...பல்சுவை பக்கம்!

.

Monday, December 26, 2011

சில சிந்தனைகள் (பகுதி 9)

சில சிந்தனைகள் (பகுதி 9)

1. தைரியக்குறைவுதான் பயம்; தைரியத்துடன் எதிர்கொண்டால் பயத்திலிருந்து வெளியேறலாம்.

2. மிகைப்படுத்தப்பட்ட நிறைகளே புகழ்ச்சி. மிகைப்படுத்தப்பட்ட குறைகளே இகழ்ச்சி.

3. குதூகலத்தோடிருக்கும் கிழவரும் வாலிபரே! குதூகலமில்லா வாலிபரும் கிழவரே!

4. ஒரு ஜாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகத்தில் ஏது கலாட்டா? -பாடல்.

5. கத்தி ஒருவனைத்தான் அறுக்கும்; கடன் பரம்பரையையே அறுக்கும்.

6. பெருமை சேர்க்கும் விஷயங்கள் எளிதில் கிடைப்பதில்லை. எளிதில் கிடைக்கும் விஷயங்கள் பெருமை சேர்ப்பதில்லை.

7. பணக்காரர்கள் அனைவரும் சந்தோஷமாய் இருப்பதில்லை. ஆனால், சந்தோஷமாய் இருப்பவர்கள் அனைவரும் பணக்காரர்களே!

8. இந்தியர்கள் வாழ்வதற்காக உழைக்கிறார்கள். ஜப்பானியர்கள் உழைப்பதற்காகவே வாழ்கிறார்கள் -வைரமுத்து, விகடனில்.

9. எல்லா சுகமும் ஒரு சோகத்தில் முடிகிறது. எல்லா சோகமும் ஒரு சுகமாய் கனிகிறது -வைரமுத்து, விகடனில்.

10.மரணம் என்பது துக்கமில்லை. வாழ்வின் நிறைவு; உடல் அடையும் பூரணம் -வைரமுத்து, விகடனில்.

11.தண்ணில நெருப்பைப் போட்டா சாம்பல். நெருப்பு மேல தண்ணிய வைச்சா சமையல் -மாலன், புதிய தலைமுறையில்.

12.பொய் சொல்வதும் மற்றவர் மனம் புண்பட பேசுவதும் பெற்றோரைப் புறக்கணிப்பதும் க்ரைம்தான் -ராஜேஷ்குமார் (கல்கி)

13.சுத்தமாயிரு உனக்கு பெருமை சுத்தமாய் வைத்திரு உன் நாட்டுக்கு பெருமை. லஞ்சம் வாங்காதே உனக்கு பெருமை லஞ்சம் வழங்காதே உன் நாட்டுக்கு பெருமை!

14.குவளையில்தான் சோறு இல்லையே; அதில் நிரம்பும் மழையை இரசி -ஜப்பானிய ஹைக்கூ.

15.தேனைக் கொள்ளையடித்துச் செல்லும் வண்டு, தன்னையறியாமல் மகரந்தச் சேர்க்கைச் செய்துவிட்டுப் போகிறதே! -வைரமுத்து, விகடனில்.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!


Saturday, December 24, 2011

சொன்னது சரிதானா?

சொன்னது சரிதானா?

கேள்வி: "தமிழக அரசிடமிருந்து எம்.எல்.ஏ. தொகுதி
மேம்பாட்டு நிதி வரவில்லை. அதனால் தொகுதிக்கு
பணிகள் செய்ய முடியாததால் என்னால் எனது
தொகுதிக்கு செல்ல முடியவில்லை" என்று
எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியது சரியா?

