...பல்சுவை பக்கம்!

.

Tuesday, January 10, 2012

ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!

ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!

விகடன் வலையோசையில் வந்த இந்தப் பதிவை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
நண்பர் என்னிடம் சொன்னார்: " எப்பொழுதும் என் சட்டைப்
பையில் காந்தி படம் இருக்கும். மறந்திட்டு வெளியில்
வந்திட்டாலும் திரும்ப போய் எடுத்திட்டுத்தான் வருவேன்"

நான் கேட்டேன்: "இப்பவும் பாக்கெட்ல இருக்கா?
காட்ட முடியுமா?"

நண்பர் சொன்னார் : "காட்டுவேன்; ஆனால் கையில
தர மாட்டேன்"

நான் சொன்னேன்: "காட்டுங்க"

நண்பர் எடுத்துக் காட்டினார், ஐநூறு ரூபாய் தாளை.
அதில் இருந்த காந்தி என்னைப் பார்த்து சிரித்தார்.
******************************************************

நண்பர் நிலக் கடலை அடிக்கடி சாப்பிடுவார்.
"காந்திஜிக்கு நிலக்கடலைப் பிடிக்கும்" என்பார்.
ஐந்து ரூபாய்க்கு அல்லது பத்து ரூபாய்க்கு
நிலக்கடலைப் பொட்டலம் சாப்பிட வாங்கினால்
முதலில் பெரிதாக, நல்ல நிலக்கடலை மூன்று,
நான்கினை தனியாக எடுத்து வைத்துக் கொள்வார்.
காரணம் கேட்டேன்.

நண்பர் சொன்னார் : "சாப்பிட்டு முடிக்கும்போது
கடைசி கடலை துவர்ப்பு உள்ள வீணாப் போன
கடலைதான் வாயில வருது. அதனால சாப்பிட்டு
முடித்ததும் இந்த நல்ல கடலையை, கடைசியாய்
சாப்பிடுவேன்"
***************************************************

காந்தி படம் பார்த்துவிட்டு வந்து சொன்னார்:
"காந்தி படம் எவ்வளவு அருமை தெரியுமா?
ரிச்சர்ட் அட்டன்பரோ சூப்பரா டைரக்ட்
பண்ணிருக்காரு. பெண் கிங்க்ஸ்லி
தத்ரூபமா நடிச்சிருக்காரு." என்று சொன்னார்.
'நான் மகான் அல்ல' படமும் பார்த்தார். (பழசு)
நான் மகான் அல்ல (புதுசு), மகான் கணக்கு
இவைகள் பார்த்தாரா என்று கேட்கவில்லை நான்.
*****************************************************

"நிலக்கடலையும் ஆட்டுப் பாலும் காந்திக்குப்
பிடிக்கும்" என்றார்.

"ஆட்டுப் பால் நீங்க குடிப்பீங்களா?" என்று நான்
கேட்டேன்.

"ஆட்டுப் பால் என்பதை நான் இரண்டாகப்
பிரித்து கொள்வேன்" என்றார்.

"எப்படி?" நான் கேட்டேன்.

"ஆடு என்பது தனி; பால் என்பது தனி. அதனால
பால் வந்து மாட்டுப் பால் குடிப்பேன். கறி வந்து
ஆட்டுக் கறி சாப்பிடுவேன்" என்றார்.
*****************************************************

வித்தியாசமான பழக்கம் நண்பரிடத்தில்.
ஒரு கிலோ நிலக்கடலை, ஒரு கிலோ பட்டாணி,
ஒரு கிலோ உப்புக் கடலை வாங்கி, ஒரு பெரிய
பெட் ஜாரில் ஒன்றாகக் கொட்டி, கலந்து
சாப்பிடுவார். நண்பர்கள் நாங்கள் அவர்
வீட்டிற்கு சென்றால் அந்த டப்பாவை எடுத்து
வந்து விடுவார். நாங்கள் மூன்று கடலையையும்
சேர்த்து சாப்பிடுவோம். சுவையாகவே இருக்கும்.

ஆனால் அவர் மட்டும் நிலக் கடலையை மட்டும்
தேர்ந்து எடுத்து சாப்பிடுவார். நாங்கள் காரணம்
கேட்டோம்.

