...பல்சுவை பக்கம்!

.

Friday, September 17, 2010

குண்டப்பா & மண்டப்பா - 3

குண்டப்பா & மண்டப்பா - 3
குண்டப்பா & மண்டப்பா - 2 இங்கே!


குண்டப்பாவும் மண்டப்பாவும் ஒரு நாள்
இரவு காட்சி திரைப்படம் பார்க்கப் போனார்கள். 5 கி.மீ.
தொலைவிலுள்ள பக்கத்து ஊருக்கு போகும்போது
பஸ்ஸில் போய்விட்டார்கள்.

அது ஒரு பேய் படம். (ஆமாம்... ஒரு பேய்தான்!)
பயந்துகொண்டே பார்த்து இரசித்துவிட்டு, ஊருக்குத்
திரும்பி வருவதற்கு நள்ளிரவு 12 மணியாகிவிட்டதால்
பஸ் இல்லை. ஐந்து கிலோ மீட்டர் தூரத்தையும்
நடந்து போய்விடலாம் என்று நடக்க ஆரம்பித்தார்கள்.
அவர்களின் ஊர் முனைவரையிலும் வந்துவிட்டார்கள்.

அங்கிருந்து சாலை இரண்டுபுறமும் பிரிந்து
குண்டப்பா வீட்டிற்கு வலப்புறம் செல்லவேண்டும்.
மண்டப்பா வீட்டிற்கு இடப்புறம் செல்லவேண்டும்.

அந்த இடம் வந்ததும் குண்டப்பாவிற்கு அதற்குமேல்
தனியாகச் செல்ல பயம் வந்துவிட்டது. மண்டப்பாவை
தனது வீடுவரை வந்து விட்டுச் செல்லுமாறு
கூப்பிட்டான். அதனால், குண்டப்பா வீடுவரை
வந்த மண்டப்பா கிளம்பும்போது அவனுக்கு பயம்
வந்துவிட்டது. "ம்ஹூம் எனக்கு பயமாயிருக்கு.
நீ எங்கள் வீடுவரை வந்து விட்டுட்டுப் போ" என்று
குண்டப்பாவைக் கூப்பிட்டான்.

"நீ முதலிலேயே கூப்பிட்டிருந்தால் நானே வந்து
உன் வீடுவ்ரை கூடவந்து விட்டிருப்பேனே;
நீ என்னைவிட பயந்தாங்கொள்ளியா இருக்கியே!"
என்று திட்டிக்கொண்டே மண்டப்பாவை அவன் வீட்டில்
கொண்டுபோய் விட்டான், குண்டப்பா.

அப்படி கிளம்பும்போது குண்டப்பாவுக்கு பயம்வந்து,
மண்டப்பாவைத் துணைக்குக் கூப்பிட்டான் குண்டப்பா!
இப்படி இருவரில் யாருக்குமே தனியாக துணிச்சலாக
போவதற்கு தைரியம் வரவில்லை.

இந்த மாதிரியே இரண்டு பேரும் மாறி, மாறி
இருவர் வீட்டிற்கும் நடந்துகொண்டே இருந்தார்கள்.

அப்புறம்...
பொழுதும் விடிஞ்சிருச்சி!
கதையும் முடிஞ்சிருச்சி!!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குண்டப்பா & மண்டப்பா - 4 இங்கே!


வாக்கு அளித்து, கருத்து தெரிவியுங்கள்! நன்றி!!

38 comments:

சே.குமார் said...

ha... ha... ha....
kundappa eppa nallaa irukkara?
ha... ha.... ha...

Chitra said...

அப்புறம்...

பொழுதும் விடிஞ்சிருச்சி!

கதையும் முடிஞ்சிருச்சி!!

.....எங்க மேல என்ன காண்டப்பா? ஹா,ஹா,ஹா,ஹா.....

Riyas said...

ஆஹா.... நம்பி வாசித்தேன்

நாடோடி said...

ஆஹா.. கிள‌ம்பிட்டாங்க‌ப்பா கிள‌ம்பிட்டாங்க‌.. :)

Abu Nadeem said...

