...பல்சுவை பக்கம்!

.

Saturday, February 27, 2010

#55 நகைச்சுவை; இரசித்தவை - 8

நகைச்சுவை; இரசித்தவை - 8
=============================

"என் மனைவி தினமும் அம்பது ரூபாய் கேட்கிறாள்"

"அப்படி என்ன தினமும் செலவு?"

"யாருக்குத் தெரியும்? இன்னும் ஒருநாள்கூட நான்
ரூபாய் தரலியே?"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"சாப்பாட்டுப் பந்தியில் ரெண்டு பிரிவு இருக்கே?"

"நூறு ரூபாய்க்குக் குறைவா மொய் எழுதினா
அளவுச் சாப்பாடு. நூறு ரூபாய்க்கு மேலே எழுதினா
முழுச் சாப்பாடாம்!"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"என் மாமியாருக்கு வயிற்று வலி வந்தால் எனக்கும்
வயிற்று வலி வந்துடுது."

"ஏன் அப்படி?"

"சிரிச்சி சிரிச்சித்தான்!"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சிரித்தவர்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, February 26, 2010

#54 சில சிந்தனைகள் (பகுதி - 8)




சில சிந்தனைகள் (பகுதி - 8)

தழுவிக்கொள்ளுங்கள் -1
======================

* உங்களுடைய கோபதாபங்கள் உங்களுடனேயே இருக்கட்டும் -
வினியோகிக்க வெண்டாம்.

* ஆனால் உங்கள் உற்சாகத்தை இலவசமாக வினியோகியுங்கள்.

* நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

* நட்புடன் இருந்தால் பெரிதும் மதிக்கப்படுவீர்கள்.

* இறைவனின் படைப்பில் எல்லோருக்கும் பங்குண்டு. இந்த
முக்கியத்துவத்தை மற்றவர்கள் உணரச் செய்யுங்கள்.

* கீழேயோ, மேலோயோ அந்த அந்த நிலையில் மக்களை
சந்தியுங்கள்.

* புன்னகை என்ற ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்துங்கள்.

* நகர்ந்து கொண்டே இருங்கள்; ஓடுகின்ற நதி ஒருநாளும்
அழுக்காகாது.

* முயற்சி செய்து கொண்டிருங்கள். தேயாமல் இருக்க
இதுதான் தலைவாசல்.

* இரும்பானாலும் இதயத்தோடு பாருங்கள்.

* எந்த காரியமானாலும் அதன் ஆரம்பம் விழாவாக இருக்கட்டும்.

* தோல்வி அடைந்தாலும் மன்னித்துக் கொள்ளுங்கள்.

* கருணையில் தாராளமாக இருங்கள்.

* அதிகாரத்தைவிட, அன்பு ஆளட்டும்.

* சொன்னதைச் செய்யுங்கள்.

நன்றி: 'வெற்றியை வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்.

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்


வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Tuesday, February 16, 2010

#53 சிந்தனைகள் (பகுதி - 7)

முன்னேற சில முத்துக்கள்:
========= === ===========
1. செய்யும் தொழிலை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

2. எதையும் இலவசமாகப் பெற நினைக்காதீர்கள்.

3. போதும் என்ற மனம் நல்லதுதான். ஆனால், 'போதாது'
என்ற மனம்தான் முன்னேற்றத்திற்கான வழி. மனிதன்
கண்டுபிடிக்காத மர்மதேசங்கள் ஏராளம்.

4. வருத்தமோ அல்லது சுய இரக்கமோ அடையாதீர்கள்.
அவைகள் வாழ்க்கையின் நசுக்கிகள்.

5. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்துவைத்துக கொள்ளுங்கள்.

தவிர்த்துவிடுங்கள்:
=================
1. பொய் பேசும் நா.

2. கர்வ பார்வை.

3. தீமை செய்யும் கை.

4. தீயதை திட்டமிடும் அறிவு.

5. தீய காரியங்களை செய்ய விரையும் கால்.

6. பொய் சொல்ல எழும் சாட்சி.

7. நண்பர்களிடம் பகைமை வளர்க்கும் மனிதர்.

(நன்றி: 'வெற்றியை வெளியே தேடாதீர்கள்' - திரு.வை.நடராஜன்)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, December 9, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 6



சில சிந்தனைகள் (பகுதி - 6) நற்பண்புகள்.

ஒழுக்கம் உயர்வைக் கொடுக்கும்.