பதில்: ஒரு எம்.எல்.ஏ., அவரது தொகுதி மக்களின்
பிரதிநிதியாவார். தொகுதியின் வளர்ச்சித்
திட்டங்களுக்கு அரசு வழங்கும் நிதியை அந்தத்
திட்டங்களுக்கு மட்டும் பயன்படச் செய்யுமாறு
பனி மேற்கொள்வது எம் எல் ஏ வின் கடமையாகும்.
தொகுதி நிதியை கேட்டுப் பெற வேண்டியது
உறுப்பினரின் கடமை. எந்தவொரு உள்நோக்கத்தோடும்
செயல்பட்டு நிதியை வழங்க காலம் தாழ்த்துவது
அரசுக்கு அழகல்ல. அரசிடம் விஜயகாந்த் உரிமையுடன்
கேட்டுப் பெற்று, தொகுதி மக்களின் பயன்பாட்டுக்கு
வழங்குவார் என்று நம்புகிறேன்.

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

இதையும் படித்துப் பாருங்கள்:
தலைமைச் செயலக திருமண மண்டபம்!








.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Friday, November 4, 2011

நகைச்சுவை; இரசித்தவை 17



நகைச்சுவை; இரசித்தவை 17
============ ============ ==

1.] "நம்ம மன்னருக்கு சொந்தமா வளைகுடா இருக்காமே?"

"அட, அது மன்னர் வளைகுடா இல்லப்பா... மன்னார் வளைகுடா!"
--------------------------------------------------------------

2.] "நம்ம தலைவர் தேர்தல்ல தோத்தாலும் முதல்வர்
ஆயிட்டாரு"

"எப்படி?"

"ஒரு டுடோரியல் காலேஜ் ஆரம்பிச்சு அதுக்கு
முதல்வர் ஆயிட்டாரு"
------------------------------------------------------ -----------
3.] "நம்ம மன்னர் ராணிக்கும் எதிரி நாட்டு மன்னனுக்கும்
மட்டும்தான் பயப்படுவாரு"

"ஏன் அப்படி?"

"அவஙக ரெண்டு பேருக்கிட்டதானே அடி வாங்குறாரு!!!"
------------------------------------------------------
4.] "உன் கலயாணத்தைப் பத்தி விவசாய ஆராய்ச்சி
மையத்துல போயி விசாரிச்சியாமே, ஏன்டி?"

"கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்
இல்லயா, அதனாலதான்டி."
-----------------------------------------------
5.] "என்னங்க இது மணப்பெண்ணுக்கு கை,
கழுத்து, நெற்றியிலலாம் பூவாலேயே
அலங்காரம் பண்ணியிருக்கீங்க?"

"பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கச்
சொல்லி நீங்கதானே சொன்னீங்க?"
-----------------------------------------
6.] "நம்ம தலைவருக்கு அதுதான் சொந்த ஊரு"

"தலைவரு பிறந்த ஊரா?"

"இல்ல... பினாமி பேர்கள்ல அந்த ஊரையே
தலைவர் வாங்கிட்டாரு"
---------------------------------------------
7.] "எங்க கடையில ஏழைகளுக்காக ஒரு திட்டம் வச்சிருக்கோம்"

"என்ன திட்டம்?"

"நகையை தொட்டுப் பார்க்க நூறு ரூபாய் மட்டும்ங்கிறதுதான
அந்தத் திட்டம்"
-----------------------------------------------------------

8.] ஆசிரியை: "உங்க பையனைக் கண்டிச்சு வையுங்க"

தாய்: "என் பையன் என்ன செய்தான்?"

ஆசிரியை: "என்டா ஸ்கூலுக்கு வரலைன்னு கேட்டால்,
'தேர்தல் ஜுரம்'னு பதில் சொல்றான்."
--------------------------------------------------------------------------------

9.] "நம்ம தலைவர் எப்பவும் எளிமையானவரு"

"எப்படி?"

"அவருக்கு 'நாவலர்' பட்டம் தர்றோம்னு சொன்னதுக்கு,
'துணுக்கர்' பட்டம் போதும்கிறாரே!"
---------------------------------------------------------------------------------

10] "நம்ம தலைவரு ஏட்டிக்கு போட்டியா பேசுறதுல வல்லவர்"

"எப்படி?"

