...பல்சுவை பக்கம்!

.

Wednesday, January 1, 2014

அம்மா சொன்ன கதை! #122

புத்தாண்டுப் பதிவு!

ஒரு நாள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சோற்றில் கருப்பு நிற அரிசி ஒன்று இருந்தது. அதைக் கையில் எடுத்து சாப்பிடுமுன் சில சிந்தனைகள் தோன்றின.


இக்காலங்களில் நவீன அரிசி ஆலைகளில் இருந்து சாக்கு மற்றும் துணி பைகளில் விற்பனைக்கு வெளிவரும் அரிசி மூட்டையில் மேல் பாகம் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மட்டும்தான் இருக்கும். முன்பெல்லாம் அரிசியுடனே ஒரு சில நெல்மணிகள், சிறிய கற்கள், சிறு துண்டு களிமண் கட்டிகள், முழுமைபெறாத அரிசி பதர்கள், சில பல வைக்கோல் சக்கைகள் இவற்றோடு கருப்பு நிற அரிசிகளும் இரண்டற கலந்து கட்டி வரும். இந்த கருநிற அரிசி பதர் அல்ல; அரிசியேதான்.

சிறு வயதில் ஒருநாள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது இதேபோல்தான் சாப்பாட்டில் இருந்த ஒரு கருப்பு சோற்றினை
வெளியில் எடுத்துப் போட எத்தனிக்கும்போது, எங்கள் அம்மா சொன்னார்கள்:

"இந்த கருப்பு சோறு சாப்பிடு; தூக்கி வெளியில் போடக்கூடாது. ஏனென்றால் இந்தக் கருப்பு சோறுக்கு ஒரு கதை இருக்கிறது." என்று சொல்லிவிட்டு கதையையும் சொன்னார்கள்.


ஒரு நாள் ஒரு கருப்பு அரிசி (சோறு) கடவுளிடம் கேட்டதாம், "கடவுளே, மற்ற அரிசியெல்லாம் வெள்ளையாக இருக்கின்றன. என்னைமட்டும் கன்னங்கரேல் என்று கருப்பாகப் படைத்துவிட்டாயே?" என்று.

"கருப்பரசியே! நீ கருப்பாய் இருப்பதற்காக கவலைப்பட்டு, மனம் ஏங்கவேண்டாம். நீ கருப்பாக இருந்தாலும் உன்னை சமைத்துப் பரிமாறும் தட்டில் கருப்பு சோறாக இருக்கும்போது, உன்னைப் பார்ப்பவர்கள் உன்னைத்தான் முதலில் எடுத்துச் சாப்பிடுவார்கள். அதனால் உனக்கு வருத்தத்திற்கு பதில் மகிழ்ச்சிதான் ஏற்படும். சந்தோஷமாகப் போ!" என்று பதில் தந்து அந்த கருப்பு அரிசியை வாழ்த்தி அனுப்பினாராம் கடவுள். அன்றிலிருந்து, சாப்பாட்டில் கருப்பு அரிசி இருந்தால் முதலில் அதையே நாம் சாப்பிட வேண்டும்.

இவ்வாறாக எங்கள் அம்மா சொன்னதும் நான் உடனே அந்த கருப்பு அரிசியைக் கீழே போடாமல் உடனே சாப்பிட்டு விட்டேன்.

இதுதான் அம்மா சொன்ன கதை; எங்கள் அம்மா சொன்ன கதை.அன்பன்,

அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

.
படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

50 comments:

Seeni said...

Ada..

Pakirvukku Nantri Sako

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

துரை செல்வராஜூ said...

வாழ்க வளமுடன்!..
வளர்க நலமுடன்!..
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@Seeni...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@கரந்தை ஜெயக்குமார்...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@துரை செல்வராஜூ...

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா!

தங்கம் பழனி said...

'கருப்பு சோறு' கதை நன்றாக இருந்தது... கல்லும் மண்ணும் கலந்து கட்டி வந்தாலும் அக்கால அரசி சோறு சாப்பிட ருசியாய் இருந்தது.. இப்போதெல்லாம் அதை பாலிஸ் செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி வெறும் சக்கையான அரிசியையே தருகிறார்கள்... என்ன செய்ய?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@தங்கம் பழனி...

