...பல்சுவை பக்கம்!

.

Saturday, June 22, 2019

திருமண வாழ்த்து #134

திருமண வாழ்த்து #134

எனது நண்பன் க.சந்தானகிருஷ்ணன்  திருமணத்திற்காக, நான் எழுதிய வாழ்த்துப்பாடலை இங்கே பதிகிறேன்.

இப்பாடலின் மெட்டு: "பறக்கும் பறவைகள் நீயே!"
திரைப்படம்: கவிதா.
இதோ அந்தப் பாடல்:


இதுதான் நான் எழுதிய பாடல்:


அன்புக்கு நண்பன் நீயே !
பண்புக்கு விளக்கம் நீயே !
உண்மைக்கு உதாரணம் நீயே!
நன்மைக்கு நாயகன் நீயே !

சந்தானம் பெயர் கொண்டு விட்டாயே!
சந்தனம் மணம் நீயும் தந்திடுவாயே !
தந்தத்தின் மதிப்பு பெற்று விட்டாயே!
மாந்தரின் மாணிக்கம் போல வந்தாயே !

குணமகள் மணமகள் குண சுந்தரியே !
குன்றினில் விளக்கே ஒளி தருவாயே !
இல்லறம் வாழ்வில் இனித்திட நீயே !
நல்லறம் புரிந்து நனி செய்வாயே !

வளமாற நீவிர் வாழ்ந்திட என்று,
உளமாற நாங்கள் வாழ்த்திட நன்று !
இருவரும் இணைந்து இன்பத்தைப் பெறவே,
இறைவா நீயும் அருள் புரிவாயே !

- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

13 comments:

KILLERGEE Devakottai said...

வாழ்த்துப்பா அருமை நண்பரே எனது வாழ்த்துகளும் கூடி...

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான வரிகள்...

வாழ்த்துகள் பல...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

விரைவான வாழ்த்துகள் தந்தமைக்கு நன்றி நண்பரே!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்த்துகள் பல
தந்தமைக்கு
நன்றிகள் பல!!!

கார்த்திக் said...

செம

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி நண்பரே!

@கார்த்திக்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துப் பா நன்று. பாராட்டுகள்.

நன்னிலம் இளங்கோவன் said...

நிஜாமுதினின் நிஜமான வரிகள்!
நண்பனை போற்றிடும்
நட்பின் ஆழமான மொழியில்
நெஞ்சத்தின் எழுந்த இதமான வரிகள்!
நன்னிலம் இளங்கோவன்

நன்னிலம் இளங்கோவன் said...

நிஜாமுதினின் நிஜமான வரிகள்!
நண்பனுக்கான ஆழமான வரிகள்!
நெஞ்சத்தில் எழுந்த நட்பான வரிகள்!
நெடுநாளாய் பூத்த இதமான வரிகள்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கருத்துரைக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கவிதையாய் பாராட்டு!
நெஞ்சார்ந்த நன்றி!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மீண்டும் கவிதை!
மீண்டும் நன்றி!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மீண்டும் கவிதை!
மீண்டும் நன்றி!!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...