...பல்சுவை பக்கம்!

.

Friday, March 25, 2011

குண்டப்பா & மண்டப்பா - 5!

குண்டப்பா & மண்டப்பா - 5!
குண்டப்பா வேலை முடிந்து வீடு திரும்பியவர் இரவு
சாப்பாடு ரெடியானதும் சாப்பிட உட்கார்ந்தார்.
குண்டப்பாவின் மனைவி தட்டு வைத்து சோறு
போட்டு சைட் டிஷ்ஷாக முட்டை ஆம்லேட் வைத்தார்.

குண்டப்பா கடுப்பாகிவிட்டார்.
"ஏன் ஆம்லேட் செய்தாய்? முட்டையை அவித்திருக்கலாமே?"
என்று திட்டிவிட்டு சாப்பிட்டு போய்விட்டார்.

மறுநாள் இரவு சாப்பிடும்போது குண்டப்பாவின் மனைவி
அவித்த முட்டையை வைத்தார்.
கோபமான குண்டப்பா, " ஏன் முட்டையை ஆம்லேட்
போட்டிருக்கலாமே? " என்று சப்தம் போட்டு விட்டு
சாப்பிட்டு எழுந்து போனார்.

மூன்றாம் நாள் மிசஸ் குண்டப்பா முன்னெச்சரிக்கையாக
ஒரு முட்டை அவித்தும் ஒரு முட்டை ஆம்லேட்டாகவும்
செய்து வைத்து மிஸ்டர் குண்டப்பாவை சாப்பிட
அழைத்தார்.

சாப்பிட உட்கார்ந்த குண்டப்பா ஆம்லேட், அவித்த முட்டை
இரண்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு, திரும்பி
மிசஸ் குண்டப்பாவிடம் அவித்த முட்டையைக் காட்டி,
"இந்த முட்டையை ஆம்லேட் போட்டுருக்கணும்" என்று
சொல்லிவிட்டு ஆம்லேட்டைக் காட்டி, "இதை அவித்திருக்கணும்;
மாத்தி செஞ்சிட்டியே!" என்று கூறிவிட்டு, சமர்த்தாக
சாப்பிட்டு எழுந்து போனார்.

மிசஸ் குண்டப்பா எதுவும் தோன்றாமல் திகைத்து நின்றார்.

டிஸ்கிகள்:

1 . பதிவு போட்டு ஒரு மாதத்திற்கு மேலாவதால் இந்த திடீர் பதிவு.

2 . சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கேட்ட
நகைச்சுவைக் கதையை 'குண்டப்பா மண்டப்பா'வாக உல்ட்டா
செய்துவிட்டேன்.

3 . இந்தக் கதையில் மண்டப்பா கிடையாது. குண்டப்பாவும்
மிசஸ் குண்டப்பாவும்தான்.

4 . முந்தைய 'குண்டப்பா & மண்டப்பா' கதைகள் படிக்க இந்த
லிங்கில் கிளிக் செய்யுங்கள்:


.
படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

26 comments:

அந்நியன் 2 said...

அருமையான ஜோக்கு வாழ்த்துக்கள்,அண்ணன்

Rajanand said...

nice....

ஸாதிகா said...

ரொம்ப..ரொம்பவே கடித்து விட்டது உங்கள் குண்டப்பா&மண்டப்பா ஜோக்.

NIZAMUDEEN said...

//அந்நியன் 2 said...
அருமையான ஜோக்கு வாழ்த்துக்கள்,அண்ணன்//

வாங்க அந்நியன், வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

NIZAMUDEEN said...

//Rajanand said...
nice....//

Rajanand! Thanks for your visit and comment!

NIZAMUDEEN said...

//ஸாதிகா said...
ரொம்ப..ரொம்பவே கடித்து விட்டது உங்கள் குண்டப்பா&மண்டப்பா ஜோக்.//

படிக்(க ஆரம்பிக்)கும் முன்பாகவே 'எச்சரிக்கை'
போட மறந்துவிட்டேன். வந்து கடிபட்டதற்கு
நன்றி சகோதரி!

Chitra said...

அவ்வ்வ்வவ்வ்வ்..... !

ஜெய்லானி said...

நல்ல வேளை ஒரு முட்டைய காட்டி ஏன் பாதியை அவிக்காம ஆம்லெட் போட்டேன்னு கேட்காம விட்டாரே..!! :-))

இளம் தூயவன் said...

பாஸ், சும்மா கலக்குறிங்க ஒரு முட்டைக்கு பின்னால இவ்வளவு விஷயம் இருக்கா , நல்லா இருக்கு.