"எதிர்கட்சித் தலைவருக்கு 'ஆமை வடை' பிடிக்கும்னு
சொன்னதுக்கு, நம்ம தலைவர் 'எனக்கு முயல் வடை
பிடிக்கும்'ன்னு சொல்றாரு"
----------------------------------------------------------

11] "அந்த டாக்டர் போலி டாக்டர்னு நினைக்கிறேன்"

"எதனாலே?"

"சின்ன ஊசியாப் போடச் சொன்னால் குண்டூசி போதுமாங்கிறார்!"
------------------------------------------------------------------------------

12] "அந்த அரசியல்வாதி ஏன் ஒரே நேரத்தில் ரெண்டு கட்சி
ஆரம்பிச்சாரு?"

"அவரோட ரெண்டு மகன்களுக்கும் எதிர்காலத்தில்
பயன்படும்னுதான்."
--------------------------------------------------------------------------------

அன்பர்களுக்கு ஈத் முபாரக், பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Tuesday, October 11, 2011

விகடனும் நானும்!

விகடனும் நானும்!


அன்பின் சக பதிவர்களே!
நலம்தானே?

பரவலாக ஒரு புதிய திரைப்படம் வெளியானதும்
பதிவர்கள் பலரும் திரை விமரிசனம் எழுதுவார்கள்.
வித்தியாசமாக நான் 'இதழ் விமரிசனம்' எழுதி
இருக்கிறேன். இது விகடனுக்கு நான் எழுதும்
கடிதம்:-

இந்தக் கடிதம் பொதுவான இதழ் பற்றியும் இந்த
வார இதழ் (12 .10 . 2011 ) பற்றியும் எனது கருத்துக்கள்.

விகடன் தீபாவளி மலர் அறிவிப்பு ஏன் இத்தனை
தாமதம்? இப்பத்தான் பிளான் பண்ணினீர்களோ ?
(குறிப்பு: 06.10.2011-ல் இந்தக் கடிதம் எழுதினேன்.
08.10.2011-ல் விகடன் தீபாவளி மலர் வெளிவந்து விட்டது.)

144 +8 (அட்டை ) பக்க விகடனில் 'இன்பாக்ஸ்'
பகுதிக்கு இடம் இல்லையா? இன்பாக்ஸ் பகுதியில்
ஃபோட்டோக்கள் சிறியதாய் போட்டு தகவல்கள்
அதிகமாய் கொடுங்கள்.

என் விகடனை 14 பக்கங்களாக குறைத்து விட்டீர்களே?
'ஸ்மைல் ப்ளீஸ்' பகுதியும் இல்லையே? இனிவரும்
வாரங்களில் 'என் விகடன்' தனி இதழ் கிடையாது;
விகடனின் உள்ளேதான் வரும்; சரியா?

கடிதங்கள் பகுதியும் ட்ரிபிள் ஷாட் பகுதியும் நினைத்தால்
வருகிறது; இல்லாவிடில் வருவதில்லை. அவை தொடர்ந்து
வரவேண்டும்.

'ட்ரிபிள் ஷாட்'டுக்கு குறிப்புக்கள் எதுவும் அனுப்பினால்
உங்கள் ரிப்ளை 'invalid keyword' என்று வருகின்றது.
சுமார் 3 அல்லது 4 தடவைகள் வருகின்றது.
எஸ்.எம்.எஸ். அனுபியவகையிலும் உங்களது ரிப்ளை
வருகின்ற வகையிலும் ரூ. 16 - 20 பணம் காலியாகி
விடுகின்றது. பலன் பூச்சியம்.

சென்ற இதழ்வரை விகடன் மற்றும் என் விகடன்
இரண்டின் பக்கங்களையும் தொடர்ச்சியாய் போட்டு
120 பக்கங்கள் என்று போடுவீர்கள். இந்த வாரம்
இரண்டு இதழ்கள் பக்கங்களையும் தொடர்ச்சியாய்
போடாமல் 84 பக்கங்கள் , 68 பக்கங்கள் என்று
போட்டது ஏன்?

இந்த இதழில் 82 -ஆம் பக்கம் அறிவிப்பு "மிக மிக
அதிக பக்கங்கள்" என்கிறது. ஆக அடுத்த வாரம்
'டபுள் டுமீல்' கிடையாதா? சிங்கிள் டுமீல்தானா?

