...பல்சுவை பக்கம்!

.

Saturday, February 7, 2015

விமரிசனப் போட்டிப் பரிசு! #124

விமரிசனப் போட்டிப் பரிசு! #124

  பதிவர் திலகம் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் புதுமையான போட்டி ஒன்றினைத் தொடராக நடத்தினார். அவர் எழுதிய கதைகளிலிருந்து 40 கதைகளைத் தேர்ந்தெடுத்து, வாரம் ஒரு சிறுகதைவீதம் 40 வாரங்கள் வெளியிட்டு, விமரிசனப் போட்டியும் வைத்து பல பரிசுகளையும் வழங்கினார். இப்போட்டி, 'பதிவுலகின் புதுமை' என்று பலராலும் போற்றப்பட்டது.


  சுமார் 32 வாரங்கள்வரை அதன் நடுவர் யாரென வெளிப்படுத்தாமலே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பரிசுப் பணம் ஒவ்வொரு 10 கதைகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பொழுதிலேயே அனைவருக்கும் அனுப்பிவைக்கப்பட்டதை, பலரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

     இந்தப் போட்டிகளில் பல பதிவர்கள் கலந்துகொண்டு தொடர்ந்து பரிசுகளை வென்று சாதனைகள் பல புரிந்தார்கள். எனக்கும் இரு போட்டிகளில் பரிசுகள் கிடைத்தன. அவற்றுள் 'உடம்பெல்லாம் உப்புச்சீடை' என்ற கதைக்கு நான் எழுதி, பரிசு பெற்ற விமரிசனத்தை கீழே படிக்கலாம்.

     அந்தச் சிறுகதைக்கான இணைப்பு:
'உடம்பெல்லாம் உப்புச்சீடை'

     அந்தச் சிறுகதைக்கான பரிசுபெற்ற எனது விமரிசனம் படிக்க  இணைப்பு:
'பரிசுபெற்ற விமரிசனம்'

      கீழே அந்த விமரிசனம்:



    

இரண்டாம் பரிசினை 


வென்றுள்ளவர்கள்


இருவர்  



அதில் ஒருவர்



திரு. அ. முஹம்மது 


நிஜாமுத்தீன்  
அவர்கள்





வலைத்தளம்: 

”நிஜாம் பக்கம்”






இரண்டாம் பரிசினை வென்றுள்ள 


திரு. அ. முஹம்மது 


நிஜாமுத்தீன்  


 அவர்களின் விமர்சனம் இதோ:





*  'உடம்பெல்லாம் உப்புச்சீடை' என்கிற இக்கதையின் தலைப்பே வித்தியாசமானது. முகத்திலோ, உடலின் மற்ற பாகங்களிலோ, அல்லது அனைத்து இடங்களிலுமோ சிலருக்கு சருமத்தில் முண்டும் முடுச்சுமாக கொப்புளங்கள் இருப்பதுண்டு. அவற்றை பொதுவாக, 'கொப்புளம்' என்றுதான் நாமெல்லாம் குறிப்பிடுவது வழக்கம். ஆனால், கதாசிரியரோ அதை 'உப்புச் சீடை' என்று குறிப்பிடுவது, அவரின் 'அதீத கற்பனையின் உச்சம்' எனலாம். 



* 'உடம்பெல்லாம் உப்புச்சீடை' கதை உணர்வுப்பூர்வமாக இருந்தது. 



புகைவண்டி, பேருந்து, விமானம் போன்ற பொதுசுமை கடத்திகளில் (Public Carrier)  நாம் பயணம் செய்யும்போது உடன் வரும் சக பயணிகளை நாம் தேர்வு செய்ய இயலாது. "நாம் ஒரு காரணமாக பயணம் மேற்கொள்ளுதல் போலவே அவரும் ஏதோ ஒரு காரியமாக பயணம் செய்கிறார்" என்பதை நாம் ஏனோ யோசிக்க மறந்துவிடுகிறோம். 




