...பல்சுவை பக்கம்!

.

Friday, February 3, 2012

சில சிந்தனைகள் (பகுதி 11)


சில சிந்தனைகள் (பகுதி 10)
========================

1.உழைப்பு உடலை வலிமையாக்கும். கஷ்டம்
மனதை வலிமையாக்கும் -செனகா.

2.கடினமான உழைப்பே சிறந்த அதிர்ஷ்டமாகும் -டெம்பஸ்

3.நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது.

4.திறமைதான் ஏழையின் மூலதனம் -எமர்சன்

5.பசியுடையவனின் புன்னகை, செயற்கையாயிருக்கும்.

6.பெரிய பெரிய சாதனைகளனைத்தும் செய்து
முடிக்கப்படுவது ஆழ்ந்த மௌனத்தினால்தான் -மேலை நாட்டறிஞர்

7.மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை -லாவோட் ஸே

8.அறிவாளி, ஒருபோதும் சோம்பேறிகளுடன் நேரத்தை வீணடிக்க மாட்டான்.

9.
அரிய செயலைச் செய்து முடிப்பது வலிமையால்
அல்ல; விடாமுயற்சியால்தான் -ஜேம்ஸ் ஆலன்

10.
கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது -விவேகானந்தர்

11.நேரப்படி வேலையைச் செய்கிறவர்கள் முறையான சிந்தனை வளத்தைப் பெற்றவர்கள் - பிட்டின்

12.துணிவுமிக்கவர்களின் அருகிலேயே எப்போதும் அதிர்ஷ்டம் நிற்கிறது. - வெர்ஜில்

13.கண்ணைக் குருடாக்கி, காதைச் செவிடாக்கி, மூளையை மழுங்கச் செய்கிறது ஆசை!

14.எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும் -ஜான் ரஸ்கின்

15.அளவுக்கு மீறிய சுதந்திரம் ஆபத்தானது.

16.ஒவ்வொரு நிமிடமும் நிமிடமும் நல்ல பண்புடன்
வாழ்வதில் அக்கறையுடன் இருந்தாலே,
இவ்வுலகில் எந்நேரமும் மகிழ்ச்சியுடன் வாழலாம் - பிராங்கிளின்


17.எப்போதும் மனம் தூய்மையாக இருந்தால், முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும் - எமர்சன்

18.நாளை நான் வாழ்வேன் என்கிறான் மூடன். இன்று என்பதும் காலம் கடந்ததே. அறிவாளிகள் நேற்றே வாழ்ந்து விட்டனர். -மார்ஷியல்

19.அறிவு தலைக்கு கிரீடம்! அடக்கம் காலுக்கு செருப்பு!

20.அடக்கம் என்பது ஓர் அணிகலன் மட்டுமல்ல; அது ஒழுக்கத்தின் பாதுகாப்பும் ஆகும் -அடிசன்


.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, January 24, 2012

சில சிந்தனைகள் (பகுதி 10)

சில சிந்தனைகள் (பகுதி 10)

1.நமது மனதில் உள்ளவையே கருத்துக்களாய் வெளிப்படும்.

2.நாம் வாழும் வீடு மட்டுமல்ல, அந்த வீட்டில் வாழும் உறவுகளுக்குள் கூட விரிசல் விழக்கூடாது .

3.சேமிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, வளமையை கொண்டுவர முடியாது.

4.செய்யும் செயலை உறுதியுடன் செய்தால், வெற்றி நிச்சயம்.

5.நோயைக் கண்டுபிடித்தலே, ஆரோக்கியத்தின் ஆரம்பம்.

6.முக்கிய பிரச்சினையில் முடிவு எடுக்குமபோது உணர்ச்சிவசப்பட்டால் புதிதாய் ஒரு பிரச்சினை உருவாகிவிடும்.

7.வர்த்தகத்தில் கால்பதித்து பிறகு ஆட்சியைப் பிடிக்கும் அன்னிய ஆளுமைகள் இந்தியாவிற்கு புதிதல்ல.

8.பயத்தைத் தவிர்த்து துன்பத்தை எதிர்கொள்வது மனதை வலுவாக்கும்.

