...பல்சுவை பக்கம்!

.

Sunday, October 10, 2010

பதிவுலகில் நிஜாம் பக்கம்!

'குட் பிளாக்ஸ்' பகுதியில் இந்த இடுகையை இணைத்துள்ள 'யூத்ஃபுல் விகடனு'க்கு நன்றி!!


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

NIZAMUDEEN (அ. முஹம்மது நிஜாமுத்தீன். )

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆமாம், எனது உண்மையான பெயர்தான்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

காலடி எடுத்து வைத்ததா...?
முதல்ல 'தமிழ்குடும்பத்'தில் எழுதிக் கொண்டிருந்தேன்.
அப்புறம் வலைப்பூக்களில் பின்னூட்டங்கள். தொடர்ந்து
வலைப்பூ...

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

முதலில் அன்பர்களின் வலைப்பூக்களில் கமெண்ட்
போட்டுக் கொண்டிருந்தேன். அடுத்ததா திரட்டிகளில்
கொண்டு இணைத்தேன். இப்போ நம்மையும் நம்பி ஒரு
நட்புவட்டம் வந்து அன்போடு ஆதரவு தர்றாங்களே...

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

இந்த வலைப்பதிவில் எனது சொந்த அனுபவங்களை,
நிறையவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதை
சுவாரஸ்யமாய் படித்து பல பதிவர்கள் 'இப்படியெல்லாம்
நடக்குதா?" என்று வியப்போடு கேட்டுமிருக்கிறார்கள். இதுதான் விளைவு.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நண்பர்களை சம்பாதிப்பதற்காகவும் அவர்களுக்கு நன்றாக பொழுது போவதற்காகவும் இந்தப் பதிவுகளை எழுதுகிறேன்.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒன்னு போதுமே!!!

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

மற்றவர்களின் மனம் வேதனைப்படும்படி எழுதுபவர்களின்மேல் கோபம் ஏற்பட்டதுண்டு. ஆனால், சிலரிடத்தில் பொறாமை ஏற்பட்டதில்லை; வியப்புதான் ஏற்பட்டிருக்கிறது. தினம் பதிவுகள் தரும்
வேலன் சார், 500 ௦௦பதிவுகளுக்குமேலும் அசராமல்
எழுதிக்கொண்டிருக்கும் மாயவரத்தான், பன்முகக்
கலைஞர் சுமஜ்லா -- என்று வியப்புக்கள் ஏற்படுத்தும் பல பதிவர்கள் உண்டு.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி...

அவுங்கதான் எனக்கு வலைப்பூ ஆரம்பிங்கன்னு ஐடியா
கொடுத்தாங்க; முதலாவது கமெண்ட்டும் போட்டாங்க. அந்தப் பாராட்டு எனக்கு
அடுத்தடுத்து எழுத உதவியாயிருந்தது. நன்றி சகோதரி சுமஜ்லா.

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

என்னைப் பற்றியா...? எனது சிறு வயது முதலே பத்திரிகைகளில் நிறைய எழுதியும்
பரிசுகள் பெற்றும் இருக்கிறேன். இப்போ உங்கள் ஆதரவோடு வலைப்பூ. வேற ஏதாவது கேள்விகள் இருக்கா?

(டிஸ்கி: தொடர் பதிவிற்கு எனக்கு அழைப்பு விடுத்த சகோதரி அன்னுவிற்கு நன்றி!)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

54 comments:

Abdul Basith said...

வித்தியாசமான பதிவு..

இதையும் படிக்கவும்:
http://bloggernanban.blogspot.com/2010/10/how-to-remove-navbar-in-bogger.html

புதிய மனிதா.. said...

எளிமையாக தெளிவாக உங்கள் கருத்தை சொல்லி இருகிறீர்கள் நிஜாம் ..

சே.குமார் said...

nalla pathilgal nanba...

அருண் பிரசாத் said...

Simple and super

NIZAMUDEEN said...

//Abdul Basith said...
வித்தியாசமான பதிவு..

இதையும் படிக்கவும்:
http://bloggernanban.blogspot.com/2010/10/how-to-remove-navbar-in-bogger.html //

கருத்திற்கு நன்றி, அப்துல் பாசித்!
தங்கள் பிளாக்கிலும் குறிப்பு படித்து
கருத்து தெரிவித்துள்ளேன்.

NIZAMUDEEN said...

//புதிய மனிதா.. said...
எளிமையாக தெளிவாக உங்கள் கருத்தை சொல்லி இருகிறீர்கள் நிஜாம் .. //


தங்கள் கருத்திற்கு நன்றி, புதிய மனிதா!
தொடர்ந்து வாங்க...