இந்த வாரம் 22 + 15 = 37 பக்கங்கள் விளம்பரங்கள்.
152 - 37 = 115 பக்கங்கள் விஷயங்கள் உண்டு. அடுத்த
வாரம் மிக மிக அதிக பக்கங்கள் என்று வைத்துக்
கொண்டால் 100 + 100 = 200 பக்கங்கள். எப்படியும்
60 பக்கங்கள் விளம்பரங்கள் இருக்க வாய்ப்புண்டு.
மற்ற பத்திரிகைகள் 'அடுத்த இதழ் மட்டும் 25 ரூபாய்'
என்பதுபோல் அறிவிப்பதில்லை. (அதே விலையில்
3 புத்தகங்கள் கூட தருவது உண்டு.) அதிக
விளம்பரங்கள் வெளியிடுவதற்காக அதிக
பக்கங்கள் தருகின்றீர்கள். விளம்பரதாரர்களிட்மிருந்தே
தொகையை வசூலித்துவிடும் நீங்கள் , எங்களிடம்
அதிக விலை கேட்பது ஏன்?

இந்த வாரம் மேலாண்மை பொன்னுசாமி சாரின்
சிறுகதையில் வர்ணனைகள் மிக அதிகம்.
உரையாடல்கள் அதிகம் இல்லை. ஒரு
யோசனை: 4 பக்க அளவில் வாராவாரம்
இரு சிறுகதைகள் வெளியிடலாமே?



பல ஆண்டுகளுக்கு முன் விகடன் தீபாவளி
சிறப்பிதழ் இரு புத்தகங்களை பின் (pin) செய்து
ஒரே புத்தகமாக வரும். நடுப்பக்கத்தில் நான்கு
பின்கள் இருக்கும். இரண்டாவது மற்றும்
மூன்றாவது பின்களை நீக்கினால் இரு
புத்தகங்களாய் பிரியும். மறுபடியும் 2 ஆவது
மற்றும் 3 ஆவது பின்களை மடக்கிவிட்டுக்
கொள்ளவேண்டும். அது ஒரு சுவாரஸ்யமான அனுபவம்.

மற்றும் அக்காலங்களில் ஓர் இதழ் முழுவதும்
முழு நவீனம் (full novel) இடம்பெறும். [உதாரணம்:
ஹேமா ஆனந்ததீர்த்தன் எழுதிய 'புதிருக்கு
பெயர் பூமா' ] இப்போதும் அதுபோல ஒரு
ஒரு நவீனம் முழு வண்ணத்தில் தரலாமே?

அன்பர்களே , எனது பழைய நினைவுகளைப் புரட்டிப்
பார்த்தேன். உங்கள் அனுபவங்களையும் தெரிவிக்க
வேண்டுகிறேன்.

நன்றி!
.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Monday, September 26, 2011

நகைச்சுவை; இரசித்தவை 16


அன்பிற்கினிய இரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புக்களே!
உங்களின் ஆசியோடும் ஆதரவோடும் உங்கள் 'நிஜாம் பக்கம்'
இனிய மூன்றாம் ஆண்டில் நுழைந்துள்ளது. அனைத்து அன்பு
உள்ளங்களுக்கும் நன்றி!

வாங்க இனி சிரிக்கலாம்...


நகைச்சுவை; இரசித்தவை

பிச்சைக்காரர்: "அம்மா தாயே... பிச்சை போடுங்க,
நான் வாய் பேச முடியாத ஊமை."

வீட்டுக்காரம்மா: "
பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...
எனக்கு காது கேட்காது."
=================================================

"கோர்ட்டுல என்ன டமால்னு சத்தம்?"

"சாட்சி பல்ட்டி அடிச்சிட்டாராம்"
=================================================
ஒருத்தி: "இந்த ஊர்ல போலி டாக்டர் இருக்காரா?"

மற்றவள்: "ஏன் கேட்குறே?"

