...பல்சுவை பக்கம்!

.

Wednesday, June 17, 2020

எனது கேள்வி! எனது பதில்! #145

எனது கேள்வி; எனது பதில்!

'தமிழக எழுத்தாளர்கள் குழுமத்'தின்
'எனது கேள்வி; எனது பதில்' போட்டியில் வென்ற எனது படைப்பு:

கேள்வி:
ரியல் எஸ்டேட் வியாபாரிகளிடம் உங்களுக்குப் பிடித்தது?

பதில்:
எவ்வளவு தூரமாக இருந்தாலும்,
"சென்னைக்கு மிக அருகில்" என்று சொல்லிவிடுவார்கள்! அது தவறுதான்; ஆனால்,
நாம் ஒரு முயற்சியைத் தொடங்கும்போது,
'வெற்றிக்கு மிக அருகில்' என்ற எண்ணத்தோடு தொடங்கினால் வெற்றியை அள்ளலாம்!
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
...   ...   ...   ...   ...   ...   ...   ...   ...   ...

போட்டியில் பங்குபெற்ற இன்னொரு படைப்பு:

கேள்வி:
வெள்ளம், பூகம்பம், ஆழிப்பேரலை என்ற அழிவுகள் மூலம் நல்லவர்களையும் தீயவர்களையும் இறைவன் அழிக்கிறானே, நியாயமா?

பதில்:
நமது காலில் சில எறும்புகள் ஏறி, அதில் ஓர் எறும்பு நம்மைக் கடித்தால், 10, 15 எறும்புகளை கூட்டமாக அழுத்திக் கொல்கிறோமே, நியாயமா?

இறைவன்
தீயவர்களைக் கொல்வது அவர்களைத் தண்டிக்க!
நல்லவர்களை மரணிக்கச் செய்வது அவர்களை அன்பால் அடைக்கலம் கொடுக்க!

இறைவன் அளவிலா விளையாட்டுடையவன்!
-அ. முஹம்மது நிஜாமுத்தீன்

.


. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிந்தித்த பதில்கள் அருமை...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@திண்டுக்கல் தனபாலன்,

தங்கள் அன்பான கருத்திற்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

இறைவன் அளவிலா விளையாட்டுடையவன்.

நல்ல கருத்து.

உங்கள் கேள்வி - பதில் நன்றாக இருந்தது.

KILLERGEE Devakottai said...

அழகான கே.ப. மிகவும் ரசித்தேன்.
இரண்டாவது மிகவும் நன்று.

தனிமரம் said...

ரியல் வியாபாரம் வித்தியாசமான சிந்தனை!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@வெங்கட் நாகராஜ்,

பாராட்டுக்கு நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@KILLERGEE Devalottai,

இரசித்தமைக்கு நன்றி சார்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@தனிமரம்,

கருத்திற்கு நன்றி சார்!

Thulasidharan V Thillaiakathu said...

மிக மிக நல்ல கேள்வி பதில்கள் அதுவும் சிந்தித்துச் சொன்ன பதில்கள். மிகவும் ரசித்தோம்.

துளசிதரன்

கீதா

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@துளசிதரன்,
@கீதா,

இரசித்து கருத்து சொன்னதற்கு இருவருக்கும் நன்றிகள்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...