* அவரும்  சக பயணி; அவரும் சக உயிர் என்பதை  நாம் நமது வசதிக்காக மறந்துவிடுகிறோம்.  "இறைவனது  படைப்பில் அனைவரும் சமம், அதோடு எவ்வுயிரும் அவனது படைப்பே" என்பதை வலியுறுத்தும் படைப்பு இக்கதை!



*   பட்டாபி, பங்கஜம் மற்றும் குழந்தைகள் ஐவரும் ரயிலில் ஏறியதும் ஆரம்பமாகும் மிதமான கதையோட்டம், பயங்கரமான உருவம், தன்னை முறைத்துப் பார்த்ததினால் பயந்து ஓடி வந்ததாய் விமலா சொன்னதும் விரைவான கதையோட்டமாக மாறுகின்றது.


 * ஆரம்பம் முதலே அந்த நபரை பயங்கரமான உருவம், கை, கால்கள், உடம்பு எங்கெங்கும் கொப்புளங்கள் என்று வர்ணனை, அந்த உருவம் என்றும் 'அது' என்ற அஃறிணை வர்ணிப்பு என்றெல்லாம் அந்த நபரை கதாசிரியர் குறிப்பிடும்போது அந்த உருவத்தின்பால் அல்லது உருவத்தின்மேல் நமக்கும் அருவெறுப்பை புகுத்தி விட்டு விடுகிறார் கதாசிரியர். இது அவரின் யுக்தி அல்லது அவரின் வெற்றி!

 

இறைவன் யாரையும் தேவையில்லாமல் படைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியதி இறைவனால் படைக்கப் பட்டிருக்கின்றது. அதனால், யாராலும் அவற்றிலிருந்து தப்பவே முடியாது. இதை உணர்பவர்கள், தப்ப முடியாமல் தவிப்பவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை கண்டெடுப்பதுண்டுதான்.



* ஆனால், அந்த வழிகளும் கூட இறைவனால் வகுக்கப்பட்டதுதான். இன்னும் சில நேரங்களில், இறைவனை யாசிப்பதிலிருந்தும் அவனிடம் பிரார்த்திப்பதிலிருந்தும் இறைவனால் மீட்கப்படலாம். அது அவனின் திருவிளையாடல்களில் ஒன்று.



* இறைவனை நம்புபவர்கள் ஒன்றை மறந்துவிடக்கூடாது. நம்மாலேயே அனைத்தும் நடக்கும் என்று நினைத்துவிடக் கூடாது. மற்றவர்களால் நாம் எப்போதாவது உதவிபெறப்படலாம்.



* வெளித் தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடுதலும் மிகத் தவறு ஆகும். இங்கே பட்டாபி மறந்து வைத்துவிட்டு வந்த அவரது தந்தையின் அஸ்திக் கலயத்தை, அவரால் வெறுக்கப்பட்ட அந்த மனிதர் தனது தொடர் பயணத்தையும் துறந்துவிட்டு பட்டாபியைத் தேடி எடுத்து வந்து தருகின்றார். ஆக, இங்கும் இறைவனின் விளையாட்டைக் காணலாம்.



* புகைவண்டி மற்றும் வாழ்க்கை - இவை இரண்டும் ஏறக்குறைய ஒன்றேதான். புகைவண்டியும் பயணம்; வாழ்க்கையும் பயணம். புகைவண்டி ஓரிடத்திலிருந்து புறப்பட்டு மற்றொரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்கிறது. வாழ்க்கையும் பிறப்பில் ஆரம்பமாகி இறப்பில் சென்று முடிவடைகிறது.


* இந்தக் கதையும் புகைவண்டிப் போலத்தான். வளைந்து, நெளிந்து ஓடுகின்றது, பல திருப்பங்களுடன். அந்தப் பெரியவரை பயங்கரத் தோற்றமுள்ளவரா ஆரம்பத்தில் காட்டி, நம்மையும் அருவெறுப்பு கொள்ள வைக்கிறார், கதை சொல்லி. (Narrator).