9. கனவில் காணும் உணவு, பசியை போக்காது. உழைத்தால் மட்டுமே உணவு.

10.கொடுக்கிற சம்பளத்திறகு குறையில்லாமல் 8 மணி நேரம் வேலை செய்துவிட்டு வருபவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் பாணம் காஃபிதான்.

11.வஞ்சனையில்லாமல் வேலை செய்தால் மனதில் கலக்கம் இல்லாமல் நிம்மதியாகச் சாப்பிடலாம்.

12.பகலுக்கு விழிகள் உண்டு; இரவுக்கு செவிகள் உண்டு.

13.மௌனம், வியக்கத்தக்க பல அரிய செயல்களை சுலபமாக செய்திடும். பேச்சுக்கலால், சிக்கல் அதிகமாகும்.

14.துயரம் எந்த கடனையும் தீர்த்து வைக்காது. கடன் வரும்முன் சேமிப்போம்.

15.செலவழிக்கும் முன் சம்பாதிப்பவனே அறிவாளி!

16.கடன் வாங்குகிறவர்கள் கவலையையும் சேர்த்தே வாங்குகிறார்கள்.

17.எந்தச் சொத்தை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது; நம்பிக்கையே பெரிய சொத்து.

18.உழைப்பதே உடலின் பயனாகும் -ஜான்சன்

19.இனபத்தின் ரகசியம் உழைப்பேயாகும் -பரோஸ்

20.உழைப்பில்லாதவன் சந்தோஷமாக இருக்க முடியாது -பிஸ்மார்க்

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, January 10, 2012

ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!

ஆட்டுக் கறியும் மாட்டுப் பாலும் (அ) வாழ்க நீ எம்மான்!

விகடன் வலையோசையில் வந்த இந்தப் பதிவை இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.
நண்பர் என்னிடம் சொன்னார்: " எப்பொழுதும் என் சட்டைப்
பையில் காந்தி படம் இருக்கும். மறந்திட்டு வெளியில்
வந்திட்டாலும் திரும்ப போய் எடுத்திட்டுத்தான் வருவேன்"

நான் கேட்டேன்: "இப்பவும் பாக்கெட்ல இருக்கா?
காட்ட முடியுமா?"

நண்பர் சொன்னார் : "காட்டுவேன்; ஆனால் கையில
தர மாட்டேன்"

நான் சொன்னேன்: "காட்டுங்க"

நண்பர் எடுத்துக் காட்டினார், ஐநூறு ரூபாய் தாளை.
அதில் இருந்த காந்தி என்னைப் பார்த்து சிரித்தார்.
******************************************************

நண்பர் நிலக் கடலை அடிக்கடி சாப்பிடுவார்.
"காந்திஜிக்கு நிலக்கடலைப் பிடிக்கும்" என்பார்.
ஐந்து ரூபாய்க்கு அல்லது பத்து ரூபாய்க்கு
நிலக்கடலைப் பொட்டலம் சாப்பிட வாங்கினால்
முதலில் பெரிதாக, நல்ல நிலக்கடலை மூன்று,
நான்கினை தனியாக எடுத்து வைத்துக் கொள்வார்.
காரணம் கேட்டேன்.

நண்பர் சொன்னார் : "சாப்பிட்டு முடிக்கும்போது
கடைசி கடலை துவர்ப்பு உள்ள வீணாப் போன
கடலைதான் வாயில வருது. அதனால சாப்பிட்டு
முடித்ததும் இந்த நல்ல கடலையை, கடைசியாய்
சாப்பிடுவேன்"
***************************************************

காந்தி படம் பார்த்துவிட்டு வந்து சொன்னார்:
"காந்தி படம் எவ்வளவு அருமை தெரியுமா?
ரிச்சர்ட் அட்டன்பரோ சூப்பரா டைரக்ட்
பண்ணிருக்காரு. பெண் கிங்க்ஸ்லி
தத்ரூபமா நடிச்சிருக்காரு." என்று சொன்னார்.
'நான் மகான் அல்ல' படமும் பார்த்தார். (பழசு)
நான் மகான் அல்ல (புதுசு), மகான் கணக்கு
இவைகள் பார்த்தாரா என்று கேட்கவில்லை நான்.
*****************************************************

"நிலக்கடலையும் ஆட்டுப் பாலும் காந்திக்குப்
பிடிக்கும்" என்றார்.