NIZAMUDEEN said...

// சே.குமார் said...
nalla pathilgal nanba... //


சே.குமார், தங்கள் கருத்திற்கு நன்றி!
தொடர்ந்து வாங்க...

NIZAMUDEEN said...

//அருண் பிரசாத் said...
Simple and super //

Thank you, அருண் பிரசாத்!

Chitra said...

நல்ல பதில்கள். அருமை.

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்த்துக்கள் நண்பரே.

நாடோடி said...

ரெம்ப‌ ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌.. வாழ்த்துக்க‌ள்..

Jaleela Kamal said...

தமிழ் குடும்ப சகோதரரே அருமையான பதில் கள்

ஹுஸைனம்மா said...

’மறுபக்கமும்’ அறிய முடிந்தது.. வாழ்த்துகள்!!
(பத்திரிகை எழுத்தாளர் என்ற பக்கம்..)

NIZAMUDEEN said...

//Chitra said...
நல்ல பதில்கள். அருமை.//


கருத்திற்கு நன்றி!!!
தொடர்ந்து வாங்க, Chitra!

NIZAMUDEEN said...

//சைவகொத்துப்பரோட்டா said...
வாழ்த்துக்கள் நண்பரே.//

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!!!
தொடர்ந்து வாங்க!!!

ஈரோடு தங்கதுரை said...

கேள்வி பதில்கள் - அருமை ..... . நெறைய சாதிக்க வாழ்த்துக்கள்.

NIZAMUDEEN said...

//நாடோடி said...
ரெம்ப‌ ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌.. வாழ்த்துக்க‌ள்.. //

வாழ்த்துக்களுக்கு நன்றி நாடோடி!!!
தொடர்ந்து கருத்துரை தாங்க!!!

NIZAMUDEEN said...

//Jaleela Kamal said...
தமிழ் குடும்ப சகோதரரே அருமையான பதில்கள்//

சகோதரி ஜலீலா கமால், தங்கள்
கருத்திற்கு நன்றிங்க...!

NIZAMUDEEN said...

//ஹுஸைனம்மா said...
’மறுபக்கமும்’ அறிய முடிந்தது.. வாழ்த்துகள்!!
(பத்திரிகை எழுத்தாளர் என்ற பக்கம்..)//

நன்றி ஹுஸைனம்மா!
எனது கவிதைகள், கேள்வி, பரிசுப்போட்டி
போன்ற சில ஆக்கங்கள் முன்பே இடுகைகளில்
பகிர்ந்துள்ளேன். வாய்ப்பிருந்தால் படித்துப்
பாருங்கள். மற்றும் சில விரைவில் தருகிறேன்.

NIZAMUDEEN said...

//ஈரோடு தங்கதுரை said...
கேள்வி பதில்கள் - அருமை ..... . நெறைய சாதிக்க வாழ்த்துக்கள். //

தங்கள் (முதல்) வருகைக்கும் கருத்திற்கும்
ஊக்கமூட்டும் வாழ்த்துக்களுக்கும் எனது
மனங்கனிந்த நன்றிகள்!
தொடர்ந்து வாங்க ஈரோடு தங்கதுரை!!!

r.v.saravanan said...

தெளிவான பதில்கள் அருமை நண்பரே

வேலன். said...

அருமையான தொகுப்பு...அட்டகாசமான பதில்கள. தொடருங்கள்...நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

எம் அப்துல் காதர் said...

கேள்விக்கு பதில் அருமை!!

NIZAMUDEEN said...

//.v.saravanan said...
தெளிவான பதில்கள் அருமை நண்பரே//


நன்றி குடந்தையூராரே! தொடர்ந்து கருத்து தாருங்கள்!!

NIZAMUDEEN said...

//வேலன். said...
அருமையான தொகுப்பு...அட்டகாசமான பதில்கள. தொடருங்கள்...நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்.
வேலன். //

வாங்க வேலன் சார்!
தங்கள் (முதல்) வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி!!
தொடர்ந்து கருத்து தாருங்கள்!!!

NIZAMUDEEN said...

//எம் அப்துல் காதர் said...
கேள்விக்கு பதில் அருமை!! //


அருமையாகக் கருத்து சொன்ன எம்.அப்துல் காதர், மிக்க நன்றி!!
தொடர்ந்து கருத்து தாருங்கள்!!!

Anonymous said...

nalla ezhuthureanga... oru vaaram than aachi ungala follow panna aarambichi... thodarnthu ezhuthunga... vazhthukkal...

சீமான்கனி said...

ஷாட் அன்டு ஸ்வீட் பதில்கள்...வாழ்த்துகள் நிஜாம் அண்ணா...

