...பல்சுவை பக்கம்!

.

Sunday, July 3, 2011

மயிலாடுதுறையை தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டம்!

மயிலாடுதுறையை  தலைமையாகக் கொண்டு புதிய மாவட்டம்!
சமீபத்தில் மயிலாடுதுறையின் தனிச் சுற்றிதழ் (ஜூன் 15 - 30) 
'சோழன் டைம்ஸ்' இதழில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ . 
திரு. அருட்செல்வன் அவர்களின் பேட்டியை படித்தேன்.
அதில் மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கம், 
மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் உட்பட
பல கருத்துக்கள் தெரிவித்திருந்தார். வாசகர்களின் 
கருத்துக்களையும் பத்திரிகை ஆசிரியர் கேட்டிருந்தார்.
அந்த இதழில் பத்திரிகையின் ஆசிரியர், அச்சிடுபவர் 
மற்றும் வெளியிடுபவர் ஆகியோர்களின் பெயரோ,
பத்திரிகை முகவரியோ இடம்பெறவில்லை. 
தொலைபேசி எண்கள் மட்டும் தரப்பட்டுள்ளன . 

இனி பேட்டியின் சில பகுதிகள்:-

மயிலாடுதுறை மாவட்டம் என்பதுபற்றி 
எம்.எல்.ஏ.அவர்களின் கருத்து:

" மயிலாடுதுறைய தலைமையிடமாகக் கொண்டு 
புதிய மாவட்டம் சாத்தியமா? சாத்தியமில்லையா 
என்பது வேறு விஷயம். ஆனால், அது காலத்தின்
கட்டாயம். இரண்டே இரண்டு சட்டமன்ற தொகுதிகள் 
கொண்ட அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் 
நடைமுறையிலிருக்கும்போது இதுவும் சாத்தியமே!

" இத்தொகுதிக்குட்பட்ட ஒருவர் தனது மாவட்டத்
தலைநகருக்குச் செல்ல  வேண்டுமாயின் இன்னொரு 
மாவட்டத்தைக் கடந்தோ அல்லது மற்றொரு
மாநிலத்தைக் கடந்தோ செல்ல வேண்டி
இருக்கின்றது. புவியியல் ரீதியாக இது முரண்பட்ட
பிரிவினை. அருகாமை மாவட்டத் தலைநகருக்குச் 
செல்வதைவிட என் சொந்த மாவட்டத் 
தலைநகருக்குச் செல்வதென்பது கூடுதல் 
நேரமும், செலவினமும் கொண்டதாக இருப்பது
விநோதமானது. மக்களின் உணர்வுகளுக்கு
இந்த புதிய அரசு மதிப்பளிக்கும் என நம்புகிறேன்." 

புதிய பேருந்து நிலையம் பற்றி எம்.எல்.ஏ. அவர்களின் கருத்து:

" எனது முன்னுரிமைத் திட்டங்கள் என்பது புதிய 
பேருந்து நிலையமும் அரசு மருத்துவமனையின்   
மேம்பாடும்தான். நகருக்கு ஒருங்கிணைந்த 
பேருந்து நிலையம் என்பது உடனடித் தேவை.
நகரின் போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட 
பல பிரச்னைகளுக்கும் அதுதான் தீர்வு. 

"கடந்த கால மக்கள் பிரதிநிதிகள் இவ்வளவு முக்கிய 
பிரச்னையில்  கவனக்குறைவாக இருந்துள்ளார்கள்.                      

"எனது முன்னோர்கள் புதிய பேருந்து நிலைய 
விவகாரத்தில் தங்களால் முடிந்த முன்னேற்றத்திற்கு 
வித்திட்டுள்ளார்கள். அதனை முழுமை பெற செய்ய 
நான் முயற்சிக்கிறேன். இதற்கான முழுப்பெருமையும் 
அந்த முன்னோடிகளை சேர்ந்தாலும் பரவாயில்லை.
புதிய பேருந்து நிலையம் மக்களுக்குக் கிடைத்தால்
போதும்."

