...பல்சுவை பக்கம்!

.

Monday, January 28, 2013

ஜிகினா 7: 'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் பெரும் மாற்றமும்!

ஜிகினா 7: 'ஹாய் மதன்'-இல் என் கேள்வியும் விகடனின் பெரும் மாற்றமும்!

முதலில் விகடனில் வந்த என் கேள்வியையும் ஹாய் மதனின் பதிலையும் பார்த்து விடுவோம்:

 கேள்வி: 101 மாடி, 105 மாடி என்று கட்டடங்களின் உயரம் அதிகரிக்க, அதிகரிக்க அந்தக் கட்டடத்தின் பாதுகாப்புத் தன்மை குறையும் அல்லவா?

 படத்தின்மேல் சொடுக்கி, பெரிதாக்கிப் படிக்கலாம்.

பதில்: கட்டடக் கலை அட்டகாசமாக முன்னேறிவிட்டது. சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள அலுவலகக் கட்டடத்தின் உயரம் 1500 அடிகள். மிக மிக உயரமான கட்டடம்  (காற்றின் அழுத்ததைச் சமாளிக்க) இலேசாக அசையும்படியாகக்கூட இப்போது கட்டுகிறார்கள். உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியாது. இருப்பினும் பின்லேடன்கள் இருக்கும்வரையில் ஆபத்துதான்.

அடுத்து...
விகடனின் பெரிய மாற்றம் என்னவென்று கேட்டீர்கள் என்றால், என் கேள்வி வெளியான 23.07.2008 இதழில் இருந்துதான் ஆனந்த விகடன் ரூபாய் 17 விலையில் பெரிய அளவு இதழாக மாற்றப்பட்டது. ஹி... ஹி...

அடுத்த ஜிகினாவில்...
"பிக்பாக்கெட்டா? பஸ் பாக்கெட்டா?" 'கல்கி'யில்!

இதையும் படிக்கலாம்:

. படித்ததற்கு நன்றி! தங்களின் அன்பான கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!

14 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பதிவைப் பற்றி கருத்து கூறாமல் விளம்பரம் மட்டும் போட்டுவிட்டு போய்விட்டீர்களே? சரியா இது நண்பரே?

”தளிர் சுரேஷ்” said...

நல்ல பகிர்வு! நன்றி!

enrenrum16 said...

//என் கேள்வி வெளியான 23.07.2008 இதழில் இருந்துதான் ஆனந்த விகடன் ரூபாய் 17 விலையில் பெரிய அளவு இதழாக மாற்றப்பட்டது. ஹி... ஹி...//
அவ்வ்வ்... நீங்கதானா அவர்? :)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

s suresh,

நல்ல கருத்துக்கு நன்றி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ enrenrum16,

//நீங்கதானா அவர்?//
என்னிடம் அவர்கள் எதுவும் கேட்கவில்லை.

அவர்களாகவே அளவை மாற்றிவிட்டார்கள்.

விலையை ஏற்றிவிட்டார்கள்.

mohamedali jinnah said...

"உள்ளே இருப்பவர்களுக்குத் தெரியாது. இருப்பினும் பின்லேடன்கள் இருக்கும்வரையில் ஆபத்துதான்."-ஹாய் மதன்

தமிழக மக்களின் ஒற்றுமையை குலைக்க படம்(சினிமா)


பின்லேடன் செய்த முதல் தவறு அமரிக்காவுடன் சேர்ந்து ஆப்கன் நாட்டில் ருஷ்ய படையினை வெளியேற உதவியது .
அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன்.
அதிலிருந்து தொடர்ந்த தவறு செய்ய வழி வகுத்ததும் அமரிக்காதான்.
குற்றம் செய்ய வழி வகுத்தது அமரிக்கா .
குற்றம் செய்பவனை விட அதனை தூண்டுபவன் பெரிய குற்றம் செய்தவனாக கருதப்பட வேண்டும்.

கதாநாயகன் கமலும் அமெரிக்காவின் ஆதரவுக்காக படம் தயாரிக்க ஆரம்பித்து பணம் சேர்க்க மற்றவர்கள் மனதில் நச்சு கலக்கிறார்,குற்றம் செய்ய தூண்டுகிறார்.

அமெரிக்காவுக்கு கடலுக்கு அடியில் இருந்து பல தொல்லைகள் வரலாம்.

கமலுக்கு அமெரிக்காவே தொல்லைகள் கொடுக்கலாம் தொடர்ந்து இந்திய மக்களின் அதிலும் குறிப்பாக தமிழக மக்களின் ஒற்றுமையை குலைக்க படம் செய்யச் சொல்லி .


அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ mohamedali jinnah,

"தன்வினை தன்னைச் சுடும் "# அமெரிக்கா.

"துப்பாக்கியை கையாள்பவர் துப்பாக்கியாலேயே இறப்பார்" # ஒசாமா பின் லேடன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ mohamedali jinnah,

"தன்வினை தன்னைச் சுடும் "# அமெரிக்கா.

"துப்பாக்கியை கையாள்பவர் துப்பாக்கியாலேயே இறப்பார்" # ஒசாமா பின் லேடன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

@ mohamedali jinnah,

"தன்வினை தன்னைச் சுடும் "# அமெரிக்கா.

"துப்பாக்கியை கையாள்பவர் துப்பாக்கியாலேயே இறப்பார்" # ஒசாமா பின் லேடன்.

'பரிவை' சே.குமார் said...

ஜிகினா... நல்லா இருக்கு....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சே.குமார்,

உங்க கருத்து நல்லா இருக்கு.

நன்றி!

r.v.saravanan said...

நிறைய பத்திரிகைகளில் நீங்கள் எழுதியிருப்பது வியக்க வைக்கிறது நிசாமுதீன் சார்

Anonymous said...

வணக்கம்
நிஜாம்(அண்ணா)

இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமானது வாழ்த்துக்கள்
அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
நிஜாம்(அண்ணா)

இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமானது வாழ்த்துக்கள்
அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...