...பல்சுவை பக்கம்!

.

Wednesday, January 1, 2014

கீழை அ. கதிர்வேல் ஜோக்ஸ்! + குடந்தையூரார் புதினம்! #121


நகைச்சுவைப் பேரரசர், எழுத்தாளர் திரு. கீழை அ. கதிர்வேல் அண்ணன் அவர்கள் பல்லாண்டு காலமாக  
பத்திரிகைகளில் எழுதிய ஜோக்குளிலிருந்து 400
ஜோக்குகளைத் தொகுத்து 'நகைச்சுவை நானூறு'
என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார்கள். 

இந்த நகைச்சுவைகளைப் படிக்கப் படிக்க மனபாரமெல்லாம் 
குறையும். டென்ஷன் விலகும். மனம் இலேசாகும். 
நோய்கள் ஓடி ஒளி(ழி)யும். மீண்டும் மீண்டும் படிக்கலாம். 
இந் நூலில் அனைத்துத் துறைகளிலும் பொதிந்துள்ள 
நகைச்சுவையை வெளிக் கொண்டு வந்து தருகிறார் 
அண்ணன் கீழையார். 

நூலுக்கு பாக்கியம் ராமசாமி, லேனா தமிழ்வாணன், பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர் அணிந்துரை தந்துள்ளார்கள்.

நூலிலிருந்து சில ஜோக்குகள்:   



[படத்தின்மேல் கிளிக் செய்து பெரிதாக்கிப் படியுங்கள்.]


நூல் : நகைச்சுவை நானூறு

ஆசிரியர் : கீழை அ. கதிர்வேல்
வெளியீடு: சிரிப்பரங்கம்,
                       அம்பத்தூர்,
                       சென்னை.
நாள்           : 12/01/2014



கீழை அ. கதிர்வேல் அண்ணன் அவர்கள் எனக்கு அனுப்பித் தந்த அவரது புகைப்படம்:



*****     *****     *****     *****     *****     *****     *****     *****
 'இளமை எழுதும் கவிதை நீ' புதினம்!


நண்பர் குடந்தையூர் ஆர். வி. சரவணன் அவர்கள் எழுதிய 'இளமை எழுதும் கவிதை நீ' தொடர்கதையை புத்தகமாக வெளியிடுகிறார்.

நாள் : 05/01/2014

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்.



இந்தக் கதை காதல், கல்லூரி, கலாட்டா, கலகலா என்று கலந்து கட்டி இருக்கின்றது.

இந்நூலுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களும் பதிவர் முனைவர் எஸ். சங்கர் அவர்களும் பதிவர் அரசன் அவர்களும் மதிப்புரைகள் வழங்கியுள்ளனர்.

இரு நூல்களையும் படித்துப் பாருங்கள் நண்பர்களே!

-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
.

படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

9 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தகம் வெளியிடும்
கீழை அ. கதிர்வேல்
மற்றும்
நண்பர் குடந்தையூர் ஆர். வி. சரவணன்
ஆகியோருக்கு வாழ்த்துக்கள் நண்பரே

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@கரந்தை ஜெயக்குமார்...

அண்ணன் கீழையூராருக்கும்
நண்பர் குடந்தையூராருக்கும்
வாழ்த்துக்கள் சொன்னதற்கு
கரந்தையூர் சாருக்கு நன்றி!

இராய செல்லப்பா said...

குடந்தை சரவணனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு நான் சென்றிருந்தேன்! பிரபல கவிஞர் நா.முத்துக்குமார் தான் சிறப்பு விருந்தினர். அவருடன் நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஏற்கெனவே முகநூலில் பலரால் வெளியிடப்பட்டுள்ளன. நூல் பற்றிய விமர்சனம், நான் படித்தவுடன் வெளியாகும்.

-தோழன் மபா, தமிழன் வீதி said...

தாமதமாக பதில் போடுவதற்கு மன்னிக்கவும்.

சிரிப்பான புத்தக அறிமுகம் சிறப்பாகவே இருந்தது.
கவிதை நூலையும் டிஸ்கவரி போகும் போது மறக்காமல் வாங்கிவிடுகிறேன்.

தொடர்ந்து எழுத வாழ்த்துகள்!.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@Chellappa Yagyaswamy ...

வந்து கருத்து தந்தமைக்கு நன்றி! எந்தருமை நண்பர் குடந்தை சரவணன் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவிற்கு சென்று வந்தமைக்கும் அவரின் சார்பாக நன்றி!

//நூல் பற்றிய விமர்சனம், நான் படித்தவுடன் வெளியாகும். //

நூல் பற்றிய விமர்சனம், வெளியிட்டவுடன் நான் படிப்பேன்... (இறை நாட்டம்..)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@-தோழன் மபா, தமிழன் வீதி ...

வந்து கருத்து தந்தமைக்கு நன்றி! (மன்னிப்பெல்லாம் எதற்கு நண்பரே?)

எந்தருமை நண்பர் குடந்தை சரவணன் அவர்களின் நூல், புதின நூல் ஆகும்; கவிதை நூலல்ல. அது, அவரது குடந்தையூர் வலைப்பூவில் தொடராக வெளிவந்து, மிக வரவேற்பைப் பெற்றதாகும். அந்தத் தொடர்தான் இப்போது நூலாக... படித்துவிட்டு தங்கள் கருத்தினையும் தெரிவியுங்கள். நன்றி!

பால கணேஷ் said...

குடந்தையூராரின் புத்தக பின் அட்டையில் கவிதைகளை ஹைலைட் செய்திருப்பதால் கவிதைநூல் போன்று தோற்றம் தரும். இது வேண்டுமென்றே (சரவணன்) விரும்பிச் செய்தது. ஆனாலும் படிக்க சுவாரஸ்யம் குறையாத, ஒரு சினிமா பார்க்கும் உணர்வைத் தரும் நல்ல நாவல்! கீழையாரின் புத்தகம் படிக்கிற ஆவல் எழுகிறது. புத்தகக் கண்காட்சியில் தேடிப் பார்க்கிறேன். நல்ல அறிமுகங்களுக்கு நன்றி நண்பா!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பால கணேஷ் said...
குடந்தையூராரின் புத்தக பின் அட்டையில் கவிதைகளை ஹைலைட் செய்திருப்பதால் கவிதைநூல் போன்று தோற்றம் தரும். இது வேண்டுமென்றே (சரவணன்) விரும்பிச் செய்தது. ஆனாலும் படிக்க சுவாரஸ்யம் குறையாத, ஒரு சினிமா பார்க்கும் உணர்வைத் தரும் நல்ல நாவல்! கீழையாரின் புத்தகம் படிக்கிற ஆவல் எழுகிறது. புத்தகக் கண்காட்சியில் தேடிப் பார்க்கிறேன். நல்ல அறிமுகங்களுக்கு நன்றி நண்பா!//

தங்கள் கருத்தை அழகாகப் பதிவு செய்தமைக்கு நன்றி சார்!

அப்புறம்... கீழை அ. கதிர்வேல் அண்ணன் அவர்களின் புத்தக வெளியீடு குறிப்பிட்ட ஜனவரி 12-இல் நடைபெறவில்லை. புத்தகம் முழுமையானதும் விரைவில் (அனேகமாக இந்த ஜனவரியிலேயே) வெளிவரும் எனத் தெரிகின்றது. அதனால் இந்த ஆண்டில் புத்தகத் திருவிழாவில் கிடைக்காது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

r.v.saravanan said...

எனது நூலுக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கும் எனக்கு நீங்கள் தரும் ஊக்கத்திற்கும் நன்றி நண்பரே

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...