ஆ..... ..இப்படி ஏமாத்திடீங்க......பொழுது விடிஞ்சி வீட்டுக்கு போனாங்களா!

அருண் பிரசாத் said...

நீங்க மண்டப்பாவா? குண்டப்பாவா?

சீமான்கனி said...

ஏன் அண்ணா கதைய பதியிலேயே முடிச்சுடீங்க???

சீமான்கனி said...

அடுத்தநாள் அவங்க சர்கஸ் பார்க்க போன கதை???!!!! அடுத்த பாகமா...??சரி...நடத்துங்க....

சிநேகிதன் அக்பர் said...

நல்ல கெளப்புறீங்க பாஸ்...

NIZAMUDEEN said...

//சே.குமார் said...
ha... ha... ha....
kundappa eppa nallaa irukkara?
ha... ha.... ha... //

வாங்க மனசு குமார்!
நல்லா இருக்காங்க ரெண்டு பேரும்.
மீண்டும் வரோம்னு சொல்லியிருக்காங்க
ரெண்டு பேரும்...
நீங்களும் மறக்காம வந்திடுங்க...

NIZAMUDEEN said...

//Chitra said...
அப்புறம்...

பொழுதும் விடிஞ்சிருச்சி!

கதையும் முடிஞ்சிருச்சி!!

.....எங்க மேல என்ன காண்டப்பா? ஹா,ஹா,ஹா,ஹா.....///

வாங்க சித்ராக்கா...
உங்கமேல் எனக்கு காண்டு எதுவுமில்லை.
அவய்ங்க பேரு: குண்டக்கா(ப்பா),
மண்டக்கா(ப்பா) அப்படினு
இருக்கே, அது அவங்க் குத்தமா?

NIZAMUDEEN said...

//Riyas said...
ஆஹா.... நம்பி வாசித்தேன்//

நம்ம்ம்பி வந்தீங்க... ஆனா,
'வெடி'வேலு அடி வாங்கின கதைமாதிரி
ஆயிருச்சா? சாரி பாஸ் (எ) ரியாஸ்!

NIZAMUDEEN said...

//நாடோடி said...
ஆஹா.. கிள‌ம்பிட்டாங்க‌ப்பா கிள‌ம்பிட்டாங்க‌.. :)//

கிளம்புனாதான் என்ன? அதுக்கு நீங்க ஏன் ஓடறீங்க?
ரொம்ப ஸ்டெடியா ஸ்டீ(பன்)ல் மாதிரி நில்லுங்க
நாடோடி; ஓடோடி போகாதீங்க...

NIZAMUDEEN said...

//Abu Nadeem said...
ஆ..... ..இப்படி ஏமாத்திடீங்க......பொழுது விடிஞ்சி வீட்டுக்கு போனாங்களா! //

வீட்டுக்குப் போனாங்களாவா? அடுத்த கதையில்
வரும்போது கேட்ருவோம், அபு நதீம்!

NIZAMUDEEN said...

//அருண் பிரசாத் said...
நீங்க மண்டப்பாவா? குண்டப்பாவா?//

ஹா..ஹா... மண்டப்பா, குண்டப்பா இதில்
உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்கிட்டு
மற்றதை என்னிடம் கொடுத்திருங்க.
(சும்மா ஜாலிக்கு அருண் பிரசாத்!)

NIZAMUDEEN said...

//சீமான்கனி said...
ஏன் அண்ணா கதைய பதியிலேயே முடிச்சுடீங்க???//

நல்லா பாருங்க சீமான், பாதியில் முடிக்கலையே!
'அன்பன்'னு என் பெயர் போடுறதுக்கு முந்தின
வரியில்தான் முடிச்சேன். பாதியில் முடிக்கலை.
(எப்பூடி?)