ஸ்ரீராம். said...

சிறு வயது முதலே பத்திரிகைகளில் நிறைய எழுதியும்
பரிசுகள் பெற்றும் இருக்கிறேன்"//

வாழ்த்துக்கள்...பத்திரிகைகளில் எழுதியுள்ளீர்கள் என்று அறிய மகிழ்ச்சி.

NIZAMUDEEN said...

//Prem said...
nalla ezhuthureanga... oru vaaram than aachi ungala follow panna aarambichi... thodarnthu ezhuthunga... vazhthukkal... //


வாங்க பிரேம்!
ஃபாலோ பண்ண ஆரம்பிச்சி ஒரு வாரத்திலேயே எல்லா
பழைய பதிவுகளையும் படிச்சிட்டீங்களா?
பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

NIZAMUDEEN said...

//சீமான்கனி said...
ஷாட் அன்டு ஸ்வீட் பதில்கள்...வாழ்த்துகள் நிஜாம் அண்ணா... //

வாங்க சீ'மான்''கனி'!
உங்க ஸ்வீட்டான கருத்திற்கு நன்றி!

NIZAMUDEEN said...

//ஸ்ரீராம். said...
சிறு வயது முதலே பத்திரிகைகளில் நிறைய எழுதியும்
பரிசுகள் பெற்றும் இருக்கிறேன்"//

வாழ்த்துக்கள்...பத்திரிகைகளில் எழுதியுள்ளீர்கள் என்று அறிய மகிழ்ச்சி. //

தங்களின் மகிழ்ச்சி, எனக்கும் மகிழ்ச்சி!
கருத்திற்கு மிக்க நன்றி, ஸ்ரீராம்!

கனாக்காதலன் said...

Different and a friendly attempt ! Happy Blogging !

அன்னு said...

சில பல வேலை பளுவால் இதை படித்தவுடன் பதிலெழுத முடியலை பாய். தப்பா நினைக்க வேணாம். நல்லா எழுதியிருக்கீங்க. பத்திரிக்கைகள்ல எழுதி பரிசும் பெற்ரிருக்கீங்கன்னு தெரிய வந்தது மிக சந்தோஷம். இந்த மீடியாவிலும் பரிசுகளை அள்ளுங்கள். வாழ்த்துக்கள்!!

SUMAZLA/சுமஜ்லா said...

நிஜாம் அண்ணா,

தாமதமாக பின்னூட்டமிடுகிறேன். இன்று தான் தங்கள் அழைப்பை கவனித்தேன். அடுத்தவர் ரசிக்கும்படி எழுதும் திறமையும், கொஞ்சம் கற்பனை சக்தியும் இருந்தால், வலையுலகில் ஜொலிக்கலாம். அதற்கு தாங்கள் இரு உதாரணம். மற்றபடி நாங்களெல்லாம் கருவிகள் தான். என்னைப் பற்றிக் குறிப்பிட்டு, என்னைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி!!! இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் உங்கள் பதிவு. இப்போதுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள்.

மாயவரத்தான்.... said...

கலக்கு(றீ)ங்க!

NIZAMUDEEN said...

//கனாக்காதலன் said...
Different and a friendly attempt ! Happy Blogging ! //

நன்றி,
தொடர்ந்து வாங்க கனாக்காதலன்!

NIZAMUDEEN said...

//அன்னு said...
சில பல வேலை பளுவால் இதை படித்தவுடன் பதிலெழுத முடியலை பாய். தப்பா நினைக்க வேணாம். நல்லா எழுதியிருக்கீங்க. பத்திரிக்கைகள்ல எழுதி பரிசும் பெற்ரிருக்கீங்கன்னு தெரிய வந்தது மிக சந்தோஷம். இந்த மீடியாவிலும் பரிசுகளை அள்ளுங்கள். வாழ்த்துக்கள்!!

நீங்கள் தொடர்ந்து படித்தாலும்...
அவ்வப்போது வந்து கருத்தும்
உரையுங்கள்.
வாழ்த்துக்கள் கூறியதற்கு நன்றி சகோ.!

NIZAMUDEEN said...

//SUMAZLA/சுமஜ்லா said...
நிஜாம் அண்ணா,

தாமதமாக பின்னூட்டமிடுகிறேன். இன்று தான் தங்கள் அழைப்பை கவனித்தேன். அடுத்தவர் ரசிக்கும்படி எழுதும் திறமையும், கொஞ்சம் கற்பனை சக்தியும் இருந்தால், வலையுலகில் ஜொலிக்கலாம். அதற்கு தாங்கள் இரு உதாரணம். மற்றபடி நாங்களெல்லாம் கருவிகள் தான். என்னைப் பற்றிக் குறிப்பிட்டு, என்னைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி!!! இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள். //

தாமதமாய் வந்தாலும்
வாழ்த்துக்கள் கூறியதற்கும்
கருத்து கூறியதற்கும் நன்றி சகோ.!
தங்கள் வலைப்பூவிலும் தங்களை
எதிர்பார்க்கிறேன்.

