...பல்சுவை பக்கம்!

.

Thursday, July 21, 2011

நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் (பாடல்)

நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் (பாடல்)


சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் ஒலிநாடாவில்
கேட்டது இந்தப் பாடல்.

தொகையறா:
நானிலத்து முஸ்லிம்களின் தாரக மந்திரம்
நாளெல்லாம் நாவெல்லாம் சங்கை சொல்லும்
தீன் இனத்து தங்கங்களே ஒன்று கூடி
கனிவாய் சொல்வீரே...
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்...

பல்லவி:
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்றே முழங்குவோம்
நல்ல சீரணி கொண்ட கோமான் தாஹா நபிவழி தாங்குவோம்
நாமம் முழங்குவோம் இறைவன் நாமம் முழங்குவோம்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்...

ரணம் 1:
உள்ளமும் உணர்வும் இணைந்து
மேலோன் நல்லோன் புகழில் மிளிர்ந்து...
நல்லோன் புகழில் மிளிர்ந்து...
மெய் சொல்லால் நிதமும் அல்லாஹ் ஒருவனின்
மேன்மையை நீ முழங்கு...
மேன்மையை நீ முழங்கு
துன்பமும் துயரமும் மறந்து
தூய இன்ப நிலையிலே உவந்து...
இன்ப நிலையிலே உவந்து...
அன்பாய் ஈர்க்கும் அறிவின் உயிரோட்டம்
மனக் கண்ணில் தோன்றவே
நிதம் சொல்வாய் இந்த அகிலம் ஆளும் இறையோன் நாமமே
ஒன்றாய் கூடியே எந்நாளும் ஒன்றாய் கூடியே
நாரே தக்பீர்... அல்லாஹு அக்பர்...

சரணம் 2:
ஆதம் முதல் வந்த நபிமா ரெல்லாம்
வல்ல ஏகோனை நினைந்தே மொழிந்தார்களே
வானோரும் தினம் தினம் துதி பாடினார்...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... அ... ஆ...
வானோரும் தினம் தினம் துதி பாடினார்...
அன்பு தீனோரே தக்பீரை கனிந்தே சொல்வீர்
அன்பு தீனோரே தக்பீரை நிலை நாட்டுவீர்
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்றே முழங்குவோம்
நல்ல சீரணி கொண்ட கோமான் தாஹா நபிவழி தாங்குவோம்
நாமம் முழங்குவோம் இறைவன் நாமம் முழங்குவோம்
நாரே தக்பீர்... அல்லாஹு அக்பர்...

பாடல் எழுதிய பாடலாசிரியர் பெயர் தெரியவில்லை.
பாடியவர் நெல்லை உஸ்மான். (தகவல் தந்த
பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் அண்ணன் அவர்களுக்கு நன்றி!)
இந்தப் பாடல் நீங்கள் கேட்டதுண்டா? பாடலாசிரியர் பெயர்
உங்களுக்குத்தெரியுமா?
.



படித்ததற்கு நன்றி! தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே!

5 comments:

***வாஞ்ஜுர்*** said...

அன்புடையீர்,
ASSALAMU ALAIKKUM W.R.B.

தங்கள் பதிவிற்கு தொடர்பில்லாத மறுமொழி என்று தயவு செய்து இதை நீக்கிவிடாதீர்கள்.
--------------------------

உங்களுக்கே.! உங்களுக்கே.!! உங்களுக்கே.!!!
அருட்கொடையாம் தொழுகை


ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய், நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி

உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்

இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற
உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது
நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து
"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.

ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து
துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள்.
திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


வாஞ்சையுடன் வாஞ்சூர்.

அந்நியன் 2 said...

good song

S.Kumar said...

Nalla Padal...
Pskirvukku nanri

அம்பாளடியாள் said...

பாடல் அருமை வாழ்த்துக்கள் சகோ..........

Sakthi said...

salam. eid mubaraq

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...