...பல்சுவை பக்கம்!

.

Friday, January 1, 2016

நகைச்சுவை; இரசித்தவை (20) #127

நகைச்சுவை; இரசித்தவை (20) #127

புன்னகைப் புத்தாண்டு 2016.!




ஹா... ஹா.. ஹாஸ்யம்! (1)
"டெல்லி தேர்தல் முடிவை விட்டுத்தள்ளுங்க தலைவரே... ஒரு நல்ல செய்தி இருக்கு!"

"சொல்லுய்யா..."

"தாய்லாந்துல எலெக்சன் அறிவிச்சிருக்காங்களாம்!"
-சுரா. மாணிக்கம்
===============================================================

ஹா.. ஹா.. ஹா..ஸ்யம்! (2)
" 'ஆட்சியைப் பிடிப்பதுதான் என் கனவு'னு தலைவர் சொல்றாரே, பிடிச்சுடுவாரா?"

"அதான்... அவரே சொல்லிட்டாரே, கனவுன்னு!"
- எஸ். கோபாலன்.
===============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (3)
"வாக்களித்தவர்களுக்கு தலைவர் இப்போது நன்றி சொல்வார்!"

"அந்த நாலு பேருக்கு நன்றி... வணக்கம்!"
-அ. ரியாஸ்
===============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (4)
"தேர்தல் கமிஷன் வர வர ஃபைனான்ஸ் கம்பெனி மாதிரி ஆயிடுச்சு!"

"ஏன் தலைவரே புலம்பறீங்க?"

"டெபாசிட்டைத் திருப்பித் தர மாட்டேங்கிறாங்களே!"
- பி. ஆர். பாண்டி
===============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (5)
"ஆட்சி அமைக்க கவர்னர்கிட்ட இருந்து இன்னும் அழைப்பு வரமாட்டேங்குதேய்யா?"

"தலைவரே... நாம ஜெயிச்சது இடைத்தேர்தல்ல!"
-மகா
===============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (6)
"எங்க தலைவர் வெளிப்படையானவர் என்பதை இப்போதாவது நம்பறியா?"

"அதுக்காக 'பழச்சாறு அருந்தும்வரை உண்ணாவிரதம்'னா போர்டு வெப்பீங்க?"
-அதிரை புகாரி
========================================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (7)
"தலைவரே... நாம டெல்லியில தோத்தது நல்லதாப் போச்சு!"

"ஏன்?"

"செம குளிராம்... மைனஸ் 2.4 டிகிரி செல்சியஸாம்!"
-அ. ரியாஸ்
==============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம்! (8)
தலைவர் (மேடையில்) : "கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்!"

மேடையில் அமர்ந்திருப்பவர்: "கடைசி ஆளையும் அனுப்பிட்டுத்தான் முடிப்பார் போல!"
-அ. ரியாஸ்
==============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம் (9)
இன்ஸ்பெக்டர்: "செல்போன் திருடனைக் கைது பண்ணியாச்சா?"

கான்ஸ்டபிள்: "நாட் ரீச்சபிள் சார்!"
-அ. ரியாஸ்
==============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம் (10)
"என்னப்பா... எப்பவும் பூட்டை உடைச்சு வீடு புகுந்து திருடுவே... இப்ப சைபர் கிரைம்ல பூந்துட்டே?"

" 'டிஜிட்டல் இந்தியா'னு நாடு வேகமாப்போகுது... நாமளும் அப்டேட் ஆகணும்ல சார்!"
- கிணத்துக்கடவு ரவி
==============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம் (11)
"தலைவர் ஏன் உம்முன்னு இருக்கார்?"

"அவரோட வாழ்க்கை வரலாறை '10 செகண்ட் கதை'யா எழுதிட்டாங்களாம்!"
-வி. சகிதா முருகன்
==============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம் (12)
"தலைவர் என்ன சொன்னார்னு ஜட்ஜ் கோபமா எழுந்துபோறார்?"

" 'கண்டிஷன் பெயில் கொடுங்க... இல்லைனா 
ஏர் கண்டிஷன் ஜெயில் கொடுங்க'னு
சொல்லியிருக்கார் மனுஷன்!"
-கிணத்துக்கடவு ரவி
==============================================================

ஹா.. ஹா.. ஹாஸ்யம் (13)
"நம்ம தம்பி நடிச்ச புதுப்படத்தை எப்படியாவது ஓட்டிரணும்யா!"

"ட்விட்டர் ஆளுங்ககிட்ட சொல்லிருவோம் தலைவரே, ஓட்டு ஓட்டுன்னு ஒட்டிருவாங்க!"
-பர்வீன் யூனுஸ்
==============================================================

ஹா... ஹா... ஹாஸ்யம் (14)
"தலைவரே, உங்களை வாட்ஸ்அப்ல வெளுத்து வாங்குறாங்கபோல?"

"லாக் அப்லயும் அதைத்தானேய்யா செஞ்சாங்க!"
~பர்வீன் யூனுஸ்
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

17 comments:

Unknown said...

புத்தாண்டில் நான் படித்த முதல் பதிவு ,அட்டகாசம் :)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நாங்களும் ரசித்தோம். நன்றி. மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

கரூர்பூபகீதன் said...

அனைத்தும் அருமை நண்பரே!
கலகலனு சிரிக்க வைக்கும் பதிவு நன்றி!!! பிறக்கும் இனிய புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்! என்றும் அன்புடன் கரூர்பூபகீதன்!

Yarlpavanan said...

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

'பரிவை' சே.குமார் said...

நகைச்'சுவை'கள் அருமை...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

தி.தமிழ் இளங்கோ said...

ரசித்தேன்! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உம்முடைய பதிவின் பக்கம் வந்துள்ளேன். தொடருவேன். தொடர்ந்து எழுதுங்கள். எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

”தளிர் சுரேஷ்” said...

அட்டகாசமான சிரிப்புக்கள்! நன்றி! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

saamaaniyan said...

இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

- சாமானியன்

எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

saamaaniyan said...

இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

- சாமானியன்

எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

KILLERGEE Devakottai said...

அனைத்தும் கலக்கல் நகைச்சுவை நண்பரே....

saamaaniyan said...

தாய்லாந்து எலக்சன் தொடங்கி லாக் அப் வரை அனைத்துமே எங்களை சிரிப்பால் " லாக் " செய்த ஹாஸ்யங்கள்...

நன்றி
சாமானியன்

சீமான்கனி said...

அட்டகாசம்...Suppppppre anna...

Ajai Sunilkar Joseph said...

ரசித்து சிரித்தேன் நண்பரே

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல நகைச்சுவை துணுக்குகள்.சிரித்து ரசித்தேன். இவ்வளவையும் ஒரே பதிவில் வெளியிடாமல் இரண்டு பதிவாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆமாம் சார்...
தினம் ஒன்றாக முகநூலில் பதிந்து வந்தேன்.
வலைபபூவில் பதிய எண்ணினேன்.
ஒரே பதிவில் வெ ளியிட்டு விட்டேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆமாம் சார்...
தினம் ஒன்றாக முகநூலில் பதிந்து வந்தேன்.
வலைபபூவில் பதிய எண்ணினேன்.
ஒரே பதிவில் வெ ளியிட்டு விட்டேன்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...