...பல்சுவை பக்கம்!

.

Saturday, November 28, 2009

குண்டப்பா & மண்டப்பா (2)


குண்டப்பா & மண்டப்பா (2) நகைச்சுவை

குண்டப்பா & மண்டப்பா (1) இங்கே!

குண்டப்பா, தனது வீட்டின் சுவரில் ஆணி அடிப்பதற்காக ஏணியில் ஏறினார்.
உதவி மண்டப்பா அவர்கள். குண்டப்பா ஏணியில் ஏறியதும், மண்டப்பா
ஆணியையும சுத்தியலையும் எடுத்து குண்டப்பாவிடம் கொடுத்தார்.

மண்டப்பா கொடுத்த ஆணியை வாங்கி அப்படியே சுவரில்
வைத்து அடித்தார் குண்டப்பா. அதாவது தலைப் பக்கத்தை
சுவரில் வைத்து, கூர்முனையை சுத்தியலால் அடித்தார்
குண்டப்பா. அதனால் ஆணி சுவரில் இறங்கவில்லை.

நான்கு தடவைகள் அடித்து பார்த்துவிட்டு, "எ‌ன்ன மண்டப்பா
இ‌‌ந்த ஆணி சுவரில் இறங்க மாட்டேங்குதே" என்றார் குண்டப்பா.

வாங்கிப்பார்த்துவிட்டு, "அட இ‌து தலைகீழ் மாற்றமாக தயா‌ர்
பண்ணி இருக்கான்கள்" எ‌ன்று விளக்கினார் மண்டப்பா.

"அப்படியா! அட அப்படியில்லப்பா.இ‌து எதிர் சுவரில் அடிக்க
வேண்டிய ஆணிப்பா, அப்படித்தான் இருக்கும்" எ‌ன்று
கூறிவிட்டு அப்படியே எதிர் சுவரில் போய் ஆணி அடித்து
காலண்டரை மாட்டினார் குண்டப்பா!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குண்டப்பா & மண்டப்பா - 3 இங்கே!வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

2 comments:

இப்படிக்கு நிஜாம்.., said...

:)))))) அருமையான புதுமையான காமெடி. போட்டுத்தாக்குங்க நிஜாம்.

NIZAMUDEEN said...

//இப்படிக்கு நிஜாம்.., said...
:)))))) அருமையான புதுமையான காமெடி. போட்டுத்தாக்குங்க நிஜாம்.//

கருத்திற்கு நன்றி 'இப்படிக்கு நிஜாம்'

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...