"ஆட்டுப் பால் நீங்க குடிப்பீங்களா?" என்று நான்
கேட்டேன்.

"ஆட்டுப் பால் என்பதை நான் இரண்டாகப்
பிரித்து கொள்வேன்" என்றார்.

"எப்படி?" நான் கேட்டேன்.

"ஆடு என்பது தனி; பால் என்பது தனி. அதனால
பால் வந்து மாட்டுப் பால் குடிப்பேன். கறி வந்து
ஆட்டுக் கறி சாப்பிடுவேன்" என்றார்.
*****************************************************

வித்தியாசமான பழக்கம் நண்பரிடத்தில்.
ஒரு கிலோ நிலக்கடலை, ஒரு கிலோ பட்டாணி,
ஒரு கிலோ உப்புக் கடலை வாங்கி, ஒரு பெரிய
பெட் ஜாரில் ஒன்றாகக் கொட்டி, கலந்து
சாப்பிடுவார். நண்பர்கள் நாங்கள் அவர்
வீட்டிற்கு சென்றால் அந்த டப்பாவை எடுத்து
வந்து விடுவார். நாங்கள் மூன்று கடலையையும்
சேர்த்து சாப்பிடுவோம். சுவையாகவே இருக்கும்.

ஆனால் அவர் மட்டும் நிலக் கடலையை மட்டும்
தேர்ந்து எடுத்து சாப்பிடுவார். நாங்கள் காரணம்
கேட்டோம்.

"காந்திஜிக்குத் தான் முதல் மரியாதை" என்றார்.
***************************************************

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி
கட்சிக்கு வாக்களித்தார். அதை எங்களிடம் சொன்னார்.

நாங்கள் காரணம் கேட்கும்போது, "அது (சோனியா)
காந்தியோட கட்சி" என்று சொல்லுவாரோ என்பதால்
நாங்கள் கேட்கவேயில்லை.
*******************************************************
(பி.கு.: ஜனவரி 30. நாதுராம் கோட்சேவினால்,
காந்திஜி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள்.)
-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Wednesday, January 4, 2012

நகைச்சுவை; இரசித்தவை 18

நகைச்சுவை; இரசித்தவை 18
========================

வாங்க சிரிக்கலாம்...


1. "உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?"

"எங்க வீட்டு டிவி ரிப்பேர், துதான்!"
==========================================

2. "அந்தக் கட்சிக் கூட்டத்தில எல்லோரும் சேர்ந்து
அழறாங்களே , ஏன்?"

"அங்கே 'துயர் மட்டக் குழு கூட்டம்' நடக்குதாம்"
==========================================

3. "இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்"

"அவ்வளவு பிசி ஒர்க்கா?"

"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
எழுப்பிவிடலை"
=========================================

4. "தொழில் படுத்திடுச்சின்னீ ங்களே , என்ன தொழில்?"

"பாய் வியாபாரம்!"
=========================================

5. டாக்டர்: "நீங்க உடம்பைக் குறைக்கணும்; இனிப்பைக்
குறைக்கணும்; காரத்தைக் குறைக்கணும்"

நோயாளி: "டாக்டர், நீங்க பீசை குறைக்கணும்"
===========================================

6. ஒருவர்: "தாமஸ் ஆல்வா எடிசன் பல புதிய
கண்டுபிடிப்புக்களைக் கண்டுபிடிக்காமலிருந்தால்
என்னவாயிருக்கும்?"

மற்றவர்: "வேற ஒருத்தர் கண்டுபிடிச்சிருப்பார்"
==========================================

7. நீதிபதி : " அந்த வீட்டுப் பூட்டை உடைத்து ஏன்
திருடினாய்?"

திருடன்: "என்னோட சாவி எதுவுமே அந்தப்
பூட்டைத் திறக்காததால கடைசியா பூட்டை
உடைக்க வேண்டியதாப் போச்சிங்க"
==========================================

8. தொண்டர் 1 : "தலைவர் ரொம்ப அப்பாவியா
இருக்காரா, எப்படி?"