இவ்வாறு எம்.எல்.ஏ. அருட்செல்வன் கூறியுள்ளார்.
அன்பர்கள் உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க 
வேண்டிய தொலைபேசி எண்கள்:

சோழன் டைம்ஸ் : 
94443 49974,
93606 28289,
04364 221603.

அன்பர்கள்  கருத்துக்களை இந்தப் பதிவிலும் 
கருத்துரையாக இடலாம். அவை எம்.எல்.ஏ.
அவர்களின்  பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.
(அனாமதேய கருத்துரைகளைத் தவிர்க்குமாறு
வேண்டுகிறேன்.)

(நன்றி : சோழன் டைம்ஸ்)    


  படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

8 comments:

இளம் தூயவன் said...

தனி மாவட்டம் அமைந்தால் மக்களின் தேவைகளையும் குறைகளையும் தீர்த்து வைப்பது எழிதாக இருக்கும் என்றால் ,நிச்சயம் அதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது தவறு இல்லை.

ஸ்ரீராம். said...

//""எனது முன்னோர்கள் புதிய பேருந்து நிலைய
விவகாரத்தில் தங்களால் முடிந்த முன்னேற்றத்திற்கு
வித்திட்டுள்ளார்கள். அதனை முழுமை பெற செய்ய
நான் முயற்சிக்கிறேன். இதற்கான முழுப்பெருமையும்
அந்த முன்னோடிகளை சேர்ந்தாலும் பரவாயில்லை.
புதிய பேருந்து நிலையம் மக்களுக்குக் கிடைத்தால்
போதும்."//

நல்ல மனம் வாழ்க...

nidurali said...

அன்பானவர்! அனைத்து உயிர்களையும் நேசிப்பவர்! நிஜாமுதீன் அவர்களே உங்கள் சேவை பாராட்டுக்குரியது.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

The first need is Good bus stand . . The first need is Good bus stand . . The first need is Good bus stand . . The first need is Good bus stand . .

அபி அப்பா said...

mla.arulselvan@dmdkparty.com

இதுக்கு மெயில் அனுப்புங்க. கூடவே உங்க போன் நம்பரும் கோட் நம்பருடன் அனுப்புங்க. உடனே போன் வரும். ரொம்ப நல்லவரு. எங்க நகருக்கு கூட ரோடு போடுவதா சொன்னாரு!

சோழன் டைம்ஸ் ஒரு நல்ல பத்திரிக்கை. நம்ம கிளியனூர் ரசாக் பாய் பில்டிங்ல (கச்சேரி ரோடு, பி டி ஓ ஆபீஸ் எதிரே தான் ஆபீஸ்)இந்த பசங்களை நம்ம "நம்ம ஊரு செய்தி"க்கு கொண்டு வந்தா நம்ம மாயவரத்தான் முன்னே நம்ம ஊரு செய்தி ஆசிரியரா இருந்த போது இருப்பது போல ஒரு நல்ல மாற்றம் கிடைக்கும். செய்வாரா நம்ம முனைவர். அய்யூப் அய்யா?

சோழன் டைம்ஸ் பத்திரிக்கைக்கு நம்ம "எதுவுமே செய்யாத எம் எல் ஏ ராஜ்குமாரை வீட்டுக்கு அனுப்பியதில் பெரும் பங்கு இருப்பதையும் மறக்க கூடாது நாம் இந்த நேரத்தில்!

அன்புடன்

அபிஅப்பா

ஜெய்லானி said...

நம்ம மக்களுக்கு நல்லது நடந்தா சரிதான் :-)

JAFRUDEEN said...

good news vaalthukal

www.nidurnet.blogspot.com

Murugesan said...

It is true that one has to cross either Tiruvarur District or Puduchry State to go to Nagapattinam from Mayiladuthurai. It is very strange and shows the maladministration and selfishness of the Previous Chief Minister. It is high time to change this anomaly by declaring Mayiladuthurai as a separate revenue district. We sincerely hope that the present Chief Minister will do justice to the neglected part of Mayiladuthurai.
Prof.S.Murugesan
5/29 Mayuranathar Colony
Mayiladuthurai
Ph 9443229067

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...