//சீமான்கனி said...
அடுத்தநாள் அவங்க சர்கஸ் பார்க்க போன கதை???!!!! அடுத்த பாகமா...??சரி...நடத்துங்க.... //

''சர்க்கஸா? சினிமாவா? ஸ்கூலா?'' கதையைப்
படிச்சிருக்கிங்களா? இதோ லிங்க்:
http://nizampakkam.blogspot.com/2009/09/blog-post_03.html

NIZAMUDEEN said...

//சிநேகிதன் அக்பர் said...
நல்ல கெளப்புறீங்க பாஸ்...//

நீங்க அசரமாட்டீங்கன்னாரே, ஸ்டார்ஜன்!
இதுக்கே பயந்திட்டீங்க போல...?

r.v.saravanan said...

பொழுதும் விடிஞ்சிருச்சி!
கதையும் முடிஞ்சிருச்சி!!

ஆஹா ஆஹா

ஹுஸைனம்மா said...

ரெண்டு பேரும் உங்க சீடர்களோ?

:-)))

NIZAMUDEEN said...

//r.v.saravanan said...
பொழுதும் விடிஞ்சிருச்சி!
கதையும் முடிஞ்சிருச்சி!!

ஆஹா ஆஹா//

கதை முடிஞ்சதுக்கே இவ்வளவு சந்தோஷமா?
என்ன கொடும சரவணன்? அப்படின்னா...
"கு.ம. பகுதி 4"-க்கு படிக்க வருவீங்களா,
மாட்டீங்களா? வாங்ங்ங்ங்க...

NIZAMUDEEN said...

//ஹுஸைனம்மா said...
ரெண்டு பேரும் உங்க சீடர்களோ?

:-))) //

இதெல்லாம் எப்படித்தான் கண்டுபிடிக்கிறீங்களோ?
நீங்களாவது என்னோட சீடர்களான்னுதான் கேட்டீங்க.
அருண் பிரசாத் 'குண்டப்பாவா; மண்டப்பாவா?'ன்னு
டைரக்டாவே கேட்டுட்டாரு.
கருத்திற்கு நன்றி ஹுஸைனம்மா!

சீமான்கனி said...

//''சர்க்கஸா? சினிமாவா? ஸ்கூலா?'' கதையைப்
படிச்சிருக்கிங்களா? இதோ லிங்க்:
http://nizampakkam.blogspot.com/2009/09/blog-post_03.html ///


ஆத்தி இதுவேறயா ஆளைவிடுங்க ஐயா...

ஸாதிகா said...

ஹா..ஹா..ஹா.. நடந்து நடந்து குண்டப்பாவும் மண்டப்பாவும் கால் வலியால் தைலம் தடவிக்கொண்டார்களே அது என்ன தைலம் சகோ நிஜாமுதீன்?கோடாலி மார்க்கா?கோல்ட் மெடலா?ஆர் எஸ் பதி தைலமா? இல்லை மூவா?

அன்னு said...

நல்ல வேளை ரெண்டு பேரும் ஒரே ஊர்ல இருந்தாங்க. வேற வேற ஊரா இருந்தா...ஊர் மக்களுக்கெல்லாம் ஃப்ரீயா ராத்திரி ரவுண்ட்ஸ்தேன். கலக்குங் பாய்.

இப்படிக்கு நிஜாம் ..., said...

நல்ல காமெடி! நல்லவேளை குண்டப்பா மண்டப்பா மாதிரி நமக்கு ஒரு நண்பர் இல்லை.

அன்புடன் மலிக்கா said...

நல்ல காமெடி நிஜாமண்ணா. குண்டக்க மண்டக்க இருப்பாங்கபோல. ஹா ஹா.

NIZAMUDEEN said...

//சீமான்கனி said...
//''சர்க்கஸா? சினிமாவா? ஸ்கூலா?'' கதையைப்
படிச்சிருக்கிங்களா? இதோ லிங்க்:
http://nizampakkam.blogspot.com/2009/09/blog-post_03.html ///


ஆத்தி இதுவேறயா ஆளைவிடுங்க ஐயா...//

நல்லது; கருத்திற்கு நன்றி சீமான்கனி! மீண்டும் வாங்க!

