...பல்சுவை பக்கம்!

.

Tuesday, June 9, 2020

உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர் - 2 #143




உள்ளம் கவர்ந்த உயர்ந்தவர் - 2.

மயிலாடுதுறை (மா)வட்டம் குத்தாலத்தில் முதல் சந்திப்பு!
மேலும் மயிலாடுதுறையில் சில சந்திப்புகள்.

பிறகு, மங்கைநல்லூருக்கு அவர் வந்ததன்பின் அவ்வப்போது அவர் வீட்டிற்கு சென்று எழுத்து, பத்திரிகை தொடர்பாக  உரையாடல்.
அவர் 
மயிலாடுதுறை வந்தபின்னே அடிக்கடி அவர் வீட்டிற்கு செல்வதாகவும் பல மணி நேர உரையாடல்களாகவும் வளர்ந்தது! [மேடம் பணி (பள்ளி)க்கு சென்றுவிடுவதால் இடையூறுகளே கிடையா!]

பொழுது போதாமல்
நேரம், காலம் போவது தெரியாமல் பல புதிய, பழைய செய்திகளை சுவாரஸ்யமாகச் சொல்வார்;
நானும் ஆர்வமுடன், ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்!

பின்னும்,
தஞ்சை ~ நாகை ~ திருவாரூர் மாவட்ட எழுத்தாளர் கூட்டமைப்புத் தலைவராக அவர் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார்.

மாதாந்திரக் கூட்டம் கும்பகோணத்தில் தாஜ்மஹால் ஹோட்டலில் மாதத்தின் முதல் ஞாயிறன்று நடக்கும்.

நானும் வாய்ப்பு கிடைக்கையிலெல்லாம் கலந்து கொள்வதுண்டு!

அன்றிலிருந்து இன்றுவரை என்னிடம் மாறா நட்புடன் என்னை அன்புடன் அரவணைக்கும்,  எமது  பொழுதுபோக்குநர் திலகம்
'சின்னஞ்சிறு கோபு' சார்,
வாழிய பல்லாண்டு!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனியவர் கோபு அவர்களுக்கு வாழ்த்துகள்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்த்திய அன்பு நண்பருக்கு நன்றிகள்!

ஜீவி said...

கோபு சாருக்கு சொந்த ஊர் கோபிச்செட்டிப் பாளையமா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சின்னஞ்சிறுகோபு சாருக்கு சொந்த ஊர் கோபிச்செட்டிப் பாளையம் அல்ல சார்;
மயிலாடுதுறை அருகே, 'முடிகண்டநல்லூர்' என்பதாகும்!

தகவல் வினா எழுப்பியமைக்கு நன்றி ஜீவி சார்!

வெங்கட் நாகராஜ் said...

நட்புப் பாலம் வழியான பயணம் தொடரட்டும்....

ஜீவி said...

சின்னஞ்ச்சிறு கோபு என்ற இதே பெயரில் என் இளம் வயது நண்பர் ஒருவர் இருந்தார். அவருடன் தொடர்பு விட்டுப் போய் பல ஆண்டுகாலம் ஆயிற்று. அவராக்கும் என்ற எண்ணத்தில் கேள்வி எழுப்பினேன். தங்கள் பதில்8க்கு நன்றி நண்பரே!

Thulasidharan V Thillaiakathu said...

எமது பொழுதுபோக்குநர் திலகம்
'சின்னஞ்சிறு கோபு' சார்,//

ஹா ஹா ரசித்தோம்.

வாழ்த்துகள் உங்கள் நண்பருக்கு!

துளசிதரன்

கீதா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஆஹா, தொடர்கிறது பயணம்!

கருத்திற்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அப்படியா!!!
ஆச்சரியம்!!!

தகவலுக்கு நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ரசித்தமைக்கு,
வாழ்த்தியமைக்கு நன்றி இருவருக்கும்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...