வருகைக்கும் தங்கள் அருமையான கருத்தைப் பதிவு செய்ததற்கும் தங்களுக்கு நன்றி!

சே. குமார் said...

அம்மா சொன்ன கதை அருமை சகோதரா....

Anonymous said...

வணக்கம்
சிறப்பாக உள்ளது பதிவு.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Rupan com said...

வணக்கம்
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@சே. குமார் ...

அம்மா சொன்ன கதையைப் பாராட்டியமைக்கு நன்றி சகோதரரே!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ 2008rupan ...

பாராட்டியற்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரரே!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@Rupan com ...

தமிழ்மண வாக்கிற்காக தங்களுக்கு நன்றி சகோதரரே!

Sivakumar baskar said...

பகுத்தறிவித்தமைக்கு மிக்க நன்றி சகோதரா ,

Sivakumar baskar said...

மிக மிக அருமையாக இருந்தது

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Sivakumar baskar said...
பகுத்தறிவித்தமைக்கு மிக்க நன்றி சகோதரா ,//

கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரா!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//Sivakumar baskar said...
மிக மிக அருமையாக இருந்தது//

மீண்டும் தங்கள் பாராட்டிற்கு...
மீண்டும் என் நன்றிகள்!!!

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்லதொரு சிறு கதையிது. கருப்பாக இருந்தாலும் பல வெள்ளை அரிசிகள் இருக்குமிடத்தில் கருப்பு அரிசி தனித்து தெரிகிறது.
நமது தனித்த அடையாளமே நம்மை பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும்.

நல்லதொரு பதிவு!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@-தோழன் மபா, தமிழன் வீதி ...

தனித்துவம் பற்றியதோர் அழகான கருத்தினையும் தெரிவித்தீர்கள். நன்றி நண்பரே!

Chellappa Yagyaswamy said...

என்ன நண்பரே, பத்து நாட்களுக்கு மேலாக புதிய பதிவுகளைக் காணோம்?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@Chellappa Yagyaswamy ...

ஐயா...
தங்கள் ஆர்வத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
புதிய பதிவு விரைவில் வரக்கூடும், இறை நாட்டம்!

G.M Balasubramaniam said...

கருப்பு அரிசி கதை பகிர்வுக்கு நன்றி. கருப்பரிரி முதலில் கண்ணில்படும். உண்மை. ஆனால் அதை முன்பாக உண்கிறார்களா..... அது கேள்விக்குறி.

அ. பாண்டியன் said...

அம்மா சொன்ன கதை அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி
---------
தங்களுக்கும் நண்பர்களுக்கும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@G.M Balasubramaniam ...

ஐயா.. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி!

தங்கள் கேள்வி நியாயமானதே! அப்படி முதலில் சாப்பிடுகிறார்களா என்பதைவிட அவ்வாறான கருப்பரிசி இப்போது கிடைப்பதில்லை என்பதும் உண்மையே!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@அ. பாண்டியன் ...

அம்மா சொன்ன கதையைப் படித்து மகிழ்ச்சி தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!
தங்களுக்கும் இல்லத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!

பால கணேஷ் said...

நான் இப்படியொரு கதையை இதுவரை கேள்விப்பட்டதில்லை நண்பரே! புதுசுதான் எனக்கு! அன்னத்தை அலட்சியப்படுத்தி ஒதுக்கக் கூடாதுங்கற நல்லெண்ணத்துல முன்னோர்கள் இப்படி உருவாக்கியிருப்பாங்கன்னு தோணுது!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@பால கணேஷ் ...

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Sir!

தாங்கள் குறிப்பிட்டதுபோலத்தான் இதை முன்னோர்கள் உருவாக்கியிருக்க வேண்டும்.

தொடர்ந்து வாருங்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

அன்னத்தை அலட்சியப்படுத்தி ஒதுக்கக் கூடாதுங்கற நல்லெண்ணத்துல முன்னோர்கள் இப்படி உருவாக்கியிருப்பாங்கன்னு தோணுது!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@கரந்தை ஜெயக்குமார் ...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்!

rajsteadfast said...