தொண்டர் 2 : " சலூன்ல துண்டைப் போர்த்தினதுமே,
'எந்த வட்டத்தின் சார்பில போடுறே'ன்னு கேட்கிறாரு"
==========================================

9. "வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"

"ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க"

"ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்"

"ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்"

"அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"
==============================================

10. "இந்த ஆசிரியர் வித்தியாசமானவரா, எப்படி?"

"பதிலை சொல்லிட்டு, இதனோட கேள்வி என்னனு கேட்பார்"
===============================================

11. "டாக்டர், நான் யார் பேச்சையுமே கேட்குறதில்லை"

"
அதை என்னிடம் வந்து ஏன் சொல்றீங்க?"

"காது சரியா கேட்கலை; அதை சரி பண்ணுங்க டாக்டர்!"
===============================================

12. தொண்டர் 1: "தேர்தல்ல தோல்வி அடையாமல் இருக்க
என்ன வழி?"

தொண்டர் 2: "போட்டி போடாமல் இருந்திடறதுதான் ஒரே வழி!"
==============================================

13. "சுவரில் எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி..."

"என்ன செய்தே?"

" 'சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்" =============================================

14. ஆசிரியை : "ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா
பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?"

மாணவன்: "ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்
விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்"
=============================================

15. "ஏனப்பா கால் கை நல்லாத்தானே இருக்கு, இப்படி உட்கார்ந்து பிச்சை எடுக்கலாமா?"

" 'உடம்பை ரொம்ப அலட்டக்கூடாது'னு டாக்டர் சொல்லிட்டார் சார்"
=============================================

16. "இந்த விவாக மேடையில் மணமக்களையே காணோமே?"

"இது விவாக மேடை இல்லை தலைவரே; 'விவாத மேடை' !
=============================================
.
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Monday, December 26, 2011

சில சிந்தனைகள் (பகுதி 9)

சில சிந்தனைகள் (பகுதி 9)

1. தைரியக்குறைவுதான் பயம்; தைரியத்துடன் எதிர்கொண்டால் பயத்திலிருந்து வெளியேறலாம்.

2. மிகைப்படுத்தப்பட்ட நிறைகளே புகழ்ச்சி. மிகைப்படுத்தப்பட்ட குறைகளே இகழ்ச்சி.

3. குதூகலத்தோடிருக்கும் கிழவரும் வாலிபரே! குதூகலமில்லா வாலிபரும் கிழவரே!

4. ஒரு ஜாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகத்தில் ஏது கலாட்டா? -பாடல்.

5. கத்தி ஒருவனைத்தான் அறுக்கும்; கடன் பரம்பரையையே அறுக்கும்.

6. பெருமை சேர்க்கும் விஷயங்கள் எளிதில் கிடைப்பதில்லை. எளிதில் கிடைக்கும் விஷயங்கள் பெருமை சேர்ப்பதில்லை.

7. பணக்காரர்கள் அனைவரும் சந்தோஷமாய் இருப்பதில்லை. ஆனால், சந்தோஷமாய் இருப்பவர்கள் அனைவரும் பணக்காரர்களே!

8. இந்தியர்கள் வாழ்வதற்காக உழைக்கிறார்கள். ஜப்பானியர்கள் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள் -வைரமுத்து, விகடனில்.

9. எல்லா சுகமும் ஒரு சோகத்தில் முடிகிறது. எல்லா சோகமும் ஒரு சுகமாய் கனிகிறது -வைரமுத்து, விகடனில்.

10.மரணம் என்பது துக்கமில்லை. வாழ்வின் நிறைவு; உடல் அடையும் பூரணம் -வைரமுத்து, விகடனில்.

11.தண்ணில நெருப்பைப் போட்டா சாம்பல். நெருப்பு மேல தண்ணிய வைச்சா சமையல் -மாலன், புதிய தலைமுறையில்.

