...பல்சுவை பக்கம்!

.

Tuesday, December 31, 2013

குண்டப்பா; மண்டப்பா (10) #118

2013 நிறைவுப் பதிவு!
குண்டப்பா; மண்டப்பா 10

சில மாதங்களுக்கு முன் மண்டப்பாவை நோஸ்கட் செய்துவிட்டார்  குண்டப்பா. அவரை எப்படியாவது பழி வாங்கிடணும் என்று காத்திருந்தார் மண்டப்பா.

ஒரு நாள். அந்த ஊரில் ஒரு சிறப்பான நாள் ஒன்று வந்தது. அதாவது மிகப் பெரும் கண்காட்சி, சந்தை மற்றும் பல்வகை விளையாட்டுக்கள் - போட்டிகள் என்று ஊரே பரபரப்பாகயிருந்தது.

குண்டப்பாவும் மண்டப்பாவும் வேடிக்கை பார்க்க போனார்கள். அப்போது குண்டப்பாவுக்குத் தெரியாமல் பாட்டுப் போட்டியில் குண்டப்பாவின் பெயரைக் கொடுத்துவிட்டு வந்துவிட்ட மண்டப்பா எதுவும் அறியாதவர்போல் குண்டப்பாவுடன் சேர்ந்துகொண்டார்.



திடீரென்று "பாட்டுப் போட்டியில் அடுத்து பாடவருகிறார் குண்டப்பா!" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் மைக்கில் அறிவிப்பு செய்பவர். குண்டப்பா முழி, முழியென்று விழிக்கவும் மண்டப்பாவோ குண்டப்பாவை நைசாகப் பேசி மேடைக்குக் கொண்டு சென்றுவிட்டார். வேறு வழியில்லாத நிலையில் (வழியைத்தான் மண்டப்பா அடைத்துக் கொண்டு நிற்கிறாரே!)  மேடையில் ஏறி ஏதோ ஒரு பாட்டையும் பாட ஆரம்பித்துவிட்டார் குண்டப்பா.

எப்படியோ பாடி முடித்து குண்டப்பா மேடையிலிருந்து இறங்குவதற்குள் மண்டப்பா, "ஒன்ஸ் மோர்!" என்று சப்தமாய் குரல் கொடுத்தார்.

மண்டப்பா குரல் விட்டதைத் தொடர்ந்து, மற்ற பார்வையாளர்களும் அவ்வாறே  கத்த ஆரம்பித்துவிட்டனர். இதை எதிர்பாக்கவில்லை குண்டப்பா. 'நம்ம பாட்டை இவ்வளவு பேர் விரும்பிக் கேட்கும்போது மறுபடியும் பாடுவோமே!' என்று மகிழ்ந்து அந்தப் பாட்டை திரும்பவும் பாடினார் குண்டப்பா.

பாடி முடிக்கவும் மறுபடியும் "ஒன்ஸ் மோர்" என்று குரல் விட்டனர் மண்டப்பாவும் மற்றவர்களும். "அடடே" என்று நினைத்துக் கொண்டு மறுபடியும் பாடினார் குண்டப்பா.


பாடி முடித்ததும் இப்பவும் அனைவரும் "ஒன்ஸ் மோர்" என்றனர். குண்டப்பா சலிப்புற்றவராக, "ஏன் இப்படி திரும்பத் திரும்பப் பாடச் சொல்றீங்க?" என்று கேட்டார். 


"நீங்க அந்தப் பாட்டை ஒழுங்காப் பாடாதவரைக்கும் உங்கள விடமாட்டோம்" என்று நக்கலாகச் சொன்னார் மண்டப்பா.

அதைக் கேட்டு மனம் நொந்துபோய், மண்டப்பாவைத் திட்டிக் கொண்டே வீடு திரும்பினார் குண்டப்பா.
.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

2 comments:

Unknown said...

அண்ணே உங்கள் தளத்துக்கு நான் ஒரு புதிய கனி.
உங்கள் தளம் என் மனம் கவர்ந்து விட்டது .
இனி உங்கள் கருத்தக்கள் பகுதியில்
என் தொல்லையும் பின் தொடரும்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Vkkumar Kumar said...
அண்ணே உங்கள் தளத்துக்கு நான் ஒரு புதிய கனி.
உங்கள் தளம் என் மனம் கவர்ந்து விட்டது .
இனி உங்கள் கருத்தக்கள் பகுதியில்
என் தொல்லையும் பின் தொடரும்//


நகைச்சுவையான பின்னூட்டத்திற்கு நன்றி திரு.குமார்!

மேலும் தொடர்வதாகச் சொல்லும் தொல்லை...
வரவேகிறேன் அதை.
ஏனெனில் அது அன்புத் தொல்லை;
ஆனந்தத் தொல்லை.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...