* பின்  குழந்தை ரவியிடம் அன்பு பாராட்டி, பேசி மகிழ்ந்து, ஐஸ் கிரீம் வாங்கித் தந்து, சக மனிதரிடத்தில் அன்பு காட்டும் மனித நேயம் மிக்கவராக காட்டி புருவம் உயர்த்த வைக்கிறார் நம்மை.



* அடுத்து, தன் வழியுண்டு தானுண்டு என்று சகிப்புத் தன்மையுள்ளவராய் ஒதுங்கி கொள்கிறார். 



* அடுத்ததாக, அஸ்திக் கலயத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் உதவி செய்யும் பரோபகாரியாய் மிளிர்கிறார். 


* பெரிய வித்வான், பண்டிதர் , சிரியர் என அவரது அறிவு வெளிச்சம் கதை முழுவது பரவி, அவரது மைனஸ் பாயிண்ட்கள் அனைத்தும் அடிபட்டுப் போகின்றன கதைசொல்லும் சாமர்த்தியத்தினால். 



* ஆகக் கூடி, மன்னிப்பு கேட்கும் பட்டாபி குடும்பத்தையும் மன்னித்து, அருளாசியுடன் நல்லுபதேசம் செய்து, அருளுரை அளிக்கிறார்.    



இக்கதை ஒரு மனிதர் என்று காட்டி, அவர் மகா மனிதர் என்று முடிகின்றது. அதோடு, மனதினில் பல இறை சார்ந்த உணர்வுகளை மனிதர்களின்பால் உருவாக்கியிருக்கும் என்றால் மிகையில்லை.


-அ. முஹம்மது நிஜாமுத்தீன்.


 


 

மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.




    

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

39 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வாழ்த்துக்கள்

ஜீவி said...

மறக்கமுடியாத நினைவுகள் தாம். வாழ்த்துக்கள், நண்பரே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பதிவர் திலகம் திரு. வை.கோபால்சாமி அவர்கள் புதுமையான போட்டி ஒன்றினைத் தொடராக நடத்தினார். //

அன்பான நண்பரே,

அடியேன் பெயர்: வை. கோபாலகிருஷ்ணன்

அதை வை. கோபால்சாமி என இப்படி மாற்றி விட்டீர்களே! அதை தயவுசெய்து முதலில் மாற்றிவிடுங்கள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையானதோர் விமர்சனம். அதனாலேயே வெற்றி பெற்று பரிசும் வாங்கியுள்ளது.

ஏற்கனவே நான் இதில் ரசித்த வரிகளை மஞ்சள் வண்ணத்தில் High Light செய்து காட்டியுள்ளேன்.

பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

தனிப்பதிவாக இங்கு தங்கள் தளத்தினில் வெளியிட்டுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

என்றும் அன்புடன் VGK

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையானதோர் விமர்சனம். அதனாலேயே வெற்றி பெற்று பரிசும் வாங்கியுள்ளது.

ஏற்கனவே நான் இதில் ரசித்த வரிகளை மஞ்சள் வண்ணத்தில் High Light செய்து காட்டியுள்ளேன்.

பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

தனிப்பதிவாக இங்கு தங்கள் தளத்தினில் வெளியிட்டுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

என்றும் அன்புடன் VGK

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அவர் தளத்திலேயே படித்தேன். வாழ்த்துகள் நண்பரே....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ...

வாழ்த்துகளுக்கு நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ ஜீவி said...

//மறக்கமுடியாத நினைவுகள் தாம். வாழ்த்துக்கள், நண்பரே! //

நடுவரே தாங்கள்தானே சார்! மறக்க முடியுமா?
வாழ்த்துகளுக்கு நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன் ...

சார், மன்னிக்க வேண்டுகிறேன் - அவசரப் பிழை!

பிழைத் திருத்தம் செய்துவிட்டேன்!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன் ...

தங்கள் கருத்தினைப் படித்து மிக்க மகிழ்ச்சி! நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ ரூபன் ...