NIZAMUDEEN said...

//ஸாதிகா said...
ஹா..ஹா..ஹா.. நடந்து நடந்து குண்டப்பாவும் மண்டப்பாவும் கால் வலியால் தைலம் தடவிக்கொண்டார்களே அது என்ன தைலம் சகோ நிஜாமுதீன்?கோடாலி மார்க்கா?கோல்ட் மெடலா?ஆர் எஸ் பதி தைலமா? இல்லை மூவா?//

வேற எதுவோ நாட்டு'நடப்பு'த் தைலம்னு நினைக்கிறேன்.
கருத்திற்கு நன்றி ஸாதிகா...!

NIZAMUDEEN said...

//அன்னு said...
நல்ல வேளை ரெண்டு பேரும் ஒரே ஊர்ல இருந்தாங்க. வேற வேற ஊரா இருந்தா...ஊர் மக்களுக்கெல்லாம் ஃப்ரீயா ராத்திரி ரவுண்ட்ஸ்தேன். கலக்குங் பாய்.//

அட ஆமாம், வேற வேற ஊராயிருந்தால்???
இதுகூட (அடுத்த கதைக்கு) நல்ல ஐடியாவா
இருக்கே!
கருத்திற்கு நன்றி அன்னு!

NIZAMUDEEN said...

//இப்படிக்கு நிஜாம் ..., said...
நல்ல காமெடி! நல்லவேளை குண்டப்பா மண்டப்பா மாதிரி நமக்கு ஒரு நண்பர் இல்லை. //


ஆமாம் நிஜாம் நீங்க சொன்னதுபோல் நமக்கும்
இதுமாதிரி நண்பர்(கள்) இல்லைதான். கருத்திற்கு
நன்றி!

NIZAMUDEEN said...

//அன்புடன் மலிக்கா said...
நல்ல காமெடி நிஜாமண்ணா. குண்டக்க மண்டக்க இருப்பாங்கபோல. ஹா ஹா.//

நல்லது, தலைப்பை 'குண்டக்க, மண்டக்க'னு
மாத்திறலாம்கிறீங்களா, கவிஞர் மலிக்கா?

ஒ.நூருல் அமீன் said...

பல்சுவையில் புதிதாக சிறுவர் கதைப்பகுதியும் சேர்திருக்கின்றீர்களா நிஜாம். ஆறு முதல் அறுபது வரை படித்து மகிழ தகுந்த பகுதி!

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html

தமிழினி said...

இப்போது தமிழ்10 பாதுகாப்பாக இயங்குகிறது மேலும் தமிழ்10 – மால்வேர் குறித்த விளக்கங்கள் , தகவல்களுக்கு இங்கு செல்லவும்

NIZAMUDEEN said...

//ஒ.நூருல் அமீன் said...
பல்சுவையில் புதிதாக சிறுவர் கதைப்பகுதியும் சேர்திருக்கின்றீர்களா நிஜாம். ஆறு முதல் அறுபது வரை படித்து மகிழ தகுந்த பகுதி!//

அப்படியா!!! மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாங்க நூருல் அமீன் அண்ணன்!

NIZAMUDEEN said...

//ஜெய்லானி said...
http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html //

வலைச்சரத்தில் தாங்கள் குறிப்பிட்டிருந்த அந்த இடுகை படித்து மிக்க மகிழ்ச்சி! வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ஜெய்லானி!

NIZAMUDEEN said...

//தமிழினி said...
இப்போது தமிழ்10 பாதுகாப்பாக இயங்குகிறது மேலும் தமிழ்10 – மால்வேர் குறித்த விளக்கங்கள் , தகவல்களுக்கு இங்கு செல்லவும்//

தகவலுக்கு நன்றி தமிழினி!

அன்னு said...

நிஜாம் பாய், உங்களை ஒரு மெகா (!!) தொடருக்கு அழைத்திருக்கிறேன். தவறாமல் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.
http://mydeartamilnadu.blogspot.com/2010/09/blog-post_28.html

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...