ஹுஸைனம்மா said...

(பழைய) ஜோக்கைவிட, நீங்கள் எழுதிய டிஸ்கி நல்லாருக்கு.

♔ம.தி.சுதா♔ said...

இதை ஒரு மாதத்திற்கு முதல் போட்டிரக்கலாமே... நானும் குண்டப்பா போல திங் பண்ணறனோ ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

GEETHA ACHAL said...

ஜோக் நல்லா இருக்கே....

NIZAMUDEEN said...

//Chitra said...
அவ்வ்வ்வவ்வ்வ்..... ! //

அவ்வ்வ்வ்வளவு அருமை-னு சொல்ல வந்து
பாதியிலேயே நிறுத்தியது ஏனோ, சகோதரி?
நன்றி, கருத்திற்கு!

NIZAMUDEEN said...

//ஜெய்லானி said...
நல்ல வேளை ஒரு முட்டைய காட்டி ஏன் பாதியை அவிக்காம ஆம்லெட் போட்டேன்னு கேட்காம விட்டாரே..!! :-)) //


வாங்க ஜெய்லானி, நீங்க குண்டப்பாவிற்கு
பக்கத்து வீட்டுக்காரரோ? நீங்களே அவருக்கு
ஐடியா கொடுப்பீங்க போலருக்கே?

கருத்திற்கு நன்றி!

NIZAMUDEEN said...

// இளம் தூயவன் said...
பாஸ், சும்மா கலக்குறிங்க ஒரு முட்டைக்கு பின்னால இவ்வளவு விஷயம் இருக்கா , நல்லா இருக்கு. //

அப்ப முட்டையைக் கலக்கினது நல்லா
இருக்குன்னு சொல்றீங்க?!

கருத்திற்கு நன்றி!

NIZAMUDEEN said...

//ஹுஸைனம்மா said...
(பழைய) ஜோக்கைவிட, நீங்கள் எழுதிய டிஸ்கி நல்லாருக்கு. //

அட, அப்படியா? நீங்க டிஸ்கி இரசிகரா?
இனிமே(ல்) நிறைய டிஸ்கி போட்றவேண்டியதுதான்!

கருத்திற்கு நன்றி, சகோதரி!

NIZAMUDEEN said...

//♔ம.தி.சுதா♔ said...
இதை ஒரு மாதத்திற்கு முதல் போட்டிரக்கலாமே... நானும் குண்டப்பா போல திங் பண்ணறனோ ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//

இப்ப போட்ட பதிவை சென்ற மாதமும்
சென்ற மாதம் போட்டதை இந்த மாதமும்
போட்றலாம்னு சொல்றீங்களா?
அட, குண்டப்பா மாதிரியேதான் நீங்களுமா?

கருத்திற்கு நன்றி ம.தி.சுதா, அடிக்கடி
வாருங்கள்!

NIZAMUDEEN said...

//GEETHA ACHAL said...
ஜோக் நல்லா இருக்கே.... //

அதனாலதான் இந்த ஜோக்கை நானும்
பதிவு போட்டேன்.

கருத்திற்கு நன்றி சகோதரி!

சே.குமார் said...

mudiyalaaaaaaa.....

அன்புடன் மலிக்கா said...

குண்டப்பா&மண்டப்பா ஜோக்கும் டிஸ்கியும்
அருமை நிஜாமுதீன் அண்ணா.

NIZAMUDEEN said...

//சே.குமார் said...
mudiyalaaaaaaa..... //

'முடியலலலலலலல'னு இழுக்க்குறீங்களே,
எப்பங்க முடியும்?
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சே.குமார்!

NIZAMUDEEN said...

//அன்புடன் மலிக்கா said...
குண்டப்பா&மண்டப்பா ஜோக்கும் டிஸ்கியும்
அருமை நிஜாமுதீன் அண்ணா. //

அருமையாய் கருத்து சொன்னீங்க...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!!

Jaleela Kamal said...

ஹா ஹா
சோகமா இருந்தா சிரிக்க இங்கு வந்துடலாம்

சிநேகிதன் அக்பர் said...

சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க :)

NIZAMUDEEN said...

//Jaleela Kamal said...
ஹா ஹா
சோகமா இருந்தா சிரிக்க இங்கு வந்துடலாம் //

சிரிக்க வந்ததற்கு நன்றி சகோதரி!

NIZAMUDEEN said...

//சிநேகிதன் அக்பர் said...
சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க :) //

இன்னும் ஓரிரு தினங்களில் அடுத்த பதிவு இன்ஷா அல்லாஹ்!
நன்றி சினேகிதரே!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...