வாழ்த்துகளுக்கு நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ கரந்தை ஜெயக்குமார் ...

வாழ்த்துகளுக்கு நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ திண்டுக்கல் தனபாலன் ...

வாழ்த்துகளுக்கு நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ -'பரிவை' சே.குமார் ...

வாழ்த்துகளுக்கு நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ வெங்கட் நாகராஜ் ...

படித்துள்ளீர்களா, நன்று!
வாழ்த்துகளுக்கு நன்றி சார்!

KILLERGEE Devakottai said...

வாழ்த்துகள் நண்பரே..
நான் தங்களது 300 வது நபராக இணைத்துக்கொண்டேன்.

தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ கில்லர்ஜி...

தங்களின் வாழ்த்துகளுக்கும் 300~ஆவது நபராக சிறப்புடன் இணைந்து கொண்டதற்கும் நன்றிகள் பல!!!

ஊமைக்கனவுகள் said...

வாழ்த்துகள் சார்.
சரியான விமர்சனம் எப்படிச் செய்வது என்பதைத் தங்கள் பதிவிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

தொடர்கிறேன்.

நன்றி.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ ஊமைக்கனவுகள். ...

தங்கள் வருகைக்கு,
தங்கள் கருத்திற்கு,
தாங்கள் தொடர்வதற்கு...
மிக்க நன்றி சார்!

yathavan64@gmail.com said...

உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ yathavan nambi ...

தங்களுக்கும் நண்பர்கள் அனைவருக்கும்
மே தின வாழ்த்துகள்!

எனது 'தொழிலாளர் தினக் கவிதை':

!தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!!

தி.தமிழ் இளங்கோ said...

http://nizampakkam.blogspot.in

saamaaniyan said...

வணக்கம்

தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்

http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html

நன்றி
சாமானியன்

saamaaniyan said...

வணக்கம்

இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

நன்றி

Thulasidharan V Thillaiakathu said...

மிக அழகான விமர்சனம் சகோதரரே! வாழ்த்துகள்!

ஏன் எழுதுவதில்லை சகோ இப்போதெல்லாம்..??

கரூர்பூபகீதன் said...

நண்பரே தாங்கள் தொடர்ந்து எழுதலாமே!!

அன்புடன் கருர்பூபகீதன் நன்றி!!

திண்டுக்கல் தனபாலன் said...

// 'விழாவில்' மற்றும் 'பங்கு'
எனும் வார்த்தைகளிடையே,
"ஐயா அவர்களும்"
என்று இடைச் செறுகல் செய்தால் பொருத்தமாய் இருக்குமே தி. த. ஐயா! //

இந்த கிண்டல் எல்லாம் வேண்டாம் ஐயா...

நன்றி,,,

திண்டுக்கல் தனபாலன் said...

contact : 9944345233

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் வலைப்பதிவை பதிவு செய்து விட்டீர்களா..? அதை முதலில் செய்யவும்... பிறகு பேசி தீர்த்துக் கொள்ளவும்..

நன்றி,,,

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் வலைப்பதிவை பதிவு செய்து விட்டீர்களா..? அதை முதலில் செய்யவும்... பிறகு பேசி தீர்த்துக் கொள்ளவும்..

contact : http://bloggersmeet2015.@gmail.com நன்றி,,,

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவு செய்தமைக்கு மிகவும் நன்றி ஐயா...

கரூர்பூபகீதன் said...

வணக்கம் நண்பரே! நலமா! நான் எழுதியுள்ள கவிதை கட்டூரைகளுக்கு தங்களின் கருத்தை தாருங்கள் நன்றி!

Geetha said...

வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்

நிஷா said...

வணக்கம். ஆல்ப்ஸ் தென்றல் தளத்திற்கு வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி.தங்களையும் அங்கே தொடர அழைத்திருகின்றேன்.

தொடருங்களேன்!

http://alpsnisha.blogspot.ch/2015/11/blog-post_15.html

Yarlpavanan said...


வாழ்த்துகள்
தொடர்ந்தும் வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...