உழைப்பு செல்வத்தைக் கொடுக்கும்.

பக்தி மன அமைதியைக் கொடுக்கும்.

சிரிப்பு ஆயுளைக் கொடுக்கும்.

உதவி ஆதரவைக் கொடுக்கும்.

அன்பு நட்பைக் கொடுக்கும்.

பண்பு மதிப்பைக் கொடுக்கும்.

சுத்தம் சுகத்தை கொடுக்கும்.

நேர்மை நிதானத்தை கொடுக்கும்.

பணிவு அந்தஸ்தைக் கொடுக்கும்.

துணிவு வளர்ச்சியைக் கொடுக்கும்.

கனிவு அன்பைக் கொடுக்கும்.

ஆர்வம் ஆற்றலைக் கொடுக்கும்.

சாதனை மகிழ்வைக் கொடுக்கும்.

கோபம் வெறுப்பைக் கொடுக்கும்.

ஆத்திரம் அழிவைக் கொடுக்கும்.

ஊக்கம் செயலைக் கொடுக்கும்.

ஏக்கம் ஏழ்மையைக் கொடுக்கும்.

நன்றி:'நிறைந்த வாழ்வு' - அல்ஹாஜ் எம்.ஏ.ப்பி.ரஹமத்துல்லாஹ்.

அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Saturday, November 28, 2009

குண்டப்பா & மண்டப்பா (2)


குண்டப்பா & மண்டப்பா (2) நகைச்சுவை

குண்டப்பா & மண்டப்பா (1) இங்கே!

குண்டப்பா, தனது வீட்டின் சுவரில் ஆணி அடிப்பதற்காக ஏணியில் ஏறினார்.
உதவி மண்டப்பா அவர்கள். குண்டப்பா ஏணியில் ஏறியதும், மண்டப்பா
ஆணியையும சுத்தியலையும் எடுத்து குண்டப்பாவிடம் கொடுத்தார்.

மண்டப்பா கொடுத்த ஆணியை வாங்கி அப்படியே சுவரில்
வைத்து அடித்தார் குண்டப்பா. அதாவது தலைப் பக்கத்தை
சுவரில் வைத்து, கூர்முனையை சுத்தியலால் அடித்தார்
குண்டப்பா. அதனால் ஆணி சுவரில் இறங்கவில்லை.

நான்கு தடவைகள் அடித்து பார்த்துவிட்டு, "எ‌ன்ன மண்டப்பா
இ‌‌ந்த ஆணி சுவரில் இறங்க மாட்டேங்குதே" என்றார் குண்டப்பா.

வாங்கிப்பார்த்துவிட்டு, "அட இ‌து தலைகீழ் மாற்றமாக தயா‌ர்
பண்ணி இருக்கான்கள்" எ‌ன்று விளக்கினார் மண்டப்பா.

"அப்படியா! அட அப்படியில்லப்பா.இ‌து எதிர் சுவரில் அடிக்க
வேண்டிய ஆணிப்பா, அப்படித்தான் இருக்கும்" எ‌ன்று
கூறிவிட்டு அப்படியே எதிர் சுவரில் போய் ஆணி அடித்து
காலண்டரை மாட்டினார் குண்டப்பா!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

குண்டப்பா & மண்டப்பா - 3 இங்கே!



வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Sunday, November 22, 2009

சில சிந்தனைகள் (பகுதி - 5)




சில சிந்தனைகள் (பகுதி - 5)

வாழு; வாழாதே!

சிரித்து வாழ்; பலர் சிரிக்க வாழாதே!

ஏற்றமுடன் வாழ்; சீற்றத்துடன் வாழாதே!

புகழுடன் வாழ்; இகழ்வுடன் வாழாதே!

பாசத்துடன் வாழ்; பரிகாசத்துடன் வாழாதே!

இன்பத்துடன் வாழ்; சிறுமையுடன் வாழாதே!

பண்புடன் வாழ்; பராபரியாய் வாழாதே!

விழிப்புடன் வாழ்; பழிப்புடன் வாழாதே!

உழைத்து வாழ்; எத்தி வாழாதே!

களிப்புடன் வாழ்; கெலிப்புடன் வாழாதே!

பெருக வாழ்; சிறுக வாழாதே!

இணக்கத்துடன் வாழ்; பிணக்கத்துடன் வாழாதே!

