காமெடி குடும்பம் (நகைச்சுவை)
ஓர் அம்மாவும் ஒரு மகனும் இருந்தார்கள். அந்த அம்மா தன் மகனுக்கு நல்ல குணவதியாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள்.
ஒரு சில மாதங்களுக்குப் பிறகு... ஒருநாள்.
அந்த மருமகள் சமையல் செய்து வைத்துவிட்டு சில பொருட்கள் வாங்கி வரலாம் என்று கடைவீதி வரைக்கும் சென்றிருந்தாள். அப்போது அந்த அம்மாள் சமையலறைக்குச் சென்று, சிறு தட்டில் சிறிது சோறும் அதற்கேற்ற குழம்பும் அதன்மேல் ஊற்றி எடுத்துக் கொண்டு,
சோறு எடுத்தது தெரியாமலிருக்க, அதை சமமாகப் பரப்பி வைத்துவிட்டு, 'மருமகள் வருவதற்குள் சாப்பிட்டு விடுவோம்' என்று நினைத்துக் கொண்டு ஓர் அலமாரியின் பின்புறமாக மறைவாகச் சென்று சாப்பிட ஆரம்பித்தார்.
சற்று நேரத்தில் கடைத் தெருவிலிருந்து திரும்பி வந்த மருமகள் பொருட்களை வைத்துவிட்டு தன் மாமியார் எங்கே என்று தேடினாள். மாமியாரைக் காணாததால், 'எங்காவது பக்கத்து வீட்டுக்கு வம்பு பேசப் போயிருப்பார்கள்' என்று முடிவு செய்து, அவளும் ஒரு தட்டில் சோறும் குழம்பும் எடுத்துக் கொண்டு, 'மாமியார் வருவதற்குள் அவருக்குக் தெரியாமல் சாப்பிட்டு விடுவோம்' என்ற எண்ணத்தோடு, மாமியார்
மறைந்திருந்த அதே அலமாரியின் பின்புறமாக மறைவைத்தேடிச் சென்றாள்.
சென்றவள் ஏற்கெனவே அங்கே மாமியார் இருப்பதைப் பார்த்து பேயறைந்ததைப்போல் விழிக்க ஆரம்பித்து, பேச்சு வராமல் தடுமாறினாள்.
மருமகளைப் பார்த்த மாமியாரும் பேந்த, பேந்த விழித்தாலும் சற்று சுதாரித்துக் கொண்டு, மருமகளிடம், "என்னடியம்மா எடுத்து வந்தாய்?"
என்று கேட்டார்கள்.
மருமகளும் தெளிவு பெற்றவளாய், "உங்களுக்கு மறுசோறு எடுத்து வந்தேன் அத்தை!" என்று பதில் சொன்னாள்.
அதற்கு, "என்னைப்போல மாமியாரும் உன்னைப்போல மருமகளும் இருந்தால் இந்த வீடு நல்லா உருப்பட்டுடும்" என்றாராம்.
காமெடியான குடும்பம்தானே சார்?
அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
6 comments:
ஹா ஹா சரியான காமடி குடும்பம்
// "உங்களுக்கு மறுசோறு எடுத்து வந்தேன் அத்தை!"//
ஹா ஹா ஹா!!!
நல்ல காமெடி தான் நிஜாம். ஆனால் ஒன்றோடு முடிந்தது ஏமாற்றம். நிறைய எதிர்பார்க்கிறோம் தங்களிடம்.
இரசித்து... சிரித்த...
ஜலீலா...
புலவன் புலிகேசி...
இப்படிக்கு நிஜாம்...
அனைவருக்கும் நன்றி!
மேலும் எதிர்பாருங்கள் நிஜாம்.
வாங்க வந்து நான் கொடுக்கும் அவார்டை பெற்று கொள்ளுங்கள்
விருது கொடுத்த ஜலீலா அவர்களுக்கு,
மிக்க நன்றி! தாயுள்ளத்துடன் அனைவருக்கும்
விருது வழங்கியுள்ளீர்கள்.
அது மட்டுமா?
வள்ளல்தன்மையுடன் எனக்கு
'பல்சுவை மன்னன்' பட்டமும்கூட.
தாராளம், தாராளம்.
நன்ன்ன்ன்ன்றி!
Post a Comment