"காந்திஜிக்குத் தான் முதல் மரியாதை" என்றார்.
***************************************************

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி
கட்சிக்கு வாக்களித்தார். அதை எங்களிடம் சொன்னார்.

நாங்கள் காரணம் கேட்கும்போது, "அது (சோனியா)
காந்தியோட கட்சி" என்று சொல்லுவாரோ என்பதால்
நாங்கள் கேட்கவேயில்லை.
*******************************************************
(பி.கு.: ஜனவரி 30. நாதுராம் கோட்சேவினால்,
காந்திஜி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள்.)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

21 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒரே காந்தி ஜோக்கா இருக்கு....இருந்தாலும் நல்லா இருக்கு

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ரஹீம் கஸாலி said...

ஒரே காந்தி ஜோக்கா இருக்கு....இருந்தாலும் நல்லா இருக்கு//

வருகைக்கு, கருத்துக்கு நன்றி!

Riyas said...

நல்லாயிருக்குங்க

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@Riyas

வருகைக்கு, கருத்துக்கு நன்றி!

ஜெய்லானி said...

உங்க நண்பர் வெளியே போகும் போது எப்படி போகிறார்...????? சட்டை போட்டா போடாமலா..???

கையில கைத்தடி இருக்கா...???

நாங்களும் கேட்போமுல்ல ஹி...ஹி.... :-))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ஜெய்லானி

ஹே! என்னா ஒரு வில்லத்தனம்?

நண்பர் சட்டை போட்டு, பாக்கெட்ல காந்தி படத்தை வச்சிக்கிட்டுதான் போகிறார்.

வருகைக்கு நன்றி!

E.K.SANTHANAM said...

உங்க நண்பரின் கேரக்டர் இன்ட்ரஸ்டாக இருந்தது.

சென்னை பித்தன் said...

//"ஆடு என்பது தனி; பால் என்பது தனி. அதனால
பால் வந்து மாட்டுப் பால் குடிப்பேன். கறி வந்து
ஆட்டுக் கறி சாப்பிடுவேன்" என்றார்.//
சரியான காந்தீய வாதிதான்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@E.K.SANTHANAM

இன்ட்ரஸ்ட்தான்.

கருத்துக்கு நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@சென்னை பித்தன்

காந்தியவாதிதான்னு நானும் நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாங்க சார்.

ஹாலிவுட்ரசிகன் said...

நல்லாயிருக்கு பதிவு. நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ஹாலிவுட்ரசிகன்

வருகைக்கு, கருத்திற்கு நன்றி! தொடர்ந்து வாங்க.

கலையன்பன் said...

ஹா.. ஹா.. ஹா.. (சிரிப்பு)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@கலையன்பன்

வருகைக்கு
கருத்திற்கு
சிரிப்பிற்கு
நன்றி!

ம.தி.சுதா said...

ஆட்டுப்பால் நகைச்சுவை ரொம்பப் பிடித்தது..

கடலை காந்திக்கு பிடிக்கும் என்பதற்காக இப்படியா?

அருமைங்க..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ம.தி.சுதா

இரசித்ததற்கு, கருத்துக்கு நன்றி!

mayiladuthurai rajasekar said...

சேதுராம் கோட்சே என்பவர் யார்? காந்தியைகொன்றவர்
நாதுராம் கோட்சே என்பதே சரியான தகவல் நிஜாம்.
மற்றபடி நகைச்சுவை மிக மிக ந்ன்றாக உள்ளது.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ mayiladuthurai rajasekar

திருத்திவிட்டேன்; சுட்டியமைக்கு நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ VANJOOR

அழைப்பிற்கு நன்றி!

ஹுஸைனம்மா said...

ஜோக்குகள் நல்லா இருக்கு. ஆனா, காந்திக்கு இதிலே சம்பந்தம் இருக்க மாதிரி தெரியலை. :-)))))

ஒருவேளை, அவரவர் விருப்பப்படி கொள்கைகள் வளைக்கப்படுகின்றன என்பதுதான் இந்தப் பதிவின் நீதியோ? :-))))))

Seeni said...

jokku nallaa irukku!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...