குமுதத்தின் விலையோடு ஒப்பிடுகையில்
இலவசப் பொருளின் விலை மிகவும் மலிவு.
2. முன் நடந்த சம்பவத்தின்போதே கடைக்காரர்களை
குமுதம் ஏஜெண்ட் , இனி இதுபோல்
செய்யக்கூடாதென எச்சரிக்கை செய்துவிட்டார்.
பரிதாப வியாபாரிகள்!!!
ஜிகினா 2 -ல் '10 புரோட்டா பார்சல்!'
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
26 comments:
விவகாரமான வியாபாரிகள் தான்
//r.v.saravanan said...
விவகாரமான வியாபாரிகள் தான்//
கும்பகோணத்து வியாபாரிகள் இவ்வளவு
விவரமானவர்களா?
கருத்திற்கு நன்றி சரவணன்!
இப்படி ஏமாந்தது எத்தனை முறை!!
கடை ...சாரி, ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!!
இதே மாதிரிதான் சில காலம் முன் தினகரன்(சரியான பேரா ஞாபகமில்லே) மீண்டும் சூடு பிடித்து எறுபோது நடந்தது. எல்லா நாளும் இலவசம் என்று போட்டதால அந்த பேப்பரை படிக்கிறாங்களோ இல்லியோ இலவசத்துக்காக வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுல அந்த பேப்பரை டபிள் ரேட்டுல வித்தாலும் வாங்க ஆளு இருந்துச்சு. எல்லாம் சில நேரத்திக்கு மட்டும்தான். அப்புறம் மறுபடியும் பழைய நிலைதான் :(
நல்லா விக்கிறாங்கே ணே...பார்த்துணே சூதனமா இருங்க...
விவகாரமான வியாபாரிகள்.
நல்லாத்தான் யோசிக்கிறாய்ங்க.
//ஸாதிகா said...
இப்படி ஏமாந்தது எத்தனை முறை!!//
பல அனுபவங்களில் இதுவும் ஒன்று!
கருத்திற்கு நன்றி சகோதரி!
//Chitra said...
கடை ...சாரி, ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!! //
இதற்காக கடைபோட்டு யோசிக்கத் தேவையில்லை.
கடைபோட்டாலே இப்படி யோசிக்கத் தோணுமோ?
கருத்திற்கு நன்றி வெட்டிப்பேச்சு சகோதரி!
//அன்னு said...
இதே மாதிரிதான் சில காலம் முன் தினகரன்(சரியான பேரா ஞாபகமில்லே) மீண்டும் சூடு பிடித்து எறுபோது நடந்தது. எல்லா நாளும் இலவசம் என்று போட்டதால அந்த பேப்பரை படிக்கிறாங்களோ இல்லியோ இலவசத்துக்காக வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுல அந்த பேப்பரை டபிள் ரேட்டுல வித்தாலும் வாங்க ஆளு இருந்துச்சு. எல்லாம் சில நேரத்திக்கு மட்டும்தான். அப்புறம் மறுபடியும் பழைய நிலைதான் :( //
தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி
சகோதரி!
// சீமான்கனி said...
நல்லா விக்கிறாங்கே ணே...பார்த்துணே சூதனமா இருங்க... //
ஆமாமாம், புதுப்புது டெக்னிக்கா விக்கிறாங்கே...
தங்கள் ஆலோசனைக்கு நன்றி சீமான்கனி!
//சே.குமார் said...
விவகாரமான வியாபாரிகள். //
உண்மைதான் சே.குமார்!
தங்கள் கருத்திற்க்கு நன்றி!
//மின்மினி RS said...
நல்லாத்தான் யோசிக்கிறாய்ங்க. //
நீண்ட நாட்களுக்குப் பின்...
வந்து கருத்து சொன்னதற்கு நன்றி மின்மினி!
இந்த மாதிரி இன்னமும் நடக்குதுங்க நிஜாம்..
brilliant minds.... Ambani mathiri varuvaanga antha kadaikaarar....
//அஹமது இர்ஷாத் said...
இந்த மாதிரி இன்னமும் நடக்குதுங்க நிஜாம்..//
இந்த மாதிரி இன்னமும் செய்வது வியாபார தந்திரம்
எனலாம்; ஆனால் நேர்மை அல்லவே!
கருத்திற்கு நன்றி அஹமது இர்ஷாத்!
//Premkumar Masilamani said...
brilliant minds.... Ambani mathiri varuvaanga antha kadaikaarar.... //
வாங்க பிரேம்குமார்! அம்பானி & சன்ஸ் இந்தமாதிரிதான்
செஞ்சு (முன்னுக்கு) வந்தாங்களா ? எனக்குத் தெரியாதே!
(சும்மா தமாஷுக்குக் கேட்டேன்.) கருத்திற்கு நன்றி!
அரபா நோன்பு சிறக்க வாழ்த்துக்கள்.
பெருநாள் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்,
வெகு அருமை!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர்.
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள்
நல் வாழ்த்துகள் NIZAMUDEEN
//பாரத்... பாரதி... said...
அரபா நோன்பு சிறக்க வாழ்த்துக்கள்.
பெருநாள் வாழ்த்துக்கள். //
பெருநாள் வாழ்த்துக்களுக்காக, தங்களுக்கு
எனது மனங்கனிந்த நன்றி, பாரத்... பாரதி...!
//Mohamed Ayoub K said...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள், //
தங்களுக்கும் தங்கள் இல்ல உறுப்பினர்களுக்கும்
எனது பெருநாள் வாழ்த்துக்கள் Ayoub!
//ஆர்.ராமமூர்த்தி said...
வெகு அருமை!
அன்புடன்,
ஆர்.ஆர்.ஆர். //
நீண்ட இடைவெளிக்குப் பின் தங்கள்
பாராட்டுக் கருத்திற்கு நன்றி சார்!
தொடர்ந்து வாங்க...!
//r.v.saravanan said...
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள்
நல் வாழ்த்துகள் NIZAMUDEEN //
பெருநாள் வாழ்த்துக்களுக்காக, தங்களுக்கு
எனது மனங்கனிந்த நன்றி r.v.saravanan!
Post a Comment