Arumai sir,

Ini Naan karuppu arisiyai thaan muthalil saapiduven.

Nanri.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@rajsteadfast ...

வருகை தந்து, படித்து, கருத்து தந்தமைக்கு நன்றி நண்பரே!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Anonymous said...

கருப்பாக இருப்பதை பதர் எனவே எண்ணியிருந்தேன். நல்ல தகவல். உங்களுக்கும் அம்மாவுக்கும் நன்றிகள்

Anonymous said...

கருப்பாக இருப்பதை பதர் எனவே எண்ணியிருந்தேன். நல்ல தகவல். உங்களுக்கும் அம்மாவுக்கும் நன்றிகள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//திண்டுக்கல் தனபாலன் said...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி... //

அன்புடன் தகவல் தந்தீர்கள்... நன்றி சார்!

திண்டுக்கல் தனபாலன் said...

Once Again...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சாப்பாட்டில் கருப்பு அரிசி இருந்தால் முதலில் அதையே நாம் சாப்பிட வேண்டும். //

அம்மா சொன்ன அழகான கதையைப் பகிர்ந்து கொண்டது நல்லது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

Manjubashini Sampathkumar said...

அன்பு சகோ,

அன்று நான் பார்க்கும்போது இதை கவனிக்க தவறினேன். மன்னிக்க வேண்டுகிறேன் தம்பி...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல நீதியை உள்ளடக்கிய இதுவரை கேள்விப் படாத கதை
மிகவும் ரசித்தேன்

saamaaniyan saam said...

நல்ல கதை ! இப்போது அரிசியும் நல்லாயில்ல... பல அம்மாக்களுக்கு கதை சொல்லவும் நேரமில்லை ! டிவி சீரியல் பார்க்கறப்போ கதையாவது.....

saamaaniyan.blogspot.fr

Thenammai Lakshmanan said...

அட.. கறுப்பரிசி சத்துன்னு சொல்வாங்க. அதுக்காக ஒரு கதையா.. :) நல்லா இருக்கு.

அ. பாண்டியன் said...

வணக்கம் சகோதரர்
அழகான கதை. அம்மாவிடம் கதை கேட்பதே ஒரு தனி அலாதி. இப்போது மறைந்து வரும் சூழல் மாற வேண்டும்.

இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் said...

அஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் "இஸ்லாமிய இணையங்களின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)" என்ற இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

(உங்கள் தளத்தில் எங்களை இணைக்க, இந்த லிங்கை http://ungalwebs.blogspot.com/p/contact.html பார்க்கவும்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒருவர் நேர்வழியின்பால் அழைத்தால் அவருக்கு அவரைப் பின்பற்றியவர்களின் நற்கூலியைப் போன்று வழங்கப்படும். பின்பற்றியவர்களின் நற்கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

ஊமைக்கனவுகள். said...

கதை சொல்லி அம்மாக்களும் பாட்டிகளும்....
இந்தத் தலைமுறை இழந்த பிராதன விடயங்களுள் இதுவும் ஒன்று!
நல்ல பதிவு அய்யா!
பகிர்வுக்கு நன்றி

KILLERGEE Devakottai said...

தாயின் மடியில் கதை கேட்ட நினைவுகள் வந்து விட்டது நண்பரே,,, அருமை

இந்த பதிவுக்கு முன்பு நான் கருத்துரை இட்டது போன்ற நினைவு

Dr B Jambulingam said...

கருப்பரிசி கதை படித்தேன். இதுபோன்ற பல கதைகளை என் ஆத்தா (அப்பாவின் அம்மா) கூறியது எனக்கு நினைவிற்கு வந்துவிட்டது. நன்றி.

yathavan nambi said...

கனவில் வந்த காந்தி

மிக்க நன்றி!
திரு பி.ஜம்புலிங்கம்
திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

புதுவைவேலு/யாதவன் நம்பி
http://www.kuzhalinnisai.blogspot.fr

("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

yathavan nambi said...

ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)

செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_7.html?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...