...பல்சுவை பக்கம்!

.

Friday, October 1, 2010

குண்டப்பா & மண்டப்பா (4)

குண்டப்பா & மண்டப்பா (4)
குண்டப்பா & மண்டப்பா (3) இங்கே!

மண்டப்பாவை, குடும்பத்தோடு விருந்துக்கு வருமாறு
அழைத்திருந்தார் குண்டப்பா. சம்மதித்த மண்டப்பா,
விருந்து நாளன்று தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன்
வந்திருந்தார்.

விருந்து கோலாகலமாக ஆரம்பமாகியது. தடபுடலான
சாப்பாடு. மட்டன் பிரியாணி, சிக்கன் ரோஸ்ட், தாளிச்சா,
கறி குழம்பு, பொறியல், வதக்கல், துவையல், பச்சடி,
பாயசம், பழம் என்று அமோகமாயிருந்தது சாப்பாடு.

"நல்லா சாப்பிடு; நல்லா சாப்பிடுங்க!" என்று
மண்டப்பாவையும் அவர் மனைவி, பிள்ளைகளையும்
கவனித்துக் கொண்டிருந்தார் குண்டப்பா.

சாப்பிட்டுக் கொண்டே, "சாப்பாடு எல்லா ஐட்டமும்
வெகு பிரமாதம்; நல்லா டேஸ்ட்டா இருக்கு!
உன் மனைவி சுவையாய் சமைத்திருக்கிறாங்க!" என்று
கூறிக் கொண்டே சாப்பிட்டார், மண்டப்பா.

அப்போது, "என் மனைவி எல்லா சாப்பாடும் ரொம்ப
சுவையாய் சமைப்பாள். அதிலும் ஊறுகாய்
ரொம்ப அருமையாய் செய்வாள். மாவடு ஊறுகாய்
என் மனைவி செய்தது, அஞ்சு வருஷமாய் எங்களிடம்
இருக்கு!" என்று மனைவியைப் பற்றி பெருமையாய்
மண்டப்பாவிடம் சொன்னார் குண்டப்பா.

"அப்படியா, அதை எடுத்துவரச் சொல்லு; சாப்பிட்டுப்
பார்ப்போம்" என்றார் மண்டப்பா.

"என்னது, சாப்பிட்டுப் பார்க்கணுமா!? அப்படி சாப்பிட்டு
பார்த்திருந்தால், இப்படி அஞ்சு வருஷம் வைத்திருக்க
முடியுமா???" என்று பதறினார் குண்டப்பா.

அதைக் கேட்ட மண்டப்பா விருந்து சாப்பிடுவதை
மறந்து திகைத்துவிட்டார். குண்டப்பா யாரு? அறிவுக் கொழுந்து அல்லவா!


அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.


படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

12 comments:

r.v.saravanan said...

ஹி ஹி

ஹுஸைனம்மா said...

நல்லவேளை நான் விருந்துக்கு வரலை!! ;-)))

அஹமது இர்ஷாத் said...

super..

DrPKandaswamyPhD said...

கொடுத்திருந்தா, மண்டப்பா அதையும், அஞ்சு வருசமென்ன, எத்தனை வருசம் ஆகியிருந்தாலும், அதையும் ஒரு வெட்டு வெட்டியிருப்பார்னு நனைக்கிறேன்.

சே.குமார் said...

ha... ha.... ha...
haaaaaaaaaaaaaaaaaaaa....

NIZAMUDEEN said...

//r.v.saravanan said...
ஹி ஹி //

கருத்திற்கு (?) நன்றி சரவணன்!

NIZAMUDEEN said...

//ஹுஸைனம்மா said...
நல்லவேளை நான் விருந்துக்கு வரலை!! ;-))) //

அப்படியா!!! உங்களையும் குண்டப்பா விருந்திற்கு
கூப்பிட்டாரா, சொல்லவேயில்லை? நன்றி ஹுஸைனம்மா!

NIZAMUDEEN said...

//அஹமது இர்ஷாத் said...
super.. //

THANKS அஹமது இர்ஷாத்!

NIZAMUDEEN said...

//DrPKandaswamyPhD said...
கொடுத்திருந்தா, மண்டப்பா அதையும், அஞ்சு வருசமென்ன, எத்தனை வருசம் ஆகியிருந்தாலும், அதையும் ஒரு வெட்டு வெட்டியிருப்பார்னு நனைக்கிறேன். //

நிச்சயமாய்! மண்டப்பாதான் சாப்பாட்டு (வெட்டுற)
கில்லாடியாச்சே! கருத்திற்கு நன்றி சார். தொடர்ந்து
வாங்க!

NIZAMUDEEN said...

//சே.குமார் said...
ha... ha.... ha...
haaaaaaaaaaaaaaaaaaaa....//

ok, ok, ok, ok, ok, ok, ok...
thanksssssssssssssssss சே.குமார்!

Jaleela Kamal said...

ஹா ஹா சரியான காமடி

Rajan said...

நல்லா கடிக்கிறீங்க!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...