12.பொய் சொல்வதும் மற்றவர் மனம் புண்பட பேசுவதும் பெற்றோரைப் புறக்கணிப்பதும் க்ரைம்தான் -ராஜேஷ்குமார் (கல்கி)

13.சுத்தமாயிரு உனக்கு பெருமை சுத்தமாய் வைத்திரு உன் நாட்டுக்கு பெருமை. லஞ்சம் வாங்காதே உனக்கு பெருமை லஞ்சம் வழங்காதே உன் நாட்டுக்கு பெருமை!

14.குவளையில்தான் சோறு இல்லையே; அதில் நிரம்பும் மழையை இரசி -ஜப்பானிய ஹைக்கூ.

15.தேனைக் கொள்ளையடித்துச் செல்லும் வண்டு, தன்னையறியாமல் மகரந்தச் சேர்க்கைச் செய்துவிட்டுப் போகிறதே! -வைரமுத்து, விகடனில்.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!


Saturday, December 24, 2011

சொன்னது சரிதானா?

சொன்னது சரிதானா?

கேள்வி: "தமிழக அரசிடமிருந்து எம்.எல்.ஏ. தொகுதி
மேம்பாட்டு நிதி வரவில்லை. அதனால் தொகுதிக்கு
பணிகள் செய்ய முடியாததால் என்னால் எனது
தொகுதிக்கு செல்ல முடியவில்லை" என்று
எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியது சரியா?

பதில்: ஒரு எம்.எல்.ஏ., அவரது தொகுதி மக்களின்
பிரதிநிதியாவார். தொகுதியின் வளர்ச்சித்
திட்டங்களுக்கு அரசு வழங்கும் நிதியை அந்தத்
திட்டங்களுக்கு மட்டும் பயன்படச் செய்யுமாறு
பனி மேற்கொள்வது எம் எல் ஏ வின் கடமையாகும்.
தொகுதி நிதியை கேட்டுப் பெற வேண்டியது
உறுப்பினரின் கடமை. எந்தவொரு உள்நோக்கத்தோடும்
செயல்பட்டு நிதியை வழங்க காலம் தாழ்த்துவது
அரசுக்கு அழகல்ல. அரசிடம் விஜயகாந்த் உரிமையுடன்
கேட்டுப் பெற்று, தொகுதி மக்களின் பயன்பாட்டுக்கு
வழங்குவார் என்று நம்புகிறேன்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

இதையும் படித்துப் பாருங்கள்:
தலைமைச் செயலக திருமண மண்டபம்!








.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, November 4, 2011

நகைச்சுவை; இரசித்தவை 17



நகைச்சுவை; இரசித்தவை 17
============ ============ ==

1.] "நம்ம மன்னருக்கு சொந்தமா வளைகுடா இருக்காமே?"

"அட, அது மன்னர் வளைகுடா இல்லப்பா... மன்னார் வளைகுடா!"
--------------------------------------------------------------

2.] "நம்ம தலைவர் தேர்தல்ல தோத்தாலும் முதல்வர்
ஆயிட்டாரு"

"எப்படி?"

"ஒரு டுடோரியல் காலேஜ் ஆரம்பிச்சு அதுக்கு
முதல்வர் ஆயிட்டாரு"
------------------------------------------------------ -----------
3.] "நம்ம மன்னர் ராணிக்கும் எதிரி நாட்டு மன்னனுக்கும்
மட்டும்தான் பயப்படுவாரு"

"ஏன் அப்படி?"

"அவஙக ரெண்டு பேருக்கிட்டதானே அடி வாங்குறாரு!!!"
------------------------------------------------------
4.] "உன் கலயாணத்தைப் பத்தி விவசாய ஆராய்ச்சி
மையத்துல போயி விசாரிச்சியாமே, ஏன்டி?"

"கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்
இல்லயா, அதனாலதான்டி."
-----------------------------------------------
5.] "என்னங்க இது மணப்பெண்ணுக்கு கை,
கழுத்து, நெற்றியிலலாம் பூவாலேயே
அலங்காரம் பண்ணியிருக்கீங்க?"

"பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கச்
சொல்லி நீங்கதானே சொன்னீங்க?"
-----------------------------------------
6.] "நம்ம தலைவருக்கு அதுதான் சொந்த ஊரு"

"தலைவரு பிறந்த ஊரா?"