முதலாமவள்: "என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை,
அவங்களுக்கு காட்டத்தான்"
================================================

"யாரோ எழுதிக் கொடுத்ததை தலைவர் மேடையில்
படிக்கிறார்னு எதிர்கட்சி குற்றம் சொல்லிச்சே,
தலைவர் என்ன பதில் சொன்னார்?"

"எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுன்னு சமாளிச்சிட்டாரு"
================================================

"அந்த பெயிண்டர் ரொம்ப தொழில் பக்தி கொண்டவர்!"

"எப்படி?"

"அவர் பிள்ளைகளுக்கு வெள்ளையப்பன், கருப்புசாமி,
நீலவேணி, பச்சையம்மாள்னு பேர் வச்சிருக்காரு"
================================================

"அவர் 'நான் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்'னு சொல்றாரே?"

"அவர் மனைவி பெயர் சத்தியம்"
================================================

"போன தீபாவளிக்கு வாங்கின ஸ்வீட் நல்லா இருந்தது அதே
மாதிரியே கொடுங்க"

"அதே ஸ்வீட்டே இருக்கு, இந்தாங்க"
==================================================

"ராத்திரியில் சுடுகாட்டுக்குப் போகனும்கறையே , ஏன்டா?"

"டாக்டர்தான் ஆவி பிடிக்க சொன்னார்"
==================================================

"என் மனைவி மாசத்தில பாதி நாளு ஹீரோயின்; பாதி நாளு
வில்லி"

"எப்படி?"

"பணம் இருக்கும் நாள்வரை ஹீரோயின். பணப் பற்றாக்குறை
சமயத்தில வில்லி"
===================================================

"தலைவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்ச பிறகு, தொண்டர்கள்
ஏன் சந்திக்க பயப்படுறாங்க?"

"தலைவர் கன்சல்டிங் ஃபீஸ் கேட்குறாராம்"
===================================================

.படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Sunday, July 31, 2011

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!

பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா மற்றும் நான்!





'உங்கள் ஜூனியர்' மாத இதழ் சார்பாக 'வாசகர் சந்திப்பு'.
எனக்கும் அழைப்பு வந்தது. 26.02.1989 அன்று திருச்சி

அஜந்தா ஹோட்டலில் நடந்த அந்தச் சந்திப்புக்கு

என் நண்பரோடு நான் சென்றிருந்தேன்.


என் அபிமான எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர்,

சுபா இவர்களோடு வாசகர் சந்திப்பும் கலந்துரையாடலும்

கேள்வி-பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றன.


பட்டுக்கோட்டை பிரபாகரிட்ம் நான் ஒரு கேள்வி
கேட்டேன். "நரேன் - வைஜயந்தி துப்பறியும்
ஒரு
நாவலை நீங்களும், பரத் - சுசீலா
துப்பறியும் ஒரு
நாவலை சுபாவும் எழுதினால்
வித்தியாசமாயிருக்குமே?"

அதற்கு, "பரத் - சுசீலாவை உருவாக்கியவன் நான்.

நான் அவர்களின் பெற்றோர்; அவர்கள் என்
குழந்தைகள்.
சுரேஷும் பாலகிருஷ்ணனும்
நரேன் - வைஜயந்தியின்
தாய், தகப்பன்.
சொந்த தாய்+தகப்பன் இருக்கும்போது
குழந்தைகளை யாராவது மாற்றிக்கொள்வார்களா?

தத்து கொடுப்பார்களா?" என்று பதில் கேள்வி
கேட்டார்.

இந்தப் பதிலை அனைவரும் வெகுவாக இரசித்தோம்.

குறிப்பு: 'கல்கி' 17.07.2011 இதழின்
'ஆஹா ஆல்பம்'
பகுதியில் இது வெளிவந்தது.


நன்றி: கல்கி வார இதழ்.




. படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Thursday, July 21, 2011

நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் (பாடல்)

நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் (பாடல்)


சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ஒலிநாடாவில்
கேட்டது இந்தப் பாடல்.