மகிழ்வுடன் வாழ்; திகிலுடன் வாழாதே!

கொடுத்து வாழ்; கெடுத்து வாழாதே!

போற்றி வாழ்; தூற்றி வாழாதே!

சிறுகக் கட்டி பெருக வாழ்; பெருகக் கட்டி சிறுக வாழாதே!

கணித்து வாழ்; தனித்து வாழாதே!

மதித்து வாழ்; மிதித்து வாழாதே!

அடக்கத்துடன் வாழ்; ஆர்ப்பரித்து வாழாதே!

அன்புடன் வாழ்; அலங்கோலத்தோடு வாழாதே!

கொள்கையுடன் வாழ்; கோலத்துடன் வாழாதே!

படித்து வாழ்; பிறரை (காக்கா) பிடித்து வாழாதே!

பண்புடன் வாழ்; வம்புடன் வாழாதே!

சீராக வாழ்; சிரிக்க வாழாதே!

**நன்றி: 'நிறைந்த வாழ்வு' - அல்ஹாஜ் எம்.ஏ.ப்பி.ரஹமத்துல்லாஹ்.

**அன்பன்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Friday, November 13, 2009

பாப்பாவின் பண்புகள் (கவிதை)



நவம்பர் 14 - ஆசியாவின் ஜோதி, ரோஜாவின் ராஜா,
நேரு மாமா அவர்களின் பிறந்த நாள்.
குழந்தைகள் தினம். குழந்தைகள் தினத்தை
முன்னிட்டு இந்தக் கவிதை.

இந்தக் கவிதை ஜூலை 1982 ரத்னபாலா
பாலர் வண்ண மாத மலரில்
பிரசுரமான எனது முதல் கவிதை.
சித்திரங்கள் ஓவியர் திரு.செல்லம் அவர்கள்.

பாப்பாவின் பண்புகள் (கவிதை)
==========================

சின்னப் பாப்பா சிரிப்பிலே
சின்ன முத்து உதிருது
அழகுப் பாப்பா அன்பிலே
அன்னை முகம் மலருது!

ஆசைப் பாப்பா அழகிலே
அன்ன நடை தெரியுது
அமுதப் பாப்பா பேச்சிலே
நெஞ்சம் கொள்ளை போகுது!

இனிய பாப்பா பண்பிலே
இதயம் நெகிழ்ச்சி அடையுது
எங்கள் பாப்பா குணத்திலே
ஏக மகிழ்ச்சி துள்ளுது!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

டிஸ்கி: இந்த ரத்னபாலா இதழை
தனது நூலக சேமிப்பிலிருந்து,
தக்க நேரத்தில் தந்துதவிய எனது
அருமை நண்பர் எழுத்தாளர்
திரு.சின்னஞ்சிறு கோபு அவர்களுக்கு
மனங்கனிந்த நன்றிகள்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

Wednesday, November 11, 2009

ஹாய் மதன் பதில்


(திரு.மதன் அவர்கள் வரைந்த கார்ட்டூன் படம்)

ஹாய் மதன் பதில்

ஆனந்த விகடன் 11.12.2005 இதழில் ஹாய் மதன்
கேள்வி பதில் பகுதியில் நான் கேட்ட கேள்வியும்
அதற்கு திரு.மதன் அவர்கள் கொடுத்த பதிலும்.

கேள்வி:கைரேகை மூலம் எதிர்காலத்தைக்
கணிக்க முடிவது உண்மை என்றால், ஒருவரின்
நாணயத்தன்மையை முன் கூட்டியே கைரேகை
மூலம் கணித்து, அதையே ஷ்யூரிட்டியாக
எடுத்துக் கொண்டு, வங்கிகள் ஒருவருக்குக்
கடன் வழங்க முன் வருமா?

ஹாய் மதன் பதில்: கைரேகையை யார் பார்த்துக்
கணிப்பது? வங்கி மேனேஜரா? அல்லது,
ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் 'கைரேகை நிபுணர்'
ஒருவரை மேனேஜர் தன் பக்கத்திலேயே
வைத்துக்கொள்ள வேண்டும். சரி, கடன்
வாங்கியவர் ஓடி விட்டால், கைரேகை
நிபுணர்தான் பணம் கட்ட வேண்டும் என்றால்,
ஓ.கே.வா?

(நன்றி: ஆனந்த விகடன்)

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!
Related Posts Plugin for WordPress, Blogger...