"இல்ல... பினாமி பேர்கள்ல அந்த ஊரையே
தலைவர் வாங்கிட்டாரு"
---------------------------------------------
7.] "எங்க கடையில ஏழைகளுக்காக ஒரு திட்டம் வச்சிருக்கோம்"

"என்ன திட்டம்?"

"நகையை தொட்டுப் பார்க்க நூறு ரூபாய் மட்டும்ங்கிறதுதான
அந்தத் திட்டம்"
-----------------------------------------------------------

8.] ஆசிரியை: "உங்க பையனைக் கண்டிச்சு வையுங்க"

தாய்: "என் பையன் என்ன செய்தான்?"

ஆசிரியை: "என்டா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டால்,
'தேர்தல் ஜுரம்'னு பதில் சொல்றான்."
--------------------------------------------------------------------------------

9.] "நம்ம தலைவர் எப்பவும் எளிமையானவரு"

"எப்படி?"

"அவருக்கு 'நாவலர்' பட்டம் தர்றோம்னு சொன்னதுக்கு,
'துணுக்கர்' பட்டம் போதும்கிறாரே!"
---------------------------------------------------------------------------------

10] "நம்ம தலைவரு ஏட்டிக்கு போட்டியா பேசுறதுல வல்லவர்"

"எப்படி?"

"எதிர்கட்சித் தலைவருக்கு 'ஆமை வடை' பிடிக்கும்னு
சொன்னதுக்கு, நம்ம தலைவர் 'எனக்கு முயல் வடை
பிடிக்கும்'ன்னு சொல்றாரு"
----------------------------------------------------------

11] "அந்த டாக்டர் போலி டாக்டர்னு நினைக்கிறேன்"

"எதனாலே?"

"சின்ன ஊசியாப் போடச் சொன்னால் குண்டூசி போதுமாங்கிறார்!"
------------------------------------------------------------------------------

12] "அந்த அரசியல்வாதி ஏன் ஒரே நேரத்தில் ரெண்டு கட்சி
ஆரம்பிச்சாரு?"

"அவரோட ரெண்டு மகன்களுக்கும் எதிர்காலத்தில்
பயன்படும்னுதான்."
--------------------------------------------------------------------------------

அன்பர்களுக்கு ஈத் முபாரக், பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, October 11, 2011

விகடனும் நானும்!

விகடனும் நானும்!


அன்பின் சக பதிவர்களே!
நலம்தானே?

பரவலாக ஒரு புதிய திரைப்படம் வெளியானதும்
பதிவர்கள் பலரும் திரை விமரிசனம் எழுதுவார்கள்.
வித்தியாசமாக நான் 'இதழ் விமரிசனம்' எழுதி
இருக்கிறேன். இது விகடனுக்கு நான் எழுதும்
கடிதம்:-

இந்தக் கடிதம் பொதுவான இதழ் பற்றியும் இந்த
வார இதழ் (12 .10 . 2011 ) பற்றியும் எனது கருத்துக்கள்.

விகடன் தீபாவளி மலர் அறிவிப்பு ஏன் இத்தனை
தாமதம்? இப்பத்தான் பிளான் பண்ணினீர்களோ ?
(குறிப்பு: 06.10.2011-ல் இந்தக் கடிதம் எழுதினேன்.
08.10.2011-ல் விகடன் தீபாவளி மலர் வெளிவந்து விட்டது.)

144 +8 (அட்டை ) பக்க விகடனில் 'இன்பாக்ஸ்'
பகுதிக்கு இடம் இல்லையா? இன்பாக்ஸ் பகுதியில்
ஃபோட்டோக்கள் சிறியதாய் போட்டு தகவல்கள்
அதிகமாய் கொடுங்கள்.

என் விகடனை 14 பக்கங்களாக குறைத்து விட்டீர்களே?
'ஸ்மைல் ப்ளீஸ்' பகுதியும் இல்லையே? இனிவரும்
வாரங்களில் 'என் விகடன்' தனி இதழ் கிடையாது;
விகடனின் உள்ளேதான் வரும்; சரியா?

கடிதங்கள் பகுதியும் ட்ரிபிள் ஷாட் பகுதியும் நினைத்தால்
வருகிறது; இல்லாவிடில் வருவதில்லை. அவை தொடர்ந்து
வரவேண்டும்.