தொகையறா:
நானிலத்து முஸ்லிம்களின் தாரக மந்திரம்
நாளெல்லாம் நாவெல்லாம் சங்கை சொல்லும்
தீன் இனத்து தங்கங்களே ஒன்று கூடி
கனிவாய் சொல்வீரே...
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்...

பல்லவி:
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்றே முழங்குவோம்
நல்ல சீரணி கொண்ட கோமான் தாஹா நபிவழி தாங்குவோம்
நாமம் முழங்குவோம் இறைவன் நாமம் முழங்குவோம்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்...

ரணம் 1:
உள்ளமும் உணர்வும் இணைந்து
மேலோன் நல்லோன் புகழில் மிளிர்ந்து...
நல்லோன் புகழில் மிளிர்ந்து...
மெய் சொல்லால் நிதமும் அல்லாஹ் ஒருவனின்
மேன்மையை நீ முழங்கு...
மேன்மையை நீ முழங்கு
துன்பமும் துயரமும் மறந்து
தூய இன்ப நிலையிலே உவந்து...
இன்ப நிலையிலே உவந்து...
அன்பாய் ஈர்க்கும் அறிவின் உயிரோட்டம்
மனக் கண்ணில் தோன்றவே
நிதம் சொல்வாய் இந்த அகிலம் ஆளும் இறையோன் நாமமே
ஒன்றாய் கூடியே எந்நாளும் ஒன்றாய் கூடியே
நாரே தக்பீர்... அல்லாஹு அக்பர்...

சரணம் 2:
ஆதம் முதல் வந்த நபிமா ரெல்லாம்
வல்ல ஏகோனை நினைந்தே மொழிந்தார்களே
வானோரும் தினம் தினம் துதி பாடினார்...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... அ... ஆ...
வானோரும் தினம் தினம் துதி பாடினார்...
அன்பு தீனோரே தக்பீரை கனிந்தே சொல்வீர்
அன்பு தீனோரே தக்பீரை நிலை நாட்டுவீர்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்றே முழங்குவோம்
நல்ல சீரணி கொண்ட கோமான் தாஹா நபிவழி தாங்குவோம்
நாமம் முழங்குவோம் இறைவன் நாமம் முழங்குவோம்
நாரே தக்பீர்... அல்லாஹு அக்பர்...

பாடல் எழுதிய பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை.
பாடியவர் நெல்லை உஸ்மான். (தகவல் தந்த
பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் அண்ணன் அவர்களுக்கு நன்றி!)
இந்தப் பாடல் நீங்கள் கேட்டதுண்டா? பாடலாசிரியர் பெயர்
உங்களுக்குத்தெரியுமா?
.



படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

Saturday, July 9, 2011

தலைமைச் செயலக திருமண மண்டபம்!

தலைமைச் செயலக திருமண மண்டபம்!




கேள்வி: கடந்த தி.மு.க. ஆட்சியில்விஜயகாந்தின்


திருமண மண்டபத்தை இடித்தார்கள். அதற்கு


ஆளும் அ.தி.மு.க ஆட்சி என்ன பரிகாரம் செய்யலாம்?





பதில்: தி.மு.க. ஆட்சியில் கட்டி முடித்துச்


செயல்படாமல் கிடப்பில் கிடக்கும் தமிழக தலைமை


செயலகக் கட்டடத்தை விஜயகாந்திடம் கொடுத்து,


திருமண மண்டபமாக நடத்தச் சொல்லலாம்.





ஆனா ஒண்ணு பாஸ், இந்த ஐடியாவை நான்தான்


முதலில்சொல்கிறேன். "சமச்சீர் கல்விபற்றி நான்


அப்பவே சொன்னேன்" என்று ராமதாஸ்


சொல்வதுபோல யாரும் பங்குக்கு வரக்கூடாது, ஆமா!



குறிப்பு: ஆனந்த விகடன் 29.06.2011 இதழில் 'நானே கேள்வி; நானே பதில்' பகுதியில் வெளிவந்தது.



நன்றி: ஆனந்த விகடன்.



.



படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!
Related Posts Plugin for WordPress, Blogger...