...பல்சுவை பக்கம்!

.

Sunday, November 8, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 4)



சில சிந்தனைகள் (பகுதி - 4)

1. ஆணவம் வெற்றி வாய்ப்பைக் கெடுக்கும்.

2. இளமைக் கால உழைப்பு; அந்திமக் கால சுகம்.

3. ஆர்ப்பாட்டம், மறைமுக விரோதிகளை உருவாக்கும்.

4. நன்றியைப் பாராட்டுபவன், ஒருக்காலமும் நசிந்து போக மாட்டான்.

5. மிதமான வேலை, பதமாக முடியும்.

6. தற்பெருமை, உழைப்பைக் கெடுத்து, உயர்வைத் தடுக்கும்.

7. நேரத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், முயற்சியைத் துரிதப் படுத்த முடியும்.

8. தொண்டுள்ளம் கொண்டவன், பன்னெடுங்காலம் வாழ்வான்.

9. நயவஞ்சகனின் சகவாசம், நாசத்தின் தொடக்கம்.

10. உயர்ந்த வாழ்வின் திறவுகோல், உழைப்பாகும்.

11. புழங்காத பணமும் இறைக்காத கிணறும் பாழ்படும்.

12. பிழைப்பதற்கு வழி, உழைப்பில் இருக்கிறது.

13. செல்லம் சீரழிக்கும்; அன்பு பண்பை வளர்க்கும்.

14. தாராளமாய் இருப்பவன், ஏராளமாய் சம்பாதிப்பான், நண்பர்களை.

15. மேகம் திரண்டால் மழை; சோகம் சூழ்ந்தால் கண்ணீர்.

**நன்றி: 'சிந்தனையின் தேன் துளிகள்'-அல்ஹாஜ் எம்.ஏ.ப்பீ.ரஹமத்துல்லாஹ்.

**அன்பன்:அ..முஹம்மது நிஜாமுத்தீன்.


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

9 comments:

தேவன் மாயம் said...

சிந்தனைகள் நல்லாயிருக்குங்க!!!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//தேவன் மாயம் said...
சிந்தனைகள் நல்லாயிருக்குங்க!!!//


கருத்திற்கு நன்றி தேவன் மாயம்!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நிஜாம் நீங்க தமிழ் வாத்தியாரா?

எல்லாமே அருமை . எங்களுக்கும் கொஞ்சம் இதல்லாம் எப்படின்னு சொல்லுங்க!



ஊட்டியில் ஜாலி கலாட்டா

http://saidapet2009.blogspot.com/2009/11/blog-post_8324.html

இதையும் கொஞ்சம் பாருங்க . உங்க அளவுக்கு இருக்காது கொஞ்சம் வித்தியாசமா எழுதலான்னு பார்த்து சொல்லுங்க ...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//ஸ்ரீ.கிருஷ்ணா said...
நிஜாம் நீங்க தமிழ் வாத்தியாரா?

எல்லாமே அருமை . எங்களுக்கும் கொஞ்சம் இதல்லாம் எப்படின்னு சொல்லுங்க!//

நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா...

நான் தமிழ் வாத்தியார் அல்ல.
ஆனால், எங்கள் குடும்பத்தில்
நிறைய ஆசிரியர்கள் உண்டு.

மற்றும் நான் தமிழன், தமிழ்ப்பிரியன்
என்பதில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

S.A. நவாஸுதீன் said...

கருத்தில், கவனத்தில் கொள்ள வேண்டிய சிந்தனைகள் நிஜாம்

நிஜாம் கான் said...

அருமை நிஜாம். தொடரட்டும் தங்களின் தமிழ்ப்பணி

அன்புடன் மலிக்கா said...

நிஜாமண்ணா அத்தனை துளிகளும் அருமை..

உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

S.A.நவாஸ்தீன், கருத்திற்கு நன்றி!
இப்படிக்கு நிஜாம், கருத்திற்கு நன்றி!
கருத்தும் தந்து விருதும் தந்த
கவிஞர் மலிக்கா தங்களுக்கு நன்றி!

Ajai Sunilkar Joseph said...

ஒவ்வொரு சிந்தனையும்
அருமை நண்பரே....
உங்கள் தளத்தில் நான்
படித்த முதல் பதிவு இதுவே
இனி தங்கள் தளத்தை தொடர்வேன்
விரும்பினால் எம் தளத்திற்க்கும்
வாங்க நண்பரே இதோ இணைப்பு
ajaisunilkarjoseph.blogspot.com

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...