'ட்ரிபிள் ஷாட்'டுக்கு குறிப்புக்கள் எதுவும் அனுப்பினால்
உங்கள் ரிப்ளை 'invalid keyword' என்று வருகின்றது.
சுமார் 3 அல்லது 4 தடவைகள் வருகின்றது.
எஸ்.எம்.எஸ். அனுபியவகையிலும் உங்களது ரிப்ளை
வருகின்ற வகையிலும் ரூ. 16 - 20 பணம் காலியாகி
விடுகின்றது. பலன் பூச்சியம்.

சென்ற இதழ்வரை விகடன் மற்றும் என் விகடன்
இரண்டின் பக்கங்களையும் தொடர்ச்சியாய் போட்டு
120 பக்கங்கள் என்று போடுவீர்கள். இந்த வாரம்
இரண்டு இதழ்கள் பக்கங்களையும் தொடர்ச்சியாய்
போடாமல் 84 பக்கங்கள் , 68 பக்கங்கள் என்று
போட்டது ஏன்?

இந்த இதழில் 82 -ஆம் பக்கம் அறிவிப்பு "மிக மிக
அதிக பக்கங்கள்" என்கிறது. ஆக அடுத்த வாரம்
'டபுள் டுமீல்' கிடையாதா? சிங்கிள் டுமீல்தானா?

இந்த வாரம் 22 + 15 = 37 பக்கங்கள் விளம்பரங்கள்.
152 - 37 = 115 பக்கங்கள் விஷயங்கள் உண்டு. அடுத்த
வாரம் மிக மிக அதிக பக்கங்கள் என்று வைத்துக்
கொண்டால் 100 + 100 = 200 பக்கங்கள். எப்படியும்
60 பக்கங்கள் விளம்பரங்கள் இருக்க வாய்ப்புண்டு.
மற்ற பத்திரிகைகள் 'அடுத்த இதழ் மட்டும் 25 ரூபாய்'
என்பதுபோல் அறிவிப்பதில்லை. (அதே விலையில்
3 புத்தகங்கள் கூட தருவது உண்டு.) அதிக
விளம்பரங்கள் வெளியிடுவதற்காக அதிக
பக்கங்கள் தருகின்றீர்கள். விளம்பரதாரர்களிட்மிருந்தே
தொகையை வசூலித்துவிடும் நீங்கள் , எங்களிடம்
அதிக விலை கேட்பது ஏன்?

இந்த வாரம் மேலாண்மை பொன்னுசாமி சாரின்
சிறுகதையில் வர்ணனைகள் மிக அதிகம்.
உரையாடல்கள் அதிகம் இல்லை. ஒரு
யோசனை: 4 பக்க அளவில் வாராவாரம்
இரு சிறுகதைகள் வெளியிடலாமே?



பல ஆண்டுகளுக்கு முன் விகடன் தீபாவளி
சிறப்பிதழ் இரு புத்தகங்களை பின் (pin) செய்து
ஒரே புத்தகமாக வரும். நடுப்பக்கத்தில் நான்கு
பின்கள் இருக்கும். இரண்டாவது மற்றும்
மூன்றாவது பின்களை நீக்கினால் இரு
புத்தகங்களாய் பிரியும். மறுபடியும் 2 ஆவது
மற்றும் 3 ஆவது பின்களை மடக்கிவிட்டுக்
கொள்ளவேண்டும். அது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

மற்றும் அக்காலங்களில் ஓர் இதழ் முழுவதும்
முழு நவீனம் (full novel) இடம்பெறும். [உதாரணம்:
ஹேமா ஆனந்ததீர்த்தன் எழுதிய 'புதிருக்கு
பெயர் பூமா' ] இப்போதும் அதுபோல ஒரு
ஒரு நவீனம் முழு வண்ணத்தில் தரலாமே?

அன்பர்களே , எனது பழைய நினைவுகளைப் புரட்டிப்
பார்த்தேன். உங்கள் அனுபவங்களையும் தெரிவிக்க
வேண்டுகிறேன்.

நன்றி!
.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...