NIZAMUDEEN said...

//ஸ்ரீராம். said...
விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் உங்கள் பதிவு. இப்போதுதான் பார்த்தேன். வாழ்த்துக்கள். //

மகிழ்ச்சியான செய்தி, உடன் தெரியப்படுத்தினீர்கள்!
மிக்க நன்றி, ஸ்ரீராம்...!

NIZAMUDEEN said...

//மாயவரத்தான்.... said...
கலக்கு(றீ)ங்க! //


கலக்கிடுவோம் மாயவரத்தான். நன்றி!
(கலக்குற கரண்டியை எங்கே வெச்சேன்?)

அஹ‌ம‌து இர்ஷாத் said...

வாழ்த்துக்கள் நண்பரே.

NIZAMUDEEN said...

//அஹ‌ம‌து இர்ஷாத் said...
வாழ்த்துக்கள் நண்பரே. //

தங்க(ளைப் போன்றவர்க)ள் கொடுக்கும் விருதுகளும்
கருத்துகளும் ஆலோசனைகளும் வாழ்த்துக்களும்
மிகுந்த உற்சாகமளிக்கின்றன். நன்றி இர்ஷாத்!

r.v.saravanan said...

குட் பிளாக்ஸ்' பகுதியில் இந்த இடுகையை இணைத்துள்ள 'யூத்ஃபுல் விகடனு'க்கு நன்றி!!

வாழ்த்துக்கள் நண்பரே

ஸாதிகா said...

இன்றுதான் இந்த இடுகையை பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் சகோதரரே!

NIZAMUDEEN said...

//r.v.saravanan said...
குட் பிளாக்ஸ்' பகுதியில் இந்த இடுகையை இணைத்துள்ள 'யூத்ஃபுல் விகடனு'க்கு நன்றி!!

வாழ்த்துக்கள் நண்பரே //

மீண்டும் வந்து, வாழ்த்துக் கூறியதற்கு
நன்றி நண்பரே!

NIZAMUDEEN said...

//ஸாதிகா said...
இன்றுதான் இந்த இடுகையை பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் சகோதரரே! //


கருத்திற்கும் வாழ்த்திற்க்கும்
நன்றி சகோதரி!

அன்புடன் மலிக்கா said...

நிஜாமுயண்ணா.
நீண்ட நாட்களாக வரமுடியவில்லை வேலைப்பளுவினால்.
விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் உங்கள் பதிவு வந்துள்ளமைக்கு வாழ்த்துக்கள். சுவாரஸ்யமான எதார்த்தமான பதில்கள் அண்ணா. வாழ்த்துக்கள்..

NIZAMUDEEN said...

//அன்புடன் மலிக்கா said...
நிஜாமுயண்ணா.
நீண்ட நாட்களாக வரமுடியவில்லை வேலைப்பளுவினால்.
விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியில் உங்கள் பதிவு வந்துள்ளமைக்கு வாழ்த்துக்கள். சுவாரஸ்யமான எதார்த்தமான பதில்கள் அண்ணா. வாழ்த்துக்கள்.. //

வாங்க கவிஞரே!
பதிவைப் படித்து, பாராட்டியதற்கு நன்றி!
மேலும் 'குட் பிளாக்'கில் வந்தமைக்குக்
கூறிய வாழ்த்திற்கும் நன்றி!

Barakath said...

வாழ்த்துக்கள்...நிஜாம்...

nidurali said...

நமக்கு வேண்டியவர், எனது தெருவில் உள்ளவர் எல்லோரையும் வலைப்போட்டு இழுக்கும் திறமையினைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்துக்கள்

NIZAMUDEEN said...

//Barakath said...
வாழ்த்துக்கள்...நிஜாம்... //

வாழ்த்து சொன்னதற்கும் கருத்து அளித்ததற்கும்
நன்றி பரகத்! தொடர்ந்து வாங்க!

NIZAMUDEEN said...

//nidurali said...
நமக்கு வேண்டியவர், எனது தெருவில் உள்ளவர் எல்லோரையும் வலைப்போட்டு இழுக்கும் திறமையினைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்துக்கள்//

தங்கள் மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும்
கருத்துரையாய் வழங்கியதற்கு எனது நன்றியை
மகிழ்வோடு தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...