...பல்சுவை பக்கம்!

.

Friday, November 13, 2009

பாப்பாவின் பண்புகள் (கவிதை)



நவம்பர் 14 - ஆசியாவின் ஜோதி, ரோஜாவின் ராஜா,
நேரு மாமா அவர்களின் பிறந்த நாள்.
குழந்தைகள் தினம். குழந்தைகள் தினத்தை
முன்னிட்டு இந்தக் கவிதை.

இந்தக் கவிதை ஜூலை 1982 ரத்னபாலா
பாலர் வண்ண மாத மலரில்
பிரசுரமான எனது முதல் கவிதை.
சித்திரங்கள் ஓவியர் திரு.செல்லம் அவர்கள்.

பாப்பாவின் பண்புகள் (கவிதை)
==========================

சின்னப் பாப்பா சிரிப்பிலே
சின்ன முத்து உதிருது
அழகுப் பாப்பா அன்பிலே
அன்னை முகம் மலருது!

ஆசைப் பாப்பா அழகிலே
அன்ன நடை தெரியுது
அமுதப் பாப்பா பேச்சிலே
நெஞ்சம் கொள்ளை போகுது!

இனிய பாப்பா பண்பிலே
இதயம் நெகிழ்ச்சி அடையுது
எங்கள் பாப்பா குணத்திலே
ஏக மகிழ்ச்சி துள்ளுது!

-அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

டிஸ்கி: இந்த ரத்னபாலா இதழை
தனது நூலக சேமிப்பிலிருந்து,
தக்க நேரத்தில் தந்துதவிய எனது
அருமை நண்பர் எழுத்தாளர்
திரு.சின்னஞ்சிறு கோபு அவர்களுக்கு
மனங்கனிந்த நன்றிகள்.

வருகைக்கு நன்றி! வாக்களித்துச் செல்லுங்கள்!

8 comments:

புலவன் புலிகேசி said...

குழந்தைகளின் பண்பிலிருந்து கற்று கொள்ள எவ்வளவு இருக்கிறது. அவர்கள் தான் உண்மயான ஆசான்கள்.

S.A. நவாஸுதீன் said...

அழகான கவிதை. பாரட்டுக்கள்

மழலைச் செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்

நிஜாம் கான் said...

நிஜாம் பாய்! நீங்க 1982லேயே கவிஞர். ஆனா நான் அப்போது ஒருவயது குழந்தை. கிட்டத்தட்ட 30 வருடங்களாக அந்தப் பேப்பர் கட்டிங்கை சேகரித்து வைத்திருக்கிறீர்கள். அருமை. தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பாராட்டிய அன்பு உள்ளங்கள்
புலவன் புலிகேசி,
S.A. நவாஸ்தீன்,
இப்படிக்கு நிஜாம்
எனது அன்பு நன்றிகள்!

அருண் பிரசாத் said...

நல்ல கவிதை, அதுவும் அந்த வயதில். பாராட்டுக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//அருண் பிரசாத் said...
நல்ல கவிதை, அதுவும் அந்த வயதில். பாராட்டுக்கள்//

தங்களின் கருத்திற்கு
நன்றி அருண் பிரசாத்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
சென்று பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_12.html?showComment=1407801050208#c1570914913413368880
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ரூபன் சார்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...